Breaking

Showing posts with label BEO. Show all posts
Showing posts with label BEO. Show all posts

Friday, December 06, 2024

Monday, January 29, 2024

January 29, 2024

இடைநிலை ஆசிரியர் வட்டாரக் கல்வி அலுவலராக தேர்வு!!



இடைநிலை ஆசிரியர் வட்டாரக் கல்வி அலுவலராக தேர்வு!!

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றியத்தில் 2012-ல் TET இடைநிலை ஆசிரியராகப் பணியேற்று குடும்ப சூழ்நிலை காரணமாக சேலம் மாவட்டத்திற்கு மாறுதலில் சென்ற திரு. ரகுபதி அவர்கள் தற்போது கோவை மாவட்டம் பொள்ளாச்சி கல்வி மாவட்டம் வால்பாறை ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலராக தேர்வு பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Saturday, January 13, 2024

January 13, 2024

TRB - BEO விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அவகாசம்



TRB - BEO விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அவகாசம்

வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் , தங்களது விண்ணப்பங்களில் ஆன்லைன் மூலம் திருத்தங்களை மேற்கொள்ள அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது . மொத்தமுள்ள 33 பணியிடங்களுக்கு சுமார் 42,716 பேர் விண்ணப்பித்திருந்தனர் . இந்த நிலையில் , விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று ஜன .13 முதல் ஜன .17 வரை திருத்தம் செய்துகொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது .
January 13, 2024

BEO - Provisional Selected Candidates List TRB Published



2019-2020 முதல் 2021-2022 ஆம் ஆண்டுகளில் வட்டாரக் கல்வி அலுவலர் 33 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கை 6T GODT.1 / 2023 , நாள் .05.06.2023 அன்று வெளியிடப்பட்டது . விண்ணப்பதாரர்கள் 12.07.2023 வரை தேர்விற்கு Online மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Online மூலம் விண்ணப்பித்தவர்கள் 42,716 பேர் . அதனைத் தொடர்ந்து போட்டித் தேர்வு " ஒளியீடு மதிப்பெண் கணிப்பான் OMR ( Optical Mark Reader ) வழியில் 10.09.2023 அன்று தேர்வு நடத்தப்பட்டதில் 35,403 பேர் தேர்வு எழுதினார்கள் . விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் ( Edit Option ) மேற்கொள்ள அவகாசம் வழங்க கோரியதின் அடிப்படையில் , வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் 13.07.2023 முதல் 17.07.2023 வரை திருத்தம் செய்ய ( Edit Option ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டது. வட்டாரக் கல்வி அலுவலருக்கான ஒளியீடு மதிப்பெண் கணிப்பான் OMR ( Optical Mark Reader ) வழியில் நடத்திய போட்டித் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் 09.11.2023 அன்று வெளியிடப்பட்டன பணிநாடுநர்கள் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் / ஆவணங்கள் மற்றும் கூடுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் / ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு , அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பாடங்களுக்கு 1 : 1.25 என்ற விகிதாச்சாரப்படி 14.12.2023 ( 50 பணிநாடுநர்கள் ) மற்றும் 04.01.2024 அன்று ( ஒரு பணிநாடுநர் ) சான்றிதழ் சரிபார்ப்பிற்கு மொத்தம் 51 பணிநாடுனர்கள் அழைக்கப்பட்டனர்.

வட்டாரக் கல்வி அலுவலருக்கான பணித்தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிவடைந்து 33 இனச் சுழற்சிகளுக்கான பணிநாடுநர்களின் தற்காலிகத் தெரிவுப் பட்டியல் ( Provisional Selection List ) விவரத்தினை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 12.01.2024 அன்று வெளியிடப்பட்டது என்ற விவரம் செய்திக் குறிப்பின் வாயிலாக பணிநாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .

Wednesday, November 29, 2023

November 29, 2023

கார் கவிழ்ந்து விபத்து - வட்டார கல்வி அலுவலர் உயிரிழப்பு

கார் கவிழ்ந்து விபத்து - வட்டார கல்வி அலுவலர் உயிரிழப்பு

கார் கவிழ்ந்து விபத்து - வட்டார கல்வி அலுவலர் உயிரிழப்பு

*உளுந்தூர்பேட்டை அருகே நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் வட்டார கல்வி அதிகாரி பலி

* ஏ.குமாரமங்கலம் மாதிரி பள்ளி அருகே நிகழ்ந்த விபத்தில் வட்டார கல்வி அலுவலர் செலின்மேரி உயிரிழப்பு

* படுகாயமடைந்த மேலும் 3 ஆசிரியர்கள் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி

* செல்லின்மேரி தியாகதுருகம் BEO என தகவல்.

Wednesday, November 15, 2023

November 15, 2023

TRB - BEO Final Answer Key, Status of Objections, Part A& B Results - PDF



TRB - BEO Final Answer Key, Status of Objections, Part A& B Results - PDF

Direct Recruitment for the Post of Block Educational Officer in the Directorate of Elementary Education under Tamil Nadu Elementary Education Subordinate Service for the year 2019-2020 to 2021-2022

Direct Recruitment of Block Educational Officer in Elementary Education for the year 2019-2020 to 2020-2022.

PUBLICATION OF EXAMINATION RESULTS

Direct Recruitment of Block Educational Officer in Elementary Education for the year 2019-2020 to 2020-2022.

PUBLICATION OF EXAMINATION RESULTS

As per the Notification No.01/2023 dated 05.06.2023 and Corrigendum notification 01(A)/2023 dated 16.06.2023, the written Competitive Examination for the Direct Recruitment of 33 Block Educational Officer was held on 10.09.2023. A total No. of 42716 candidates applied for the written Examination and 35403 candidates appeared for the Written Examination. Tentative key answers were published on 3.10.2023 in TRB official website and candidates were advised to submit their representations if any on tentative key answers through Objection Tracker along with relevant authoritative proof up to 5.30 pm on 10.10.2023.

Only online Objections submitted by 40 Candidates were taken for scrutiny by Experts. In that, candidates who submitted the objections along with proof from the standard Text Books alone considered. Guides, correspondence course materials and non-standard reference books were not entertained by TRB. The representation in any other form including e-mail, courier, India-post or application in person and the Representations without evidences were not entertained. All such objections were summarily rejected.

194 objections in 40 questions are received. All the representations received within the stipulated time have been thoroughly examined from 17.10.2023 to 18.10.2023 by 33 Subject Experts deputed from various Governments Educational Institutions. After thorough scrutiny, revised and final answer key has been arrived by the Experts and based on that, OMR answer sheets of the candidates have been evaluated through computerized electronic process. The Subject Experts opinion is final, further representation on key will not be entertained by TRB. During the computerized scanning of OMR answer sheets of the candidates, it was found that quite a number of candidates committed mistakes in marking/ shading the Question Booklet code, which is essential for valuation of the OMR answer sheets. The candidates who have not marked Question Booklet code in their OMR answer sheets, their answer sheets could not be evaluated and hence rejected. For those who have written the serial code but not shaded or multiple shade, written serial code alone has been considered for valuation. Some of the candidates committed mistakes in marking/ shading their Roll number in the OMR answer sheet. Their answer sheets were also not considered for evaluation.

Now the marks obtained by all the candidates who have appeared for the written examination are hereby released. PWD candidates are exempted in appearing the Part-A.

As per notification para 8 Scheme of Examination, the candidates who have scored 40% of marks ( ie ) 20(out of 50) and above are the qualified candidates for Part-B. For all part-A qualified candidates and for all the PWD candidates, Part-B results are released herewith. The Final key for the 1 to 180 questions in the Question Booklet code “A” and the status of objections are also hereby released.

Utmost care has been taken in preparing the result and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect key answer would not confer any right of enforcement. Click here for Final Answer Key - 'A' series
CLICK HERE TO DOWNLOAD PDF

Click here to view Status of Objections
CLICK HERE TO DOWNLOAD PDF

Click here to view Part A Results
CLICK HERE TO DOWNLOAD PDF

Click here to view Part B Results
CLICK HERE TO DOWNLOAD PDF

List of candidates not considered for Evaluation
CLICK HERE TO DOWNLOAD PDF

Wednesday, October 04, 2023

October 04, 2023

வட்டாரக் கல்வி அலுவலர்கள் போட்டிதேர்வுக்கு விடைக்குறிப்பு வெளியீடு

வட்டாரக் கல்வி அலுவலர்கள் போட்டிதேர்வுக்கு விடைக்குறிப்பு வெளியீடு

சென்னை: வட்டாரக் கல்வி அலுவலர்களை தெரிவு செய்ய நடத்தப்பட்ட போட்டித் தேர்வின் விடைக்குறிப்பு இணைய தளத்தில் வெளியிடப்பட்டள்ளதால், அதன் மீது ஆட்சேபணை தெரிவிக்க விரும்புவோர் 10ம் தேதிக்குள் இணைய வழியில் தெரிவிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த மாதம் 10ம் தேதி, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்டது. அந்த தேர்வில் இடம் பெற்ற கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள்(A வகைக்குரியது) ஆசிரியர் தேர்வு வாரிய இணை தளமான www.trb.tn.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது ஆட்சேபணை தெரிவிக்க விரும்புவோர் அக்டோர் 3ம் தேதி முதல் 10ம் தேி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தள முகவரியில் மட்டுமே ஆதாரங்களுடன் பதிவு செய்ய வேண்டும். தபால் அல்லத பிறவழி முறையீடுகள் ஏற்கப்படமாட்டாது. அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களின் ஆதாரங்களை மட்டுமே அளிக்க வேண்டும். கையேடுகள்(Notes, Guides) ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தேர்வு எழுதிய நபர்கள் ‘A’ வகை கேள்வித்தாளுக்கு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்புக்கு இணைய வழியில் ஆட்சேபணை தெரிவிக்கும் போது உரிய வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி அதற்குரிய சான்றாவணங்களை இணைக்க வேண்டும். சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்கப்பட்ட மாட்டாது. மாற்றுத் திறன் படைத்த தேர்வர்கள் பகுதி B-ல் வினா எண் 31 முதல் 180 வரை உள்ள கேள்விகளுக்கு மட்டுமே ஆட்சபேணை தெரிவிக்கலாம். பகுதி A-ல் உள்ள 1 முதல் 31 வரையிலான கட்டாயத் தமிழ் மொழிப் பகுதியின் கேள்விகளுக்கு எந்தவித ஆட்சேபணையும் மாற்றுத் திறன் படைத்தோர் தெரிவிக்கக் கூடாது. மேலும், பாட வல்லுநர்களின் முடிவே இறுதியானது.

Tuesday, October 03, 2023

October 03, 2023

TRB - BEO EXAM - RELEASE OF TENTATIVE KEY AND OBJECTION TRACKER


BLOCK EDUCATIONAL OFFICER – 2023

          

RELEASE OF TENTATIVE KEY AND OBJECTION TRACKER

              As per Notification No. 01 / 2023 dated 05.06.2023, Teachers Recruitment Board conducted the Optical Mark Recognition (OMR) based Examination for Block Educational Officer for the year 2023 on 10.09.2023 (F.N).

              Now, the Board has released the tentative key answers with the question paper in PDF Format (“A”- series question paper). The candidates may submit their objection or representation regarding the published key. Candidates should submit their objection or representation only through online objection tracker with reference to the question number in “A” series question paper, available in the TRB website within the stipulated time i.e., from 03.10.2023 to 10.10.2023, till 05:30 p.m.

              The candidates are instructed to submit their objection or representation regarding the key against “A” type question paper only. (i.e., Question Number and options). For any objections, candidates should give proof from standard Text Books only. Guides / Notes will not be entertained by TRB. The representation in any other form, including e-mail, courier, India-post or application in person, will not be entertained. Representations without proper evidence will not be entertained and they will be summarily rejected. For each objection separate OTP will be generated. Candidates are not allowed to raise objection more than one time for the same question.

              The PWD candidates cannot challenge the questions 1 to 30, since they are exempted from the Compulsory Tamil Language eligibility test as per the norms mentioned in G.O.(Ms.) No.49, Human Resources (M) Department, dated 23.05.2022.

              For this, the candidates are instructed to follow the procedure as follows:

              Step 1 – Click the link provided in the website

              Step 2 – Login into the candidate Dashboard using registration id & password.

              Step 3 – Click the objection tracker icon. .

              Step 4 – Read the instructions carefully and accept the declaration.

              Step 5 – To view the Question paper ( “A” series question paper) – “Click here to view ‘A’ series Question Paper”.

              Step 6 – Read the instructions carefully before raising the objections.

              Step 7 – Raise the objections in the given field.

              Step 8 – Upload the supporting document and click Save and Submit.

              Step 9 – After Successful OTP verification, the system will move to the applicant OT landing page.

 

 

Date: 03.10.2023

 

Chairman

Click here for Tentative Key - 'A' series

Click here to view - 'A' series Question Paper

Click here for Objection Tracker

Press News

Monday, September 11, 2023

September 11, 2023

வட்டார கல்வி அலுவலர் பணி - ஒரு இடத்துக்கு 1,070 பேர் போட்டி - தேர்வு முடிவு - TRB தகவல்

வட்டார கல்வி அலுவலர் பணி - ஒரு இடத்துக்கு 1,070 பேர் போட்டி - தேர்வு முடிவு - TRB தகவல்

2019-20 மற்றும் 2021-22-ம் ஆண்டில் காலியாக உள்ள வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) கடந்த ஜூன் மாதம் 5-ந் தேதி வெளியிட்டது. மொத்தம் 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 42 ஆயிரத்து 712 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இவர்களுக்கான ஹால்டிக்கெட் கடந்த மாதம் (ஆகஸ்டு) 25-ந் தேதி வெளியிடப்பட்டது. இவர்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 131 மையங்களில் தேர்வு நடந்தது. எழுத்து தேர்வு

காலையில் தமிழ் தகுதித்தாள் தேர்வு 30 வினாக்கள் கொண்ட வினாத்தாளுடன் 50 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் குறைந்தது 40 சதவீதம் தகுதி மதிப்பெண்ணை தேர்வர்கள் எடுக்க வேண்டும். அதாவது, 20 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே, பிற்பகலில் நடத்தப்படும் தேர்வின் மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

அதன்படி, பிற்பகலில் பொது பாடத்துக்கான தேர்வு 150 கொள்குறி வகை கொண்ட வினாக்களுடன் 3 மணி நேரம் நடந்தது. இதில் பொதுத்தாளில், அதாவது, தமிழ், ஆங்கிலம், இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல், வரலாறு, புவியியல் என பட்டப்படிப்பு தரத்தில் 110 வினாக்களும், பொது அறிவு பிரிவில் 10 வினாக்களும், கல்வி முறை சார்ந்த 30 வினாக்களும் இடம்பெற்று இருந்தன. ஒரு இடத்துக்கு 1,070 பேர் போட்டி

150 மதிப்பெண்ணில் தகுதி மதிப்பெண்ணாக எஸ்.டி. பிரிவினர் 60-ம், எஸ்.சி. பிரிவினருக்கு 67.5-ம், இதர பிரிவினர்களுக்கு 75 மதிப்பெண்ணும் எடுக்க வேண்டும்.

42 ஆயிரத்து 712 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், இந்த தேர்வை சுமார் 35 ஆயிரத்து 400 பேர் எழுதியதாக சொல்லப்படுகிறது. இதன்படி பார்க்கையில் ஒரு இடத்துக்கு கிட்டதட்ட 1,070 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்த பணியிடங்களுக்கான தேர்வு முடிவை விரைந்து வெளியிடுவதற்கு ஏதுவாக ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Sunday, September 03, 2023

September 03, 2023

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு

வட்டார கல்வி அலுவலர் B.E.O. தேர்வு எழுத ஏற்பாடு

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஜூனில் 33 வட்டார கல்வி அலுவலர்(பி.இ.ஓ.,) பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பி.எட்., முடித்த பட்டதாரிகள் ஜூலை 5 வரை தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. பி.இ.ஓ., பணிக்கான தேர்வு செப்.,10ல் நடக்கிறது. தேனியில் நாடார் சரஸ்வதி ஆண்கள் பள்ளியில் 381 பேர், நாடார் சரஸ்வதி பெண்கள் பள்ளியில் 400 என மொத்தம் 781 பேர் தேர்வு எழுத உள்ளனர்

*வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு.

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 



தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களுக்கு, போட்டித் தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்தத் தேர்வுகளை டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது.  முன்னதாக ஆசிரியர் தேர்வு வாரியம்  வெளியிட்ட 2023-ஆம் ஆண்டுக்கான ஆண்டு அட்டவணையில், தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும், அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கும் 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கை ஜனவரி மாதம்  வெளியிடப்படும்;

வட்டாரக் கல்வி அலுவலர்கள் 23 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கை பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.

மேலும் 6,553 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் அறிக்கை மார்ச் மாதமும் வெளியிடப்படும்.

பட்டதாரி ஆசிரியர்கள்  3,587 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கை ஏப்ரல் மாதமும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் 493 விரிவுரையாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கை மே மாதமும் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது.

*ஜூன் மாதம் வெளியான அறிவிப்பு.*

மே மாதம் முடிந்து ஜூன் தொடங்கிய பிறகும், எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், ஆசிரியர் தேர்வு வாரியம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இதைத் தொடர்ந்து,  தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணிக்கான நேரடித் தேர்வுக்கு ஜூன் 5ஆம் தேதி முதல் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. செப்டம்பர் 10ஆம் தேதி இதற்கான தேர்வு நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து தேர்வர்கள்  https://www.trb.tn.gov.in/ என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து, வட்டார கல்வி அலுவலர் பணிக்கான  தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

நேரடி நியமனமாக உள்ள இந்தத் தேர்வுக்கு தேர்வர்கள் ஜூலை ஜூலை 12ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர்.

இந்த நிலையில், வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
*42,712 தேர்வர்கள்‌ விண்ணப்பம்.*

இதுகுறித்து ஆசிரியர்‌ தேர்வு வாரியம் கூறும்போது, ‘’கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, 2019 - 2020 முதல் 2021 - 2022 வரையிலான ஆண்டிற்கான வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ காலிப் பணியிடங்களுக்கான பணித்தெரிவு தொடர்பான தேர்வு வரும் 10.09.2023 அன்று நடத்தப்பட உள்ளது. இத்தேர்வினை எழுத 42,712 தேர்வர்கள்‌ விண்ணப்பித்துள்ளனர்‌.

விண்ணப்பத்த தேர்வர்களுக்கு நுழைவுச்‌ சீட்டு (ஹால்டிக்கெட்) ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளமான  https://www.trb.tn.gov.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் User id மற்றும் Password ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச்‌ சீட்டினை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

தேர்வுக்‌ கூட நுழைவுச்‌ சீட்டினை பதிவிறக்கம்‌ செய்வதில்‌ ஏற்படும்‌ கடைசி நேர பதற்றத்தைத்‌ தவிர்க்கும்‌ பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, தேர்வர்கள்‌ தேர்விற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம்‌ செய்துகொள்ள வேண்டும்’’ என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தேர்வர்கள்  https://trb1.ucanapply.com/login  என்ற இணைப்பை க்ளிக் செய்து, ஹால் டிக்கெட்டைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Friday, August 25, 2023

August 25, 2023

TRB - BEO - BLOCK EDUCATIONAL OFFICER - Hosting of Hall ticket - Press News - 25-08-2023



TRB - BEO - BLOCK EDUCATIONAL OFFICER - Hosting of Hall ticket - Press News - 25-08-2023

Direct Recruitment for the post of Block Educational Officer in the Directorate of Elementary Education for the year 2019 – 2020 to 2021 – 2022

HALL TICKET

Teachers Recruitment Board issued Notification for the Direct Recruitment of Block Educational Officer in the Directorate of Elementary Education for the year - 2019 – 2020 to 2021 – 2022 vide Notification No. 01/2023, dated 05.06.2023. In this connection, TRB now releases the Hall Tickets for those candidates who applied for the said examination. It is instructed that candidates shall download the Hall ticket and adhere to the instructions notified there on. The candidate must bring the Hall Ticket to the Examination Centre. No candidate will be allowed entry without the Hall Ticket. Date for OMR Based Examination: 10.09.2023

The candidates are requested to use their User ID and Password for downloading their Admit Card through the website https://www.trb.tn.gov.in/ from 25.08.2023 onwards. Change of request of centre will not be entertained.

Disclaimer: It is informed to all applicant that the decision of the Board, to issue Admit Card to eligible applicants is purely provisional and does not confer any acceptance of their claim, made in the application. The Board reserves its right to reject the candidature at any stage of the recruitment.

Note: (i) The candidates are instructed in their own interest to check the Examinations Schedule and the venue to avoid any last-minute disappointment / in convenience. (ii) The Board reserves the right to postpone / re-schedule /cancel the Examination. ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-06.

பத்திரிகைச் செய்தி

ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.01/2023, நாள் 05.06.2023 ன்படி 2019 - 2020 to 2021 - 2022 ஆண்டிற்கான வட்டாரக் கல்வி அலுவலர் காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவு தொடர்பான தேர்வு எதிர்வரும் 10.09.2023 அன்று நடத்தப்பட உள்ளது.

இத்தேர்வினை எழுத 42,712 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பத்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (https://www.trb.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 25.08.2023 முதல் தேர்வர்கள் அவர்களது User id மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேர பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீடு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வார் காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD Hall ticket & Press News - 25-08-2023 PDF

Total Pageviews

Search This Blog