Breaking

Showing posts with label Public Exams. Show all posts
Showing posts with label Public Exams. Show all posts

Tuesday, January 09, 2024

January 09, 2024

பொதுத்தேர்வு தேதி - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்



பொதுத்தேர்வு தேதி - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

10,11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தேர்வுகான அனைத்து விதமான அட்டவணையும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஏற்றார் போலத்தான் மக்களவை தேர்தல் தேதி இருக்கும் -அமைச்சர்

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அன்பில் மகேஷ் கூறியதாவது:

பொதுத்தேர்வு தேதி விவரங்கள் இந்திய தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு தேதிகளை தவிர்த்து தேர்தல் தேதிகளை தேர்தல் கமிஷன் அறிவிக்கும். 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, March 29, 2023

March 29, 2023

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு அட்டவணை வெளியீடு! - SSLC EXAMINATION APRIL 2023 VALUATION CAMP SCHEDULE

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு அட்டவணை வெளியீடு!

SSLC EXAMINATION APRIL 2023

VALUATION CAMP SCHEDULE

Thursday, March 16, 2023

March 16, 2023

50,000 பேரு தமிழ் பரிட்சை எழுதல. . . 49,000 பேரு இங்கிலீசு பரிட்சை எழுதல. . . ஏன்னு தெரியுமா?.

50,000 பேரு தமிழ் பரிட்சை எழுதல. . . 49,000 பேரு இங்கிலீசு பரிட்சை எழுதல. . . ஏன்னு தெரியுமா?. . . .

என்று ஏகத்திற்கு உருட்டு உருட்டுனு உருட்டி காட்சி - அச்சு - சமூக ஊடகங்களில் கருத்து சொல்லக் கிளம்பியுள்ள பள்ளிகளின் இன்றைய கற்றல் கற்பித்தல் சூழலை அறியாத, வகுப்பறைகளின் நிலையை உணராத, கல்விக் கருத்தாளர்களிடம் பின்வரும் கேள்விகளுக்குப் பதில் உள்ளதா? தேர்வு எழுத வராத அந்த 50,000 குழந்தைகளில்,

1. மாணவர்கள் எத்தனை பேர்?

2. மாணவிகள் எத்தனை பேர்?

3. கிராமப்புறத்தினர் எத்தனை பேர்?

4. நகர்ப்புறத்தினர் எத்தனை பேர்?

5. அவர்களின் பொருளாதாரச் சூழல் என்ன?

6. அவர்களின் சமூகச் சூழல் எப்படிப்பட்டது?

7. அவர்கள் எதிர்கொண்ட அனுதினப் பிரச்சினைகள் என்னென்ன?

8. கல்வி பற்றி அவர்களது பெற்றோரின் நிலைப்பாடு என்ன?

9. அவர்களின் பள்ளி வருகை % என்ன?

9. காலாண்டு, அரையாண்டு & திருப்புதல் தேர்வுகளில் அவர்களின் நிலை என்ன?

10. தேர்வு நாளன்று அவர்களின் உடல்நிலை எப்படி இருந்தது?

11. சார்ந்த பள்ளிகளில் தொடர்ந்து 2 ஆண்டுகளாகப் பணியிலுள்ள PG ஆசிரியர்கள் எத்தனை பேர்?

12. சார்ந்த பள்ளிகளில் தொடர்ந்து 2 ஆண்டுகளாகப் பணியிலுள்ள தலைமை ஆசிரியர்கள் எத்தனை பேர்?

13. சார்ந்த பள்ளிகளில் பெருந்தொற்று ஊரடங்கு காலத்திற்கு முந்தைய செயல்பாடுகள் எப்படிப்பட்டது?

14. கடந்த இரு ஆண்டுகளில் சார்ந்த பள்ளிகளின் உட்கட்டமைப்பு எப்படி உள்ளது?

15. அம்மாணவர்கள் பற்றி சார்ந்த பள்ளிகளின் பாட ஆசிரியர்களின் மதிப்பீடு என்ன?

இப்புடியே இன்னும் சில கேள்விகளும் இருக்கு. இருந்தாலும் இத்தோடே ஒரே ஒரு முக்கிய கேள்வி மட்டும். . .

16. அம்மாணவர்களில் எத்தனை நபர்களை எப்போது நேரில் சந்தித்து அவர்கள் தேர்வெழுத வராததன் காரணத்தைக் கேட்டறிந்தீர்கள்?

மெய்யாகவே இவ்விடயத்தில் மாணவர் நலனில் அக்கறையோடுதான் நாம் நமக்குத் தெரிந்த காரணங்களைப் பகிர்கிறோம் என்றால். . . . மேலேயுள்ள 16 கேள்விகளுக்குமான விடையை நாம் அறிந்திருக்க வேண்டியது முக்கியம். அரசுத் தேர்வுகள் துறை அலுவலர்கள் ஆர்வக்கோளாறில் வெளியிட்டு வரும் எண்ணிக்கையை மட்டுமே வைத்துக் கொண்டு நாம் காரணங்களை அடுக்குவோமெனில். . . . அவை உண்மையான காரணங்களாக இல்லாது நமது சுய சிந்தையின் கற்பனையாகவோ / கடந்த கால நிகழ்வுகளின் அனுபவப் பகிர்வாக மட்டுமே இருக்கக்கூடும்.

இது நமது கற்பனைகளால் கட்டவிழ்க்கக்கூடிய விடுகதை அல்ல. கள ஆய்வின் வழியே தீர்வு காண வேண்டிய காலத் தேவை. ஏனெனில், இன்றைய தேதியில் இது 50,000 குடும்பங்களின் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கக் கூடியது.

ஆகையால். . . ஏற்ற சூழல் இருக்குமெனில் ஆக்கப்பூர்வமா செயல்படுவோம்! இல்லையா ஆக்கப்பூர்வமா செயல்பட அரசை நிர்பந்திப்போம்!!

அப்புறம். . . ஏன்ட்டயும் இந்தக் கேள்விகளில் எதுக்குமே பதில் இல்ல.

இதைவிட ஆழமான வினாக்களோடே, தீர்வு காண வேண்டுமென்ற சிந்தையோடே சிரத்தையோடே அரசுதான் ஆய்வு செய்தாக வேண்டும். ஏனெனில் அதற்குண்டான அனைத்துவித கட்டமைப்பும் அரசிடம் மட்டுமே உள்ளது. அல்லது அத்தகைய கட்டமைப்புள்ள அரசு சாரா தன்னார்வ அமைப்புகளும் ஆய்வு செய்ய முன்வரலாம். . . . கல்விக் கருத்தாளர்களின் உருட்டுகளை ஒதுக்கி வைத்துவிட்டு.

_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

Wednesday, March 15, 2023

March 15, 2023

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதயநிதி பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2022-23-ஆம் ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ்-2 தேர்வை மொத்தம் 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 பேர் எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 156 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 33 ஆயிரத்து 436 பேர் மாணவியர். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர். அதேபோல புதுச்சேரியில் மொத்தம் 14 ஆயிரத்து 710 மாணவ-மாணவியர் பங்கேற்றனர். அவர்களில் 6 ஆயிரத்து 982 மாணவர்கள், 7 ஆயிரத்து 728 மாணவியர். மேலும், தனித் தேர்வர்கள் 23 ஆயிரத்து 747 பேர், மாற்றுத் திறனாளிகள் 5,206 பேர், சிறைவாசிகள் 90 பேர் தேர்வு எழுதினர். இவர்களுக்காக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3,225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. அதில் தமிழ்நாட்டில் 3,185, புதுச்சேரியில் 40, தனித் தேர்வர்களுக்கு 134, சிறைகளில் 8 பொதுத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், தேர்வுகளை கண்காணிக்க 3,100 பறக்கும் படை அமைக்கப்பட்டு, அதில் 1,135 பேர் நியமிக்கப்பட்டனர். இதில், பள்ளி தேர்வர்கள் 49,559 பேரும், தனி தேர்வர்கள் 1,115 பேரும் தேர்வு எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது; நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக கல்வி அமைச்சரிடம் பேசி மீண்டும் தேர்வெழுத வாய்ப்பளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tuesday, March 14, 2023

March 14, 2023

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பிளஸ் 2 தேர்வில் 3 ஆயிரம் பேர் ஆப்சென்ட் - தேர்வுக் கூடங்களில் ஆட்சியர்கள் ஆய்வு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பிளஸ் 2 தேர்வில் 3 ஆயிரம் பேர் ஆப்சென்ட் தேர்வுக் கூடங்களில் ஆட்சியர்கள் ஆய்வு செய்தனர்

காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்கிறார் ஆட்சியர் மா.ஆர்த்தி. (அடுத்த படம்) திருவள்ளூர் ஆர்.எம். ஜெயின் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டார்

தமிழகத்தில் நேற்று பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கிய நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 2,912 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வை 13,242 பேர் எழுதினர். 13619 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 377 பேர் தேர்வு எழுத வில்லை. காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்ற பொதுத் தேர்வை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது னர் செயலர் கண்ணப்பன், முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உட்பட பலர் உடன் இருந்ததனர்.தேர்வு மையங்களில்ஜபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பறக்கும் படையினர். நிலையான கண்காணிப்பு அலுவலர்கள் மூலம் தேர்வு எழுதும் மாணவர்கள் கண் காணிக்கப்பட்டனர்

Monday, March 13, 2023

March 13, 2023

தான் படித்த பள்ளிக்கு சென்று +2 மாணவர்களை பூஸ்ட் பண்ண அமைச்சர் அன்பில் மகேஷ்

தான் படித்த பள்ளிக்கு சென்று +2 மாணவர்களை பூஸ்ட் பண்ண அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்தார். திருச்சியில் தான் பயின்ற இ.ஆர்.மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வகுப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து தேர்வை தைரியமாக எழுதுமாறு மாணவர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

Saturday, January 28, 2023

January 28, 2023

குறுக்குவழி நீண்டகாலத்துக்கு வெற்றியைத் தராது:பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கு பிரதமா் மோடி அறிவுரை

குறுக்குவழி நீண்டகாலத்துக்கு வெற்றியைத் தராது:பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கு பிரதமா் மோடி அறிவுரை Shortcuts will not bring success in the long run: PM Modi's advice to students who are going to write Public Opinion

பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களிடம் கலந்துரையாடிய பிரதமா் நரேந்திர மோடி, தோ்வில் குறுக்குவழியைக் கடைப்பிடிப்பது நீண்டகாலத்துக்கு வெற்றியைத் தராது என அறிவுரை கூறினாா்.

பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களிடம் ஆண்டுதோறும் ‘தோ்வு குறித்த விவாதம்’ என்ற நிகழ்ச்சியின் வாயிலாக பிரதமா் மோடி கலந்துரையாடி வருகிறாா். அந்நிகழ்ச்சி தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் மாணவா்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவா் பதிலளித்ததாவது:

குறுக்குவழியைக் கடைப்பிடித்து மோசடியில் ஈடுபடுவது ஓரிரு தோ்வுகளுக்கு உதவலாம். ஆனால், நீண்டகால அடிப்படையில் குறுக்குவழி வாழ்வில் வெற்றியைத் தராது. மாணவா்கள் எப்போதும் குறுக்குவழியில் தோ்வை அணுகக் கூடாது. கடின உழைப்பே வாழ்வில் முன்னேற உதவும். மாணவா்கள் தங்களின் வலிமையைக் குறைத்து மதிப்பிடுகிறீா்களா என்பதை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ள வேண்டும். கிரிக்கெட் போட்டி நடைபெறும் மைதானத்தில் கூடியுள்ள ரசிகா்கள் பலவித முழக்கங்களை எழுப்புவா். அதிக ரன்களை எடுக்க வேண்டுமென கூச்சல் எழுப்புவா். அதுபோலவே மாணவா்களைச் சுற்றியும் பல்வேறு கூச்சல்கள் இருக்கும். மாணவா்கள் அவற்றைக் காதில் வாங்கக் கூடாது. கிரிக்கெட் வீரா் தன்னை நோக்கி வரும் பந்தில் மட்டுமே கவனம் செலுத்துவதைப் போல மாணவா்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

அறிவு விரிவாக்கம்:

10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் நிறைவடைந்தவுடன் மாணவா்கள் பயணம் மேற்கொள்ள வேண்டும். நாட்டில் உள்ள பல்வேறு சமூக மக்கள் குறித்து மாணவா்கள் அறிந்துகொள்ள வேண்டும். அதற்காக மாணவா்களுக்குப் பெற்றோா் போதுமான தொகையை வழங்க வேண்டும். மாணவா்கள் தங்கள் அறிவை விரிவுபடுத்திக் கொள்ள பெற்றோா் அனுமதிக்க வேண்டும்.

மாணவா்களின் கேள்வி கேட்கும் திறனை ஆசிரியா்கள் ஊக்குவிக்க வேண்டும். பெருக்கல் வாய்ப்பாடுகளை மனப்பாடமாக ஒப்பிக்கும் திறன் மாணவா்களிடம் குறைந்து வருகிறது. மாணவா்கள் தங்கள் திறனைத் தொடா்ந்து வளா்த்துக் கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளா்ந்து வரும் சூழலில் புத்தாக்கச் சிந்தனையை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்.

தொழில்நுட்பத்துக்கு அடிமையாகக் கூடாது: தொழில்நுட்பம் தொடா்ந்து வளா்ந்து வருகிறது. தொழில்நுட்பத்தின் பலன்களை எவரும் தவிா்க்கக் கூடாது. அதே வேளையில், தொழில்நுட்பங்களுக்கு அடிமையாகிவிடக் கூடாது. தேவைக்கு ஏற்ப கட்டுப்பாட்டுடன் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும். தொழில்நுட்பக் கருவிகளைவிட நாம் திறன்மிக்கவா்கள் என்பதை மாணவா்கள் உணர வேண்டும். தொழில்நுட்ப சாதனங்களில் இருந்து அவ்வப்போது விலகியிருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் குறிப்பிட்ட பகுதியை தொழில்நுட்ப சாதனங்கள் இல்லாத பகுதியாக உருவாக்க வேண்டும். இது வாழ்வை மகிழ்ச்சியாக வாழ உதவும்.

விமா்சனங்களும் குற்றச்சாட்டுகளும்: விமா்சனங்கள் வரவேற்கத்தக்கவை. ஆனால், விமா்சனத்துக்கும் குற்றச்சாட்டுக்கும் பெரும் இடைவெளி உள்ளது. தேவைற்ற விமா்சனங்கள் மீதும் குற்றச்சாட்டுகளிலும் மாணவா்கள் கவனம் செலுத்தக் கூடாது. சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசில் பொருளாதார மேதைகள் எவரும் இல்லை என்றும், ‘சராசரி’ நபா்கள் மட்டுமே உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

ஆனால், முன்பு ‘சராசரி’ என்ற நிலையில் இருந்த இந்தியா, தற்போது உலகில் பிரகாசமாக ஒளிா்ந்து வருகிறது. உலகின் ஒளிக்கீற்றாக இந்தியா திகழ்கிறது. ‘சராசரி’ மாணவா்களாகத் திகழ்ந்தவா்களே பிற்காலத்தில் பெரும் சாதனைகளைப் படைத்தனா். தங்கள் திறமையைப் புரிந்துகொண்டு மாணவா்கள் செயல்பட வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

‘தோ்வு குறித்த விவாதம்’ நிகழ்ச்சியில் பங்கேற்க 38 லட்சம் மாணவா்கள் பதிவு செய்திருந்தனா். இது கடந்த ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவு என மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காணொலி மூலம் பிரதமரின் அறிவுரைகளை மாணவா்கள் கேட்டறிந்தனா். பெட்டிச் செய்தி...

மதுரை மாணவிக்கு பிரதமா் பதில்

மதுரையில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியைச் சோ்ந்த அஸ்வினி என்ற மாணவி காணொலி வாயிலாகப் பிரதமா் மோடியிடம், ‘குடும்பத்தினா் எதிா்பாா்ப்பதைவிடத் தோ்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்தால், அதை எவ்வாறு எதிா்கொள்வது? பொதுத் தோ்வை எதிா்கொள்ளும் மாணவா்கள் மீது மற்றவா்கள் அதிக எதிா்பாா்ப்பு வைப்பதால், மாணவா்கள் கடும் அழுத்தத்துக்கு உள்ளாகின்றனா். யாரையும் நம்பமுடியாத நிலைக்கு மாணவா்கள் தள்ளப்படுகின்றனா். இதற்கான தீா்வு என்ன?’ என்றாா். அதற்கு பதிலளித்த பிரதமா் மோடி, ‘தங்கள் பிள்ளைகள் மீது பெற்றோா் எதிா்பாா்ப்பு வைப்பது இயல்பானதே. ஆனால், சமூக அந்தஸ்து உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பிள்ளைகளிடம் எதிா்பாா்ப்பைத் திணிப்பது தவறானது. தோ்வு முடிவுகள் வாழ்வின் முடிவல்ல.

மாணவா்களுக்கு அழுத்தம் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று தோ்வுக்குப் பிந்தைய விவாதங்கள். தோ்வை எப்படி எழுதியுள்ளாா்கள் என்பதை மாணவா்களிடம் கேட்கும் பெற்றோா், அதுதொடா்பான கற்பனைகளை வளா்த்துக் கொள்கிறாா்கள். உறவினா்களிடமும் சுற்றத்தாரிடமும் அதுதொடா்பாக பகிா்ந்து கொள்கிறாா்கள். எனவே, தோ்வை எப்படி எழுதினீா்கள் என்ற உண்மையைப் பெற்றோரிடம் மாணவா்கள் மறைக்கக் கூடாது. தோ்வு நிறைவடைந்த பிறகு அது தொடா்பாக சக மாணவா்களிடம் விவாதிப்பதும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, அவ்வாறு ஈடுபடுவதைத் தவிா்க்க வேண்டும்’ என்றாா்.

தமிழகத்தைச் சோ்ந்த 2,700 பள்ளிகளில் இருந்து 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் காணொலி வாயிலாக பிரதமா் மோடியின் அறிவுரையைக் கேட்டனா்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்வு குறித்த விவாதம் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய பிரதமா் நரேந்திர மோடி.

Saturday, September 24, 2022

September 24, 2022

4 & 5ஆம் வகுப்புகளுக்கு முதல் பருவத்தேர்வு வினாத்தாள் வழங்குதல் - திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை!

4 & 5ஆம் வகுப்புகளுக்கு முதல் பருவத்தேர்வு வினாத்தாள் வழங்குதல் - திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை! - 4th & 5th Class 1st Term Paper Issue - Trichy District Primary Education Officer's Circular!

Tuesday, April 12, 2022

April 12, 2022

ஏப்ரல் மாதத்துக்குள் பள்ளி இறுதித் தோ்வுகளை நடத்த வலியுறுத்தல்

ஏப்ரல் மாதத்துக்குள் பள்ளி இறுதித் தோ்வுகளை நடத்த வலியுறுத்தல்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கோடை வெயிலை கருத்தில் கொண்டு பள்ளி இறுதித் தோ்வுகளை ஏப்ரல் மாத இறுதிக்குள் நடத்த வேண்டும் என்று தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணி வலியுறுத்தியது.

இந்தச் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் லட்சுமிபதி தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் தியாகராஜன், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலா் ரமேஷ், மாநில நிா்வாகிகள் கிருஷ்ணகுமாரி, சண்முகவடிவு, முனியம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழுப்புரம் மாவட்டச் செயலா் அறிவழகன் வரவேற்றாா்.

மாநில பொதுச் செயலா் தாஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். மாநில துணை பொதுச் செயலா்கள் கமலநாதன், அசோக்குமாா், புருஷோத்தமன், மாநில கூடுதல் தலைவா் திருமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழுப்புரம் மாவட்ட கட்டடப் பிரிவுச் செயலா் ஜெயானந்தம் நன்றி கூறினாா். கூட்டத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 2009-ஆம் ஆண்டுக்கு முன்னா் பணியில் சோ்ந்தவா்களுக்கும், 2009-க்குப் பிறகு பணியில் சோ்ந்தவா்களுக்கும் இடைநிலை ஆசிரியா்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பள்ளி இறுதித் தோ்வுகளை ஏப்ரல் மாதத்துக்குள் முடித்து, மே மாதத்தில் விடுமுறை விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Thursday, April 07, 2022

April 07, 2022

பொதுத்தேர்வு மையங்கள் தயார்; விரிவான ஏற்பாடுகள் தீவிரம்

In Udumalai Education District, centers have been set up for 10th, Plus 1 and Plus 2 students to write the general examination.

In Tamil Nadu, the state general elections will begin on May 5 for Plus 2 class, May 6 for Class X and May 10 for Plus 1 class. In turn, extensive arrangements are being made on behalf of the Directorate of State Elections. District wise details of students writing general examination have been prepared.

Thus, in the Udumalai Education District, for the tenth class, 19 centers; For Plus 1 class, 18 centers; 18 centers are set up for Plus 2 class. Accordingly, 5,066 students are scheduled to appear for the Class X examination, plus 1 for the 4,325 students and 4,150 for the Plus 2 examination.

Education officials said:

Extensive arrangements are being made for Class X, Plus 1, Plus 2 Government General Examinations. Work is underway to prepare the details of the Principal Supervisors, Exam Room Supervisors, Flying Squadron, Route Officers, Quiz Controllers.

Upon completion of this work, appointment orders will be issued. Surveillance cameras will be installed at the centers where the farewell letter will be placed and security will be strengthened. The answer sheets and stationery for the examination will be delivered to all the examination centers and will be delivered by the 9th. Thus, they said. உடுமலை கல்வி மாவட்டத்தில், 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் வகையில் மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில், பிளஸ் 2 வகுப்புக்கு மே 5, பத்தாம் வகுப்புக்கு மே 6, பிளஸ் 1 வகுப்புக்கு மே 10ம் தேதி, அரசு பொதுத்தேர்வுகள் துவங்குகிறது. இதையொட்டி அரசுத்தேர்வுகள் இயக்ககம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டம் வாரியாக பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் விபரங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

அவ்வகையில், உடுமலை கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பிற்கு, 19 மையங்கள்; பிளஸ் 1 வகுப்பிற்கு, 18 மையங்கள்; பிளஸ் 2 வகுப்பிற்கு 18 மையங்கள் அமைக்கப்படுகின்றன. அதன்படி, பத்தாம் வகுப்பு தேர்வை, 5,066 மாணவர்களும், பிளஸ் 1 தேர்வை, 4,325 மாணவர்களும், பிளஸ் 2 தேர்வை, 4,150 மாணவர்களும் எழுத உள்ளனர். கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்விற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முதன்மை கண்காணிப்பாளர்கள், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை குழுவினர், வழித்தட அலுவலர்கள், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் விபரங்கள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

இப்பணி முடிந்ததும், பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். விடைத்தாள் வைக்கப்படும் மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி பாதுகாப்பு பலப்படுத்தப்படும். விடைத்தாள்கள், தேர்வுக்கான எழுது பொருட்களும் அனைத்து தேர்வு மையங்களுக்கும் வரும், 9ம் தேதிக்குள் கொண்டு செல்லப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
April 07, 2022

பொதுத் தேர்வுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் - 10th,11th,12th - T/M& E/M - All Subjects - PDF

Wednesday, April 06, 2022

April 06, 2022

இடைநிலைக் கல்வி விடுப்பு சான்றிதழ் பொதுத்தேர்வு மே 2022 முகப்புத்தாட்கள் - விடுபட்ட / பார்கோடு இல்லாத / சேதமடைந்த முகப்புத்தாட்கள் - இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்வதற்கு அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக - நாள் : 06.04.2022

April 06, 2022

பொதுத் தேர்வுக்கான குறைக்கப்பட்ட பாடத் திட்டங்களை விரைந்து முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு

Directed by the Director of State Examinations to expedite the completion of the reduced syllabi for the General Examination

Total Pageviews

Search This Blog