Breaking

Showing posts with label festival news. Show all posts
Showing posts with label festival news. Show all posts

Friday, November 10, 2023

November 10, 2023

தீபாவளி இனிப்புகள் & ஸ்நாக்ஸ் ரெசிபிகள் - Diwali Recipes in Tamil - Delicious Collection of Traditional Diwali Recipes - PDF

தீபாவளி இனிப்புகள் & ஸ்நாக்ஸ் ரெசிபிகள் - Diwali Recipes in Tamil - Delicious Collection of Traditional Diwali Recipes - PDF


Diwali Recipes in Tamil - Delicious Collection of Traditional Diwali Recipes - PDF

Diwali Recipes

Delicious Collection of Traditional Diwali Recipes from Penmai’s Kitchen Queens

Our sincere thanks to all the members who had contributed their recipes in Penmai.

No part of this book may be reproduced or transmitted in any form, all rights reserved by the respective contributors. Though the contents provided here are with good faith and free from errors, we do not warrant its accuracy or completeness.

CLICK HERE TO DOWNLOAD Diwali Recipes in Tamil PDF

Friday, September 22, 2023

September 22, 2023

மிலாது நபி: அரசு விடுமுறை மாற்றம்!



மிலாது நபி: அரசு விடுமுறை மாற்றம்!

புதுச்சேரியில் மிலாது நபியையொட்டி அரசு விடுமுறை செப்.27-க்கு பதில் செப்.28-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

மிலாது நபி புதுச்சேரியில் செப்.28-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, அன்றைய தினமே அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே செப்.27-ல் அரசு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது செப்.28-க்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Monday, August 14, 2023

August 14, 2023

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, பள்ளி மாணவ - மாணவிகளுக்கு இன்று இனிப்பு பொங்கல்!!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, பள்ளி மாணவ - மாணவிகளுக்கு இன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படுகிறது!

கலைஞர் பிறந்த தினத்தையொட்டி ஜுன் 3ல் பொங்கல் வழங்க அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. அன்று கோடை விடுமுறை என்பதால் இன்று பொங்கல் வழங்கப்படுகிறது.

Monday, November 14, 2022

November 14, 2022

அரசு பள்ளிகளில் நவ.23-ல் கலைத் திருவிழா: மாநில அளவில் வெற்றி பெறுவோர் வெளிநாடு அழைத்து செல்லப்படுவர்

அரசு பள்ளிகளில் நவ.23-ல் கலைத் திருவிழா: மாநில அளவில் வெற்றி பெறுவோர் வெளிநாடு அழைத்து செல்லப்படுவர்

அரசு பள்ளி மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வருவதற்காக வரும் 23-ம் தேதி முதல் கலைத் திருவிழா நடத்தப்படுகிறது. அடுத்தாண்டு ஜனவரியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குனர் இரா.சுதன் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: "மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொண்டு வர அரசு பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்படும்" என்று சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தார்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொண்டு வர பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் மூலம் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகளும், 6 முதல் 12 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.

கலை, பண்பாட்டை ஒருங்கிணைத்தல்: கலை என்பது குழந்தைகள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும், சாத்தியமானவற்றை ஆராய்ந்து கற்றுக் கொள்வதற்குமான இடம் ஆகும். கலைச் செயல்பாடுகள், குழந்தைகளின் பிற கற்றல் செயல்முறைகளில் மிகவும் சுறுசுறுப்புடனும் ஆழமாகவும் ஈடுபட உதவுகிறது. இவை குழந்தைகளின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுகிறது. மேலும் அவர்களுக்கு பிடித்த கலையை கற்றுக் கொள்வதால், அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்துகிறது. இதனை முன்னிறுத்தி இவ்வாண்டு 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் கலைத்திருவிழா நடத்தப்பட உள்ளது.

இக்கலைத் திருவிழா பல்வேறுகலை வடிவங்களுக்கு ஊக்கமளிப்பதற்கும், உள்ளூர் கலைஞர்கள் பங்கேற்பதற்கும் வாய்ப்புகளை உருவாக்கும். தமிழகத்தின் பாரம்பரிய கலை வடிவங்கள் மற்றும் பண்பாடு குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள இச்செயல்பாடுகள் வழிவகுக்கும்.

கலைத் திருவிழா: முதல் பிரிவு 6 முதல் 8-ம் வகுப்பு வரை, இரண்டாவது பிரிவு 9 மற்றும் 10-ம் வகுப்பு, மூன்றாவது பிரிவு 11 மற்றும் 12-ம் வகுப்பு பள்ளி அளவில் போட்டிகள் நடைபெறும். இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களை வட்டார அளவிலும், வட்டார அளவில் வெற்றி பெறும் மாணவர்களை மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளிலும் பங்கேற்கச் செய்ய வேண்டும். மாநில அளவிலான கலைத் திருவிழாவின் இறுதி போட்டிகள் வரும் ஜனவரி மாதம் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் மற்றும் ‘கலையரசன்’, ‘கலையரசி’ என்ற விருதுகளும் அரசு சார்பில் வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தர வரிசையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.

போட்டி நடைபெறும் நாட்கள்: கலைத் திருவிழா போட்டிகள் பள்ளி அளவில் நவ. 23 முதல் 28-ம் தேதிக்குள்ளும், வட்டார அளவில் நவ.29 முதல் டிச.5 தேதிக்குள்ளும், மாவட்ட அளவில் டிச. 6 முதல் டிச.10 தேதிக்குள்ளும், மாநில அளவில் 2023-ம் ஆண்டு ஜன.3 முதல் 9-ம் தேதிக்குள்ளும் நடத்தி முடிக்க வேண்டும். அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் கலைத்திருவிழா போட்டிகளில் பெருமளவு மாணவர்களின் பங்கேற்பினை தலைமை ஆசிரியர்களும், ஆய்வு அலுவலர்களும் உறுதிப்படுத்த வேண்டும். பள்ளியின் EMIS செயலி வழியாக ஒவ்வொரு போட்டியில் பங்கு பெறும் மாணவரின் விவரங்களை போட்டி வாரியாக பள்ளி அளவில் பதிவு செய்ய வேண்டும். போட்டிகள் முடிந்த பிறகு தேர்வான, வெற்றி பெற்ற மாணவ, மாணவியரின் பெயரை பதிவு செய்ய வேண்டும்.

இந்த மாணவரின் பெயர் அடுத்த நிலைப் போட்டிக்கு வட்டார அளவில் பார்வையிட இயலும், வட்டார அளவிலும் தேர்வான, வெற்றி பெற்ற மாணவ மாணவியரின் பெயரை இவ்வாறு அந்த நிலையில் உள்ள பொறுப்பு அலுவலர் EMIS-ல் உள்ளீடு செய்ய வேண்டும் . மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு போட்டி வாரியாக தேர்வான மாணவ, மாணவியரின் பெயரும் முதன்மை கல்வி அலுவலரின் EMIS Login வழியாக உள்ளீடு செய்யப்பட வேண்டும். இந்த மாணவரின் பெயர்களே மாநில அளவிலான போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

Tuesday, October 18, 2022

October 18, 2022

தீபாவளிக்கு மறுநாள் 25 ந் தேதி விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலனை

தீபாவளிக்கு மறுநாள் 25 ந் தேதி விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலனை

தீபாவளி பண்டிகை 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அரசு பஸ்கள், ரெயில்கள், ஆம்னி பஸ்கள் மற்றும் சொந்த வாகனங்களில் சென்னையில் இருந்து சுமார் 10 லட்சம் பேர் பயணம் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளிக்கு முந்தைய சனி, ஞாயிறு (22, 23-ந்தேதி) விடுமுறை நாட்களாகும். திங்கட்கிழமை தீபாவளி வருவதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடும் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தீபாவளிக்கு சென்றவர்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக 25, 26-ந்தேதிகளில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றிற்கு முன்பதிவும் நடந்து வருகிறது.

தீபாவளிக்கு மறுநாள் 25-ந்தேதி பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி அரசு துறைகளும் செயல்படுகிறது. அதனால் விடுமுறையில் சென்றவர்கள் உடனே ஊர் திரும்ப வேண்டிய நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்படக்கூடும். அதனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு மறுநாள் 25-ந்தேதி அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு அரசு சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

அதன் அடிப்படையில் 25-ந்தேதி விடுமுறை விடலாமா? என்று அரசு பரிசீலனை செய்கிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நெரிசல் இல்லாமல் பயணம் தொடரவும் ஊர் திரும்பவும் 25-ந் தேதி விடுமுறை விடுவதற்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 2 ஆண்டுகள் தீபாவளிக்கு முந்தைய நாட்கள் விடுமுறை விடப்பட்டு தொடர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டதால் சொந்த ஊரில் இருந்து திரும்ப வசதியாக இருந்தது.

அதுபோல இந்த ஆண்டும் விடுமுறை விடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த விடுமுறையை நவம்பர் 12-ந்தேதி இரண்டாவது சனிக்கிழமை அன்று வேலைநாளாக அறிவிக்கலாம் எனவும் அரசு ஆலோசித்து வருகிறது.

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வரும் என்று அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Saturday, October 15, 2022

October 15, 2022

விநாயகர் சதுர்த்திக்கான அரசு விடுமுறை மாற்றம்?

விநாயகர் சதுர்த்திக்கான அரசு விடுமுறை மாற்றம்?

தமிழகத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் வாக்கிய பஞ்சாங்கத்தில், 2023ம் ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விழா செப்., 18 ஆக உள்ள நிலையில், அதற்கு ஒரு நாள் முன், அரசு விடுமுறை அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசு விடுமுறையை மாற்ற வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.

அடுத்த ஆண்டிற்கான அரசு விடுமுறை தினம், சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கான நாளை, ஒரு நாள் முன்னதாக விடுமுறை தினமாக அறிவித்துள்ளதாக, சர்ச்சை எழுந்துள்ளது.

இதுகுறித்து, பஞ்சாங்க கணிப்பாளர்கள் கூறியதாவது: வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, 2023 செப்., 18ல் விநாயகர் சதுர்த்தி வருகிறது. தமிழகத்தில் இந்த பஞ்சாங்கத்தின் படிதான் ஒவ்வொரு விழாக்களும் கொண்டாடப்பட்டு வருகின்றன. திருக்கணித பஞ்சாங்கத்தில், செப்., 19ல்தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனால், தமிழக அரசு, எதன் அடிப்படையில், 2023ம் ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான விடுமுறையை, செப்., 17ல் அறிவித்தது என்று தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு தனி கவனம் செலுத்தி, விநாயகர் சதுர்த்திக்கான அரசு விடுமுறையை செப்., 18க்கு மாற்றி வெளியிட வேண்டும் என, பல்வேறு தரப்பினர் கோரியுள்ளனர்.

Tuesday, September 27, 2022

September 27, 2022

தமிழகத்தில் மீலாதுன் நபி கொண்டாடப்படும் தேதி தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு - Date of Nabi Miladun celebration in Tamilnadu Tamilnadu Chief Gazi announced

தமிழகத்தில் மீலாதுன் நபி 09.10.2022 ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு - Date of Nabi Miladun celebration in Tamilnadu Tamilnadu Chief Gazi announced

Total Pageviews

Search This Blog