Breaking

Showing posts with label Education Ministers Conference. Show all posts
Showing posts with label Education Ministers Conference. Show all posts

Wednesday, December 14, 2022

December 14, 2022

தமிழ்நாடு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்



தமிழ்நாடு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்

தமிழக அமைச்சர்களின் இலக்குகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் தமிழக அரசின் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 11 தமிழ்நாடு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. சிலருக்குக் கூடுதல் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

* அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு;

* அமைச்சர் பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு

* வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு

* பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள் ஒதுக்கீடு

* கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக நியமனம்

* சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கீடு

* விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்யானாதன், சுற்றுசூழல் துறை தொடர்ந்து கவனிப்பார்

* அமைச்சர் சேகர் பாபுவிடம் கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்துறை ஒதுக்கீடு

அமைச்சர் எஸ்.முத்துசாமிக்கு வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு

அமைச்சர் ஆர். காந்திக்கு கைத்தறி, ஜவுளித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Thursday, July 14, 2022

July 14, 2022

நாளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் இரண்டு நாள் கல்வி அதிகாரிகள் கூட்டம்

நாளை சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் இரண்டு நாள் கல்வி அதிகாரிகள் கூட்டம்

முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம், சென்னையில் நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது.

தமிழக பள்ளிக் கல்வி துறை சார்பில், முதன்மை கல்வி அலுவலர்களான சி.இ.ஓ.,க்கள் பங்கேற்கும் கூட்டம், மாதம்தோறும் நடத்தப்படும். மூன்று மாதங்களாக, பொது தேர்வு மற்றும் அதற்கான பணிகள் இருந்ததால், இந்த கூட்டம் நடக்கவில்லை.புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் துவங்க உள்ள நிலையில், சி.இ.ஓ.,க்களுக்கான ஆலோசனை கூட்டம், சென்னையில் நாளை முதல் இரண்டு நாட்கள் நடக்கிறது.

பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ், கமிஷனர் நந்தகுமார் மற்றும் இயக்குநர்கள் பங்கேற்க உள்ளனர்.கடந்த, 2021- - 22ம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை பெருமளவு அதிகரித்தது. ஆனால், புதிய கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளை விட, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து, கூட்டத்தில் பேசப்பட உள்ளது.மேலும், ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Wednesday, June 01, 2022

June 01, 2022

கல்வி அமைச்சர்கள் மாநாடு: தமிழக அரசு புறக்கணிப்பு

The Tamil Nadu government has boycotted the All State Education Ministers' Conference starting today in Gujarat.

Union Education Minister Dharmendra Pradhan, Internet Minister Subhash Sarkar, Education Ministers and senior officials from all states and Union Territories will attend the conference in Gujarat today and tomorrow.

The conference will discuss the implementation of the National Education Policy and the improvement of school infrastructure.

In this situation, the Tamil Nadu government has decided not to participate in the conference despite the invitation. Following this, Higher Education Minister Ponmudi and School Education Minister Anbil Mahesh did not attend the conference.
கல்வி அமைச்சர்கள் மாநாடு

குஜராத்தில் இன்று தொடங்கும் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்துள்ளது.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணையமைச்சர் சுபாஷ் சர்கார், அனைத்து மாநில மற்றும் யுனியன் பிரதேசங்களின், கல்வி அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு இன்றும், நாளையும் குஜராத்தில் நடைபெறவுள்ளது.

தமிழக அரசு புறக்கணிப்பு

இந்த மாநாட்டில் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவது, பள்ளி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கவுள்ளனர்.

இந்நிலையில், மாநாட்டிற்கு அழைப்பு வந்தபோதும் பங்கேற்க போவதில்லை என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.

Total Pageviews

Search This Blog