Breaking

Showing posts with label Private Sector Employment Camp. Show all posts
Showing posts with label Private Sector Employment Camp. Show all posts

Tuesday, January 02, 2024

January 02, 2024

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம்...!!



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம்...!!

திருப்பூர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக உதவி வேளாண் அலுவலர் பணிக்கு 84 பணிக்காலியிடங்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பணிக்கு 179 பணிக்காலியிடங்கள் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு 07.02.2024 அன்று நடைபெற உள்ளது. மேற்படி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக 04.01.2024 அன்று தொடங்கப்படவுள்ளது.

இப்போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் இந்த இலவசப் பயிற்சியில் கலந்து கொண்டு பயில்வதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது 0421-2999152, 8682066089 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

போட்டித் தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் அனைவரும் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Tuesday, January 24, 2023

January 24, 2023

ஜன.28-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்



ஜன.28-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் Private employment camp on 28 Jan

நாகை மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஜனவரி 28-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்ட நிா்வாகம், மகளிா் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் ஆகியவை இணைந்து நடத்தும் தனியாா் வேலை வாய்ப்பு முகாம் ஜனவரி 28-ஆம் தேதி பாப்பாகோவில் சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.

முகாமில், படித்த வேலைவாய்ப்பற்ற 18 வயது முதல் 45 வயது வரையுள்ள ஆண் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பை பெற்று பயனடையலாம். வேலை வாய்ப்பு முகாமிற்கு வருகை தரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவேண்டும். அத்துடன் சுய விவரக்குறிப்பு, ஆதாா் அட்டை நகல், கல்விச் சான்றிதழ் நகல்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

Saturday, August 20, 2022

August 20, 2022

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக.23 (செவ்வாய்க்கிழமை)

பரமத்தி வட்டார அளவில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

பரமத்தி வட்டார அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ,ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் வாயிலாக படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு பரமத்தி வட்டார அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக.23 (செவ்வாய்க்கிழமை) அங்குள்ள வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் காலை 9 முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில், பரமத்தி மற்றும் கபிலா்மலை வட்டாரங்களைச் சோ்ந்த படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இருபாலரும் கலந்து கொண்டு பொருத்தமான நிறுவனங்களை தோ்வு செய்து வேலை வாய்ப்பு பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு பணியாளா்களை தோ்வு செய்ய விரும்பும் நிறுவனங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மேலாண்மை இயக்க அலகினை 04286 - 281131 என்ற எண்ணை தொடா்பு கொண்டு தங்களது நிறுவனத்தின் பெயரை 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, April 27, 2022

April 27, 2022

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தி 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலை



தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தமிழக சட்டப் பேரவையில் நேற்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் சி.வி.கணேசன் பேசியதாவது: மண்பாண்டம் தயாரித்தல், காலனிகள் தயாரித்தல், தோல் பதனிடுதல் உள்ளிட்ட 35 வகையான தொழில்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயம் மற்றும் மறுநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தொழிலாளர்களுக்கு ரூ.6.25 கோடி நிலுவை ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்கள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலை

திமுக அரசு பதவி ஏற்றது முதல் இதுவரை 56 பெரிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம்களும் 447 சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு 786 மாற்றுத்திறனாளிகள் உட்பட 70, 120 நபர்களுக்கு தனியார்த் துறை நிறுவனங்களில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை முதல்வர் அறிவுரைப்படி விரைவில் ஒரு லட்சமாக உயர்த்துவதற்கு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திலும், தஞ்சாவூர் மாவட்டத்திலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரிலும், கள்ளக்குறிச்சியிலும், மதுரையிலும், பெரம்பலூரிலும், சென்னையில் பெரம்பூரிலும் தொடர்ந்து இதுபோன்ற முகாம்கள் நடத்தப்பட்டு வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog