Breaking

Showing posts with label Which bike is best for students?. Show all posts
Showing posts with label Which bike is best for students?. Show all posts

Sunday, April 16, 2023

April 16, 2023

பள்ளி மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் ரூ.305 கோடி ஒதுக்கீடு

Allocation of Rs.305 crore for free bicycles for school students - பள்ளி மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் ரூ.305 கோடி ஒதுக்கீடு

பள்ளி மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள்கள் வழங்க 305.03 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில் மேல்நிலைப் படிப்பை ஊக்குவிக்க மாணவ - மாணவியருக்கு வருமான உச்சவரம்பின்றி இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன.

அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மாணவ - மாணவியருக்கு சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன.
பள்ளி வளாக விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ - மாணவியருக்கும் உண்டு உறைவிடப் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கும் சைக்கிள்கள் வழங்கப்படுவதில்லை.

கடந்த 2020 - 21ம் ஆண்டில் பிளஸ் 1 வகுப்பு படித்த மாணவர்களுக்கு கடந்த நிதியாண்டில் 221.26 கோடி ரூபாய் மதிப்பில் 4.35 லட்சம் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. நடப்பாண்டுக்கு 305.03 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog