Breaking

Showing posts with label Pongal Bonus. Show all posts
Showing posts with label Pongal Bonus. Show all posts

Thursday, January 09, 2025

Thursday, January 02, 2025

Saturday, January 20, 2024

January 20, 2024

போனஸ் என்றால் என்ன What is a bonus?



போனஸ் என்றால் என்ன ?

இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு, வாரச் சம்பளம் முறையே நடைமுறையில் இருந்து வந்தது...!(வருடத்துக்கு 52 வாரங்கள்)

ஆங்கிலேயர்கள் மாதச் சம்பளம் முறையை அமுல்படுத்தினார்கள். 4 வாரங்களுக்கு ஒரு சம்பளம் எனக்கு கணக்கிட்டு, மாதச் சம்பளமாக கொடுத்தனர்...!(12*4=48 வாரங்கள்)

அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்துக்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால் 4 வாரத்துக்கு ஒரு சம்பளம் என கணக்கிட்டு பார்த்தால் வருடத்திற்கு 13 சம்பளம் வர வேண்டும்.

Sunday, January 14, 2024

January 14, 2024

பொங்கல் பூஜை செய்வது எப்படி?.. பொங்கல் வைக்க நல்ல நேரம்!

பொங்கல் பூஜை செய்வது எப்படி?.. பொங்கல் வைக்க நல்ல நேரம்!

பொங்கல் பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்படவிருக்கிறது.

பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 6.00 மணி முதல் 7.00 மணி மற்றும் காலை 10.00 மணி முதல் 10.30 மணி.

பொங்கலன்று காலையில் நல்ல நேரம் பார்த்து, வீட்டு முற்றத்தில் பெரிய அளவிலான குத்துவிளக்கேற்றி, அதன் முன் ஒரு வாழை இலையைப் போட வேண்டும். அதன் இடது ஓரத்தில் நாழி நிறைய பச்சை நெல் வைக்க வேண்டும். இலையில் பச்சரிசியை பரப்பி, அதன் மேல் கத்தரிக்காய், கருணைக்கிழங்கு, சிறுகிழங்கு, வள்ளிக்கிழங்கு, அவரைக்காய், சீனிஅவரை, பூசணித் துண்டு, பிடிகிழங்கு, காப்பரிசி (வெல்லம், பச்சரிசி கலவை) வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள்கிழங்கு ஆகியவற்றை வைக்க வேண்டும். கரும்பின் ஓலையை வெட்டாமல் நீள கரும்பாக சுவரில் சாய்த்து வைக்க வேண்டும். ஒற்றைக் கரும்பாக வைப்பதைத் தவிர்த்து இரண்டு கரும்புகள் வைக்க வேண்டும்.

பொங்கல் பானையை மண்அடுப்பு அல்லது பொங்கல் கட்டி எனப்படும் கற்கள் மீது வைக்க வேண்டும். திருவிளக்கிற்கு பத்தி, கற்பூர ஆரத்தி காட்டியபிறகு, உங்கள் குல தெய்வம் இருக்கும் கோயிலின் திசையை நோக்கி காட்ட வேண்டும். பின்னர் சூரியபகவானுக்கு ஆரத்தி காட்டியதும், ஒரு தேங்காயை உடைத்து, அதன் நீரை பானையில் விட வேண்டும். சுத்தப்படுத்திய பச்சரிசியை நன்றாகக் களைந்து, அந்த தண்ணீரை பானையில் விட வேண்டும். அடுப்புக்கும், பொங்கல் பானைக்கும் தூபம் (பத்தி) காட்டி, பற்ற வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்து பால் பொங்கும் போது குலவையிட வேண்டும். குலவை தெரியாதவர்கள் ‘பொங்கலோ பொங்கல் என முழங்க வேண்டும். பின்னர் பானையிலுள்ள சுடும் நீரை, அரிசி வேகும்அளவிற்கு மட்டும் வைத்துக் கொண்டு, மீதியை முகந்து விட வேண்டும். அரிசியை போட்டு, வெந்ததும் அவ்வப்போது அகப்பையால் கிண்டி கொடுக்க வேண்டும். இல்லா விட்டால், பாத்திரத்தின் அடியில் பிடித்து விட வாய்ப்புண்டு. பொங்கலை இறக்கிய பிறகு, சர்க்கரைப் பொங்கல் வைக்க வேண்டும்.

இலையின் முன்னால் இந்த பானைகளை இறக்கி வைத்து, திருவிளக்கிற்கும், சூரியனுக்கும் பூஜை செய்ய வேண்டும். ஆதித்ய ஹ்ருதயம் தெரிந்தவர்கள் அந்த ஸ்லோகங்களைச் சொல்லலாம். மற்றவர்கள் சூரியன் குறித்த தமிழ் பாடல்களைப் படிக்கலாம். பின்னர் காகத்திற்கு பொங்கல் வைக்க வேண்டும். காகம் உணவை எடுத்த பிறகு, குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் கொடுக்க வேண்டும். அதன்பிறகே பெரியவர்கள் சாப்பிட வேண்டும். பின், காய்கறி வகைகள் சமைத்து வெண்பொங்கலை மதிய வேளையில் சாப்பிட வேண்டும். இரவில் முன்னோரை நினைத்து, இனிப்பு வகைகள், புத்தாடை வைத்து வணங்க வேண்டும். புத்தாடையை தானமாக கொடுத்து விட வேண்டும்

Saturday, January 14, 2023

January 14, 2023

பொங்கல் பண்டிகை கொண்டாடும் முறை - ஒருபார்வை

பொங்கல் பண்டிகை கொண்டாடும் முறை - ஒருபார்வை

பொங்கல் பண்டிகை அன்று விரதம் இருந்து சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

மண்ணையும் அது தரும் வளத்தினையும் கொண்டாடவே உருவானது பொங்கல் திருவிழா. பொங்கல் பண்டிகை அன்று விரதம் இருந்து சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். சூரிய பகவானுக்கு படையல் வைத்து வழிபாடு செய்த பின்னர் பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார். இதற்காக கூடவே கரும்பும் வைத்து, கடவுளுக்குப் படைப்பார்கள். நகரங்களில் உள்ளோர், சமையலறையிலேயே பொங்கல் தயார் செய்துவிடுவார்கள். சந்து, பொந்துகளில்கூட வாகன நெரிசல் வளைத்துக் கட்டும்போது, சமையலறை பொங்கலே நகரங்களில் சாத்தியம்.

பொங்கலை சூரியனுக்கு படைத்து மகிழலாம்; தூபம், தீபம் காட்டி ஆதவனை ஆராதனை செய்யலாம். இங்கும் கட்டாயம் கரும்பு நிவேதனம், முக்கிய இடத்தை பெற்றுள்ளது. தைப்பொங்கல்:-

பொங்கல் என்பது தமிழக மக்களின் பழமை வாய்ந்த பண்டிகையாகும். மழை காலத்துக்கும் குளிர் காலத்துக்கும் பிறகு வரும் அறுவடைக் காலம் இந்தத் தினத்தில் தான் தொடங்குகிறது. உழைப்பின் பலனை அறுவடை செய்யும் நாள் இது. உழவுத்தொழிலுக்கும், உழவர்களுக்கும் மரியாதை செலுத்தும் உழவர் திருநாள் தை மாதத்தின் முதல் நாள்.

உலகில் உயிர்கள் தோன்றுவதற்கும், உலக இயக்கத்திற்கும் காரணமாக இருப்பவர் சூரிய பகவான். பிரபஞ்ச சக்தி உண்மையா? என நாத்திகம் பேசுபவருக்கு நெத்தியடி கொடுக்கும் கண் கண்ட தெய்வம் சூரியன். நாட்டின் முதுகெலும்பான உழவுத் தொழிலுக்கு உதவிய சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து வழிபடப்படுகிறது.

ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களின் விளைச் சலை அறுவடை செய்த புது அரிசியில் பொங்கல் செய்யப்படும். புதுப் பானையில் மஞ்சள், குங்குமம் வைத்து மஞ்சள் கொத்தை எடுத்து கங்கணம் தயாரித்து பானையை சுற்றிக் கட்ட வேண்டும். பின்பு புது அரிசியுடன் வெல்லம், பாசிப்பருப்பு பால், நெய், முந்திரி, திராட்சை சேர்த்துப் புதிய அடுப்பில் வைத்து அவரவர் சம்பிரதாய முறைப்படி சர்க்கரைப் பொங்கல் வைக்கலாம்.

குல, இஷ்ட தெய்வத்தை வணங்கி பொங்கல் வைத்து பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என்று மூன்று முறை கூவி சூரியனை வணங்குவது நல்லது. முழுக் கரும்பு, மஞ்சள் செடி கொத்து, சிவப்பு பூசணி துண்டு, கிழங்கு வகை, பழ வகைகள், வெற்றிலை, பாக்கு தேங்காய், ஆகியவற்றையும் சூரிய பகவானுக்கு படைக்க வேண்டும். பூஜை முடிந்ததும் கோமாதாவான பசுவுக்கும் முன்னோர்களை நினைத்து காகத்துக்கும் பொங்கல் வைத்தப் பிறகு அனைவரும் பொங்கல் சாப்பிடலாம்.

சூரிய வழிபாட்டை தைப் பொங்கல் அன்று மட்டுமல்ல, தினமும் வழிபடலாம். இயற்கை சக்தியான சூரியனிடம் இருந்து அதிகாலையில் வரும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை உடலில் படும்போது நரம்புகள் புத்துணர்வடைந்து உற்சாகமடைந்து உடல் வலிமையும் பெறுகின்றன.ஆயுள், ஆரோக்கியம் அதிகரிக்கும். கண்களில் உள்ள குறைபாடுகள் சீராகும். அறிவுவளரும். பித்ருக்களாகிய முன்னோர்களின் நல்லாசி சூரிய ஒளி மூலமாக கிடைக்கும். ஜனன கால ஜாதகத்தில் லக்னத்திற்கு ஒன்பதில் சூரியன் இருப்பவர்கள், சூரியன் வலிமை குறைந்தவர்கள் , சூரியனுடன் சனி, ராகு, கேது சேர்க்கை பெற்றவர்கள் தினமும் ஆதித்ய இருதயம் படித்து சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறப்பு. தினமும் சூரிய பகவானை வழிபட்டு ஆதித்திய இருதயம் படித்து அல்லது கேட்டு வந்தால் சத்ரு பயம், கடன் தொல்லை, உஷ்ண நோய்கள் விலகும். படிப்படியாக கஷ்டங்கள் விலகும்.வியாபாரம், தொழில் விருத்தியாகி சகல காரியங்களும் சித்தியாகும். அனைத்து விதமான பாவங்களும் விலகி நிரந்தரமான முழுமையான வெற்றிகள் கிட்டும். மனதில் உள்ள கவலைகள் ஒழியும். குழந்தைகள் நன்றாக படிப்பார்கள். அரசாங்க உதவி, அரசு வேலை, அரசியல் ஆதாயம் போன்றவற்றை சூரிய வழிபாட்டின் மூலமே பெற முடியும்.

நீங்கள் எதை அடைய வேண்டும் என்று நினைக் கிறீர்களோ அதை அடைவதற்கு மந்திரம், யந்திரம், தந்திரம், இரவு வேலை என்று அழைய வேண்டிய அவசியம் இல்லை. சூரியன் உதயமாகும் போது ஆத்மார்த்தமாக ஆதித்ய இருதய சுலோகத்தை சொல்லி வந்தால் எல்லா தடைகளும் நீங்கி சகல ஐஸ்வர்யங்களுடன் ஆத்ம பலம், ஞானம் போன்ற அனைத்தும் கிடைக்கும்.அதனால்தான் சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.

தமிழர் பண்டிகையான தைப் பொங்கலைக் கொண்டாடி இயற்கைக்கும் ,மற்ற உயிர்களுக்கும் நன்றி செலுத்த தை 1 அன்று பொங்கல் வைக்க நல்ல நேரம். அன்றைய தினம் சுக்ரனின் ஆதிக்கம், மகாலட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமை என்பது சிறப்பு. காலை 6 மணி முதல் 9 மணி வரை சுக்ரன், புதன், சந்திர ஹோரைகள் இருக்கிறது. அன்றைய நல்ல நேரம் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை இருப்பதால், காலை 6 மணி முதல் 10.30 மணி வரை சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து படைத்து பூஜை செய்ய உகந்த நேரமாகும். மேலும் சூரியன் மகர ராசிக்குள் மதியம் 2.29 மணிக்கு பிரவேசிப்பதால் மாலை 4.30 முதல் 5.30 மணி வரையும் பொங்கல் வைக்கலாம். ராகு- காலை 10.30 முதல் மதியம் 12 மணி வரை எமகண்டம்- மதியம் 3 முதல் 4,30 மணி வரை. ராகு மற்றும் எமகண்ட நேரத்தில் பொங்கல் வைப்பதை தவிர்க்க வேண்டும். பொங்கல் திருநாளான தை மாதம் 1 2 3 ஆகிய நாட்கள் கரிநாளாக வருகிறது . எனவே அன்றைய தினங்களில் சுபநிகழ்ச்சிகளான திருமணம் , திருமணத்திற்கு தாலி செய்தல் . கடை திறப்புவிழா, அலுவலகம் , தொழிற்சாலை, கடைகள் திறப்புவிழா, காதுகுத்து, சீமந்தம், கிரக பிரவேசம் உட்பட அனைத்து சுபநிகழ்ச்சிகளை யும் செய்யாமல் தவிர்ப்பது நல்லது. அன்று சூரியவழிபாடு, சூரியபூஜை , பித்ருக்கள், குலதெய்வ வழிபாடுகள் செய்வது நல்லது.

மாட்டுப் பொங்கல்:- ஜனவரி 15 (தை 2). கடும் உழைப்புக்கும் உழவுக்கும் துணை செய்த கால்நடைகளை ஆராதிக்கும் நாள். உழவுக்கு உதவிய கால் நடைகளுக்கும் பால் தரும் பசுக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நாள் தான் மாட்டுப்பொங்கல்.

தமிழக கிராமங்களில் உறவினர்கள் மேல் மஞ்சள் நீர் தெளிப்பது, ஜல்லிக்கட்டு என்னும் மாடுபிடி விளையாட்டு இந்நாளில் நடைபெறும். இந்த நாளில் பசுவை பூஜித்தால் சகல தேவதைகளையும் பூஜித்த பலன் கிட்டும். பண மதிப்பு இல்லாத காலத்தில் ஒருவரிடம் உள்ள கால்நடைகளை கொண்டே பொருளாதார நிலையை மதிப்பிட்டார்கள். கால்நடைகளே ஒருவரது உண்மைச் செல்வமாக மதிக்கப்பட்டு வந்தன. கோமாதா என்றழைக்கப்படும் பசு பிராணிகளில் மிகவும் புனிதமானது. சாதுவானது.

அதனால் நமது பாரம்பரியத்தில் கோமாதா வழிபாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பசுவை தொடுவது புனிதம். அதன் மூச்சுக்காற்று பட்ட இடத்தில் நோய் அண்டாது என்பதால் தான் நமது முன்னோர்கள் பசுவை தெய்வமாக வழிபட்டார்கள். கோ பூஜை செய்தால் கோடி நன்மை பெறலாம் என்பது நமது முன்னோர் வாக்கு. பசுவை அதிகாலையில் பார்ப்பதும், வணங்குவதும் புண்ணியமாகும். எனவே தினமும் பசுவிற்கு ஒரு பிடி அருகம்புல்லோ, வாழைப்பழமோ, அகத்திக்கீரையோ, உணவாக கொடுக்க வேண்டும். தனித்த பசுவை வழிபடுவதுடன் கன்றுடன் சேர்ந்த பசுவை பூஜிக்க வேண்டும்

கோமாதா பூஜையை வெள்ளிக்கிழமையில் செய்தால் துர்சக்திகள் வீட்டை நெருங்காது. செவ்வாயன்று செய்தால் சுப காரியங்கள் வீடு தேடி வரும். பவுர்ணமி தினத்தன்று செய்தால் மகாலட்சுமி வீட்டில் நித்தியவாசம் புரிவாள்.

அன்று காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் குரு ஒரையில் அல்லது 10.30 மணி முதல் 12 மணிக்குள் சுக்ரன், புதன் ஓரையில் கால்நடைகளை சுத்தப்படுத்தி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி மாலைகள் அணிவித்து அலங்கரிக்க வேண்டும். மாட்டுக் கொட்டகைகளை சுத்தம் செய்து சர்க்கரை பொங்கல் படைத்து கோ பூஜை செய்வது சிறப்பு .மாடுகளை நமஸ்காரம் செய்து விட்டு வாழை இலையில் பொங்கல் வைத்து அவற்றிற்கு உண்ண கொடுக்க வேண்டும்.

அன்று மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் சுக்ரன், புதன் ஒரையில் மங்கள வாத்தியங்களுடன் தெருவலம் அழைத்துச் சென்று கவுரவிக்கலாம். தை 2ம்தேதி மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபடுவதுடன் வீட்டு சாமி , இறந்தவர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு செய்யலாம் . காணும் பொங்கல்:- ஜனவரி 16 (தை 3). போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத காலத்தில் மனதை உற்சாகப்படுத்தும் சுற்றுலா தலங்களுக்கு எளிதில் சென்று வர முடியாது. அதனால் முற்காலத்தில் காணும் பொங்கல் அன்று உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஊரின் அருகில் இருக்கும் கடற்கரை, ஆற்றங்கரை போன்ற இடங்களுக்கு சென்று அசைவ உணவு சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தார்கள்.

கிராமப்புறங்களில் விளையாட்டுப் போட்டிகள், உறி அடித்தல், மரம் ஏறுதல் போன்ற வீர விளையாட்டுகள் நடைபெறும். இந்த நாளில் ஊரின் எல்லை மற்றும் காவல் தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபட்டால் ஊர் மக்களுக்கு எளிதில் எந்த கொடிய நோயோ, இயற்கை சீற்றங்கள் பாதிப்போ ஏற்படாது.

கால சூழல் மாற்றத்தால் பல ஊர்களில் எல்லை மற்றும் காவல் தெய்வ வழிபாடு என்ற ஒன்றே அனைவருக்கும் மறந்து விட்டது. காவல் தெய்வத்திற்குரிய பூஜை வழிபாடு முறையாக இருந்தால் மட்டுமே ஊர் மக்களுக்கு ஆரோக்கியம், பாதுகாப்பு, தொழில் வளர்ச்சி போன்ற பல காரணிகள் சிறப்பாக இருக்கும். கொடூர நோய் தாக்கத்தால் உலக இயக்கங்கள் ஸ்தம்பிக்காது.

இது வரை காவல் தெய்வ வழிபாட்டை மறந்தவர்கள் இந்த வருடம் துவங்கலாம். அன்று திருமணமாகாத பெண்களுக்காக கன்னி பொங்கலும் ஆண்களுக்காக கன்று பொங்கலும் வைத்து விரைவில் திருமணம் நடக்க வேண்டிக்கொள்ளலாம். காணும் பொங்கல் அன்று வயது முதிர்ந்த பெரியோர்களை நேரில் கண்டு ஆசி பெறுவது சிறப்பு. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் உடல் ஊனமுற்றவர்கள், ஆதரவற்ற, வசதி குறைந்த வயோதிகர்களுக்கு அல்லது ஆதரவற்றோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்தால் ஸ்ரீ சனி பகவான் மற்றும் பித்ருக்கள் நல்லாசிகள் கிடைக்கும். அன்று இஷ்ட தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு போன்றவைகள் செய்யலாம். கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் அரசின் சட்ட திட்டங்களை மதித்து பாதுகாப்பாக பொங்கல் கொண்டாட வாழ்த்துக்கள்

Friday, January 13, 2023

January 13, 2023

ஆசிரியர்கள் சம்பளம், போனசுக்கு சிக்கல் ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி

ஆசிரியர்கள் சம்பளம், போனசுக்கு சிக்கல் ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி

தமிழகத்தில் ஆசிரியர்கள் உரிய காலத்தில் சம்பளம், பொங்கல் போனஸ் எடுக்க முடியாத வகையில் IFHRMS வெப்சைட் முடங்கியுள்ளதாக சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்ட (ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்) வெப்சைடில் பில்களை ஏற்றி கருவூலகம் வழியாக அரசு ஊழியர், ஆசிரியர்களின் வங்கி கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும்.

ஒவ்வொரு மாதமும் அரசு ஊழியர்களை காட்டிலும், ஆசிரியர்கள் வெப்சைட் உடன் போராட வேண்டியுள்ளது.தற்போது பொங்கல் போனஸ் பெற விண்ணப்பித்து வருகின்றனர். போனஸ் பெறுவதற்காக இன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், சில நாட்களாக இந்த வெப்சைட் முடங்கி கிடக்கிறது. இதனால் சம்பளம், போனஸ் பெற முடியாமல் ஆசிரியர்கள், கல்வித்துறை ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்ட செயலாளர் ஏ.முத்துப்பாண்டியன் கூறியது:தேசிய தகவல் மையம் (என்.ஐ.சி.,) சாப்ட்வேர் தயாரிப்பில் சிறந்து விளங்கி வருகின்றனர்.
ஆனால் கடந்த ஆட்சியில் இதற்கான சாப்ட்வேர் தயாரிப்பு தனியார் நிறுவனம் வசம் தரப்பட்டது. அந்நிறுவனமும் சம்பள பில் தயாரிக்கும் ஊழியர்களுக்கு முழுமையாக பயிற்சி அளிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் வெப்சைட்டில் சிக்கல் ஏற்பட்டால், சென்னையில் தான் கேட்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக 4 மாதமாக சம்பளம் பெற முடியாத நிலையில் ஆசிரியர்கள், கல்வித்துறை ஊழியர்கள் உள்ளனர். அரசு இத்திட்டத்தை அரசின் தேசிய தகவல் மையத்திடம் ஒப்படைக்க வேண்டும், என்றார்.

Tuesday, January 10, 2023

January 10, 2023

பொங்கல் கருணைக்கொடை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

கோயில் பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கருணைக்கொடை: முதல்வர் உத்தரவு

கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக்கொடை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், ‛முழு நேரம், பகுதி, தொகுப்பூதியம், தினக்கூலி கோயில் பணியாளருக்கு கருணைத்தொகை ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக' அறிவித்துள்ளார். மேலும், ரூ.1 லட்சம் ஆண்டு வருவாய் பெறும் கோயில்களின் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, 1.1.2023 முதல் அகவிலைப்படியை 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வால் 10000 திருக்கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும், இதனால் ஆண்டொன்றுக்கு ரூ.7 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Monday, January 02, 2023

January 02, 2023

பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் நாளை முதல் விநியோகம்

பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் நாளை முதல் விநியோகம்

தமிழகம் முழுவதும் நாளை முதல் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் அரிசி, சா்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை ஜனவரி 9ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். மேலும், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

இதனிடையே நியாய விலைக் கடைகளுக்கு பொது மக்கள் நெரிசல் இல்லாமல் வந்து செல்ல வசதியாக, டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. நாளை முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை வீடு வீடாக சென்று பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் வழங்கப்பட உள்ளது. டோக்கனில் பொங்கல் பரிசு வழங்கப்படும் தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்று இருக்கும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக்கடைகளில் ஜன.9 முதல் 12-ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. விடுபட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு ஜன.13-ஆம் தேதி வழங்கப்படுகிறது.

Wednesday, December 28, 2022

December 28, 2022

தமிழக அரசின் பொங்கல் போனஸ் ஏமாற்றமளிக்கிறது: அரசு ஊழியர் சங்கம் எதிர்ப்பு

தமிழக அரசின் பொங்கல் போனஸ் ஏமாற்றமளிக்கிறது: அரசு ஊழியர் சங்கம் எதிர்ப்பு

மதுரை: தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் போனஸ் அறிவிப்பும், அகவிலைப்படி உயர்வில் மவுனம் சாதிப்பதும் அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக அரசு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் சு.தமிழ்ச் செல்வி, பொதுச் செயலாளர் ஜெ.லெட்சுமி நாராயணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் சார்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக பொங்கல் போனஸ் ரூ.7 ஆயிரம் அறிவிக்கக் கோரியும், மத்திய அரசு ஊழியர்களுக்கு 1.7.2022 முதல் உயர்த்தி வழங்கப்பட்ட 4 சதவீத அகவிலைப்படி உயர்வை ரொக்கமாக 1.7.2022 முதல் வழங்கக் கோரியும் நாளை (டிச.29) அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தோம்.

இந்தச் சூழலில் தமிழக அரசு அவசர அவசரமாக பொங்கல் போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜனவரி மாதத்துக்குப் பதில் முன்கூட்டியே அறிவித்து அரசு ஊழியர் நலனில் மிகவும் அக்கரை கொண்டுள்ளதைப் போன்ற போலியான தோற்றத்தை தமிழக அரசு உருவாக்க முயன்றுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் போனஸாக வழங்கப்பட்டு வருகிறது.போனஸ் என்பது அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய கொடுபடா ஊதியம் எனவும், போனஸ் அரசு ஊழியர்களின் அடிப்படை உரிமை எனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதை வசதியாக மறந்தும், மறைத்தும், கருணைத் தொகை என்றும், மிகை ஊதியம் என்றும் போனஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிடுகிறது.

ரூ 7 ஆயிரத்துக்குப் பதிலாக 3 ஆயிரம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. சி மற்றும் டி பிரிவில் காலியிடங்கள் அதிகம் இருக்கும் நிலையில், ரூ.221.42 கோடி செலவு என்பது மிகைப்படுத்தப்பட்ட தொகை.

4 சதவீத அகவிலைப்படி உயர்வு குறித்து தமிழக அரசு மவுனம் சாதித்து வருகிறது. பெரும்பான்மையான ஊழியர்களை வஞ்சிக்கும் வண்ணம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த செயலை கண்டித்து நாளை நடக்க உள்ள போராட்டத்தில் ஊழியர்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Tuesday, December 27, 2022

December 27, 2022

அரசாணை (நிலை) எண்.373, நாள்: 26-12-2022 - 2021-22-ஆம் கணக்கு ஆண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் / சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்குதல் - ஒப்பளிப்பு ஆணை வெளியீடூ

அரசாணை (நிலை) எண்.373, நாள்: 26-12-2022 - 2021-22-ஆம் கணக்கு ஆண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் / சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்குதல் - ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.

ஆணை:

முறையான காலமுறைச் சம்பளம் பெறும் அனைத்து C மற்றும் D” பிரிவு அரசுப் பணியாளர்கள், உள்ளாட்சி மன்றப் பணியாளர்கள், அரசின் மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் காலமுறைச் சம்பளம் பெறும் ஆசிரியர்கள் / பணியாளர்கள் ஆகியோருக்கு திங்களொன்றுக்கு 30 நாட்கள் என்ற அடிப்படையில், ரூ.3,000/- என்ற உச்ச வரம்பிற்குட்பட்டு 2021-2022-ம் கணக்காண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் மற்றும் சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிலையான ஊதியம் பெற்று வந்த முழு நேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்களுக்கும் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கும் சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் ரூ.1000/- பொங்கல் பண்டிகை கொண்டாடிட ஏதுவாக வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.

2.2021-2022-ஆம் கணக்காண்டிற்கு C மற்றும் D” பிரிவு சார்ந்த, முறையான காலமுறைச் சம்பளம் பெறும் அனைத்து நிரந்தர மற்றும் தற்காலிக அரசுப் பணியாளர்கள், உள்ளாட்சி மன்றப் பணியாளர்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள்/ பணியாளர்கள் ஆகியோருக்கு திங்களொன்றுக்கு 30 நாட்கள் என்ற அடிப்படையில் ரூ.3,000/- என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு தற்காலிக மிகை ஊதியமாக வழங்கிட அரசு ஆணையிடுகிறது.

பொங்கல் மிகை ஊதியம் அரசாணை வெளியீடு

Click here to download Tamil version

Click here to download English version
December 27, 2022

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு.

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ்நாடு அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் நலத் திட்டங்களுக்கு, அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி சி மற்றும் டி பிரிவைச் (C மற்றும் D Group) சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.

தொகுப்பூதியம், சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள், மற்றும் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் 1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும். சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும்.

மேற்கூறிய மிகை ஊதியம்/பொங்கல் பரிசு வழங்குவதன் மூலம் அரசிற்கு 221 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். என்றும் கூறப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog