Breaking

Showing posts with label உள்ளூர் விடுமுறை. Show all posts
Showing posts with label உள்ளூர் விடுமுறை. Show all posts

Tuesday, January 03, 2023

January 03, 2023

ஜன.4-ம் தேதி உள்ளூர் விடுமுறை - 4th Jan is a local holiday

நீலகிரி மாவட்டத்தில் ஜன.4-ம் தேதி உள்ளூர் விடுமுறை

உதகை: நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் வெளியிட்ட அறிக்கையில், "ஸ்ரீ ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் வரும் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

எனவே, மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில், குறிப்பிட்ட பணியாளர்களோடு கருவூலம் மற்றும் சார் நிலைக் கருவூலங்கள் செயல்படும். இதற்கு பதிலாக வரும் 21-ம் தேதி சனிக்கிழமை, மாவட்டத்தில் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Sunday, July 31, 2022

July 31, 2022

ஆக.3-ம் தேதி ஆடிப் பெருக்கு: தருமபுரியில் உள்ளூர் விடுமுறை



ஆடிப் பெருக்கை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் வரும் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தருமபுரி ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆடிப் பெருக்கை (ஆடி-18-ம் நாள்) முன்னிட்டு வரும் 3-ம் தேதி தருமபுரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் ஆகஸ்ட் 27-ம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

உள்ளூர் விடுமுறை அன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணி யாளர்களோடு செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

Wednesday, July 13, 2022

July 13, 2022

10.08.2022 ( புதன் கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு



ஆடித்தபசு திருநாள் 10.08.2022 புதன் கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு அன்று தென்காசி மாவட்டத்திலுள்ள பள்ளி , கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் , நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை ( Iocal Holiday ) நாளாக அறிவித்து ஆணையிடப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு தேர்வு ஏதுமிருப்பின் சம்மந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் , தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகர்களுக்கு இந்த விடுமுறையானது பொருந்தாது. மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 ( Under Negotiable Instrument Act 1881 ) ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது . இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களுக்கும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்பு ( Govermmeni பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் Securities ) தொடர்பாக அவசர் தெரிவிக்கப்படுகிறது.

என மேலே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 13.08.2022 இரண்டாம் சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

Total Pageviews

Search This Blog