Breaking

Showing posts with label TET Paper 2. Show all posts
Showing posts with label TET Paper 2. Show all posts

Sunday, December 07, 2025

Thursday, November 09, 2023

November 09, 2023

TET - Passing Mark Certificate - தேர்ச்சி மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு?



TET - தேர்ச்சி மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு? TET - Passing Mark Certificate Download Again?

கடந்த 2022-ம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் அதன் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு வரும் ஜனவரி 7-ம் தேதி நடைபெற உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்தும் இந்த தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த நவம்பர் 1-ம் தேதி தொடங்கியது. டெட் 2-ம் தாள் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் பலர் https://www.trb.tn.gov.in/ என்ற இணையதளம் வழியாக ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கு விண் ணப்பிக்கும் கால அவகாசம் நவம்பர் 30-ம் தேதி வரை உள்ளது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக டெட் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களின் மதிப் பெண் சான்றிதழை மீண்டும் பதிவிறக்கம் செய்ய வாய்ப்பு தரப்பட்டுள்ளது.


இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 2022-ம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்வதில் விடுபட்டதாக அதிக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இதையடுத்து 2022 டெட்தேர்வில் தேர்ச்சி அடைந்த பட்டதாரிகள் தங்களின் மதிப்பெண் சான்றிதழை https://trbtet2022.onlineregistrationform.org/TNTRB/ எனும் இணையதளத்தில் இருந்து நவம்பர் 30-ம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Thursday, July 27, 2023

July 27, 2023

TRB இன்று ( 27/07/2023 ) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - RELEASE OF - REVISED RESULT



Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) – Paper-II-2022

RELEASE OF - REVISED RESULT

As per Notification No. 01/2022 dated 07.03.2022, the Teachers Recruitment Board conducted the Computer Based Examination for Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) Paper-II for the year 2022 from 03.02.2023 to 15.02.2023 in 23 sessions.

The Examination result along with the Final Answer key for TNTET Paper-II for the year 2022 for 23 sessions was released by the Board on 28.03.2023.

After the release of final key & results candidates sent representations suo - moto for many questions in various sessions. As per Board decision re-verification was done for all sessions, all questions including the representations.

Based on the Subject Experts Re-verification report, it was recommended as no change in answer key for all questions except 15 questions in 11 sessions. Now, the re-evaluation of those sessions is done and based on this revised key and the revised result for 11 sessions is hereby released. The result earlier released on 28.03.2023 for those 11 sessions is hereby withdrawn.

2,54,224 number of candidates attended the Examination, based on revised result the Revised mark list for candidates appeared in 11 sessions is hereby released.

For the newly qualified candidates, the Certificates will be uploaded later in TRB website.

Utmost care has been taken in preparing this and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in at any stage.

Date: 27.07.2023 Chairman

CHECK RESULTS IN ->RESULTS SECTION IN WEBSITE

CLICK HERE TO DOWNLOAD RELEASE OF - REVISED RESULT PDF

Friday, April 14, 2023

April 14, 2023

TET - ஆசிரியர் தகுதி தேர்வுக்கான மதிப்பெண் சான்று வெளியீடு



TET - ஆசிரியர் தகுதி தேர்வுக்கான மதிப்பெண் சான்று வெளியீடு - Release of Marks for TET – Teacher Eligibility Test

ஆசிரியர் தேர்வு வாரிய பொறுப்பு தலைவர் நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, இரண்டாம் தாளுக்கு, கணினி வழித் தேர்வுகள், பிப்.,3 முதல், 15 வரை இரண்டு வேளைகளில் நடந்தது. தேர்வில், 2.54 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், மார்ச், 28ல் வெளியானது. இந்த தேர்வில், 15 ஆயிரத்து, 430 பேர் தகுதி மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்நிலையில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ், தேர்வு வாரியத்தின், https://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இன்று முதல் மூன்று மாதங்கள் வரை, சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD PDF

Wednesday, February 08, 2023

February 08, 2023

TN TET தேர்வு எழுதவுள்ளோர் கவனத்திற்கு – TNOU பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

TN TET தேர்வு எழுதவுள்ளோர் கவனத்திற்கு – TNOU பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! - Attention TN TET Aspirants – Important Notice Released by TNOU University!

தமிழகத்தில் திறந்த நிலை பல்கலைக்கழக தேர்வும், ஆசிரியர் தகுதி தேர்வும் (TET) ஒரே நாளில் நடைபெற உள்ளது. அதனால் TET தேர்வு எழுதவுள்ளவர்கள் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TET தேர்வு:

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்கள் டெட் தேர்வின் வாயிலாக நிரப்பப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி முதல் கட்ட TET paper – 1 தேர்வு 2022 அக்டோபர் மாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது பட்டதாரி ஆசிரியர்களுக்கான TET paper – 2 கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் டெட் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஏனெனில் திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெற உள்ளது. இந்த பல்கலைக்கழக தேர்வு நாளில் டெட் தேர்வும் நடைபெற உள்ளதால் மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் TET தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளதால் அவர்கள் ஒரே நாளில் இரு தேர்வையும் எழுத முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகம் அதனை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். அம்மாணவர்களுக்கு மட்டும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு 19.03.2023 அன்று நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. TET எழுதவுள்ளவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்த சான்றுடன் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் சைதாப்பேட்டை என்ற முகவரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Saturday, January 28, 2023

January 28, 2023

ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாளுக்கான தேர்வு பிப்.3ல் தொடக்கம்!

ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாளுக்கான தேர்வு பிப்.3ல் தொடக்கம்! Exam for Teacher Eligibility Test 2nd paper starts on 3rd February!

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான கணினி வழித்தேர்வு, பிப்ரவரி 3 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாளுக்கான கணினி வழித் தேர்வுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 31.2.2023 முதல் 12.2.2023 வரை இரண்டு வேளைகளிலும் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கடந்த 3 ஆம் தேதி தேர்வு வாரிய இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிப்ரவரி 3 முதல் 14 ஆம் தேதி வரையில் நடைபெற உள்ள இரண்டாம் தாளுக்கான கணினி வழித் தேர்வுக்கான கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சனிக்கிழமை(ஜன.28) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வுக் கூட நுழைவுச் சீட் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது பயன்பாட்டு முகவரி மற்றும் கடவுச்சொல் உள்ளீடு செய்து தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Sunday, November 27, 2022

November 27, 2022

TN TET தாள் 2 எப்போது? – தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு முழு விவரங்கள்!

TN TET தாள் 2 எப்போது? – தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு முழு விவரங்கள்!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் 2022 ஆம் ஆண்டிற்கான தாள் 2 தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.trb.tn.nic.in இல் பதிவேற்றப்படும்.

TN TET தாள் 2 தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு:

பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாள் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் டிசம்பர் மாதத்தில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு வருகிறது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்தது. அந்நிலையை மாற்றி ஆயுள் முழுவதும் டெட் சான்றிதழ் செல்லும் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் அண்மையில் அறிவித்தது.

இந்த அறிவிப்பால், பல லட்ச கணக்கானவர்கள் TET தேர்வர்கள் தாள் 2 தேர்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு செயல் முறைகள் அனைத்தும் நடைபெற்று, கடைசியாக விடைக் குறிப்பு வரை தற்போது வெளியாகி உள்ளது. 2ஆம் தாள் டிசம்பர் மாதத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான தேர்வுக் கால அட்டவணை இறுதி செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும் எனப்படும் கல்லூரிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளதால், மாணவர்களுக்கான செமஸ்டர் விடுமுறையை கணக்கில் கொண்டு தேதிகள் நிர்ணயிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Total Pageviews

Search This Blog