Breaking

Showing posts with label Revised Exam List published. Show all posts
Showing posts with label Revised Exam List published. Show all posts

Saturday, April 23, 2022

April 23, 2022

முதுகலை ஆசிரியர் தேர்வு: திருத்தப்பட்ட தேர்வு பட்டியல் ஆன்லைனில் வெளியீடு

கடந்த 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வணிகவியல், வரலாறு பாடங்களுக்கான திருத்தப்பட்ட தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

2018-2019-ம் ஆண்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) காலியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் 2019-ம் ஆண்டு செப்.27 முதல் 29-ம் தேதி வரை கணினிவழி போட்டித் தேர்வை நடத்தியது. அதன் முடிவுகள் 2019 அக். 18 மற்றும் 21-ம் தேதி வெளியிடப்பட்டன. இதைதொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு 2019 நவ. 8 மற்றும் 9-ம் தேதி நடத்தப்பட்டு, பாட வாரியாக தேர்வுபட்டியல் வெளியிடப்பட்டன. இந்நிலையில், தற்போது நீதிமன்ற உத்தரவின்படி, வணிகவியல் மற்றும் வரலாறு பாடங்களுக்கு திருத்தப்பட்ட தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog