TN TET
February 10, 2026
Showing posts with label TN TET. Show all posts

Tuesday, February 10, 2026
Sunday, December 07, 2025
TN TET
December 07, 2025
சிறப்பு தகுதித்தேர்வு எப்போது நடைபெறும்? குழப்பத்தில் ஆசிரியர்கள்
Wednesday, November 26, 2025
Monday, June 24, 2024
Thursday, November 09, 2023
TN TET
November 09, 2023
TET - Passing Mark Certificate - தேர்ச்சி மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு?
TET - தேர்ச்சி மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு? TET - Passing Mark Certificate Download Again?
கடந்த 2022-ம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் அதன் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு வரும் ஜனவரி 7-ம் தேதி நடைபெற உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்தும் இந்த தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த நவம்பர் 1-ம் தேதி தொடங்கியது. டெட் 2-ம் தாள் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் பலர் https://www.trb.tn.gov.in/ என்ற இணையதளம் வழியாக ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கு விண் ணப்பிக்கும் கால அவகாசம் நவம்பர் 30-ம் தேதி வரை உள்ளது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக டெட் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களின் மதிப் பெண் சான்றிதழை மீண்டும் பதிவிறக்கம் செய்ய வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 2022-ம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்வதில் விடுபட்டதாக அதிக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இதையடுத்து 2022 டெட்தேர்வில் தேர்ச்சி அடைந்த பட்டதாரிகள் தங்களின் மதிப்பெண் சான்றிதழை https://trbtet2022.onlineregistrationform.org/TNTRB/ எனும் இணையதளத்தில் இருந்து நவம்பர் 30-ம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Saturday, June 03, 2023
Thursday, May 11, 2023
Saturday, May 06, 2023
Saturday, September 17, 2022
TN TET
September 17, 2022
TET Paper 1 & 2 English Important Questions With Key Answer ( Part 3 )
Saturday, August 20, 2022
Thursday, June 16, 2022
TN TRB
June 16, 2022
கணினிவழியில் ஆசிரியர் தகுதி தேர்வு இரு கட்டங்களாக நடத்தப்படும்: தேர்வு வாரிய அதிகாரிகள் தகவல்
ஆசிரியர் தகுதித் தேர்வை கணினி வழியில் இரு கட்டங்களாக நடத்த தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைத்துப் பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில்சேர தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறவேண்டும்.
டெட் தேர்வு மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல்தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி பெறுவோர் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது.
இதற்கிடையே, கரோனா பரவலால் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை. நோய்த்தொற்று குறைந்ததையடுத்து நடப்பாண்டு டெட் தேர்வு நடத்தப்படும் என்று டிஆர்பி அறிவித்தது. தொடர்ந்து, டெட் தேர்வுக்கான அறிவிப்பாணை கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டு, இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இரு தாள்களுக்கும் சேர்த்து மொத்தம் 6.33 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டு டெட் தேர்வு இரு கட்டங்களாக நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
டெட் தேர்வு இதுவரை எழுத்துத் தேர்வாக நடைபெற்று வந்தது. இந்த சூழலில், நடப்பாண்டு டெட் தேர்வை கணினி வழியில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 2 கட்டங்களாக நடத்தத் திட்டமிட்டு வருகிறோம். தேர்வு மையங்களுக்காக, கணினி வசதியுள்ள கல்லூரிகளைத் தேர்வு செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதுதவிர, டெட் தேர்வு முதல்முறையாக கணினி வழியில் நடத்தப்படுவதால், பட்டதாரிகளுக்கு இணையவழியில் மாதிரி தேர்வு பயிற்சிகள் வழங்கப்படும்.
மேலும், தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு, பிரத்யேக மென்பொருளை பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வு நடத்தப்படும். இந்த ஆண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிக அளவில் ஓய்வுபெற்று வருவதால், கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு, பிரத்யேக மென்பொருளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Monday, April 11, 2022
TN TET
April 11, 2022
ஆசிரியர் தகுதி தேர்வு பதிவு அவகாசம் 2 நாளில் நிறைவு
Application registration for the Teacher Qualification Examination ends tomorrow. To extend the opportunity, the graduates have demanded
According to the Central Government's Compulsory Right to Education Act, graduates who want to work as teachers from class one to class 10 are required to pass the Teacher Qualification Examination. Each state is required to conduct this examination twice a year. Application registration for the exam started on March 14; The next day ends on the 13th.
Those who want to write the exam should apply within two more days. In this situation, there is a demand to extend the opportunity to apply for the exam. B.Ed., exam results have to come for 50 thousand educated people. They, too, have appealed to the graduates to extend the deadline for application registration to facilitate them to write the Teacher Qualification Examination.
After the enactment of the Compulsory Right to Education Act in Tamil Nadu, many teachers in the field of school education in Tamil Nadu are compelled to write and pass the Teacher Qualification Examination. Therefore, there is a demand to extend the application period so that they too can apply for the examination. ஆசிரியர் தகுதி தேர்வு
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்ப பதிவு அவகாசம் நாளை மறுநாள் முடிகிறது. அவகாசத்தை நீட்டிக்க, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையில் ஆசிரியர்களாக பணியாற்ற விரும்பும் பட்டதாரிகள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். இந்த தேர்வை ஒவ்வொரு மாநிலமும் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த வேண்டும்.இந்த ஆண்டுக்கான தகுதி தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியான டி.ஆர்.பி., மார்ச் 7ல் அறிவித்தது. தேர்வுக்கான விண்ணப்ப பதிவு மார்ச் 14ல் துவங்கியது; வரும் 13ம் தேதியான நாளை மறுநாள் முடிகிறது. அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை
தேர்வு எழுத விரும்புவோர், இன்னும் இரண்டு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது. பி.எட்., படித்த 50 ஆயிரம் பேருக்கு தேர்வு முடிவுகள் வர வேண்டியுள்ளது. அவர்களும், ஆசிரியர் தகுதி தேர்வை எழுத வசதியாக, விண்ணப்ப பதிவுக்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என, பட்டதாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கட்டாய கல்வி உரிமை சட்டம் தமிழகத்தில் அமலான பின், தமிழக பள்ளிக்கல்வி துறையில் சேர்ந்த ஆசிரியர்கள் பலர், ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே, அவர்களும் தேர்வுக்கு விண்ணப்பிக்க வகையில், விண்ணப்ப காலத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Saturday, April 09, 2022
TN TET
April 09, 2022
TNTET – 2022 தேர்வு விண்ணப்பதாரர்கள் குழப்பம்!
Monday, March 14, 2022
TN TET
March 14, 2022
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்; வயது வரம்பு ஏதும் கிடையாது: ஏப்.13 வரை அவகாசம்
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; வயது வரம்பு ஏதும் கிடையாது: ஏப்.13 வரை அவகாசம்
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று (திங்கள்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க எவ்வித வயது வரம்பு கட்டுப்பாடும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 7 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற ‘டெட்’ தேர்வு எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.
தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி ஆண்டுதோறும் டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் 2012 முதல் 2019 வரை 5 முறை ‘டெட்’ தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் 95 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 25 ஆயிரம் பேர் அரசுப் பணியில் சேர்ந்துள்ளனர். எஞ்சியவர்கள் அரசுப் பணி வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். 2 ஆண்டு நடக்கவில்லை
கடைசியாக 2019-ம் ஆண்டு டெட் தேர்வு நடத்தப்பட்டது. கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக 2020, 2021-ம் ஆண்டுகளில் தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது, கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.
பள்ளி, கல்லூரி தேர்வுகளும் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளும்கூட அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, 2022-ம் ஆண்டுக்கான ‘டெட்’ தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 7-ம் தேதி வெளியிட்டது. மேலும், இந்தத் தேர்வுக்கு மார்ச் 14 முதல் ஏப்ரல் 13 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்திருந்தது. அதன்படி, டெட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று (14-ம்தேதி) தொடங்குகிறது. தாள்-1 தேர்வைஇடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், தாள்-2 தேர்வைபிஎட் முடித்த பட்டதாரிகளும் எழுத வேண்டும்.
உரிய கல்வித்தகுதி உடையவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தை (www.trb.tn.nic.in) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணம் ரூ.500 ஆகவும், எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் ரூ.250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு கட்டுப்பாடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் பிஎட்இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 13-ம் தேதி ஆகும். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெட் தேர்வு நேரடி தேர்வாக (ஆப்லைன் தேர்வு) இருக்குமா அல்லது கணினிவழி (ஆன்லைன் தேர்வு) இருக்குமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதுபற்றிய அறிவிப்பும் பின்னர் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 150 மதிப்பெண்
டெட் தேர்வானது மொத்தம் 150 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படுகிறது. இதில் பொதுப்பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்ணும் (150-க்கு 90), இடஒதுக்கீட்டு பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்ணும் (150-க்கு 82) பெற்றால் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். டெட் தேர்வு தேர்ச்சி ஆயுள் முழுவதும் செல்லத்தக்கது ஆகும்.
டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனத்துக்காக மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்தப்படும். தற்போது நடத்தப்படும் டெட் தேர்வின் முடிவு வெளியிடப்பட்டவுடன் உடனடியாக இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை ஆசிரியர் வாரியம் வெளியிட இருக்கிறது. இந்த போட்டித் தேர்வை டெட் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் (முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் உள்பட) எழுதலாம். காலிப் பணியிடங்கள்
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட 2022-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையின்படி, இடைநிலை ஆசிரியர் பதவியில் 4,989 காலியிடங்களும் பட்டதாரி ஆசிரியர் பதவியில் 1,087 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. புதிய காலியிடங்களை நிரப்புவதற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.
இதனிடையே, ஏற்கெனவே டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், பணி நியமனத்துக்கு இன்னொரு தேர்வு நடத்தக் கூடாது என்றும் குறைந்தபட்சம் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி அண்மையில் டிபிஐ வளாகத்தில் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட டெட் தேர்வை 5 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். 2 ஆண்டுகளுக்குப் பிறகுதற்போது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் சுமார்7 லட்சம் பேர் விண்ணப்பிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thursday, March 03, 2022
TN TET
March 03, 2022
TET - இதுவரை நடைபெற்ற தேர்வு மற்றும் பணி நியமனம் பெற்றவர்கள் எண்ணிக்கை விவரம்

தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பணி நியமனம் பெற்றவர்கள் எண்ணிக்கை விவரம் வெளியீடு!!
CLICK HERE TO DOWNLOAD

Sunday, February 06, 2022
Saturday, February 05, 2022
TN TET
February 05, 2022
பத்து ஆண்டுகளாக ஆசிரியர்கள் பரிதவிப்பு: TET விலக்களிப்பதில் பாரபட்சம்
பத்து ஆண்டுகளாக ஆசிரியர்கள் பரிதவிப்பு:டெட்., விலக்களிப்பதில் பாரபட்சம்
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், 2012 நவ., மாதம் 16ம் தேதி வரை பணியில் சேர்ந்த அனைவருக்கும் டெட்., தேர்வில் இருந்து விலக்களிக்கப்பட்ட நிலையில், ஒரு தரப்பினருக்கு மட்டும் விலக்களிப்பதில் இழுபறி நிலவுவதாக, அதிருப்தி எழுந்துள்ளது.
மத்திய அரசு கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தை, 2010ல் அறிமுகப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு (டெட்.,) நடத்தப்படுகிறது.தமிழகத்தில் டெட்., 2011- 2012ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்படி, ஆசிரியர் பணியில் சேர, இத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியமாகியது. இந்நிலையில், 2010ம் ஆண்டு முதல் நவ., 2012ம் ஆண்டு வரை, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் முறையாக பணி நியமனம் பெற்ற, 10 ஆயிரம் ஆசிரியர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையில், பணியை தொடர அனுமதி வழங்கப்பட்டது.
தொடர்ந்து, அரசு பள்ளிகளில் சேர்ந்தவர்கள், அரசு உதவிபெறும் சிறுபான்மை பள்ளிகளில் டெட்., நிபந்தனை ரத்து செய்யப்பட்டு, தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.ஆனால், சிறுபான்மையற்ற அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும், 1000 ஆசிரியர்களுக்கு இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படாமல் உள்ளது. இது குறித்து, தமிழ்நாடு அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், 'பத்து ஆண்டுகளாக தகுதிதேர்வு நிபந்தனையால், ஊதிய உயர்வு, மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, பதவி உயர்வு ஏதும் இன்றி ஆசிரியர்கள் பரிதவிப்பில் உள்ளனர்.
பலர் ஓய்வு பெறும் வயதை எட்டியும், இன்னும் குழப்பம் தீரவில்லை. 2010 முதல் 2012 நவ., வரை அரசு பள்ளியிலும், சிறுபான்மை அரசு உதவிபெறும் பள்ளியிலும் சேர்ந்தவர்களுக்கு, விலக்கு அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர்.
ஆனால், எங்களுக்கு எவ்வித தீர்வும் ஏற்படுத்தவில்லை. வரும், ஏப்., மாதம் டெட்., தேர்வு நடைபெறவுள்ள நிலையில், எங்களது நிலைப்பாட்டை அரசு புரிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Thursday, January 27, 2022
Monday, January 03, 2022
TN TET
January 03, 2022
எதிர்வரும் சட்டமன்றக் கூட்டத்திலாவது ‘TET’தவிர்ப்பு ஆணை கிடைக்குமா? - AIDED ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு!
கடந்த பத்தாண்டுகளாக பரிதவித்து வரும் தங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்விலிருந்து விலக்களித்து காக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:
அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் முறையாக பணிநியமனம் பெற்ற சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் மட்டும் கடந்த பத்தாண்டுகளாக தகுதித் தேர்வு (டெட் தேர்வு) நிபந்தனையால் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களைப் போலவே 2012ம் ஆண்டு வரை தகுதித் தேர்வு நிபந்தனையுடன் பணியேற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) உத்தரவால் காப்பாற்றப்பட்டனர். அரசு உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு நிபந்தனையை ரத்து செய்து, புத்தாக்கப் பயிற்சி மட்டும் அளிப்பதாக அறிவித்ததால் இவர்களும் காப்பாற்றப்பட்டனர்.
ஆனால், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத சிறுபான்மையற்ற ஆசிரியர்களாகிய எங்களுக்கு ஒரு வார கால புத்தாக்கப் பயிற்சி மட்டும் அளித்து பாதுகாப்பதாக கடந்த ஆட்சியில் துறைசார்ந்த அப்போதைய அமைச்சர் உறுதியளித்தார். அது நிறைவேற்றப்படவில்லை. மாறாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து எங்களது பணியை தற்காலிகமாக காப்பாற்றிக் கொண்டுள்ளோம். ஆசிரியர் தகுதித் தேர்வு ஒன்றையே காரணம் காட்டி, இதுநாள் வரை எங்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, வளரூதியம், ஊக்க ஊதியம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, பணிப்பதிவேடு தொடக்கம், விடுப்பு அனுமதிப்பு, தகுதி காண் பருவம் நிறைவேற்றல், பணிவரன்முறை செய்தல் போன்ற வழக்கமான நடைமுறைகள் கூட ஆங்காங்கே அனுமதிக்கப்படவில்லை. கடந்த ஆட்சியாளர்களால் புரிதல் இல்லாத, துறைசார்ந்த ஒரு சில அதிகாரிகளால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வாழ்வா, சாவா என்ற வாழ்க்கைப் போராட்டத்துடன் நாட்களை நகர்த்தியபடி, ஆசிரியர் தகுதித்தேர்வு என்ற நிபந்தனையின் அடிப்படையில் பணிபுரியும் எங்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளித்திட வேண்டும். முதலமைச்சர் மனது வைத்தால் தகுதித் தேர்வு எழுதுவதிலிருந்து ஒரே ஒரு தவிர்ப்பு ஆணை மூலம் எங்களை விடுவித்து விடலாம். அவ்வாறு விடுவிக்கப்பட்டால் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக கடந்த ஆட்சியாளர்களால் தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபசாகிவிடும். நல்லதொரு அறிவிப்பினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் வரும் ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தில் வெளியிட வேண்டும் "
இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் 23/8/2010 முதல் 16/11/2012 வரையிலான காலகட்டத்தில் நிரந்தர பணியிடங்களில் பணி நியமனம் பெற்று , பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.