recharge plans
January 23, 2025
Showing posts with label airtel. Show all posts

Thursday, January 23, 2025
Sunday, March 19, 2023
airtel
March 19, 2023
அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்கும் ஏர்டெல்: இந்தச் சலுகையை பயனர்கள் பெறுவது எப்படி?
Airtel Offers Unlimited 5G Data: How Users Can Avail This Offer?
அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்கும் ஏர்டெல்: இந்தச் சலுகையை பயனர்கள் பெறுவது எப்படி?
சென்னை: இந்தியாவில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்கி வருகிறது ஏர்டெல் டெலிகாம் நிறுவனம். ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் என அனைத்து பயனர்களும் இந்த சலுகையை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் இந்த அறிமுக சலுகையை எப்படி பெறுவது என்பது குறித்து பார்ப்போம்.
கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ டெலிகாம் நிறுவனங்கள் குறிப்பிட்ட சில நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளன. இரண்டு நிறுவனங்களும் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தங்களது 5ஜி டேட்டா சேவையை விரிவு செய்து வருகின்றன. வரும் 2024-ல் நாடு முழுவதும் ஏர்டெல் 5ஜி சேவையை வழங்கும் எனத் தெரிகிறது.
இந்திய நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக உள்ள ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் முறையில் பயனர்களுக்கு சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், 5ஜி சேவையின் அறிமுக சலுகையாக பயனர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா பயன்பாட்டை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ஜி பிளஸ் நெட்வொர்க் சேவை கிடைக்க பெறும் அனைத்துப் பகுதிகளிலும் பயனர்கள் இந்த அறிமுக சலுகையை தடையின்றி பெற முடியும் என தெரிகிறது. ரூ.239 அல்லது அதற்கும் மேலான கட்டணத்தில் ரீசார்ஜ் செய்த ப்ரீபெய்ட் பயனர்கள் இந்த அறிமுக சலுகையை பெறலாம் எனத் தெரிகிறது. சலுகையை பயனர்கள் பெறுவது எப்படி? - 5ஜி இணைப்பு வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் தங்கள் போனில் ‘ஏர்டெல் தேங்ஸ்’ செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதில் ‘Claim Unlimited 5G data’ தேர்வு செய்து அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெறலாம். பயனர்கள் ரீசார்ஜ் செய்துள்ள பிரதான பேக்கின் (Pack) பயன்பாடு முடிந்ததும் அன்லிமிடெட் டேட்டாவை பெறலாம்.
உதாரணமாக, பயனர்கள் ரூ.239 ரீசார்ஜ் செய்திருந்தால். அதன் மூலம் அன்லிமிடெட் அழைப்புகள், தினந்தோறும் 1.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். அந்த 1.5 ஜிபி டேட்டா பயன்படுத்தி முடித்த பின்னர் அன்லிமிடெட் 5ஜி டேட்டா பயனர்கள் பெறலாம். இதற்காக பயனர்கள் சிம் கார்டை மாற்ற வேண்டிய அவசியமில்லை என தெரிகிறது. ஜியோ நிறுவனம் ஏற்கனவே தங்கள் பயனர்களுக்கு அறிமுக சலுகையாக அன்லிமிடெட் 5ஜி சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது

Wednesday, July 06, 2022
telecom
July 06, 2022
குறைந்த விலையில் ஒரு மாத வேலிடிட்டி உடன் கூடிய 4 புதிய ரிசார்ஜ் - ஏர்டெல் அறிமுகம்
ரூ.140-க்கும் குறைவாகவே இந்த புது ரீசார்ஜ் பேக்குகளின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் ஒரு மாத வேலிடிட்டி உடன் கூடிய ரீசார்ஜ் பேக்குகள் ஆகும். ஏர்டெல் நிறுவனம் தற்போது புதிதாக நான்கு ரீசார்ஜ் பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது. இதில் இரண்டு பேக்குகள் ஸ்மார்ட் ரீசார்ஜ் என்கிற பிரிவின் கீழும், மற்ற இரண்டும் ரேட் கட்டர் பிரிவின் கீழும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ரூ.140-க்கும் குறைவாகவே இந்த புது ரீசார்ஜ் பேக்குகளின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி ரூ.109 மற்றும் ரூ.111 மதிப்புள்ள புதிய பேக்குகள் 30 நாட்கள் வேலிடிட்டி உடன் வந்துள்ளது.
இந்த பேக்குகள் மூலம் ரூ.99-க்கான டாக்டைம், 200 எம்.பி டேட்டா ஆகியவை வழங்கப்படுகின்றன. அழைப்புகளை மேற்கொள்ள ஒரு விநாடிக்கு ரூ.2.5 பைசா வசூலிக்கப்படும் என்றும் மெசேஜ் அனுப்பினால் ரூ.1 வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏர்டெல்லின் புதிய ரூ.128 பிளான் ஒரு மாத வேலிடிட்டி உடன் வருகிறது. இதில் அழைப்புகளை மேற்கொள்ள ஒரு ஒரு விநாடிக்கு ரூ.2.5 பைசா வசூலிக்கப்படும் வீடியோ கால் செய்ய ஒரு விநாடிக்கு ரூ.5 வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இதன் ரூ.131 பேக்கிலும் ஒரு மாத வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
இதில் உள்ளூர் அழைப்புகளை மேற்கொள்ள விநாடிக்கு ரூ.2.5 பைசாவும், தேசிய வீடியோ கால்களை மேற்கொள்ள ரூ.1-ம் எஸ்.எம்.எஸ் அனுப்ப ரூ.1.5ம் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது