Breaking

Showing posts with label பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம். Show all posts
Showing posts with label பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம். Show all posts

Monday, August 01, 2022

August 01, 2022

அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை வரவேற்கிறேன்: விஜயகாந்த் அறிக்கை

அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை வரவேற்கிறேன் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேமுதி தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. முதல்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் ஒரு லட்சத்து 14 ஆமித்து 95 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டிருப்பதை பாராட்டுகிறேன்.
இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் மதிய உணவு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது போன்று காலை சிற்றுண்டி திட்டத்தையும் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். காலை சிற்றுண்டி திட்டம் மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Wednesday, July 27, 2022

July 27, 2022

அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்.: அரசாணை வெளியீடு - PDF

அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்.: அரசாணை வெளியீடு
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை - முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளில் , விதி எண் . 110 - ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பு – அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 - ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ , மாணவியருக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்குதல் முதற்கட்டமாக செயல்படுத்துதல் - ஆணை - வெளியிடப்படுகிறது

CLICK HERE TO DOWNLOAD

Total Pageviews

Search This Blog