Breaking

Showing posts with label IRCTC. Show all posts
Showing posts with label IRCTC. Show all posts

Thursday, August 25, 2022

August 25, 2022

IRCTCல் வேலை வேண்டுமா? -

இந்தியன் ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா மேலாண்மையில் காலியாக உள்ள 60 Hospitality Monitors பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 24 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணி மற்றும் தகுதிகள் விவரம்:

பணி: Hospitality Monitors

காலியிடங்கள்: 60

தகுதி: Hospitality & Hotel Administration/ Hotel Management போன்ற பிரிவில் 3 ஆண்டு இளநிலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.30,000

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.irctc.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அதனுடன் அசல் சான்றிதழ் மற்றும் சமீபத்திய புகைப்படங்கள் இணைத்து நேர்முத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதிகள்:

Bhubaneswar, Odisha

Institute Of Hotel Management(IHM), Near Indian Overseas Bank, V.S.S.Nagar, Bhubaneswar, Odisha - 751 007

24.08.2022 - 25.08.2022

Hyderabad, Telangana

Institute Of Hotel Management(IHM),F-Row, Vidya Nagar, DD Colony, Hyderabad, Telangana - 500 007

27.08.2022, 28.08.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.irctc.com/assets/images/WZ_Notification%20Hospitality%20Monitors.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Tuesday, July 27, 2021

July 27, 2021

IRCTC உடன் ஆதார் எண் இணைப்பு – எளிய வழிமுறைகள் இதோ!

முன்னதாக IRCTC பயனர்கள் ஒரு மாதத்தில் ஆறு டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருந்த நிலையில், தற்போது ஆதார் சரிபார்ப்புடன் ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை பயனர்கள் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

IRCTC டிக்கெட் முன்பதிவு:
நவீன இணைய உலகில் அனைத்து வசதிகளும் இணையத்தின் மூலமாக நடக்கும் அளவிற்கு தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது.

ரயில் பயணத்திற்கான முன்பதிவும் இணையதளத்தின் மூலமாக முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதற்காக இந்திய ரயில்வே நிர்வாகம் IRCTC என்ற செயலியை உருவாகியுள்ளது.

இந்த செயலியின் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு மட்டுமல்லாமல் ரயில்கள் பற்றிய பல தகல்வல்களையும் அறிந்து கொள்ளும் வசதி உள்ளது.

இந்நிலையில், IRCTC நிர்வாகம் இந்த செயலியில் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, முன்னதாக மாதம் 6 டிக்கெட்டுகள் ஆதார் சரிபார்ப்பு இல்லாமல் IRCTC மூலம் முன்பதிவு செய்ய முடியும்.

தற்போது, ஐ.ஆர்.சி.டி.சி பயனர்கள் ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

ஆனால் அதற்கு குறைந்தபட்சம் ஒரு முறையாவது பயனரின் ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும்.

இருப்பினும், ஒரு மாதத்தில் ஆதார் இல்லாமல் 6 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியும் நடைமுறையில் உள்ளது. எளிய வழிமுறைகள்:
முதலில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, ஐ.ஆர்.சி.டி.சி போர்ட்டலின் https://www.irctc.com/ என்ற அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்ல வேண்டும்.

அதில், “சுயவிவர தாவல்” என்ற தேர்வை தேர்வு செய்து அதில் “ஆதார் கேஒய்சி” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

இப்பொழுது முகப்பு பக்கத்தில் எனது கணக்கு பகுதியை தேர்வு செய்து உங்கள் ஆதார் விருப்பத்திற்கான இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.

அதில் உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டு ‘Send OTP’ என்று கிளிக் செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் உங்கள் OTP வந்தவுடன் அதனை இந்த பக்கத்தில் உள்ளிட்ட வேண்டும்.

இப்பொழுது சரிபார்ப்பு என்பதை தேர்வு செய்து, அது சரிபார்க்கப்பட்டவுடன் உங்கள் kyc விவரங்கள் திரையில் வரும்.

அதனை உறுதி செய்ய வேண்டும். இப்பொழுது உங்கள் ஆதார் சரிபார்க்கப்படும்.

கடைசியாக, உங்கள் ஆதார் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி கணக்கை வெற்றிகரமாக இணைக்க புதுப்பிப்பு பட்டனை அழுத்த வேண்டும்.

Monday, July 12, 2021

July 12, 2021

IRCTC பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாதத்தில் 12 டிக்கெட்டுகள் முன்பதிவு!

முன்னதாக IRCTC பயனர்கள் ஒரு மாதத்தில் ஆறு டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருந்த நிலையில், தற்போது ஆதார் சரிபார்ப்புடன் ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை பயனர்கள் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

IRCTC பயனர்கள்:

நவீன யுகத்தில் அனைத்து வசதிகளும் இணையத்தின் மூலம் நடைபெற்று வரும் நிலையில், ரயில் பயணத்திற்கான முன்பதிவும் இணையதளத்தின் மூலமாக முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதற்காக இந்திய ரயில்வே நிர்வாகம் IRCTC என்ற செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலியின் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு மட்டுமல்லாமல் ரயில்கள் பற்றிய பல தகல்வல்களையும் அறிந்து கொள்ளும் வசதி உள்ளது. இந்நிலையில், IRCTC நிர்வாகம் இந்த செயலியில் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, முன்னதாக மாதம் 6 டிக்கெட்டுகள் ஆதார் சரிபார்ப்பு இல்லாமல் IRCTC மூலம் முன்பதிவு செய்ய முடியும். தற்போது ஐ.ஆர்.சி.டி.சி பயனர்கள் ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். ஆனால் அதற்கு குறைந்தபட்சம் ஒரு முறையாவது பயனரின் ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும். இருப்பினும் ஒரு மாதத்தில் ஆதார் இல்லாமல் 6 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியும் நடைமுறையில் உள்ளது.


12 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதற்கான படிகள்:

ஐ.ஆர்.சி.டி.சி பதிவுசெய்த பயனர் தனது சுயவிவரத்தில் ஆதார் கே.ஒய்.சி விருப்பத்தைப் பயன்படுத்தி தன்னை ஆதார் சரிபார்க்க வேண்டும்.

பயனரின் ஆதார் தனது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் OTP ஐ அனுப்புவதன் மூலம் சரிபார்க்கப்படும். OTP வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டால், பயனரின் ஆதார் சரிபார்க்கப்படுவர்.

முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டில் குறைந்தபட்சம் ஒரு பயணியின் ஆதார் ஆவணமாவது சரிபார்க்கப்பட வேண்டும். சரிபார்க்கப்பட்ட பயணிகளை, பயணிகள் பட்டியலில் சேமிக்க வேண்டும். ஒரு மாதத்தில் 6 டிக்கெட்டுகளுக்கு பின்னர் டிக்கெட் முன்பதிவு செயல்முறையை தொடங்குவதற்கு முன்பு இதை செய்ய வேண்டும்.

ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகள் வரை கூடுதல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பயனர் முன்பதிவு நேரத்தில் முதன்மை பட்டியலில் இருந்து ஆதார் சரிபார்க்கப்பட்ட பயணியின் பெயரை சேர்க்கலாம்.

ஐ.ஆர்.சி.டி.சி பயனர் ஐடியை ஆதார் மூலம் சரிபார்க்கும் முறை:

முதலில் www.irctc.co.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

உள்நுழைவு சான்றுகளை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும்.

‘MY ACCOUNT’ என்ற பிரிவில், ‘ Link Your Aadhaar’ என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.

இப்பொழுது, ஆதார் கே.ஒய்.சி பக்கம் தோன்றும், அதில் ஆதார் அட்டையின் படி உங்கள் பெயரை உள்ளிடவும், ஆதார் எண் அல்லது மெயில் ஐடியை வழங்க வேண்டும். இப்பொழுது ‘Send OTP’ என்பதை தேர்வு செய்ய வேண்டும். உங்கள் ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP எண் வரும், அதனை கிளிக் செய்ய வேண்டும்.

KYC பதில் ஆதாரிலிருந்து பெறப்படுகிறது. ஆதார் சரிபார்ப்பு செயல்முறையை முடிக்க ‘Update’ என்பதனை தேர்வு செய்ய வேண்டும்..

இப்பொழுது உறுதியான செய்தி திரையில் தோன்றும்.இப்பொழுது அந்த பக்கத்தை மூடி விட்டு, மீண்டும் www.irctc.co.in என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.

இப்பொழுது MY ACCOUNT பகுதியில் சென்று உங்களது ஆதார் KYC நிலைமையினை சரிபார்க்கலாம்.

Wednesday, January 22, 2020

January 22, 2020

IRCTC பயனாளர்களுக்கு இந்திய ரயில்வேயின் எச்சரிக்கைக் கடிதம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
இந்திய ரயில்வேயின் டிக்கெட் முன்பதிவு செய்யும் இணையதளமான ஐஆர்சிடிசி தனது பயனாளர்களுக்கு ஒரு எச்சரிக்கைக் கடிதத்தை அனுப்பியுள்ளது. ஐஆர்சிடிசி பெயரிலேயே இயங்கும் சில போலியான இணையதளங்களில், டிக்கெட் எடுத்து பயனாளர்கள் ஏமாற வேண்டாம் என்று அந்த எச்சரிக்கைக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயனாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மின்னஞ்சலில், பல்வேறு சுற்றுலாத் திட்டங்களை அறிவித்திருப்பதாக விளம்பரம் செய்யும் www.irctcour.com இணையதளம், பொதுமக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த இணையதளத்தைப் பார்க்கும் பயனாளர்கள், இதுவும் ஐஆர்சிடிசியின் இணையதளம் என்று நினைத்து, டிக்கெட் முன்பதிவுகளை செய்கிறார்கள். இதன் மூலம் பயனாளர்களின் பணம், மோசடி கும்பலின் வங்கிக் கணக்குக்கு சென்று சேருகிறது. அந்த இணையதளத்தில் தாங்கள் ஐஆர்சிடிசியின் ஒரு பகுதி என்றும், சுற்றுலாத் திட்டங்களை இதன் மூலம் மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டிருப்பதால், அதை நம்பி பயனாளர்கள் யாரும் ஏமாற்றம் அடைய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது பற்றி இந்திய ரயில்வே நிர்வாகம் புகார் அளித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த இணையதள மோசடி குறித்து இரண்டு பயனாளர்கள் ஐஆர்சிடிசியிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடத்திய இந்திய ரயில்வே, தனது பயனாளர்களுக்கு இது பற்றிய எச்சரிக்கை மின்னஞ்சலை அனுப்பியுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Tuesday, January 14, 2020

January 14, 2020

IRCTC-ன் புதிய அறிவிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
நீங்கள் அடிக்கடி ரயில்களில் பயணம் செய்கிறீர்களா? உங்கள் முன்பதிவு உறுதிப்படுத்தப்படாதபோது நீங்கள் கவலைப்படுகிறீர்களா? அப்படியெனில், இந்த செய்தி நிச்சயமாக உங்களுக்கானது. முன்பதிவு செய்யப்பட்ட chart-ஐ ஆன்லைனில் காண்பிக்க இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. விளக்கப்படம் தயாரிக்கப்பட்ட பின்னர் ரயிலில் கிடைக்கும் காலியாக உள்ள பெர்த்த்கள் பற்றிய தகவல்களை அறிய பயணிகளுக்கு இது உதவும். முதல் முன்பதிவு chart ரயில் புறப்படுவதற்கு சுமார் 4 மணி நேரத்திற்கு முன் வைக்கப்படும், இரண்டாவது விளக்கப்படம் ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு ஆன்லைனில் பார்க்கலாம். இரண்டாவது விளக்கப்படம் இருக்கை ஒதுக்கீட்டில் மாற்றங்களைக் காண்பிக்கும்.
ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் முன்பதிவு chart-ஐ நீங்கள் சரிபார்ப்பது எப்படி?
1) ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் உள்நுழைக, 'விளக்கப்படங்கள் / காலியிடங்கள்' என்ற புதிய ஆப்ஷனை உங்களால் பார்க்க முடியும். அந்த விருப்பத்தை நீங்கள் கிளிக் செய்தால், நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்கு செல்வீர்கள்.
2) ரயில் எண், பயண தேதி மற்றும் போர்டிங் ஸ்டேஷன் போன்ற பயண விவரங்களை நீங்கள் வழங்க வேண்டும். நீங்கள் விவரங்களை உள்ளிட்டதும், 'Get Train Chart' எனும் ஆப்ஷனை க்ளிக் செய்யவும். .
3) Reservation Chart-ஐ இப்போது நீங்கள் காண முடியும்.
4) வகுப்பு வாரியாக மற்றும் கோச் வாரியாக காலியாக உள்ள பெர்த்த்களின் எண்ணிக்கையைக் காணலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Tuesday, December 17, 2019

December 17, 2019

மதுரையில் இருந்து ஷீரடிக்கு சிறப்பு ரயில் - IRCTC ஏற்பாடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மதுரையில் இருந்து சென்னை வழியாக ஷீரடி, மந்த்ராலயத்துக்கு தனி சிறப்பு சுற்றுலா ரயில் வரும் ஜனவரி 7-ஆம் தேதி இயக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஐ.ஆா்.சி.டி.சி. செய்துள்ளது. இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆா்.சி.டி.சி.) கடந்த 2005-லிருந்து பாரத தரிசனம் சிறப்பு சுற்றுலா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகளுடன் 330-க்கும் அதிகமான சுற்றுலா திட்டங்கள் இதுவரை வெற்றிகரமாக நடந்துள்ளன. அந்த வகையில் ஷீரடி, மந்த்ராலயத்துக்கு தனி சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. மதுரையில் இருந்து சென்னை வழியாக ஷீரடி, மந்த்ராலயத்துக்கு சிறப்பு சுற்றுலா ரயில், வரும் ஜனவரி 7-ஆம் தேதி இயக்கப்படஉள்ளது. இந்த ரயிலில் பண்டேரிபுரம், ஷீரடி, மந்த்ராலயம் ஆகிய இடங்களுக்கு பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனா்.
இது குறித்து ஐ.ஆா்.சி.டி.சி. அதிகாரி ஒருவா் கூறியது: இந்த ரயில் மதுரையில் இருந்து ஜனவரி 7-ஆம் தேதி புறப்பட்டு, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூா் வழியாக ஷீரடி, பண்டேரிபுரம், மந்த்ராலயத்துக்கு செல்கிறது. இந்த ரயில் பயணிகளுக்கு தென் இந்திய சைவ உணவு வழங்கப்படும். ரயிலில் குழுவாக தங்குமிட வசதி, சுற்றி பாா்க்க ஏசி அல்லாத வாகன வசதி செய்யப்படும். ரயிலில் சுற்றுலா மேலாளா்கள் மற்றும் பாதுகாவலா்கள் ஆகியோா் இருப்பாா்கள். பயணிக்கு பயணக்காப்பீடு வசதி செய்யப்படும். 6 நாள்களுக்கு பயணக்கட்டணம் நபருக்கு ரூ.5,670. இந்த ரயில் தொடா்பாக கூடுதல் விவரங்களை அறிய, சுற்றுலா தகவல் மற்றும் வசதி மையம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் என்ற முகவரியை அணுகலாம். மேலும், (0) 9003140680, 9003140681 என்ற செல்லிடப்பேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Friday, October 18, 2019

October 18, 2019

IRCTC டிக்கெட்டில் பயணிகள் பெயர் தவறாக இருந்தால் எப்படி சரி செய்வது?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீங்கள் IRCTC (Indian Railway Catering and Tourism Operation) வெப்சைட்டில் புக் சேய்த டிக்கெட்டில் பயணிகளின் பெயர் தவறாக எழுதி விட்டிர்களா, இதனுடன் இப்பொழுது பயணிகளின் டிக்கெட்டும் புக் ஆகிவிட்டதே என்ன செய்வது, என்று புரியவில்லையா, இதனுடன் நீங்கள் இந்த டிக்கெட்டை நீங்கள் கேன்சல் செய்யாமல் எப்படி சரி செய்வது, வாங்க பாக்கலாம் இதனுடன் சாதாரண மனிதர்களுக்கு இடையில் தவறுகள் நடப்பது சாதாரணம் தான் அதற்க்காக பயணிகளின் டிக்கெட்டை கேன்சல் செய்யாமல் எப்படி அதை சரி செய்வது வாருங்கள் பார்ப்போம். நீங்கள் உங்கள் குடுபத்தினர் டிக்கெட் அல்லது வேறு நபரின் டிக்கெட் புக் செய்யும்போது தவறு நடந்தால் என்ன செய்வது அந்த தவறை எப்படி சரிசெய்வது வாருங்கள் பார்க்கலாம்.
1 டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள்
2 உங்கள் அருகில் உள்ள இரயில் ரிஸர்வேசன் கவுண்டருக்கு செல்லுங்கள்
3 பயணம் செய்ய இருக்கும் பயணியின் ஒரிஜினல் ID ப்ரூப் இதனுடன் ஒரு போட்டோகாப்பி கொண்டு வர வேண்டும்
4 இதனுடன் நீங்கள் கவுண்டரில் இருக்கும் ஆபிசரிடம் கொடுத்து பெயரை சரி செய்து கொள்ளலாம்
குறிப்பு :- நீங்கள் பயணிப்பதற்கு 24நிமித்திற்க்கு முன்பே ரிசர்வேஷன் கவுண்டரில் கொடுத்து சரி செய்ய வேண்டும் அப்படி தாமதம் ஆகிவிட்டால் சரி செய்ய முடியாது. நீங்கள் இந்த டிக்கெட்டில் பயணிக்க வில்லை என்றால், உங்கள் குடுபத்தில் இருக்கும் வேறு ஒருவர் கூட பயணிக்கலாம். நீங்கள் பயணிக்க இருந்த பொழுது ஏதோ காரணத்தால் உங்கள் குடுத்தில் இருக்கும் வேறு ஒருவரை அனுப்பி வைக்க விரும்பினால் தாராளமாக நீங்கள் அனுப்பலாம், ஆனால் அந்த நபர் உங்களின் இரத்த சொந்தமாக இருக்க வேண்டும் உதாரணத்துக்கு அப்பா, அம்மா,தங்கை,தம்பி,அண்ணன், கணவன்,மனைவி என இருக்க வேண்டும். IRCTC யின் படி நீங்கள் இரத்த சொந்தமாக இருந்தால் உங்களின் ஒரிஜினல் ID, ப்ரூப் உடன் அவர் உங்கள் இரத்தம் சொந்தம் தான் என்பதற்கான ப்ரூப் கொண்டு வர வேண்டும்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Thursday, October 03, 2019

October 03, 2019

IRCTC இணையதளத்தில் புதிய வசதி அறிமுகம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ரயில்களின் முன்பதிவு இறுதி நிலவரம், காலியிடங்கள் விவரம் ஆகியவற்றை அறிந்து கொள்ள ஐஆர்டிசிடிசி இணையதளத்தில் சார்ட்ஸ்/வேகன்சி என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகள் காலியிருக்கை இருக்கை நிலவரத்தை தாங்களாகவே அறிந்து கொண்டு, டிக்கெட் பரிசோதகரை அணுகி தங்களின் வரிசைப்படி இடங்களை கேட்டு பெறலாம். இருக்கைகள் முழுதூர பயணத்துக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதா, பாதி தூரத்துக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதா என்ற விவரத்தை அறிந்து கொள்ளலாம். வெளிப்படைத்தன்மை மற்றும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல் பட்டியல் ரயில் புறப்படுவதற்கு 4 மணிநேரத்திற்கு முன்பும், இரண்டாவது அட்டவணை ரயில் சென்றடையும் இறுதி ஸ்டேஷனுக்கு 30 நிமிடத்திற்கு முன்பும் கிடைக்கும். முதல் அட்டவணைக்கு பிறகு, அப்போதைய முன்பதிவு, டிக்கட் ரத்து போன்ற விபரங்களுடன் இரண்டவாது அட்டவணையில் தகவல் இருக்கும். ரயில் எண், பெயர், பயண தேதி, புறப்படும் இடம் ஆகிய விவரங்களை டைப் செய்தால், இறுதி நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Tuesday, October 01, 2019

October 01, 2019

IRCTCயுடன் ஆதாரை இணையுங்க.. பல சலுகைகள் காத்திருக்கு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா? அப்படின்னா முதல்ல இதை செய்யுங்க. உங்களது ஆதார் எண்ணை ஐ.ஆர்.சி.டி.சி அக்கவுண்டுடன் இணையுங்கள். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் ஐ.ஆர்.சி.டி.சி கூறியுள்ளது. இவ்வாறு ஐ.ஆர்.சி.டி.சி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது, வாடிக்கையாளர்கள், ஒரு மாதத்திற்கு 12 டிக்கெட்டுகள் பதிவு செய்ய முடியும் என்றும், இதே தங்கள் கணக்குடன் ஆதாரை இணைக்காதவர்கள் வெறும் 6 டிக்கெட்களை மட்டுமே பதிவு செய்ய முடியும் என்றும் ஐ.ஆர்.சி.டி.சி கூறியுள்ளது. சரி எப்படி ஆதார் எண்ணை எப்படி ஐ.ஆர்.சி.டி.சியுடன் இணைப்பது என்று கேட்கிறீர்களா? ஐ.ஆர்.சி.டி.சி பிரத்யோக இணைய தளத்திற்கு சென்று, உங்களது ஐ.ஆர்.சி.டி.சி அக்கவுண்ட் தளத்திற்கு செல்லுங்கள், அங்கு மை அக்கவுண்ட் என்ற ஆப்சனை கிளிக் செய்து, அங்குள்ள லிங்க் யுவர் ஆதார் என்ற லிங்கினை கிளிக் செய்தால் அது நேரிடையாக உங்களது கே.ஒய்.சி பக்கத்திற்கு செல்லும். அங்கு உங்களது பெயரை ஆதாரில் உள்ளது போல பதிவு செய்ய வேண்டும். மேலும் உங்களது ஆதார் எண்ணை கொடுத்து, இன்னும் சில விபரங்களை பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும்.
மேலும் அங்குள்ள செக்பாக்ஸை தேர்தெடுத்து விட்டு, பின்பு ஓ.டி.பி பட்டனை கிளிக் செய்தால், நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு ஒடிபி எண் வரும். இந்த ஓடிபி எண்ணை கொடுத்து சரி பார்த்த பின்பு, பிறகு அப்டேட் செய்யவும். இதன் பின்னர் உங்கள் ஆதார் எண் ஐ.ஆர்.சி.டி.சி தளத்துடன் இணைக்கப்படும். மத்திய அரசு தொடர்ந்து பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தொடர்ந்து ஆதார் எண்ணை பிரதானமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தி வருகிறது. அதிலும் வங்கிக் கணக்கு, வருமான வரி கணக்கு, ஆதார் பான் இணைப்பு, இது தவிர முக்கிய முகவரி அடையாள சான்றிதலாக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இதன் படி ஐ.ஆர்.சி.டி.சியும் இப்படி ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளது. இதன் மூலம் மூலம் தொடர்ச்சியாக இரயிலில் செல்பவர்கள் பயன் அடையாளம் என்றும் ஐ.ஆர்.சி.டி.சி கூறியுள்ளது. போக்குவரத்து துறையில் முக்கிய பங்கு வகித்து வரும் ரயில் பயனர்களுக்கு, இது மிக பேருதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog