Breaking

Showing posts with label One Man Commission. Show all posts
Showing posts with label One Man Commission. Show all posts

Wednesday, December 20, 2023

December 20, 2023

ஒரு நபர் கமிஷன் விசாரணை விபரங்கள் திரட்டும் கல்வி துறை

ஒரு நபர் கமிஷன் விசாரணை விபரங்கள் திரட்டும் கல்வி துறை

ஜாதி ரீதியாக செயல்பட்ட ஆசிரியர்கள், அவர்களின் சங்கங்கள் மற்றும் மாணவர் விபரங்களை, ஒரு நபர் கமிஷனுக்கு தாக்கல் செய்ய, பள்ளிக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் உள்ள தனியார் பள்ளி மாணவர் ஒருவரை, ஜாதி பிரச்னையில், ஒரு கும்பல் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து, பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே ஜாதி ரீதியான செயல்பாடுகளை தடுக்க, தேவையான வழிமுறைகளை ஏற்படுத்த, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், கமிஷன் கேட்டுள்ள விபரங்களை தாக்கல் செய்யுமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனரகம் கடிதம் அனுப்பியுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

மாணவர்கள், ஆசிரியர்களின் தவறான நடத்தைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், பள்ளிகளின் மேலாளர் மற்றும் தாளாளர்களின் பொறுப்புகள் தொடர்பாக, கடந்த 10 ஆண்டு விபரங்களை, ஒரு நபர் கமிஷனிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஜாதி ரீதியான அமைப்புகள் நடத்தும், வார, மாத இதழ்கள் வாங்கும் பள்ளிகள்; ஜாதி அமைப்புகளில் தொடர்புடைய ஆசிரியர்கள், மாணவர்கள் குறித்த விபரங்களையும், கமிஷனிடம் வழங்க வேண்டும்.

பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் உரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ், குற்றவியல் வழக்குகளில் தொடர்புடைய ஆசிரியர்கள்; மது மற்றும் போதை வஸ்துக்களை பயன்படுத்தும் மாணவர்கள் குறித்த விபரங்கள் மற்றும் போலீஸ் நடவடிக்கைகள் குறித்த விபரங்களும் அளிக்கப்பட வேண்டும்.

மாணவர்களின் தவறான நடத்தை குறித்த புகார்களில், முதன்மை கல்வி அலுவலர்கள் நடத்திய விசாரணை அறிக்கைகளையும் வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரு நபர் கமிஷன் விசாரணை விபரங்கள் திரட்டும் கல்வி துறை

CLICK HERE TO DOWNLOAD PDF

Wednesday, September 27, 2023

September 27, 2023

பள்ளி, கல்லூரிகளில் சாதி வன்முறைகளைத் தடுக்க ஆசிரியர்கள் கருத்துகள் தெரிவிக்க அழைப்பு!



தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரியில் ஏற்படும், சாதி தொடர்பான வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பது குறித்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்துகள் தெரிவிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் அழைப்பு.

இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி உத்தரவு.

"பள்ளிகளில் சாதி வேறுபாடு - கருத்து தெரிவிக்கலாம்"

| பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கிடையே ஏற்படும் சாதி வேறுபாடுகளை களைவது தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் ஆணையத்திற்கு கருத்துகளை அனுப்ப அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு casteviolencecommiteechandru@gmail.comஎன்கிற முகவரிக்கு கருத்துக்களை அனுப்ப உத்தரவு பள்ளி, கல்லூரிகளில் சாதி வன்முறைகளைத் தடுக்க ஆசிரியர்கள் கருத்துகள் தெரிவிக்க அழைப்பு!

தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரியில் ஏற்படும், சாதி தொடர்பான வன்முறை தடுப்பது குறித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைத் தலைமை ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவிற்கு அனுப்பி வைக்கலாம் என பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அறிவொளி தெரிவித்துள்ளார்.

சென்னை:தமிழ்நாட்டிலுள்ள பள்ளி, கல்லூரியில் ஏற்படும் சாதிய தொடர்பான வன்முறை தடுப்பது குறித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைத் தலைமை ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவிற்கு அனுப்பி வைக்கலாம் என பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அறிவொளி தெரிவித்துள்ளார். மேலும், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் casteviolencecommiteechandru@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், அனுப்பி வைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் சாதிய மனப்பான்மையால் மாணவர்களிடம் வன்முறை சமீப காலமாக நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலியில் துவங்கிய சம்பவம், திருவண்ணாமலை வரையில் தொடர்ந்தது. தற்போது, கல்லூரி மாணவர்களும் தங்களுக்குள் வன்முறைச் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். சமூகத்தில் நிலவும் போக்குதான் மாணவர்களிடம் சாதிய வன்மம் அதிகரிக்கக் காரணமாக கூறப்படுகின்றன. மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்தக் குழு இது தொடர்பாக கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகைத் துறையினர் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துகளைப் பெற்று, அதனடிப்படையில் அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்ப்பித்திடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதைத் தொடர்ந்து, ஆக்கப்பூர்வமான முறையில் சாதி, இன பேதமற்ற சமூகத்தை உருவாக்க ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் உடன் இணைந்து, அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதற்குத் தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள், உந்துதல்கள் (Motivation) தொடர்பான அறிக்கைகள் அளித்திட வேண்டும்.மாணவர்கள் தங்களது குறைகளைத் தெரிவிப்பதற்கு ஏதுவான அமைப்பை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை அரசுக்கு வழங்க வேண்டும். இந்தக் குழு மேற்படி பொருள் தொடர்பாக, கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகைத் துறையினர் என பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகளைப் பெற்று அரசுக்கு அறிக்கையாக அளித்திட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்திருந்தது. இது தொடர்பான பள்ளிக்கல்வித் துறையின் சுற்றறிக்கையில், "ஒரு நபர் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு, பள்ளி, கல்லூரிகளில் சாதிய அடிப்படையிலான வேறுபாடற்ற சூழலை உருவாக்குவது சார்ந்து அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் (Terms of References) அடிப்படையில் இப்பொருள் சார்ந்து கல்வி நிறுவனங்கள் சார்பிலான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைக் குழுவின் மின்னஞ்சல் முகவரி அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைத்திடக் கோரும் கடிதத்தினை அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பி உரியத் தகவல் தெரிவித்திடக் கோரியுள்ளார்.சாதிய வன்முறைகளைத் தடுப்பது குறித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை தலைமை ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவிற்கு அனுப்பி வைக்கலாம் என பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அறிவொளி தெரிவித்துள்ளார்.மேலும், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் casteviolencecommiteechandru@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 147, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை - 4 என்ற முகவரியில் கடிதம் மூலம் அனுப்பி வைக்கலாம்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

CLICK HERE TO DOWNLOAD PDF

Wednesday, June 16, 2021

June 16, 2021

CPS வல்லுநர் குழுவின் பரிந்துரைகள் அரசின் ஆய்வில் உள்ளது - அரசின் இறுதி முடிவுக்கு ஏற்றவாறு செயல்பட முடிவு என நிதித்துறை சிறப்புச் செயலாளர் திருமதி. பூஜா குல்கர்னி IAS, அரசுத் தகவல் மைய ஆணையருக்கு கடிதம்!

Wednesday, March 10, 2021

March 10, 2021

குமுறும் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள்!

திரு சித்திக் தலைமையிலான ஒரு நபர் குழுவிற்கு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு தொடர்பாக அரசு திருத்தம் செய்து அளித்த அரசாணை எண் 138 நாள் 24.04.2018 ன் நிலை என்ன? AICTE - PUBLIC NOTICE FOR APPROVAL PROCESS 2021-22 (approval from all the existing and new Technical Institutions for conducting Technical Programmes/ Courses) - PDF

Joint Entrance Examination (Main) February 2021 Session Paper 1 (B.E./B.Tech.) Result - Direct Link இடைநிலை ஆசிரியர்களின் கடுமையான போராட்டம் காரணமாக ஊதிய முரண்பாட்டை களைய திரு.சித்திக் தலைமையிலான ஒருநபர் குழு பரிசீலிக்கும் என அரசு ஆணை Go 138 நாள்: 24.04.2018 ல் வெளியிட்ட பின்னரும் அதன்பின் நல்ல தற்போது குழு அறிக்கையில் பாதிக்கப்பட்ட 2009 மற்றும் TET ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து ஏதும் குறிப்பிடப்படாமல் காணாமல் போனது புரியாத புதிராகவே உள்ளது.
March 10, 2021

சித்திக் குழுவின் பரிந்துரைப்படி பல்வேறு துறை பணியாளர்களுக்கு புதிய ஊதியங்களை நிர்ணயித்து அரசாணை: 40 ஆண்டுகளாக ஒரே பதவியில் பணியாற்றுவோருக்கு சிறப்பு ஊக்க ஊதிய உயர்வு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட சித்திக் குழுவின் பரிந்துரைப்படி பல்வேறு துறை பணியாளர்களுக்கான புதியஊதியங்களை நிர்ணயித்து அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
ஒரு நபர் குழு பரிந்துரையின் படி திருத்தப்பட்ட ஊதிய வீதங்கள் அடங்கிய அரசாணைகள் வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த 2017 அக்டோபர் 1-ம் தேதி முதல் 7-வது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த 7-வது ஊதியக் குழுவில், பல்வேறு துறைகளின் கீழ் பல்வேறு பணிநிலைகளில் ஊதிய முரண்பாடுகள் இருப்பதாக ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டின. போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதையடுத்து, ஊதிய முரண்பாடுகளை போக்க கடந்த 2018பிப்ரவரியில், அப்போது நிதித்துறை செலவினப் பிரிவு செயலராக இருந்த சித்திக் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு சங்கங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மனுக்களை பெற்று, அறிக்கை தயாரித்து, கடந்த 2019 ஜனவரியில் முதல்வரிடம் அளித்தது.
பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்க கோரிக்கை
இந்த அறிக்கையில் பொதுவான சம்பள விகிதம், கோரிக்கைகள் அடிப்படையில் பல்வேறு துறைகளின் பணியாளர்களது ஊதியவரம்புகளில் இருந்த முரண்பாடுகள் களையப்பட்டு புதியசம்பள அட்டவணை தயாரிக்கப்பட்டு அளிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை அடிப்படையில், கடந்த பிப்ரவரி 26-ம் தேதிஅரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுவான சம்பள அட்டவணைப்படி, அடிப்படை சம்பளமாக ரூ.15,700, அதிகபட்ச சம்பளமாக ரூ.2 லட்சத்து 61 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எழுதுபொருள் அச்சகத் துறை, சட்டப்பேரவை செயலகம், சுற்றுலா, பேரூராட்சிகள், செய்தி, அரசு அருங்காட்சியகங்கள், சிறைத்துறை, பொது நூலகம், பொதுப்பணித் துறை, பள்ளிக்கல்வி, சமூக பாதுகாப்பு, சமூகநலம், இந்திய மருத்துவம் - ஓமியோபதி துறை, கால்நடை பராமரிப்பு, சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குறிப்பிட்ட பணியிடங்களுக்கு இருந்த ஊதிய முரண்பாடுகளை களைவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு நபர் குழு பரிந்துரையின் படி திருத்தப்பட்ட ஊதிய வீதங்கள் அடங்கிய அரசாணைகள் வெளியீடு!
இதுதவிர, ஒரே பதவியில் 40 ஆண்டுகளுக்கும் மேல் எவ்வித பதவி உயர்வும் இல்லாமல் பணியாற்றுபவர்களுக்கு ஒரு சிறப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
March 10, 2021

ஒரு நபர் குழு பரிந்துரை அமல்படுத்த அரசாணை!

அரசு ஊழியர் ஊதிய உயர்வில் உள்ள, குறைபாடுகளை களைவதற்காக அமைக்கப்பட்ட, ஒரு நபர் குழு அளித்த பரிந்துரைப்படி, சில பிரிவு பணியாளர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்க, அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதில், முரண்பாடுகள் இருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்தது. ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், போராட்டம் நடத்தின.
ஒரு நபர் குழு பரிந்துரையின் படி திருத்தப்பட்ட ஊதிய வீதங்கள் அடங்கிய அரசாணைகள் வெளியீடு!
இதையடுத்து, ஊதிய உயர்வில் உள்ள குறைபாடுகளை களைய, நிதித் துறை செலவினங்கள் முதன்மை செயலர் சித்திக் தலைமையில், ஒரு நபர் குழுவை, தமிழக அரசு நியமித்தது. இக்குழு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசியது. அவர்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை பரிசீலித்தது. அவற்றை பரிசீலனை செய்து, ஒரு நபர் குழு, அறிக்கை தயார் செய்தது. குழுத் தலைவரான சித்திக், 2019 ஜூன் மாதம், அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கை, அரசின் பரிசீலனையில் இருந்தது.
பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்க கோரிக்கை
ஒரு நபர் குழு பரிந்துரையை ஏற்று, ஒவ்வொரு துறையிலும், ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய, பிப்., 26ம் தேதி, தனித்தனி அரசாணைகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதன்படி, பல துறைகளில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

Friday, December 25, 2020

December 25, 2020

TRB - Direct Recruitment of Computer Instructors Grade I (PG Cadre) - 2019 - Public Notice One Man Committee

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
December 25, 2020

TRB - 814 vacancies to the post of Computer Instructors Grade-l (Post Graduate Cadre) in School Education - One - Man Committee to enquire - on or before 5.00 PM of 02.01.2021.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
Government of Tamil Nadu
TEACHERS RECRUITMENT BOARD
4th Floor, Puratchi Thalaivar Dr. M.G.R. Centenary Building,
DPI Campus, College Road, Chennai - 600 006.
PUBLIC NOTICE
By order dated 17.12.2020 passed by the Hon'ble Madras High Court in W.P. No. 35198 of 2019 and a batch of writ petitions, appointed One - Man Committee to enquire into the allegations of irregularities in the computer based examination conducted by the Teachers Recruitment Board (TRB) on 23/06/2019 for recruitment of candidates for filling up 814 vacancies to the post of Computer Instructors Grade-l (Post Graduate Cadre) in School Education Department for the year 2018-2019 in the following examination centres. CLICK HERE TO DOWNLOAD FULL DETAILS PDF i.KSR College of Engineering, Tiruchengode, Namakkal District.
ii. Annai College of Engineering and Technology, Kumbakonam, Thanjavur District.
iii. Kongunadu College of Engineering and Technology, Thiruchirappalli District.
Any candidate who had attended the examination conducted in any of the above three centres on 23-06-2019 and has any grievance about the conduct of the examination, can send his/her sworn affidavit to me with details of the complaint, attested by an Advocate or Notary Public and a self - attested copy of his/her hall ticket with any other material to substantiate the complaint, strictly on or before 5.00 PM of 02.01.2021. The hard copies along with the affidavit also to be sent to the following address. CLICK HERE TO DOWNLOAD FULL DETAILS PDF One Man Committee,
PGCI Exams,
4th Floor, Dr. MGR Centenary Building,
DPI Campus, College Road,
Chennai - 600 006.
The Candidates can also send their scanned copies of the affidavit and other documents through e-mail. The e-mail address is trbgrievancesonemancommittee@gmail.com. The candidates must also be ready to come in person for enquiry if required.
Justice N. Authinathan
DIPR/1301/Display/2020
One Man Committee
CLICK HERE TO DOWNLOAD FULL DETAILS PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Tuesday, December 08, 2020

December 08, 2020

CPS வல்லுநர் குழுவின் அறிக்கை மீதான நடவடிக்கையானது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது - நிதித் துறை சார்புச் செயலாளர் தகவல்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நிதி (PGC-I)த் துறை. தலைமைச் செயலகம், சென்னை-9. கடித எண். 45825/நிதித் (PGC-I) துறை/2020, நாள்.02.12.2020 அனுப்புநர் திரு.கீ.சி. கமலக்கண்ணன். பி.எஸ்ஸி., பி.காம்., எம்.எ.பி.எல்... அரசு சார்புச் செயலாளர் பெறுநர் V ஆரோக்கியதாஸ். SH, பெரியசாமி நகர், குண்டுபல்லவாடி கடலூர் தாலுக்கா, கடலூர் - 607 006 ஐயா பொருள் : மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் இணையதளம் வழியாக, பெறப்பட்ட மனு நடவடிக்கை மேற்கொள்ளுதல் . தொடர்பாக, பார்வை: இணையதளம் வழியாக பெறப்பட்ட முதலமைச்சரின் தனிப்பிரிவு மனு நாள் 02.12.2020. -oOo- பார்வையில் காணும் மனுவின் மீது கவனம் ஈர்க்கப்படுவதுடன் மனு தொடர்பாக கீழ்வரும் விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றன 2. 01.04.2003 அன்று முதல் செயல்படுத்தப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாததியக் கூறுகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை அளிக்கும் வகையில் அமைக்கப்பட்ட 'வல்லுநர் குழு 27.11.2018 அன்று தனது அறிக்கையினை அரசிடம் அளித்துள்ளது அதன் பரிந்துரைகளை அரசு பரிசீலித்து உரிய முடிவினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் அரசாணைகள் வெளியிடப்படும். மேலும் தங்களது கோரிக்கை அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டது என்பதால் தங்களது கோரிக்கை தற்போது ஏற்கத்தக்கதல்ல என்ற விவரம் தங்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. தங்கள் உண்மையுள்ள, அரசு சார்புச் செயலாளருக்காக நகல்: இருப்புக் கோப்பு/உபரி நகல் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Sunday, November 29, 2020

November 29, 2020

7வது ஊதியக்குழு பரிந்துரையில் குளறுபடி - அரசாணையில் குறிப்பிட்டுள்ள காரணங்கள் உண்மைக்கு மாறானவை - முதல்வர் தலையிட வலியுறுத்தல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
7வது ஊதிய குழுவின் பரிந்துரையால் ரூ.17 ஆயிரம் ஊதியம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக அரசாணையில் குறிப்பிட்டுள்ள காரணங்கள் உண்மைக்கு மாறானவை என்று பொறியாளர்கள் கொந்தளித்துள்ளனர். தமிழகத்தில் பொதுப்பணி, நெடுஞ்சாலை, மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவி பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 6வது ஊதிய குழுவின் போது அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் அடிப்படை தர ஊதியம் ரூ.15,600 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2013 ஜூலை 22ம் தேதி அடிப்படை தர ஊதியத்தை ரூ.9300 ஆக குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதைய எதிர்த்து உச்சநீமன்றத்தில் தமிழ்நாடு பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2013ல் போடப்பட்ட அரசாணைக்கு தடை விதித்தது. இதனால், மீண்டும் பொறியாளர்களுக்கு ஒரு நபர் ஊதிய குழு நிர்ணயித்த ஊதியம் தரப்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், 7வது ஊதிய குழு ஊதிய விகிதத்தில் கடந்த 2013 அரசாணையின் போது அறிவிக்கப்பட்ட ஊதிய விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது உதவி பொறியாளர்களுக்கு 9300-34800+5100ம், உதவி செயற்பொறியாளர்களுக்கு 15,600-39100+5400, செயற்பொறியாளர்களுக்கு 15600-39100+6600 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், உதவி பொறியாளர்களுக்கு மட்டும் ஊதிய விகிதம் பல மடங்கு குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு உதவி பொறியாளர்களும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரை மாத ஊதியத்தில் இழக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இதற்காக வெளியிடப்பட்டுள்ள அரசாணைகளில் ஊதியக் குறைப்பிற்கு குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் உண்மைக்கு மாறானவை என்று பொறியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்று சொல்லிக்கொண்டே பொறியாளர்களுக்கு ஊதியத்தை தமிழக அரசு குறைத்துள்ளது. மத்திய அரசில், உதவிப் பொறியாளர் டிப்ளமோ தகுதிப் பெற்றவர். ஆனால் தமிழக அரசில் உதவிப் பொறியாளர் பிஇ படித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டு நேரடி பணி நியமனம் பெறுபவர். மத்திய அரசில் பணி புரியும் உதவிப் பொறியாளர் பதவிக்கும் தமிழ்நாடு அரசில் பணி புரியும் உதவிப் பொறியாளர் பதவிக்கும் வெறும் பெயரளவில் மட்டுமே ஒற்றுமை இருக்கும்போது, இரு பதவிகளும் ஒன்று என்று ஒப்பிடுவது சரியல்ல. ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட குறைதீர் குழுவிடம் பொறியாளர்களின் கோரிக்கைக்கு அடிப்படையாக வைக்கப்பட்ட காரணங்கள் அனைத்தும் எந்த விளக்கமுமின்றி நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் முதல்வர் இந்த ஊதிய பிரச்னை தொடர்பாக பேசி ஒரு சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Monday, February 24, 2020

February 24, 2020

கிடப்பில் போடப்பட்ட ஓய்வூதியம் தொடர்பான வல்லுநர் குழு அறிக்கை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்த வல்லுநர் குழு அரசுக்கு அறிக்கை கொடுத்து ஓராண்டுக்கு மேலாகியும் நட வடிக்கை இல்லாதததால் 5 . 5 லட்சம் அரசு ஊழியர்கள் அதிருப் தியடைந்துள்ளனர் . தமிழகத்தில் 2003 ஏப் . 1 முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் செயல் படுத்தப்பட்டது . இதில் 5 . 5 லட்சம் ஊழியர்கள் இணைந்துள்ளனர் . இத்திட்டத்தில் அரசு ஊழி யர்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்த தொகையை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு செலுத்த வேண்டும் . ஆனால் , ஆணையத்திடம் இதுவரை ஒரு ரூபாய்கூட செலுத்தவில்லை . இதன்காரணமாக ஓய்வு பெற் றோருக்கும் , பணியில் இறந் தவர்களின் குடும்பங்களுக்கும் முறையாகப் பணப்பலன்கள் கிடைக்கவில்லை . இதனால் ,அதிருப்தி அடைந்த ஊழியர்கள் , ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தினர் . இதையடுத்து பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல் படுத்துவது குறித்து ஆராய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலாநாயர் தலைமையில் 2016 - ல் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது .
இக்குழு இறுதியாக ஐஏஎஸ் ஸ்ரீதர் தலைமையில் செயல்பட்டது . 2018 - ல் இக்குழு அரசிடம் அறிக்கை அளித்தது . ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை . இதனால் , ஓய்வு பெற்ற ஊழியர்கள் , ஆசிரியர் கள் அதிருப்தியில் உள்ளனர் . புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்த திண்டுக்கல் ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியது : புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர் களிடம் பிடித்த தொகை , அரசின் பங்குத்தொகை என ரூ . 35 ஆயிரம் கோடி அரசிடமே உள்ளது . புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணியில் சேர்ந்தவர்களில் ஓய்வு பெற்றோர் , பணியில் இறந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் . இதில் பாதிக்கும் குறைவானவர்களே ஓய்வூதியத் தொகையைப் பெற்றுள்ளனர் .
புதிய ஓய்வூதியத் திட்டப்படி மத்திய அரசு , பிற மாநில அரசுகள் பணிக்கொடை அளிக்கின்றன . ஆனால் , தமிழகத்தில் ஓய்வு பெறுவோருக்கு பணிக்கொடை கொடுப்பதில்லை . மேலும் பிடித்த தொகையில் 60 சதவீத பணத்தை வழங்க வேண்டும் . மீதியுள்ள 40 சதவீதத்தில் ரூ . 1 லட்சத்துக்கு ஆண்டுக்கு ரூ . 6 , 500 ஓய்வூதியமாக வழங்க வேண்டும் . பணியின்போது இறந்தோரின் குடும்பத்துக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் . ஆனால் , அதை தரவில்லை . பிற மாநிலங் களில் ஊழியர்களிடம் பிடிக்கும் 10 சதவீத தொகையுடன் , அரசு கள் 14 சதவீத தொகையைச் செலுத்து கின்றன . ஆனால் தமிழக அரசு 10 சதவீதமே செலுத்துகிறது . வல்லுநர் குழு அறிக்கை மீது நட வடிக்கை எடுத்து பழைய ஓய் வூதியத் திட்டத்தையே செயல் படுத்த வேண்டும் , என்று கூறினார் .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Thursday, May 09, 2019

May 09, 2019

7வது சம்பளக்குழு - இடைநிலை ஆசிரியர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தமிழகத்தில் ஊராட்சி ஒன்றிய, மாநகராட்சி துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கான அடிப்படை ஊதியமாக, ரூ.8,370 ஆக இருந்த நிலையில், கடந்த 2009ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ரூ.5,200 என நிர்ணயிக்கப்பட்டது.
இதனால், கடந்த 2009, 2012 மற்றும் 2014ம் ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடி வந்தனர். ஆனால், அரசு இதற்கு செவிசாய்க்கவில்லை. இதனிடையே, 7வது ஊதியக்குழு பரிந்துரைகள் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டன. ஆனால், போராட்டத்தில் இருந்த இடைநிலை ஆசிரியர்கள், இந்த 7வது ஊதியக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடினர்.
ஊதிய முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழு அமைத்த நீதிமன்றம், பழைய சம்பளத்தில் தொடர்வதுடன், விருப்பமுள்ளவர்கள் தங்களுக்கு வேண்டிய நேரத்தில் புதிய ஊதிய உயர்வையும் பெற்றுக் கொள்ளலாம் என பரிந்துரைத்தது. ஒருநபர் குழு அமைத்து ஒன்றரை ஆண்டுகளை கடந்த நிலையிலும், இதுவரை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
இதனால், அதிருப்தியடைந்த இடைநிலை ஆசிரியர்கள் பலர், 7வது ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதிய உயர்வை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர். தொடர்ந்து, வட்டார கல்வி அலுவலகங்களில் கடிதம் அளித்து, புதிய ஊதியத்தை பெற்று வருகின்றனர். இதனிடையே, சேலம் மாவட்டத்தில் மனு அளித்தும், புதிய ஊதிய உயர்வு வழங்காமல், 6 மாதங்களுக்கு மேலாக இழுத்தடித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து இடைநிலை ஆசிரியர்கள் கூறியதாவது: ஒருநபர் குழு இதுவரை அறிக்கை தாக்கல் செய்யாததால், நீதிமன்ற தீர்ப்பு தாமதமாகிறது. எனவே, நீதிமன்றம் வழிகாட்டியபடி, 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தி, ஊதிய உயர்வு வழங்க கோரியுள்ளோம். சேலம் மாவட்டத்தில் சுமார் 450க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.
இவர்களில் பலர், கடந்த செப்டம்பர் மாதத்திலேயே மனு கொடுத்தவர்கள். அன்று முதல் இன்று வரை, ஊதிய உயர்வு கேட்டு அந்தந்த வட்டார கல்வி அலுவலகத்திற்கு நடையாய் நடந்து வருகின்றனர். வேண்டுமென்றே 6 மாதத்திற்கு மேலாக இழுத்தடித்து வருகின்றனர். எனவே, இனிமேலும் காலம் தாழ்த்தாமல், மனு அளித்துள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும், உடனடியாக ஊதிய உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட பிஇஓக்கள் மீது,நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கண்துடைப்புக்காக குறைதீர் கூட்டம் தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் முதல் சனிக்கிழமைகளில் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இடைநிலை ஆசிரியர்கள்,அந்தந்த வட்டார கல்வி அலுவலகங்களில் தங்களது உயர்கல்விக்கான முன்அனுமதி,பணிப்பதிவேடு, ஊதிய உயர்வு,பணப்பலன்கள்,நிர்வாகம் சார்ந்த கோரிக்கைகள் குறித்து மனு அளிக்கின்றனர். இவற்றின் மீது ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் சேலம் மாவட்டத்தில் குறைதீர் கூட்ட மனுக்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Thursday, February 21, 2019

February 21, 2019

ஒருநபர் ஊதியக்குழுவின் அறிக்கை (திரு.சித்திக்குழு) குறித்து RTI பதில்...

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Saturday, February 16, 2019

February 16, 2019

ஆசிரியர்/அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடு களைதல் சார்ந்து திரு.M.A.சித்திக் IAS அவர்கள் 05/01/19 அன்று தமிழக அரசுக்கு அளித்த அறிக்கையை கோரிய RTI 30 நாட்களை கடந்தும் தகவல் கிடைக்காததால் மேல்முறையீடு! RTI

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Saturday, January 12, 2019

January 12, 2019

அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு திரு.M.A.சித்திக்,IAS அவர்களால் தமிழக அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கை நகல் கோரி RTI

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Tuesday, January 08, 2019

January 08, 2019

அரசு ஊழியர் முரண்பாடுகள்: அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு!!! ( பத்திரிக்கை செய்தி)

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்
January 08, 2019

ஜாக்டோ - ஜியோ விவகாரம்: ஸ்ரீதர், சித்திக் கமிட்டி பரிந்துரைகள் மீதான நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
அரசு ஊழியர்கள் - ஆசியரியர்கள் சங்கங்களின் (ஜாக்டோ- ஜியோ) கூட்டமைப்பின் கோரிக்கை தொடர்பாக ஸ்ரீதர், சித்திக் கமிட்டிகள் அளித்துள்ள பரிந்துரைகள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது. தமிழகத்தில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினரின் வேலை நிறுத்தத்துக்கு தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த லோகநாதன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் சித்திக் குழு அறிக்கை ஜன. 5 இல் தாக்கல் செய்யப்பட்டதால், அதுகுறித்து பரிசீலிக்க 2 நாள்கள் அவகாசம் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், ஊதிய முரண்பாடுகள் மற்றும் 21 மாத நிலுவைத் தொகை வழங்குவது தொடர்பான சித்திக் குழுவின் அறிக்கையை புதன்கிழமை (ஜன.9) சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், அதன் அடிப்படையில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கை குறித்தும், பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான ஸ்ரீதர் குழுவின் அறிக்கை அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஜன. 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Monday, January 07, 2019

January 07, 2019

அரசு ஊழியர் ஊதிய முரண்பாடு: நிபுணர் குழு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய முரண்பாடு தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர் குழுக்கள் சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளை அரசு உடனடியாகச் செயல்படுத்தவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைவது குறித்து அரசுக்குப் பரிந்துரை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட சித்திக் குழுவின் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிக்கையை ஸ்ரீதர் குழு தாக்கல் செய்த சில வாரங்களில், சித்திக் குழு அறிக்கையும் தாக்கலாகியிருப்பது அரசு ஊழியர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளில் மிக முக்கியமானது புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது. கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதியிலிருந்து தொடர் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருந்தனர். இப்பிரச்னையில் தலையிட்ட மதுரை உயர்நீதிமன்றம், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்த அரசின் நிலைப்பாட்டை திங்கள்கிழமைக்குள் தெரிவிக்க வேண்டும் என்று ஆணையிட்டிருந்தது. எனவே, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்த ஸ்ரீதர் குழு, சித்திக் குழு பரிந்துரைகள் மீது தமிழக அரசு சாதகமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். அவற்றை உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவித்து அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Sunday, January 06, 2019

January 06, 2019

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு எதிர்பார்ப்பு!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்
January 06, 2019

அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள்: அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் Video: 2009 & TET இடைநிலை ஆசிரியர் போராட்டம் குறித்து முத்தாய்ப்பாக திரு. சங்கர் (தந்தி டிவி) அவர்கள் சிறப்பாக பதிவு செய்து உள்ளார்



👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews

Search This Blog