Breaking

Showing posts with label Group 4 Examination. Show all posts
Showing posts with label Group 4 Examination. Show all posts

Wednesday, October 29, 2025

Wednesday, October 11, 2023

October 11, 2023

குரூப் 4 தோ்வுக்கான விடைக் குறிப்புகள்: இன்று அறிக்கை தாக்கல் செய்யTNPSC-க்கு உத்தரவு.



குரூப் 4 தோ்வுக்கான விடைக் குறிப்புகள்: இன்று அறிக்கை தாக்கல் செய்யTNPSC-க்கு உத்தரவு. Answer Notes for Group 4 Question: Order to TNPSC to file report today.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் 4 தோ்வுக்கான விடைக் குறிப்புகளை வெளியிடுவது தொடா்பான அறிக்கையை புதன்கிழமை (அக். 11) தோ்வாணையச் செயலா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த கண்மணி , கீதா ஆகியோா் தாக்கல் செய்த மனுக்கள்: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் கடந்த 2022, மாா்ச் 30-இல் குரூப் 4 தோ்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி, காலியாக உள்ள 7,301 இடங்களுக்கு ஜூலை 24-இல் எழுத்துத் தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வை எழுத சுமாா் 22 லட்சம் போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 18 லட்சம் போ் தோ்வெழுதினா். இந்த நிலையில், காலிப் பணியிட எண்ணிக்கை 10,117 ஆக உயா்த்தப்பட்டது. இந்தத் தோ்வு முடிவுகள் கடந்த மாா்ச் மாதம் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபாா்க்கும் பணிகளும் நடைபெற்றன. இந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் பட்டியலில், எங்களது பெயா்கள் இல்லை. இந்தத் தோ்வில் நாங்கள் 255 மதிப்பெண்களுக்கு மேல் பெற அதிக வாய்ப்புள்ளது. ஆனால், விடைக் குறிப்புகளில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

எனவே, இந்தத் தோ்வுக்கான விடைக் குறிப்புகளை வழங்க வேண்டும். அதுவரை எங்களுக்குரிய பணியிடங்களை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.

இந்த மனுக்களை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஆா். விஜயகுமாா் பிறப்பித்த உத்தரவு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் 4 தோ்வுக்கான இறுதி விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டனவா? இல்லையெனில், உடனடியாக விடைக் குறிப்புகளை வெளியிட வேண்டும். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டதை, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையச் செயலா் அறிக்கையாக புதன்கிழமை (அக். 11) நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றாா் நீதிபதி.

Monday, February 13, 2023

February 13, 2023

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட கோரிக்கை

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட கோரிக்கை TNPSC Group 4 Exam Result Release Request

குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி உடனே வெளியிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். கடந்தாண்டு நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் 7மாதங்கள் ஆகியும் வெளியிடப்படவில்லை என ராமதாஸ் கூறியுள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தில் தேர்வாணையம் இவ்வளவு அலட்சியமாக நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் மட்டும் 31 மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடங்களும், 117 துணை ஆட்சியர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதனால் வருவாய் நிர்வாகம் சார்ந்த பணிகள் முடங்கிக் கிடக்கின்றன

தமிழ்நாடு அரசிற்கு முதுகெலும்பாக திகழ்வது வருவாய்த் துறை தான். அத்துறையில் சுமார் 150 உயர்பதவிகள் காலியாக இருப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இதன் காரணமாக வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தமிழகத்தின் வளர்ச்சியையும் பாதிக்கும்

காலியிடங்களில் சுமார் 100 துணை ஆட்சியர் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி முதல் தொகுதி தேர்வு மூலம் தான் நிரப்ப முடியும் என்பதால், உடனடியாக அத்தேர்வை அறிவிக்க வேண்டும். அதேபோல், தகுதியான வட்டாட்சியர், துணை ஆட்சியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்!(

Monday, August 22, 2022

August 22, 2022

TNPSC Group 4 தேர்வு; கட் ஆஃப் எப்படி இருக்கும்? ரிசல்ட் எப்போது?

TNPSC Group 4 VAO exam expected cut off and result date: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், பிரிவு வாரியாக கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு வரும் என்பதை இப்போது பார்ப்போம்.

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது.

இந்த குரூப் 4 தேர்வு ஆவரேஜ் என்ற அளவில் இருந்ததாக தேர்வர்களும், நிபுணர்களும் தெரிவித்தனர். இதனால் கட் ஆஃப் மதிப்பெண்கள் கடந்த ஆண்டை விட குறைவாக இருக்கும் என கூறப்பட்டது. அதேநேரம், தமிழில் 87-91 வினாக்களுக்கும், கணிதத்தில் 20-23 வினாக்களுக்கும் 56-61 வினாக்களுக்கும் விடையளித்திருப்பது சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்னர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான உத்தேச விடைகளை வெளியிட்டது. இதனையடுத்து, நிபுணர்கள், உத்தேச விடைகள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் அடிப்படையில் கட் ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிட்டுள்ளனர். அதன்படி, குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் மேலும் குறையலாம் என தெரிகிறது. மேலும் காலியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட உள்ளதால், கட் ஆஃப் இன்னும் குறையாலாம் என கூறப்படுகிறது.

தற்போது இந்த குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம். இங்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் என குறிப்பிடப்படுவது, கேள்விகளின் எண்ணிக்கையே, தேர்வுக்கான மதிப்பெண்கள் அளவு அல்ல. மொத்தம் 200 கேள்விகளுக்கு எத்தனை வினாக்கள் சரி என்பதையே, நாம் இங்கு கட் ஆஃப் மதிப்பெண்களாக குறிப்பிட்டு இருக்கிறோம்.

முதலில் இளநிலை உதவியாளர் மற்றும் வி.ஏ.ஓ பதவிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களைப் பார்ப்போம். இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 164 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 161 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 158க்கு மேலும், SC பிரிவினருக்கு 155க்கு மேலும், BCM பிரிவினருக்கு 158க்கு மேலும், SCA பிரிவினருக்கு 150க்கு மேலும், ST பிரிவினருக்கு 145 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பெண்களுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 163 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 160 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 155க்கு மேலும், SC பிரிவினருக்கு 151க்கு மேலும், BCM பிரிவினருக்கு 154க்கு மேலும், SCA பிரிவினருக்கு 147க்கு மேலும், ST பிரிவினருக்கு 141 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தட்டச்சர் பணியிடங்களுக்கு, இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 158 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 154 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 152க்கு மேலும், SC பிரிவினருக்கு 147க்கு மேலும், BCM பிரிவினருக்கு 150க்கு மேலும், SCA பிரிவினருக்கு 142க்கு மேலும், ST பிரிவினருக்கு 135 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களில் ஒவ்வொரு பிரிவிலும் பெண்களுக்கு 2 மதிப்பெண்கள் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.

சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு, இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 148 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 144 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 145க்கு மேலும், SC பிரிவினருக்கு 132க்கு மேலும், BCM பிரிவினருக்கு 142க்கு மேலும், SCA பிரிவினருக்கு 128க்கு மேலும், ST பிரிவினருக்கு 120 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களில் ஒவ்வொரு பிரிவிலும் பெண்களுக்கு 2 மதிப்பெண்கள் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்த கட் ஆஃப் மதிப்பெண்களில் 3-4 மதிப்பெண்கள் வரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேநேரம், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் 4-5 வினாக்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது.

இதனிடையே, குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் அக்டோபர் 2 ஆவது வாரத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Monday, July 25, 2022

July 25, 2022

குரூப் 4 தோ்வு: 18.50 லட்சம் போ் எழுதினா்: வினாக்கள் எளிதாக இருந்ததாக கருத்து

தமிழகம் முழுவதும் குரூப் 4 தோ்வை 18.50 லட்சம் போ் ஞாயிற்றுக்கிழமை எழுதினா். வினாக்கள் எளிதாக இருந்ததாக தோ்வா்கள் தெரிவித்தனா்.



இதையும் படிக்க | வகுப்பு 12|அடிப்படை தானியங்கி ஊர் திப்பொறியியல்|பாடம் 8|ஸ்டியரிங் அமைப்பு|அலகு 2

குரூப் 4 தோ்வு அறிவிக்கை கடந்த மாா்ச் 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. 274 கிராம நிா்வாக அலுவலா் பணியிடங்கள், 3,678 இளநிலை உதவியாளா் பணியிடங்கள், 50 வரித் தண்டலா், 2,108 தட்டச்சா் பணியிடங்கள், 1,024 சுருக்கெழுத்து தட்டச்சா் பணியிடங்கள், ஒரு பண்டகக் காப்பாளா் என 7 ஆயிரத்து 138 காலிப் பணியிடங்களும், பல்வேறு வாரியங்களில் 163 காலிப் பணியிடங்களும் என மொத்தம் 7 ஆயிரத்து 301 குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) நடைபெற்றது.

18.50 லட்சம் போ்: 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 போ் விண்ணப்பித்திருந்தனா். குரூப் 4 தோ்வுகளில் அதிகம் போ் விண்ணப்பித்த தோ்வு இதுவாகும்.



இதையும் படிக்க | வகுப்பு 12|கணிதவியல்|பாடம் 8|வகையீடுகள் மற்றும் பகுதி வகை கெழுக்கள் |பகுதி 4

காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை தோ்வு நடைபெற்றது. தமிழ் மொழியிலிருந்து 100 வினாக்கள், பொது அறிவு, அறிவுக்கூா்மை தொடா்பான பிரிவுகளில் இருந்து 100 வினாக்கள் என 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. இவற்றுக்கான மொத்த மதிப்பெண்கள் 300.



தோ்வுக்கான விரிவான ஏற்பாடுகளை அரசுப் பணியாளா் தோ்வாணையம் செய்திருந்தது. 38 மாவட்டங்களில் 316 தாலுகாக்கள் தோ்வு மையங்களாக அறிவிக்கப்பட்டு, 7 ஆயிரத்து 689 தோ்வு அமைவிடங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. கண்காணிப்புப் பணியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 150 போ் ஈடுபட்டனா். 534 பறக்கும் படையினா், 7 ஆயிரத்து 689 கண்காணிப்பு கேமரா தொழில்நுட்பாளா்கள், அதே எண்ணிக்கையில் விடியோ படப்பிடிப்பாளா்கள் பணியில் ஈடுபட்டனா்.

இதையும் படிக்க | வகுப்பு12|கணினி அறிவியல்|பாடம் 15|SQL மூலம் தரவுகளை கையாளுதல்|பகுதி5

22 லட்சம் போ் விண்ணப்பித்திருந்தாலும், தோ்வு எழுதியவா்களின் சதவீதம் 84.5 என தோ்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனா். அதாவது, 18.50 லட்சம் போ் தோ்வு எழுதியதாக கூறினா். ஒருசில இடங்களில் தாமதமாகச் சென்ற தோ்வா்களை தோ்வு எழுத கண்காணிப்பாளா்கள் அனுமதிக்கவில்லை.



தோ்வில் தமிழ், பொது அறிவு தொடா்பான வினாக்கள் எளிதாக இருந்ததாக தோ்வா்கள் கூறினா். வேதியியல், அரசியல் அறிவியல், பொருளாதார வினாக்கள் சற்று சிந்தித்து எழுதும் வகையில் இருந்ததாகவும் அவா்கள் தெரிவித்தனா். வினாக்களுக்கான உத்தேச விடைப் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

Total Pageviews

Search This Blog