Breaking

Showing posts with label Election Results. Show all posts
Showing posts with label Election Results. Show all posts

Friday, July 26, 2024

Thursday, March 21, 2024

Tuesday, November 21, 2023

November 21, 2023

Election Special Camp - 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய இரண்டு நாட்களில் தேர்தல் சிறப்பு முகாம்

25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய இரண்டு நாட்களில் தேர்தல் சிறப்பு முகாம் Election Special Camp on 25.11.2023 and 26.11.2023

தேர்தல் சிறப்பு முகாம் நடைபெறும் நாள்கள்- பொது விளம்பரம் - 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய இரண்டு நாட்களில் சிறப்பு வாக்களார் பட்டியல் சுருக்க முறை திருத்தம்

திருவள்ளூர் மாவட்டம், 004. திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் 01.01.2024 தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணி நடைபெற்று வரும் நிலையில் 01.01.2024 அன்று 18 வயது பூர்த்தியடையும் நபர்களை வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்ப்பது தொடர்பாக, எதிர்வரும் 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய இரண்டு நாட்களில் சிறப்பு வாக்களார் பட்டியல் சுருக்க முறை திருத்தம் (முகாம்) அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொண்டோம்.

Wednesday, August 23, 2023

August 23, 2023

தமிழ்நாடு வக்ஃப் வாரிய முத்தவல்லி பிரிவு உறுப்பினர்களுக்கான தேர்தல் செய்தி வெளியீடு - நாள்: 23.08.2023



செய்தி வெளியீடு எண்: 1725

நாள்: 23.08.2023

தமிழ்நாடு வக்ஃப் வாரிய முத்தவல்லி பிரிவு உறுப்பினர்களுக்கான தேர்தல் செய்தி வெளியீடு

தமிழ்நாடு வக்ஃப் வாரிய முத்தவல்லி பிரிவு உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு கீழ்க்கண்டவாறு தேர்தல் கால அட்டவணை 24.08.2023 நாளிட்ட தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீட்டில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் அவசியமானால், 03.10.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று ஓட்டுப் பதிவு காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, தமிழ்நாடு வக்ஃப் வாரிய அலுவலகம், நெ.1. ஜாபர்சிராங் தெரு. வள்ளல் சீதக்காதி நகர், சென்னை 600 001-ல் நடைபெறும். 04.10.2023 (புதன்கிழமை) அன்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் Press Release No: 1725

Date: 23.08.2023

ELECTION FOR THE MEMBERS OF THE TAMIL NADU WAKF BOARD IN THE CATEGORY OF MUTAWALLIS

PRESS RELEASE

Following Election programme for election of members to the Tamil Nadu Wakf Board from the Electoral College consisting of Mutawallis of waqfs has been notified in the Tamil Nadu Government Extraordinary Gazette dated: 24.08.2023.

If poll is necessary, polling will be held on 03.10.2023 (Tuesday) between 10.00 A.M to 4.00 P.M. at the Office of the Tamil Nadu Waqf Board, No.1, Jaffer Syrang Street, Vallal Seethakkathi Nagar, Chennai - 600 001 and result will be declared on 04.10.2023 (Wednesday).

Monday, February 21, 2022

February 21, 2022

நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள் - 2022 - வாக்கு எண்ணிக்கை முடிவினை அறிய இணையதள முகவரி - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செய்தி வெளியீடு

செய்தி வெளியீடு : 54/2022

நாள்: 21.02.2022
நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள் - 2022 தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதள முகவரி https://tnsec.tn.nic.in வாயிலாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - வாக்கு எண்ணிக்கை முடிவினை 22.02.2022 செவ்வாய்கிழமை காலை 8.00 மணிக்கு மேல் தெரிந்து கொள்ளும் வகையில் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான 21 நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19.02.2022 மற்றும் மறுவாக்குப்பதிவு 5 வார்டுகளில், 7 வாக்குச்சாவடிகளில் 21.02.2022 ஆகிய நாட்களில் நடைபெற்றுள்ளதை தொடர்ந்து, பதிவான வாக்குகள், 268 வாக்கு எண்ணும் மையங்களில் 22.02.2022 அன்று காலை 8.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்க உள்ளது. தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்களால், வாக்கு எண்ணும் மையங்களில், அவ்வப்போது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், மாநில தேர்தல் ஆணைய இணையதள முகவரியான https://tnsec.tn.nic.in-ல் தேர்தல் முடிவுகள் குறித்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

(தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய ஆணைப்படி)

Total Pageviews

Search This Blog