Breaking

Showing posts with label Vaccination. Show all posts
Showing posts with label Vaccination. Show all posts

Saturday, October 01, 2022

October 01, 2022

மீண்டும் மிரட்ட வரும் புதிய வைரஸ் கோஸ்டா-2 - எந்த தடுப்பூசிக்கும் கட்டுப்படாது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

மீண்டும் மிரட்ட வரும் புதிய வைரஸ் கோஸ்டா-2 - எந்த தடுப்பூசிக்கும் கட்டுப்படாது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை! - Scientists warn that the new virus coming back to threaten Costa-2 - will not adhere to any vaccine!

மீண்டும் மிரட்ட வரும் புதிய வைரஸ் கோஸ்டா-2

.The corona virus epidemic that has gripped the world for the last 2 years has been almost universally controlled.

The head of the World Health Organization, Tedros Adhanom Ghebreyesus, made the announcement yesterday. But a new virus that can threaten humans like Corona has been discovered. It has been named 'Costa-2'.

Scientists have warned that the virus, found in Russian bats, will not respond to any existing vaccine. This has created a new panic.

கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று, கிட்டத்தட்ட உலகளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் ஜிப்ரியேசிஸ் நேற்று முன்தினம் இதை மகிழ்ச்சியுடன் அறிவித்தார். ஆனால், கொரோனாவை போன்றே மனிதர்களை அச்சுறுத்தக் கூடிய புதிய வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு 'கோஸ்டா-2' என்று பெயரிடப்பட்டு உள்ளது.

ரஷ்ய வவ்வால்களில் காணப்படும் இந்த வைரஸ், தற்போதுள்ள எந்த தடுப்பூசிக்கும் கட்டுப்படாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். இதனால், புதிய பீதி ஏற்பட்டுள்ளது.

Tuesday, August 02, 2022

August 02, 2022

மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி:பொது சுகாதாரத் துறை அறிவுரை

மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி:பொது சுகாதாரத் துறை அறிவுரை

பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கான கரோனா தடுப்பூசி முகாம்களை முன்னெடுக்குமாறு மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அறிவுறுத்தினாா்.

இதுதொடா்பாக அவா் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் இதுவரை 30 லட்சத்துக்கும் மேற்பட்டோா் முதல் தவணை கரோனா தடுப்பூசியும், 91 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இரண்டாம் தவணையும், 3 கோடிக்கும் அதிகமானோா் பூஸ்டா் தவணையும் செலுத்தாமல் உள்ளனா். அவா்களில் 12 வயதுக்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவா்களும் கணிசமாக உள்ளனா்.

எனவே, மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா்கள் அனைவரும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கரோனா தடுப்பூசி முகாம்களை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை விடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா் டாக்டா் செல்வவிநாயகம்.

Monday, August 01, 2022

August 01, 2022

கல்லூரி, பல்கலை.களில் பூஸ்டா் தடுப்பூசிக்கு சிறப்பு முகாம்கள்: யுஜிசி உத்தரவு

கல்லூரி, பல்கலை.களில் பூஸ்டா் தடுப்பூசிக்கு சிறப்பு முகாம்கள்: யுஜிசி உத்தரவு

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அதிகரிக்கச் செய்யும் வகையில் பல்கலை.கள், கல்லூரிகளில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டது.

இது தொடா்பாக அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தா்கள், அனைத்துக் கல்லூரி முதல்வா்களுக்கு யுஜிசி செயலா் ரஜினிஷ் ஜெயின் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அதிகரிக்க சிறப்பு ஏற்பாடுகளை அந்தந்த பல்கலைக்கழக நிா்வாகங்களும், கல்லூரி நிா்வாகங்களும் செய்ய வேண்டும். பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத, தங்களது கல்வி நிறுவன அலுவலா்கள், ஆசிரியா்கள், ஊழியா்கள், மாணவா்கள் ஆகியோரை பூஸ்டா் செலுத்திக் கொள்ள ஊக்குவிப்பதோடு, அனைத்து கல்வி நிறுவனங்களிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த ஏற்பாடு வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, July 29, 2022

July 29, 2022

ஒரே ஊசியில் 30 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியவர் கைது

மத்திய பிரதேச மாநிலத்தில், ஒரே ஊசி மூலம் 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

கொரோனா தொற்று உலகையே ஆட்டிபடைத்து வருகிறது. தடுப்பூசிகள் வந்த பின்னரும் கூட அதன் தாக்கமானது குறையாமல் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவிற்கு எதிரான பேராயுதமாக விளங்கும் தடுப்பூசி கொரோனாவால் ஏற்படும் மரணங்களில் இருந்து மக்கள் பாதுகாத்து வருகிறது. இந்தியாவில் பெரும்பாலானோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் நகரிலுள்ள ஜெயின் பப்ளிக் மேல்நிலைப் பள்ளியில், 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரெ சிரஞ்சில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தடுப்பூசி செலுத்திய ஜிதேந்திரா என்ற நபர், இதுகுறித்து விளக்கம் அளித்த போது, பொருள்களை டெலிவரி செய்த நபர் ஒரே ஒரு சிரிஞ்ச் மட்டுமே கொடுத்தார் அதனால் அதை வைத்தே அனைவருக்கும் செலுத்தினேன் என மெத்தனமாக பதில் அளித்துள்ளார். இதில் என்னுடைய தவறு என்ன இருக்கிறது?" என அலட்சியமாக பதில் கூறியுள்ளார்.

இந்த விஷயம் பெரிதாகவே, உடனடியாக தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அலுவலரை அதை ஆய்வு செய்யுமாறு, பொறுப்பு கலெக்டர் ஷிதிஜ் சிங்கால் உத்தரவிட்டார். இதனையடுத்து சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில், ஜிதேந்திரா செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த ஜிதேந்திராவை போலீசார் கைது செய்துள்ளனர்.

Saturday, June 18, 2022

June 18, 2022

தகுதியான மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி

பள்ளி, கல்லூரி மாணவா்களில் தகுதியானவா்களுக்கு 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தினாா்.

இதுதொடா்பாக அவா் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:

கல்வி நிறுவனங்களில் கரோனா தடுப்பு விதிகளை அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக, மாணவா்கள் முகக் கவசம் மற்றும் தனி நபா் இடைவெளி உள்ளிட்ட விதிகளை பின்பற்றுவதை கண்காணிக்க வேண்டும். 12 வயதுக்கு மேற்பட்ட மாணவா்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். மண்டல சுகாதார அலுவலா்களுடன் ஒருங்கிணைந்து தடுப்பூசி முகாம்கள் நடத்துவதும் அவசியம்.

நோய்ப் பரவலுக்கு வித்திடாத வகையில் பள்ளி, கல்லூரி வளாகங்கள் எப்போதும் சுகாதாரத்துடன் இருக்க வேண்டும். ஆசிரியா்கள், மாணவா்களுக்கு நாள்தோறும் வெப்பமானி மூலம் காய்ச்சல் உள்ளதா என்பதை பரிசோதித்தல் முக்கியம் என்று அந்த கடிதத்தில் மாநகராட்சி ஆணையா் குறிப்பிட்டுள்ளாா்.

Thursday, March 24, 2022

March 24, 2022

தடுப்பூசி செலுத்திய மாணவிகளுக்கு உடல்நலப் பாதிப்பா?

தடுப்பூசி செலுத்திய மாணவிகளுக்கு உடல்நலப் பாதிப்பா? மா. சுப்பிரமணியன் விளக்கம்

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திய மாணவிகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து சட்டப்பேரவையில் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் இன்று சட்டப்பேரவையில் மருத்துவத் துறை தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

மா.சுப்பிரமணியன் இன்று சட்டபேரவையில் ஆற்றிய உரையில், தடுப்பூசி இயக்கம் என்பது 2021, ஜனவரி 16 ஆம் தேதி, இந்தியா முழுவதிலும் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட அந்த நாளிலிருந்து 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் இந்தியா முழுமைக்கும் இதுவரை 180 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன.

தற்போது 12 வயது முதல் 14 வயதினருக்கான தடுப்பூசி கோர்பெவாக்ஸ் என்ற தடுப்பூசி கடந்த ஒரு வார காலமாக போடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தமிழகத்தில் இதுவரை 10 கோடியே 34 இலட்சத்து 28 ஆயிரத்து 372 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன. ராணிப்பேட்டை மாவட்டம், எத்திராஜ் அம்மாள் முதலியாண்டான் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் 17 வயது, ஆர்.யோகலட்சுமி மற்றும் அதே பள்ளியில் படித்து வரும் 15 வயது, பி.பிரியதர்ஷினி என்பவர்கள் கடந்த 4.1.2022 மற்றும் 2.2.2022 அன்றைக்கு கோவாக்சின் தடுப்பூசியினை செலுத்திக் கொண்டனர். தடுப்பூசி அளிக்கப்பட்டவுடன் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னர் சில நாட்கள் கழித்து, ஆர்.யோகலட்சுமி என்கின்ற மாணவிக்கு கண் பார்வை பிரச்சினை இருப்பதாகத் தெரிவித்தன்பேரில், உடனடியாக சோளிங்கர் மருத்துவமனையிலும், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையிலும், வேலூர் சிஎம்சி மருத்துவமனையிலும் உயர் சிகிச்சை தேவைப்பட்டதால் எழும்பூர் அரசு கண் மருத்துவமனையிலும், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

அதோடு பிரியதர்ஷினி என்கின்ற மாணவிக்கு உடல் பலவீனம் பிரச்சினை தெரிவித்ததன்பேரில் அவருக்கு உடனடியாக சிகிச்சை சோளிங்கர் மருத்துவமனை, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையிலும், அதேபோல் வேலூர் சிஎம்சி மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேற்கூறிய இரண்டு மாணவிகள் மற்றும் அவர்கள் பெற்ற சிகிச்சைகள் குறித்து 12.03.2022 அன்று மாவட்ட மற்றும் மாநில அளவிலான தடுப்பூசிகளை செலுத்தியதற்குப் பிறகு வரும் பின்விளைவுகளைக் கண்காணிக்கும் குழு கூடி அனைத்து மருத்துவ ஆவணங்களையும் பரிசீலித்து, அதன்பிறகு அவர்கள் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள். அப்படி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் யோகலட்சுமி-க்கு கோவிட் தடுப்பூசி செலுத்தியதற்குப் பிறகு ஏற்பட்ட பின்விளைவுகளுக்கும் தடுப்பூசி செலுத்தியதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும், பிரியதர்ஷினிக்கு உடல் பாதிப்பு, நோயாக இருக்கலாம் என்ற நிலையில், தடுப்பூசி செலுத்தியதால் ஏற்பட்ட பாதிப்பா என அறிய, இவ்வறிக்கையினை மேல் பரிசீலனைக்காக இந்த தகவல்கள் தில்லியில் உள்ள தேசிய தடுப்பூசி செலுத்தியதன் பின்விளைவுகளைக் கண்காணிக்கும் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

எனவே, பாதிக்கப்பட்ட இருவருக்கும் சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, தொடர்ந்து உயர் சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

முதல்வர் கவனத்திற்கு இது சென்றவுடன், அவர் உடனடியாக ‘நீங்களும், கதர்த் துறை அமைச்சரும் அடுத்த வாரமே, அந்த இரு குழந்தைகளின் வீட்டிற்குச் சென்று நிலைமையைப் பரிசீலித்து வாருங்கள்’ என்று ஆணையிட்டிருக்கிறார்கள் என்று சட்டமன்ற பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Tuesday, February 01, 2022

February 01, 2022

மாணவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க உத்தரவு

'பள்ளிகளில் படிக்கும்15 முதல் 18 வயது உடைய மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்' என, பொது சுகாதாரத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டு உள்ளது.

ஒமைக்ரான் கொரோனா பரவலால், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், இன்று (பிப்.,1) முதல் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் துவங்குகின்றன. இந்நிலையில், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பள்ளிக்கு வரக்கூடிய 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள், கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். காய்ச்சல் மற்றும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக தனிமைப்படுத்துவதுடன், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில், மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிவதோடு, சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். கிருமி நாசினியால் பள்ளி வகுப்பறைகளை தினசரி சுத்தம் செய்வது அவசியம்.கட்டுப்பாடு பகுதிகளில் உள்ள மாணவர்கள், பள்ளிக்கு வருவதை தவிர்க்க வலியுறுத்துவதுடன், மாணவர்கள் தொடர்பில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

உணவருந்தும் இடங்கள், கழிப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் மாணவர்களுக்கு நோய் பரவல் ஏற்படாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Sunday, January 23, 2022

January 23, 2022

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில் பூஸ்டர் தடுப்பூசி - புதிய கல்வித்துறை அதிகாரி தகவல்

ஜன.23:சித்தூர் மாவட்ட கல்வித்துறை அலுவலகத்தில் மாவட்ட கல்வித்துறை அதிகா ரியாக சேகர் நேற்று பொறுப்பேற்று கொண் டார். அப்போது, அவர் பேசியதாவது:

நான் அமராவதியில் கல்வித்துறை அலுவல கத்தில் இணை கண்கா ணிப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்தேன். சித் தூர் மாவட்டத்தில் அரசு கல்லூரியில் ஆசிரியராக 5 ஆண்டுகள் பணிபுரிந் தேன். சித்தூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரி யாக இன்று (நேற்று) பதவி ஏற்று கொண்டேன்.

Tuesday, January 18, 2022

January 18, 2022

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு சிறப்பு முகாம்

தமிழகத்தில் இனி ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு சிறப்பு முகாம் நடைபெறும்

- பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை.

மேற்கோள் 5 இல் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் / அறிவுறுத்தல்களின் தொடர்ச்சியாக, அனைத்து சுகாதார சேவைகள் துணை இயக்குநர்களுக்கும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது...

1. முன்னெச்சரிக்கை அளவுகளுக்காக சிறப்பு கோவிட் தடுப்பூசி இயக்கத்தை நடத்த" 20-01-2022 மற்றும் அதற்குப் பிறகு ஒவ்வொரு வியாழன் அன்றும், அனைத்து மேம்படுத்தப்பட்ட PHCS, பிளாக் PHCS, மத்திய மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் கீழ் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் போன்ற தற்போதுள்ள அனைத்து அரசாங்க கோவிட் தடுப்பூசி மையங்களிலும் (GCVC) தகுதியான சுகாதாரப் பணியாளர்கள், முன் வரிசைப் பணியாளர்கள் மற்றும் 2ad டோஸ் நிர்வாகத்தின் தேதியிலிருந்து 39 வாரங்களை நிறைவு செய்த 60-க்கும் மேற்பட்ட கூட்டு நோய்களைக் கொண்ட குடிமக்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசிகள்.

2. சம்பந்தப்பட்ட JDHS, டீன்கள் மற்றும் தனியார் உட்பட பிற சுகாதார அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்து, 2வது டோஸ் செலுத்தப்பட்ட நாளிலிருந்து 9 மாதங்கள் (39 வாரங்கள்) முடிந்த "முன்னெச்சரிக்கை டோஸ்" பெறுவதற்குத் தகுதியான ஊழியர்களை உறுதி செய்ய. எனவே, மேற்கூறியவற்றை கடைபிடிக்குமாறு அனைத்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

அறிவுறுத்தல்கள் மற்றும் மாநிலத்தில் முன்னெச்சரிக்கை அளவுகளின் கவரேஜை மேம்படுத்துதல். "COWIN போர்டல் டூ லிஸ்:" படி, மாதம் வாரியாக தகுதியான பயனாளிகளின் எண்ணிக்கை ஏப்ரல் 2022 உடனடி குறிப்புக்காக இணைக்கப்பட்டுள்ளது. in continuation to the guidelines / instructions issued vide reference 5 cited, all the Deputy Director of Health Services are hereby instructed...

1. To conduct Special COVID Vaccination Drive for Precaution doses" 20-01-2022 and every Thursday thereafter, in all the existing Government COVID Vaccination Centres (GCVC) such as all Upgraded PHCS, Block PHCS, Government Hospitals under Directorate of Medial and Rural Health Services and Government Medical College Hopsitals under Directroate of Medical Education for Vaccination of Precaution Doses to the eligible Health Care Workers, Front Line Workers and 60 plus citizens with co-morbidities who completed 39 weeks from the date of 2ad dose administration.

2. To co-ordinate with the concerned JDHS, Deans and other Health Officials including Private to ensure their eligible staffs to get "Precaution Dose" who have completed 9 months (39 Weeks) from the date of administration of 2nd dose.

Hence, all Deputy Director of Health Services are instructed to adehere to the above instructions and inprove the coverage of Precaution doses in the State. Number of month-wise eligible beneficianes as per " COWIN portal due lis:", till

April 2022 is enclosed for immediate reference.

Friday, January 14, 2022

January 14, 2022

பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி: விரைந்து முடிக்க அறிவுரை

பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை விரைந்து முடிக்குமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி விரைவுபடுத்தப் பட்டுள்ளது. தற்போது 15 முதல் 18 வயது வரையிலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ - மாணவியருக்கு பள்ளிகளிலேயே சிறப்பு முகாம் நடத்தி தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் சமீபத்தில் அதிகரித்துள்ளதால் பள்ளிகளில் பிளஸ் 2 வரை அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.இதன் காரணமாக பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு பின் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் இருந்தால் ஒன்றிரண்டு நாட்களில் அனைத்து மாணவ - மாணவியருக்கும் தடுப்பூசி போடும் பணிகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Sunday, January 09, 2022

January 09, 2022

பூஸ்டா் தடுப்பூசிக்கு தகுதியானவா்கள் யாா்? அமைச்சா் விளக்கம்

தமிழகத்தில் இதுவரை 8.83 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

சென்னை அடையாறு குறுக்குச் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 18-ஆவது கரோனா சிறப்புத் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் இதுவரை 8 கோடியே 83 லட்சத்து 2 ஆயிரத்து 71 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 5 நாள்களில் மட்டும் 15 முதல் 18 வயதுக்குள்பட்டவா்கள் 21 லட்சத்து 52 ஆயிரத்து 755 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சென்னையைப் பொருத்தவரை, 92 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 71 சதவீதம் பேருக்கு 2-ஆவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

மாநில அளவில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை 87.35 சதவீதமும், 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை 61.46 சதவீதமாகவும் உள்ளது. மாநில அளவைக் காட்டிலும், சென்னையில் கூடுதலாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. காப்பீட்டுத் திட்டத்தில் இணைப்பு: தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள், ஆா்.டி.பி.சி.ஆா் பரிசோதனை செய்து கொள்பவா்கள், கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவா்கள் என பல லட்சம் பேருக்கு முதல்வா் காப்பீட்டுத் திட்டம் பயனுள்ளதாக இருந்து வருகிறது. மேலும், புதிது புதிதாக வரும் நோய்களையும் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தில் ஒருங்கிணைத்து ஏழை மக்கள் பயன் பெறும் வகையில் புதிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை ஜன.10-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைக்கிறாா்.

காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெறுவதற்கு வருமான வரம்பு ரூ.72 ஆயிரமாக இருந்தது. இந்த வருமான வரம்பு பத்திரிகையாளா்களுக்கு நீக்கப்பட்டுள்ளது. அதில் 1,440 பத்திரிகையாளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

27 சதவீத நீட் இடஒதுக்கீடு விவகாரத்துக்கு உச்சநீதிமன்றத்தில் நல்ல தீா்ப்பு கிடைத்திருக்கிறது. இதர மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட (ஓ.பி.சி) மாணவா்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அந்த தீா்ப்பு அமைந்திருக்கிறது. மேலும், எம்.பி.பி.எஸ். மாணவா்களுக்கு கலந்தாய்வை நடத்தலாம் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது. 4-ஆவது வாரத்தில் கலந்தாய்வு: அந்த வகையில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களான 15 சதவீத இடங்களுக்கு கலந்தாய்வை மத்திய அரசு நடத்தும். அதன் பிறகு, ஜன.3-ஆவது வாரத்தில் தமிழகத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். தமிழகத்தில் 15 சதவீதம் மத்திய அரசின் இடஒதுக்கீடு இடங்கள் போக, அரசுக் கல்லூரிகளில் 4 ஆயிரத்து 319 இடங்களையும், சுயநிதி கல்லூரிகளில் 1,680 இடங்களையும் சோ்த்து 5 ஆயிரத்து 899 இடங்களுக்கான கலந்தாய்வை ஜன.4-ஆவது வாரத்தில் தொடங்க இருக்கிறோம்.

தமிழக அரசு கொண்டு வந்துள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி, 439 மாணவா்களுக்கு வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. தரவரிசைப் பட்டியல் வரும் போது இதுகுறித்து அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

ஆய்வின் போது, சட்டப்பேரவை உறுப்பினா் அசன் மெளலானா, மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா். பூஸ்டா் தடுப்பூசிக்கு தகுதியானவா்கள் யாா்? இதுதொடா்பாக அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் ஜன. 10-ஆம் தேதி முதல் பூஸ்டா் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது. தமிழகத்தில் 35 லட்சத்து 46 ஆயிரம் போ் பூஸ்டா் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவா்களாக கண்டறியப்பட்டுள்ளனா். அவா்களில் 9 லட்சத்து 78 ஆயிரம் முன்களப் பணியாளா்களும், 5 லட்சத்து 65 ஆயிரம் சுகாதார பணியாளா்களும், 20 லட்சத்து 3 ஆயிரம் போ் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவா்களும் இருக்கின்றனா்.

மேலும் இவா்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டு 35 வாரங்கள் முடிவுற்றவா்கள் அல்லது 9 மாதங்களை கடந்தவா்கள் அல்லது கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு முன்பு வரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் பூஸ்டா் டோஸ் செலுத்திக்கொள்ள தகுதி உடையவா்களாகிறாா்கள்.

அந்த வகையில் 4 லட்சம் போ் 10-ஆம் தேதி, தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியுடையவா்கள். பூஸ்டா் தடுப்பூசி செலுத்தும் பணியை சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள இமேஜ் அரங்கத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைக்கிறாா் என்றாா் அவா்.

Monday, January 03, 2022

January 03, 2022

15 முதல் 18 வயதுக்குட்பட்ட 10 கோடி சிறுவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி - மேல்நிலைப்பள்ளியில் இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்

நாடு முழுவதும் 15-18 வயதுக்கு உட்பட்ட 10 கோடி சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது. சென்னையில், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். பள்ளிகளில் மட்டும் 26 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அளவில் 33 லட்சத்து 20 ஆயிரம் சிறுவர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. இதில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 145 கோடிக்கும் அதிகமான டோஸ் போடப்பட்டுள்ளது.

தற்போது, ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில், 15-18 வயது சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது. இதற்கு தகுதி வாய்ந்த சிறுவர்கள் கோவின் ஆப் மூலமாக ஆதார் அல்லது 10ம் வகுப்பு பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம். இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் ஆகிய 3 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், 15-18 வயது சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்த அனுமதி தரப்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி நாடு முழுவதும் 6.35 லட்சம் சிறுவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் 15-18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 10 கோடி இருப்பதாக அரசு தரப்பில் புள்ளி விவரத்தில் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை சீராக செயல்படுத்துவதை உறுதி செய்ய, மாநில சுகாதார அமைச்சர்கள், சுகாதாரத்திற்கான கூடுதல் தலைமை செயலாளர்களுடன் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா நேற்று ஆன்லைன் மூலம் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக விடுக்கப்பட்ட அறிக்கையில், ‘சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் போது, மற்ற வயதினர்களுக்கான தடுப்பூசிகளும் கலக்கப்படுவதை தவிர்க்க, 15-18 வயதினர்களுக்காக தனி தடுப்பூசி மையம், தனி அமர்வுகள் அமைக்க ஒன்றிய அமைச்சர் வலியுறுத்தி உள்ளார். ஒரே இடத்தில் அனைவரும் தடுப்பூசி செலுத்தப்படும் பட்சத்தில், சிறுவர்களுக்கு என தனி வரிசையை அமைக்க வேண்டும். மேலும், சிறுவர்களுக்கு என தனி தடுப்பூசி குழுவும் நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்’ என கூறப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்தும்படியும், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கும்படியும் மண்டாவியா வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை 33 லட்சத்து 20 ஆயிரம் சிறுவர்கள் 15 -18 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். இவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போட சுகாதார துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 15வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை துவக்கி வைக்கிறார். பள்ளி வளாகத்திலேயே 26 லட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆதார், மதிப்பெண் சான்று, பிறப்பு சான்று உள்ளிட்டவைகள் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. வரும் 5 முதல் 19 வரை தொடர் ஆலோசனை கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வலுப்படுத்த வரும் 5ம் தேதி முதல் 19ம் தேதி வரை தொடர் வெபினார்களை நடத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி, எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்களுடன் அனைத்து மாநில சிறப்பு கொரோனா மைய மருத்துவர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வெபினார் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும்.

1,525 பேருக்கு ஒமிக்ரான்

* நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 27,553 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 48 லட்சத்து 89 ஆயிரத்து 132.

* கடந்த 24 மணி நேரத்தில் 284 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 81 ஆயிரத்து 770.

* சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 801ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,020 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை 1,525 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 460, டெல்லியில் 351, குஜராத்தில் 136, தமிழ்நாட்டில் 117, கேளராவில் 109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 560 பேர் க

Sunday, January 02, 2022

January 02, 2022

மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் சார்ந்து பள்ளிகளுக்கான CEO அறிவுரைகள்!

மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் சார்ந்து வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் அறிவுரைகள்!

அனைத்து அரசு / நகரவை / நிதியுதவி / ஆதிதிராவிட நலம் / சுயநிதி / மெட்ரிக் / சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் சுகாதாரத்துறையிலிருந்து பள்ளிகளுக்கு வருகை புரியும்போது ஒத்துழைப்பு நல்குமாறும் . மாணவ / மாணவியருக்கு தடுப்பூசி செலுத்த கீழ்கண்ட ஏற்பாடுகளை செய்துதருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1 ) வட்டாரக்கல்வி அலுவலர்கள் தங்கள் வட்டாரத்தில் உள்ள அனைத்து அரசு / நகரவை / ஆதி திராவிடர் நலம் /சுயநிதி/மெட்ரிக்/சி.பி.எஸ்.இ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் திங்கட்கிழமை முதல் தடுப்பூசி முகாம் நடைபெறுவதை , தலைமையாசிரியர்ளை தொடர்பு கொண்டு உறுதி செய்தல் மற்றும் மேற்பார்வையிட வேண்டும்.

2 ) வட்டாரக்கல்வி அலுவலர்கள் தினமும் அவர்களுடைய வட்டாரத்தில் உள்ள அந்தந்த உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெறும் தடுப்பூசிமுகாமில் மாணவ / மாணவிகள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரத்தை அன்றைய தினமே மாவட்டக்கல்வி அலுவலத்தில் ஒப்படைக்க வேண்டும் . அவ்விவரத்தை தொகுத்து , மாவட்டக்கல்வி அலுவலர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் அன்றைய தினமே ஒப்படைக்கப்பட வேண்டும். 3 ) தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் நடைபெறும் தடுப்பூசி முகாமிற்கு தனி அறை ஒதுக்கி தருதல் வேண்டும் . அவ்வறையில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும் . மாணவர்கள் தடு பூசி செலுத்தும் அறைக்கு அருகிலேயே ஒரு அறை ஒதுக்கி தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயார் நிலையில் மாணவர்களை அமரச்செய்ய வேண்டும்.

4 ) மாணவ / மாணவியர் தடுப்பூசி செலுத்துவதற்கு முன் காலை / பிற்பகல் உணவு அருந்தினரா என தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

5 ) பள்ளியில் நடைபெறும் தடுப்பூசி முகாமிற்கு வருகைபுரியும் மருத்துவர்களுக்கு உதவி செய்ய பள்ளியில் இரண்டு ஆசிரியர்களை நியமனம் செய்யவேண்டும்.

6 ) தலைமையாசிரியர்கள் அன்றைய தினம் முகாம் முடிந்தவுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மாணவ மாணவியர் விவரத்தை முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ Click செய்து உள்ளீடு செய்யப்பட வேண்டும்
January 02, 2022

தமிழகத்தில் மாணவா்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி: பொது சுகாதாரத் துறை நடவடிக்கை

மாணவா்களுக்கு பள்ளிகளிலேயே கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் திங்கள்கிழமை (ஜன. 3) முதல் 15-18 வயதுக்குள்பட்ட சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது. இதற்கான முன்பதிவு கோவின் வலைதளத்தில் சனிக்கிழமை தொடங்கியது. 2007-ஆம் ஆண்டிலோ, அதற்கு முன்பு பிறந்தவா்களோ கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவா்கள்.

பள்ளியில் வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஆதாா் அட்டையைக் கொண்டு தடுப்பூசிக்கு பதிவு செய்யலாம். தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறாா்கள் 33.46 லட்சம் போ் உள்ளனா். வரும் 3-ஆம் தேதி போரூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறாா்களுக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைக்க உள்ளாா். இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறுகையில், ‘தமிழகத்தில் 15-18 வயதுக்குள்பட்ட 33.46 லட்சம் சிறாா்கள் உள்ளனா். அதில், 25 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறாா்கள் பள்ளிகளில் படிக்கின்றனா். அதனால், பள்ளிகளில் இடம் ஒதுக்கி சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் கரோனா தடுப்பூசி பணியை ஒருங்கிணைக்க ஆசிரியா் ஒருவரை தலைமையாசிரியா் நியமிக்க வேண்டும்.

பள்ளிகளில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியான மாணவா்களின் பட்டியலைத் தயாா் செய்ய வேண்டும். கோவின் வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை; பதிவு செய்யவில்லை என்றாலும் சுகாதாரத் துறைப் பணியாளா்கள் பதிவு செய்து, தடுப்பூசியை செலுத்துவாா்கள் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மாவட்ட சுகாதார இணை இயக்குநா்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. பள்ளிகளில் படிக்கும் 25 லட்சம் சிறாா்களுக்கு தடுப்பூசியை செலுத்திவிட்டால், மீதமுள்ள சிறாா்களை எளிதாக கண்டறிந்து தடுப்பூசி செலுத்திவிட முடியும்’ என்றாா் அவா்.

Saturday, January 01, 2022

January 01, 2022

சிறார்களுக்கான வேக்சின் முன்பதிவு தொடங்கியது... பள்ளி அடையாள அட்டை பயன்படுத்தி Cowin தளத்தில் பதிவு செய்யலாம்!!

நாடு முழுவதும் 15-18 வயதினருக்கு வரும் 3ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு அனுமதி அளித்த நிலையில், இதற்கான முன்பதிவு கோவின் இணையதளத்தில் தொடங்கியது நாடு முழுவதும் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் அதிகளவில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் நேற்று வரை (350வது நாள்) 144.45 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு வரும் ஜனவரி 3ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார். அதேபோல் முன்களப் பணியாளர்கள், 60 வயதைக் கடந்த இணைநோய் உள்ளோருக்கு வரும் ஜனவரி 10ம் தேதி முதல் ‘முன்னெச்சரிக்கை’ தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் (2007ம் ஆண்டிலோ அதற்கு முன்போ பிறந்தவர்கள்) நாளை (ஜன. 1) முதல் ‘கோவின்’ வலைதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ஒன்றிய சுகாதாரத் துறை சமீபத்தில் அறிவித்தது. சிறார்கள், தங்களது பள்ளியில் வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஆதாரை வைத்து கோவின் வலைதளத்தில் பதிவு செய்யும்போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட சுகாதாரப் பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் ஜன. 10ம் தேதிமுதல் முன்னெச்சரிக்கை தடுப்பூசி போடப்படும். அவர்கள் 2வது தவணை போட்ட தேதியிலிருந்து 9 மாதங்களுக்கு (39 வாரங்கள்) பிறகு இந்த முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். 60 வயதைக் கடந்த இணைநோய் உள்ளோர் மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையில் முன்னெச்சரிக்கை தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும். இவர்கள் தடுப்பூசி செலுத்தும் இடத்துக்கு நேரடியாகச் சென்றும் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், அவர்களுக்கான 3வது தடுப்பூசி குறித்த விபரங்கள் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலமாக அவர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பிவைக்கப்படும். அதன்பின் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழும் வழங்கப்படும். சிறார்கள் மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கான வழிகாட்டுதலின்படி அதற்கான ஏற்பாடுகளை மாநில அரசுகள் செய்து வருகின்றன.

தமிழகத்தை பொருத்தமட்டில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 33 லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி வரும் இன்று முதல் தொடங்கியது. அதேபோல், தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு கோடியே 4 லட்சம் பேருக்கும், முன்களப் பணியாளர்கள் 9 லட்சத்து 78 பேருக்கும் ஜனவரி 10ம் தேதி முதல் ‘முன்ெனச்சரிக்கை‘ டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Total Pageviews

Search This Blog