NEWS
June 12, 2024
Showing posts with label Department of Transport. Show all posts

Wednesday, June 12, 2024
Monday, April 08, 2024
Tuesday, January 09, 2024
Department of Transport
January 09, 2024
அனைத்து பணிமனைகளில்,அனைத்து வழிதடத்தில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது- சென்னை மாநகர் போக்குவரத்து கழகம்.
வழக்கம் போல் பேருந்துகள் இயக்கம்.!
சென்னையில் அனைத்து பணிமனைகளில்,அனைத்து வழிதடத்தில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது- சென்னை மாநகர் போக்குவரத்து கழகம்.
செய்தி வெளியீடு
செய்தி வெளியீடு எண். 04/2024
09.01.2024
மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் அனைத்து பணிமனைகளில், அனைத்து வழித்தடத்தில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது - மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் இ.ஆ.ப. அவர்கள் நேரடி ஆய்வு. மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இன்று (09/01/2024) பேருந்துகள் அனைத்து பணிமனைகளில் இருந்து அனைத்து வழித்தடங்களில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுகிறது. காலை 6:00 மணி நிலவரப்படி 2,098 பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.
பயணிகள் பேருந்து இயக்கம் தொடர்பாக எந்த வித அச்சமும் இன்றி பயணம் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், அனைத்து பேருந்து ஓட்டுநர்கள். நடத்துனர்கள் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் இயக்கத்தினை மாநகர் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் முழுமையாக கண்காணித்து வருகிறார்கள் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.

Saturday, October 07, 2023
Department of Transport
October 07, 2023
ICC-Men's Cricket World Cup 2023 - அக். 8,13,18,23,27 ஆகிய நாட்களில் போக்குவரத்து மாற்றம் - பத்திரிகைச் செய்தி
பத்திரிகைச் செய்தி - 06.10.2023
ICC-Men's Cricket World Cup 2023 சென்னை எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் 08.10.2023, 13.10.2023, 18.10.2023, 23.10.2023 மற்றும் 27.10.2023 ஆகிய நாட்களில் நடைபெறுவதை முன்னிட்டு கீழ்க்கண்ட சாலைகளில் போட்டி நடைபெறும் நாட்களில் மதியம் 12.00 மணி முதல் 22.00 மணி வரை கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.
இதையும் படிக்க | ICC-Men's Cricket World Cup 2023 - அக். 8,13,18,23,27 ஆகிய 5 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கம்

Tuesday, September 26, 2023
Transport Department
September 26, 2023
5 நாட்கள் தொடர் விடுமுறை - 1,100 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு!
வரும் 28ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக 1,100 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு!
செய்தி வெளியீடு எண்.44/2023.
செய்தி வெளியீடு
நாள்:26/09/2023.
வார இறுதி நாட்கள், மிலாடி நபி மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் - அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குநர் அவர்கள் தகவல்.
இந்த வார வியாழக்கிழமை (28/09/2023) மிலாடி நபி, சனிக்கிழமை (29/09/2023) ஞாயிற்றுக் கிழமை (01/10/2023) மற்றும் 02/10/2023, அன்று காந்திஜெயந்தி தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை அரசு விடுமுறை தினம் என்பதால் ஐந்து நாட்கள் விடுப்பு கிடைப்பதால் பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்று வருவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பயணிகள் முன்பதிவும் கூடுதலாகவே உள்ளது. இதனால் வெளி ஊரிகளுக்கும் மற்றும் சுற்றுலா செல்ல திட்டமிடும் பயணிகள் தங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதன்படி முன்பதிவு செய்வதன் மூலம் பயணிகளின் கூடுதல் தேவையை அறிந்து அதற்கு ஏற்றவாறு கூடுதல் பேருந்துகளை போக்குவரத்துக் கழகங்கள் இயக்க திட்டமிட இயலும் மற்றும் பயணிகள் சிரமமின்றி பயணிக்கவும் பாதுகாப்பாக திட்டமிட்டபடி பயணிக்கவும் உடனடியாக முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதுடன் இன்றைய தேதியில் வெள்ளி. சனி. ஞாயிறு மற்றும் திங்கள் கிழமை வரை பயணிகள் அதிகளவில் முன்பதிவு செய்துள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை திட்டமிடப்பட்டுள்ளது.
இயக்க மேலும், இந்நாள் வரை சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து பயணம் மேற்கொள்ள 27/09/2023 அன்று 16,980 பயணிகளும் 29/09/2023 அன்று 14473 பயணிகளும் மற்றும் 03/10/2023 அன்று 7,919 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர் மற்றும் பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 27/09/2023 அன்று தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 250 பேருந்துகளும் மற்றும் 29/09/2023 அன்று 450 பேருந்துகளும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி. சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 1,100 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, 02/10/2023 அன்று திங்கட்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. திங்கட் கிழமை பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 17,242 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் tnstc official app மூலமும் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் இவ்வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Friday, June 09, 2023
Wednesday, February 01, 2023
students news
February 01, 2023
ஆசிரியர்களை பணியிடம் மாற்றம் செய்தால் மாணவர்களுக்கு பாதிப்பு - அமைச்சர் அன்பில் மகேஸ்
ஆசிரியர்கள் பணியிடம் மாற்றம் செய்தால் மாணவர்களுக்கு பாதிப்பு - அமைச்சர் அன்பில் மகேஸ் - Students will be affected if teachers change jobs - Minister Anbil Mahes
பள்ளிகளில் கல்வி அல்லாத பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தினால் நடவடிக்கை
பள்ளிகளில் கல்வி அல்லாத பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தினால், தொடர்புடையவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
மாணவர்களைப் பொருத்தவரை படிப்பதற்காக வரக்கூடிய இடம்தான் பள்ளிக்கூடம். எனவே, குழந்தைகளைப் படிப்புக்கு மட்டுமே ஆசிரியர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் பயன்படுத்த வேண்டும். வேறு விதங்களில் பயன்படுத்தினால் துறை ரீதியாக கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுத் தேர்வை மாணவர்கள் பதற்றப்படாமல் அச்சமின்றி எழுத வேண்டும்.
கடைசி நேரத்தில் மட்டுமே படிப்பதைத் தவிர்த்து, இப்போதிருந்தே படித்தால் தேர்வு அச்சத்தைத் தவிர்க்கலாம் என்றார் அமைச்சர். ஆசிரியர்கள் பணியிடம் மாற்றம் செய்தால் மாணவர்களுக்கு பாதிப்பு:
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது:
அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு தற்போது பணியிட மாற்றம் செய்யப்படுவது வேண்டாம் என்று ஆணையத்திடம் தெரிவித்து, பணிநிரவல் நிறுத்தப்பட்டுள்ளது. அப்படி பணியிடம் மாற்றம் செய்தால் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர், மாணவிகள் பாதிக்கப்படுவர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக பணம் கொடுத்து வெற்றி பெறவுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுவதிலிருந்தே, அவர்களுக்கு தோல்விப் பயம் தொடங்கி விட்டது என்பது நன்றாக தெரிகிறது என்றார் அமைச்சர்

Thursday, November 24, 2022
students news
November 24, 2022
பேருந்தில் எல்லை மீறும் மாணவர்களை வீடியோ மூலம் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவு

சென்னை: சமீப காலமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் சென்னை பெருநகரில் பேருந்துகளின் மேற்கூரையில் ஏறுவதும், படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்வதும், பயணிகளுக்குத் தொந்தரவு கொடுக்கும் வகையில் பேருந்துக்கு உள்ளேயே ஆட்டம் போடுவதும் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து போலீஸார், சென்னை பெருநகரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆனாலும், மாணவர்கள் பேருந்துகளில் எல்லை மீறுவது தொடர்ந்து வருகிறது. மாணவர்களின் அத்துமீறல்களைப் பொதுமக்கள் வீடியோ மற்றும் புகைப்படமாக எடுத்து தினமும் காவல் துறைக்கு அனுப்பி வருகின்றனர். இதை போலீஸார் சேகரித்து வைத்து தற்போது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர்.
முதல் கட்டமாக பொதுமக்கள்அனுப்பிய வீடியோ, புகைப்படங்கள் மற்றும் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள வீடியோ காட்சிகள் மூலம் எல்லை மீறிய மாணவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "பள்ளி - கல்லூரி மாணவர்களில் பலர் கல்வி நிலையங்களுக்கு செல்லும் நேரம் மற்றும் வீடு திரும்பும் நேரங்களில் பேருந்துகளில் எல்லை மீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில மாணவர்கள் பேருந்து ஓட்டுநர், நடத்துநரிடம் தகராறிலும் ஈடுபடுகின்றனர்.
இதில், தொடர்புடைய மாணவர்களை எச்சரித்து விடுவித்துள்ளோம். ஆனாலும் சிலர் கேட்காமல் தொடர்ந்து எல்லை மீறி வருகின்றனர். எனவே, இனி அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கைது செய்ய காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்" என்றனர்.

Wednesday, November 23, 2022
Department of Transport
November 23, 2022
10, 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை - அரசுப் பேருந்து நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!

மா.போ.க இயக்க பிரிவு - மா.போ.கழக பேருந்துகளில் நடத்துநர்கள் ரூ.10/- & ரூ.20/-மதிப்பிலான நாணயத்தை பெற மறுப்பது ரூ.10/- & ரூ.20/- மதிப்பிலான நாணயத்தினை பயணிகள் பயணச்சீட்டு பெற அளிக்கும்போது மறுப்பின்றி பெற்றுக்கொண்டு உரிய பயணச்சீட்டை அளிப்பது தொடர்பாக - அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது.
பார்வை:
1. தலைவர் அலுவலகம், போ.வது கடித எண்.130/Ch3/Ch.O/ 2022, நாள்:08.11.2022
2. க.எண்.174/15674/போ(பொது1)/மாபோக/2019,ாள்.22.08.2019
மா.போ.கழக பேருந்துகளில் பயணிகள் பயணிக்கும்போது உரிய பயணச்சீட்டினை பெற ரூ.10/- மதிப்பிலான நாணயங்களை நடத்துநர்கள் மறுப்பின்றி பெற்று உரிய பயணச்சீட்டினை பயணிகளுக்கு வழங்குமாறு ஏற்கனவே பார்வை-2ல் காணும் இவ்வலுவலக சுற்றறிக்கை வழி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும், பார்வை-1ல் காணும் போக்குவரத்துத் துறை, தலைவர் அலுவலக கடிதத்தில் மா.போ.கழகம் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நடத்துநர்கள் தமது பணியின்போது, பயணிகள் ரூ.10/- & ரூ.20/- மதிப்பிலான நாணயத்தை பயணச்சீட்டு வாங்க அளிக்கும்போது நடத்துநர்கள் பெறமறுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து, அனைத்து அரசு போக்குவரத்துக்கழக நடத்துநர்களுக்கு இதுகுறித்து உரிய அறிவுறுத்தல்கள் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசால் வெளியிடப்படும் ரூ.10/- & ரூ.20/- மதிப்பிலான நாணயத்தை பயணிகள் பயணச்சீட்டு வாங்க மா.போ.கழக பேருந்துகளில் நடத்துநரிடம் அளிக்கும்போது அதனை நடத்துநர்கள் மறுக்காமல் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டு உரிய பயணச்சீட்டு அவர்களுக்கு வழங்கிட வேண்டும் என இதன் மூலம் மீண்டும் உத்திரவிடப்படுகிறது. எக்காரணம் கொண்டும் பயணிகள் அளிக்கும் ரூ.10/- & ரூ.20/- மதிப்பிலான நாணயத்தை பெற்றுக்கொள்ள நடத்துநர்கள் மறுக்கக்கூடாது. அவ்வாறு நடத்துநர்கள் ரூ.10/- & ரூ.20/- மதிப்பிலான நாணயத்தினை பெற்றுக்கொள்ள மறுப்பதாக புகார் பெறப்படின் சம்மந்தப்பட்ட நடத்துநரின் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஏதுவாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, அனைத்து கிளை மேலாளர்கள். உதவி கிளை மேலாளர்கள்(போ) மற்றும் அனைத்து நேரக்காப்பாளர்கள் ஆகியோர் இது குறித்து நடத்துநர்களுக்கு தெளிவாக எடுத்துக்கூறி அவர்களிடம் கையொப்பம் பெற்று எதிர் காலத்தில் இத்தகைய புகார் எதும் எழாமல் பணிபுரிய அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.