Breaking

Showing posts with label TN TRB. Show all posts
Showing posts with label TN TRB. Show all posts

Sunday, September 03, 2023

September 03, 2023

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு

வட்டார கல்வி அலுவலர் B.E.O. தேர்வு எழுத ஏற்பாடு

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஜூனில் 33 வட்டார கல்வி அலுவலர்(பி.இ.ஓ.,) பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பி.எட்., முடித்த பட்டதாரிகள் ஜூலை 5 வரை தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. பி.இ.ஓ., பணிக்கான தேர்வு செப்.,10ல் நடக்கிறது. தேனியில் நாடார் சரஸ்வதி ஆண்கள் பள்ளியில் 381 பேர், நாடார் சரஸ்வதி பெண்கள் பள்ளியில் 400 என மொத்தம் 781 பேர் தேர்வு எழுத உள்ளனர்

*வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு.

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 



தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களுக்கு, போட்டித் தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்தத் தேர்வுகளை டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது.  முன்னதாக ஆசிரியர் தேர்வு வாரியம்  வெளியிட்ட 2023-ஆம் ஆண்டுக்கான ஆண்டு அட்டவணையில், தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும், அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கும் 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கை ஜனவரி மாதம்  வெளியிடப்படும்;

வட்டாரக் கல்வி அலுவலர்கள் 23 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கை பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.

மேலும் 6,553 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் அறிக்கை மார்ச் மாதமும் வெளியிடப்படும்.

பட்டதாரி ஆசிரியர்கள்  3,587 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கை ஏப்ரல் மாதமும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் 493 விரிவுரையாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கை மே மாதமும் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது.

*ஜூன் மாதம் வெளியான அறிவிப்பு.*

மே மாதம் முடிந்து ஜூன் தொடங்கிய பிறகும், எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், ஆசிரியர் தேர்வு வாரியம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இதைத் தொடர்ந்து,  தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணிக்கான நேரடித் தேர்வுக்கு ஜூன் 5ஆம் தேதி முதல் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. செப்டம்பர் 10ஆம் தேதி இதற்கான தேர்வு நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து தேர்வர்கள்  https://www.trb.tn.gov.in/ என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து, வட்டார கல்வி அலுவலர் பணிக்கான  தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

நேரடி நியமனமாக உள்ள இந்தத் தேர்வுக்கு தேர்வர்கள் ஜூலை ஜூலை 12ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர்.

இந்த நிலையில், வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
*42,712 தேர்வர்கள்‌ விண்ணப்பம்.*

இதுகுறித்து ஆசிரியர்‌ தேர்வு வாரியம் கூறும்போது, ‘’கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, 2019 - 2020 முதல் 2021 - 2022 வரையிலான ஆண்டிற்கான வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ காலிப் பணியிடங்களுக்கான பணித்தெரிவு தொடர்பான தேர்வு வரும் 10.09.2023 அன்று நடத்தப்பட உள்ளது. இத்தேர்வினை எழுத 42,712 தேர்வர்கள்‌ விண்ணப்பித்துள்ளனர்‌.

விண்ணப்பத்த தேர்வர்களுக்கு நுழைவுச்‌ சீட்டு (ஹால்டிக்கெட்) ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளமான  https://www.trb.tn.gov.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் User id மற்றும் Password ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச்‌ சீட்டினை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

தேர்வுக்‌ கூட நுழைவுச்‌ சீட்டினை பதிவிறக்கம்‌ செய்வதில்‌ ஏற்படும்‌ கடைசி நேர பதற்றத்தைத்‌ தவிர்க்கும்‌ பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, தேர்வர்கள்‌ தேர்விற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம்‌ செய்துகொள்ள வேண்டும்’’ என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தேர்வர்கள்  https://trb1.ucanapply.com/login  என்ற இணைப்பை க்ளிக் செய்து, ஹால் டிக்கெட்டைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Thursday, December 29, 2022

December 29, 2022

2023ஆம் ஆண்டில் 15000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப TRB முடிவு - Annual Recruitment Planner வெளியீடு

2023ஆம் ஆண்டில் 15000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப TRB முடிவு - Annual Recruitment Planner வெளியீடு!

CLICK HERE TO DOWNLOAD

2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

2023ம் ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வுகளின் உத்தேசப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வுகள் மூலம் 15,149 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

2023-ல் உதவி பேராசிரியர், பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் தகுதி தேர்வு உள்ளிட்ட 9 தேர்வுக்கான அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கான 4000 பணியிடங்களுக்கு 2023 ஏப்ரலில் தேர்வு நடைபெறும் என்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான 3587 பணியிடங்களுக்கு ஜூன் மாதம் தேர்வு நடைபெறும் என்றும், இடைநிலை ஆசிரியர்களுக்கான 6553 காலிப் பணியிடங்களுக்கு மே மாதம் தேர்வு நடைபெறும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் 2 தேர்வுகள் 2024 மார்ச் மாதம் நடைபெறும் என்றும், இதற்கான அறிவிப்பு 2023 டிசம்பரில் வெளியாகும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது

Wednesday, September 28, 2022

September 28, 2022

PG-TRB பணிநியமனத்தை தாமதமாக நடத்த தேர்வர்கள் கோரிக்கை - Candidates Request Late PG-TRB Recruitment!

PG-TRB பணிநியமனத்தை தாமதமாக நடத்த தேர்வர்கள் கோரிக்கை! - Candidates Request Late PG-TRB Recruitment!

சமீபத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்திய, அரசு பல்தொழிநுட்ப (polytechnic) கல்லூரிகளுக்கான 1060 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து, பணியில் அமர உள்ள தேர்வர்களின் பெயர்கள், நேற்று கடந்த வாரம் வெளியாகிய Provisonal Selection List, 3237 காலியிடங்களுக்கான PGTRB அரசுப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தற்காலிக தெரிவு பட்டியலிலும் இடம்பெற்றுள்ளன. முன்னதாக கணிதம், வேதியல், இயற்பியல், ஆங்கிலம் ஆகிய நான்கு பாடங்களுக்கு இரண்டு தேர்வு முறைகளிலும் காலி இடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

மேற்படி இரண்டு தேர்வு முறைகளிலும் தேர்ச்சி பெறுபவர்கள் இரண்டு பணி வாய்ப்புகளிலும் சேர்ந்து பணியாற்ற சாத்தியமே இல்லை என்பதாலும், அவ்வாறு அவர்கள் இரண்டு தேர்வு முறைகளிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டால், ஒரு பணிவாய்ப்புக்கான இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்க வாய்ப்புள்ளதால், இதன் பெயரில் தமிழக அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

PG-TRB பணிநியமனத்தை, TRB Polytechnic பணிவாய்ப்புகள் நிரம்பும் வரை நடத்தாமல் சற்று தாமதிக்க வேண்டும் என பணி நாடுநர் சார்பில் கேட்டு கொள்கிறேன். மேல்நிலை பள்ளிகளிலும், அரசு பல்தொழிநுட்ப கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பணி நிரப்படுவது மிகவும் முக்கியம் என்பதாலும், PGTRB பணிநியமனத்தை சற்று தாமத படுத்தினால் அனைத்து தரப்பினருக்கும் நன்மை உண்டாகும் என்பதாலும், சான்றிதழ் சரிபார்ப்பை தாமதப்படுத்தி நடத்திட தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். நன்றி!

உதாரணமாக கணிதவியல் துறையில் 20 க்கும் மேற்பட்டோர் Polytechnic TRB-யிலும் PG TRB-யிலும் தேர்வாகி உள்ளார்கள்...

TRB - Polytechnic Maths List

TRB - PG Maths List

Monday, September 26, 2022

September 26, 2022

TRB இன்று( 26.09.22) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - PDF

Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I and Computer Instructor Grade I - 2020 - 2021 - Revised provisional selection list-Mathematics (Sl.No 212 to 269)

TRB இன்று( 26.09.22) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - Important notification issued by TRB today (26.09.22).



CLICK HERE TO DOWNLOAD

Friday, September 09, 2022

September 09, 2022

NEW TRB Website Beta Version - Click Here Direct Link

The Government of Tamilnadu has constituted the Teachers Recruitment Board to conduct various Test for the selection of teachers under different sectors such as Secondary Grade Teachers, BT, PG, Special Teachers, Computer Instructors, Agricultural Instructors and BEOs in the respective Departments of School Education and Elementary Education Department, Adi Dravidar and Tribal Welfare Department, Backward classes, Most Backward classes and Minorities Welfare Department, Social Defence Department, Chennai Corporation and Coimbatore Corporation.

Junior Lecturers, Lecturers and Senior Lecturers in SCERT and in Higher Education Department for the post of Assistant Professors, Lecturers in Government Engineering Colleges and Government Arts and Science Colleges, Government Polytechnic Colleges and in Government Law Colleges respectively.

Following the guidelines of the Right of Children to Free and Compulsory Education Act 2009, the Teachers Recruitment Board took up the responsibility of conducting TNTET (Tamilnadu Teacher Eligibility Test) from 2012 onwards.

Presently, The office of the Teachers Recruitment Board, Tamilnadu (TRB) is located in the premises of the Directorate of Public Information (DPI).

TRB - NEW TRB Website Beta Version

Saturday, September 03, 2022

September 03, 2022

தமிழக அரசில் 155 பேராசிரியர் பணி: TRB புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழக அரசில் 155 பேராசிரியர் பணி: டிஆர்பி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


தமிழக அரசில் 155 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம்(டிஆர்பி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மற்றும் கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு எண்.02/2022

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Senior Lecturers
காலியிடங்கள்: 24

பணி: Lecturers
காலியிடங்கள்: 82

பணி: Junior Lecturers
காலியிடங்கள்: 49
சம்பளம்: மாதம் ரூ.36.400 - 1,15,700

தகுதி: தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் போன்ற ஏதாவதொரு பாடங்களில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் மற்றும் குறைந்தது 55 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.இடி பட்டம் பெற்றிருக்க வேண்டும். இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் ஒர் பாடத்தில் படித்திருக்க வேண்டும். முதுநிலை விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.07.2022 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வுகான நாள் பின்னர் அறிவிக்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்சி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Friday, September 02, 2022

September 02, 2022

PGTRB - Certificate Arrangements List

PGTRB - Certificate Arrangements List

PGTRB- certificate verification க்கு செல்பவர்கள் கீழே உள்ள வாறு certificate களை வரிசைப்படுத்தி செல்லவும்

Monday, August 29, 2022

August 29, 2022

ஆசிரியர்கள் நியமனம் எண்ணிக்கை அதிகரிப்

ஆசிரியர்கள் நியமனம் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை, ஆக. 29

அரசு பள்ளிகளுக்கு, முதுநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளோர் எண்ணிக்கையை, 3,236 ஆக, ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகரித்துள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி ஆசிரியர்கள் பதவியில், 2,207 இடங் களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம், இந் தாண்டு பிப்ரவரியில் கணினி வழி தேர்வை நடத்தியது.

இதில் தேர்ச்சி பெற்றவர்களின் விபரங்கள். ஜூலையில் வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெற் றவர்களுக்கு, ஆன்லைன் வழி ஆவண சரி பார்ப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில், நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கான எண்ணிக்கையை, ஆசிரி யர் தேர்வு வாரியம் உயர்த்தியுள்ளது. முதல் அறிவிப்பில், 2,207 காலியிடங்கள் நிரப்பப் படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்பின், 3,236 இடங்களாக உயர்த் தப்பட்டது. நேற்றைய அறிவிப்பில், 3,236 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. காலியிடங்கள் பட்டி யலையும் வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், தேர்ச்சி பெற்றவர்களுக் கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு விரைவில் நடத்தப்படும்; இதற்கான கடிதத்தை, http:// trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக் கலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறி வித்துள்ளது. கூடுதல் விபரங்களை, இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
August 29, 2022

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் 17 பாடங்களுக்கு சான்று சரிபார்க்க பட்டியல் வெளியீடு

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர், கணினி பயிற்றுநர் பணி நியமனத்துக்காக 17 பாடப் பிரிவுகளுக்கு சான்று சரிபார்ப்பு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டியல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், உடற்கல்வி இயக்குனர் கிரேடு-1, கணினி பயிற்றுனர் கிரேடு-1 ஆகிய பணியிடங்களில் நேரடி நியமனங்கள் நடத்தப்பட உள்ளன. இதற்கான கணினி வழித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரிபார்ப்பு நடக்கின்றன.

தமிழ்வழியில் படித்ததற்கான சான்றுகளை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் வழியாக வரும் 30ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்வழி சான்றுகளை பட்டதாரிகள் பதிவேற்றம் செய்துள்ளனர். அவை தற்போது சரிபார்க்கப்பட்டு 17 பாடப் பிரிவுகளுக்கு ஒரு பதவிக்கு 2 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்று சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது. இதற்கான பட்டியல் தற்போது ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், மனையியல், உயிரி வேதியியல், இந்திய பண்பாடு, உடற்கல்வி, கணினி அறிவியல் பாடங்களில் தகுதியுள்ளவர்களுக்கு சான்று சரிபார்ப்பு நடக்க உள்ளது.

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள நபர்களுக்கான அழைப்பு கடிதம், ஆளறி சான்று படிவம் மற்றும் பிற இணைப்பில் கண்டுள்ள படிவங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும். இவற்றை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அழைப்பு கடிதம் பிற வழிகளில் அனுப்பி வைக்கப்பட மாட்டாது. பட்டியலிடப்பட்ட நபர்கள், சான்று சரிபார்ப்பு அழைப்புக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டவாறு தங்களின் அனைத்து அசல் சான்றுகள், ஆதார் ஆகியவற்றுடன் அதனுடைய சுய கையொப்பமிட்ட நகல்கள், ஆளறி சான்று ஆகியவற்றின் சான்றுகள் கொண்டு வர வேண்டும்.

சான்று சரிபார்ப்புக்கு குறிப்பிட்ட தேதியில் நேரில் வராதவர்கள் தகுதியான மதிப்பெண் பெற்றிருந்தாலும், அடுத்தகட்ட பணி தெரிவுக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள். சான்று சரிபார்ப்பு பட்டியல் சார்ந்த கோரிக்கைகளை ஆசிரியர் தேர்வு வாரிய http://forms.gle/ZUYC2Ud5wxcapDku6 வழியாக 3 நாட்களுக்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.
August 29, 2022

TRB அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கான பாடவாரியான கால அட்டவணை

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்/உடற்கல்வி இயக்குநர் நிலை 1/ கணினிப் பயிற்றுநர் நிலை-1 நேரடி நியமனம் 2020-2021

2020-2021 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1/ கணினிப் பயிற்றுநர் நிலை-1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) எண். 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1202.2022 முதல் 20.022022 வரை கணினி வழித்தேர்வுகள் (Computer Based Examination) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.072022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன.

25.08.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிகைச் செய்தியில் பணிநாடுநர்கள் தங்களது தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் வழியாக 26.08.2022 முதல் 30.08.2022 வரை பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.

17 பாடங்களுக்கு 1:2 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 28.08.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பணி நாடுநர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 02.09.2022 முதல் 04.09.2022 வரை நடைபெற உள்ளது. அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கான பாடவாரியான கால அட்டவணை பின்வருமாறு
விண்ணப்பதாரர்கள் 1:2 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவதாலும், அவர்களின் சான்றிதழ்கள் / ஆவணங்கள் சரிபார்க்கப்படுவதாலும் மட்டுமே அன்னாரது இறுதித் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வருகைபுரியும் பணிநாடுநர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்கள், முன்னுரிமைகோரும் சான்றிதழ்கள் அசல் ஆதார் அட்டை மற்றும் இச்சான்றிதழ்களின் 1 செட் ஜெராக்ஸ் நகல்கள் (சுய சான்றொப்பம் இடப்பட்டது) அழைப்புக் கடிதம் மற்றும் விண்ணப்ப நகல் ஆகியவற்றை தவறாமல் கொண்டுவருதல் வேண்டும்.

செல்போன்கள், பைகள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டுவர அனுமதிக்கப்படமாட்டாது. கொண்டுவரும் பொருட்களின் பாதுகாப்பிற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பு ஏற்காது எனவும் தெரிவிக்கப்படுகிறது. வளாகத்திற்குள் பெற்றோர்கள், சிறார்கள் மற்றும் உறவினர்களை அழைத்து வரக் கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
August 29, 2022

PGTRB - முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி - 02.09.2022 முதல் 04.09.2022 வரை சான்றிதழ் சரிபார்ப்பு - TRB அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம்

பத்திரிக்கைச் செய்தி

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்/உடற்கல்வி இயக்குநர் நிலை 1/ கணினிப் பயிற்றுநர் நிலை-1 நேரடி நியமனம் 2020-2021

2020-2021 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1/ கணினிப் பயிற்றுநர் நிலை-1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) எண். 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1202.2022 முதல் 20.022022 வரை கணினி வழித்தேர்வுகள் (Computer Based Examination) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.072022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன.

25.08.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிகைச் செய்தியில் பணிநாடுநர்கள் தங்களது தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் வழியாக 26.08.2022 முதல் 30.08.2022 வரை பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.

17 பாடங்களுக்கு 12 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 28.08.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பணி நாடுநர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 02.09.2022 முதல் 04.09.2022 வரை நடைபெற உள்ளது. அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கான பாடவாரியான கால அட்டவணை பின்வருமாறு
மேற்கண்ட பாடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை, ஆசிரியர் தேர்வு வாரிய வளாகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள பணி நாடுநர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம், 48 மணி நேரத்திற்கு முன்னதாக ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தங்களது அழைப்புக் கடிதத்தினை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. அழைப்புக் கடிதம் பிற வழிகளில் அனுப்பி வைக்கப்படமாட்டாது என திட்டவட்டமாக பணி நாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

பணிநாடுநர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாள் மற்றும் நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் மட்டுமே வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு குறிப்பிட்ட தேதியில் நேரில் வருகை புரியாத விண்ணப்பதாரர்கள் அவர்கள் தகுதியான மதிப்பெண் பெற்றிருப்பினும் தற்காலிக தெரிவுக்கு உத்தரவாதம் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. வளாகத்தின் வாசலில் கூட்டமாக சேர்வதை தவிர்த்து வளாகத்திற்குள் அமைதி காத்திடவும் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்தக்கட்ட பணித்தெரிவிற்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் 1:2 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவதாலும், அவர்களின் சான்றிதழ்கள் / ஆவணங்கள் சரிபார்க்கப்படுவதாலும் மட்டுமே அன்னாரது இறுதித் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வருகைபுரியும் பணிநாடுநர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்கள், முன்னுரிமைகோரும் சான்றிதழ்கள் அசல் ஆதார் அட்டை மற்றும் இச்சான்றிதழ்களின் 1 செட் ஜெராக்ஸ் நகல்கள் (சுய சான்றொப்பம் இடப்பட்டது) அழைப்புக் கடிதம் மற்றும் விண்ணப்ப நகல் ஆகியவற்றை தவறாமல் கொண்டுவருதல் வேண்டும்.

செல்போன்கள், பைகள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டுவர அனுமதிக்கப்படமாட்டாது. கொண்டுவரும் பொருட்களின் பாதுகாப்பிற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பு ஏற்காது எனவும் தெரிவிக்கப்படுகிறது. வளாகத்திற்குள் பெற்றோர்கள், சிறார்கள் மற்றும் உறவினர்களை அழைத்து வரக் கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான பணிநாடுநர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மற்றும் பத்திரிகைச் செய்தியினை தொடர்ந்து கவனித்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


CLICK HERE TO DOWNLOAD

Saturday, August 27, 2022

August 27, 2022

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் பணி: தமிழ் வழி சான்றிதழ்களை பதிவேற்றலாம்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து, தமிழ் வழியில் படித்ததற்கான முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோரியவா்கள் ஆக. 30- ஆம் தேதிக்குள் அதற்குரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்தது.

இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் 2020-2021-ஆம் ஆண்டு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் நிலை-1, கணினிப் பயிற்றுநா் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கு நேரடி நியமனத்துக்கான கணினி வழித் தோ்வுகள் கடந்த பிப். 12 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்தத் தோ்வை சுமாா் 2 லட்சம் போ் வரை எழுதினா். இதன் முடிவுகள் ஜூலை 4-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது தோ்ச்சி பெற்றவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, முதுநிலை ஆசிரியா் பணிக்கு விண்ணப்பித்த தோ்வா்கள் சிலா் தமிழ்வழியில் படித்தற்கான கல்வித்தகுதி ஆவணங்களை விண்ணப்பிக்கும்போது முறையாக பதிவேற்றம் செய்யவில்லை. இதையடுத்து, தமிழ்வழி படித்ததற்கான ஆவணங்களைப் பெற்றுத் தயாராக வைத்திருக்க வேண்டுமெனவும், அவற்றை ஆக.24 முதல் 27-ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவேற்ற வாய்ப்பு தரப்படும் எனவும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறால் திட்டமிட்டபடி இணையதள முகவரியை செயல்படவில்லை.

தற்போது அவை சரிசெய்யப்பட்டு சான்றிதழ்களை பதிவேற்றுவதற்கான கால அவகாசம் ஆக. 30-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தோ்வா்கள் வலைதளம் வழியாக விரைந்து ஆவணங்களை பதிவுசெய்ய வேண்டும். கூடுதல் விவரங்களை வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Thursday, August 25, 2022

August 25, 2022

TRB வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - நாள்: 24.08.22



ஆசிரியர் தேர்வு வாரியம்

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை-1/ கணினிப் பயிற்றுநர் நிலை-1 நேரடி நியமனம் 2020-2021

பத்திரிக்கைச் செய்தி

2020-2021 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 / கணினிப் பயிற்றுநர் நிலை-1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) எண். 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 20.02.2022 வரை கணினி வழித்தேர்வுகள் (Computer Based Examination) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.072022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன.

கல்வித் தகுதிக்களை தமிழ் வழியில் பயின்றதற்கான தமிழ் வழி சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இவ்வாரிய இணையதளத்தில் 24.08.2022 முதல் 27.08.2022 வரை வாய்ப்பு அளிக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொழில்நுட்ப காரணங்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கான வாய்ப்பு இவ்வாரிய இணையதளத்தி,ல் 26.08.2022 முதல் 30.08.2022 பிற்பகல் 5 மணி வரை வாய்ப்பு அளிக்கப்படும்.

உரிய இணையதள முகவரி குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் அறிவிக்கப்படும்.

நாள்: 24-08-2022

தலைவர்

CLICK HERE TO DOWNLOAD

Monday, August 22, 2022

August 22, 2022

TRB இன்று( 22.08.22) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம்

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் /உடற்கல்வி இயக்குநர் நிலை -1/ கணினிப் பயிற்றுநர் நிலை-1 நேரடி நியமனம் 2020-2021

பத்திரிக்கைச் செய்தி

2020-2021 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 / கணினிப் பயிற்றுநர் நிலை நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) எண். 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது, அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 20.02.2022 வரை கணினி வழித்தேர்வுகள் (Computer Based Examination) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.07.2022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன.

கல்வித் தகுதிக்களை தமிழ்வழியில் பயின்றதற்கான தமிழ் வழி சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இவ்வாரிய இணையதளத்தில் 22.08.2022 முதல் 25.08.2022 பிற்பகல் 5 மணி வரை வாய்ப்பு அளிக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. தொழில்நுட்ப காரணங்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கான வாய்ப்பு இவ்வாரிய இணையதளத்தில் 24.08.2022 முதல் 27.08.2022 வரை அளிக்கப்படும். உரிய இணையதள முகவரி குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் அறிவிக்கப்படும்.

Sunday, August 21, 2022

August 21, 2022

TRB - மாநில கல்வியியல் ஆராய்ச்சி & பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 155 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியீடு

மாநில கல்வியியல் ஆராய்ச்சி & பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 155 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியீடு

155 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி, தேர்வு தேதி விரைவில் வெளியிடப்படும்

NOTIFICATION

Applications are invited only through online mode from eligible candidates for the Direct Recruitment for the post of Senior Lecturers / Lecturers / Junior Lecturers in SCERT and DIET under the State Council of Educational Research and Training for the year – 2022



CLICK HERE OFFICAIAL SITE

CLICK HERE TO DOWNLOAD NOTIFICATION

Total Pageviews

Search This Blog