Breaking

Showing posts with label Tamil Nadu Teachers Association. Show all posts
Showing posts with label Tamil Nadu Teachers Association. Show all posts

Friday, January 12, 2024

January 12, 2024

6992 அரசு நடுநிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகம் +பயிற்றுநர்கள்! தமிழக அரசுக்கு கணினி ஆசிரியர்கள் சங்கம் நன்றி



Computer Lab + Instructors in 6992 Govt Middle Schools! Computer Teachers Association thanks Tamil Nadu Govt - 6992 அரசு நடுநிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகம் +பயிற்றுநர்கள்! தமிழக அரசுக்கு கணினி ஆசிரியர்கள் சங்கம் நன்றி

6992 அரசு நடுநிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகம் அமைத்து அதற்கான பயிற்றுநர்களையும் நியமிக்க உள்ள தமிழக அரசுக்கு கணினி ஆசிரியர்கள் சார்பாக நன்றி தெரிவித்துள்ளார்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் மாநிலப் பொதுச் செயலாளர் குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முத்தமிழறிஞர் கலைஞரின் கனவுத்திட்டமான பள்ளிக் கல்வித் துறையில் ஆறாம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை சமச்சீர் கல்வியில் கணினி பாடத்தை அரசுப் பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் கணினி அறிவு பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு 2011 ஆம் ஆண்டு கலைத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் கணினி கல்வி கிடைக்கச் செய்தார். 2006 -2011ஆம் ஆண்டு 6 முதல் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை அறிமுகம் செய்து, அதற்கான தனிப் புத்தகங்களும் அச்சிடப்பட்டன. ஆனால், அதன்பின் வந்த அதிமுக ஆட்சியில், கணினி அறிவியல் பாடத்தை கைவிட்டு, அறிவியல் புத்தகத்திலேயே கணினி அறிவியலுக்கு 3 பக்கங்கள் சேர்க்கப்பட்டன. தற்போது வரை பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டுமே கணினி அறிவியல் விருப்ப பாடமாக உள்ளது.

பத்து ஆண்டுகள் போராடியும் பயனற்று போனது. 2016 ஆம் ஆண்டு பள்ளிக் கல்வி இயக்கத்தில் போராட்டம் செய்த பொழுது மாண்புமிகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் "கணினி ஆசிரியர்களை போராட விடாதீர்கள்" அவர்களுக்கான பணி வாய்ப்பை வழங்குங்கள் என்று பத்திரிக்கை வாயிலாக அறிக்கை வெளியிட்டார்.

கடந்த மாதம் கணினி அறிவியல் பாடத்தை அமல்படுத்தக் கோரி, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் மகத்துவ திட்டமான , ஆசிரியர் மனசு திட்டத்தின் வழியே பணிநாடும் 60 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை மனு வைத்தோம். தற்போது தொடக்கக் கல்வி இணை இயக்குனர் 6992 அரசு நடுநிலைப்பள்ளி தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் வாயிலாக கணினி ஆய்வகங்கள் அமைத்து அதற்கான கணினி பயிற்றுநர்களையும் நியமிப்பதாக உள்ளனர். தமிழகத்தில் கணினி அறிவியல் பாடத்தில் பி.எட் பட்டம் பெற்று 60 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் உள்ளனர். இந்த அறிவிப்பின் வாயிலாக நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அரசுப் பள்ளியில் பணிபுரிய வாய்ப்பும் கிடைக்கப் பெற்றுள்ளது. கணினி அறிவியல் பாடத்தை அமல்படுத்தக் கோரி, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் மகத்துவ திட்டமான , ஆசிரியர் மனசு திட்டத்தின் வழியே பணிநாடும் 60 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை மனு வைத்தோம். தற்போது தொடக்கக் கல்வி இணை இயக்குனர் 6992 அரசு நடுநிலைப்பள்ளி தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் வாயிலாக கணினி ஆய்வகங்கள் அமைத்து அதற்கான கணினி பயிற்றுநர்களையும் நியமிப்பதாக உள்ளனர். தமிழகத்தில் கணினி அறிவியல் பாடத்தில் பி.எட் பட்டம் பெற்று 60 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் உள்ளனர். இந்த அறிவிப்பின் வாயிலாக நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அரசுப் பள்ளியில் பணிபுரிய வாய்ப்பும் கிடைக்கப் பெற்றுள்ளது.

திரு வெ. குமரேசன் மாநில பொதுச் செயலாளர்,

தொடர்பு எண்: 8248922685,

9626545446.

தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம்.655/2014.

Saturday, March 25, 2023

March 25, 2023

தலைமை ஆசிரியர், ஆசிரியரை தாக்கியவர் குண்டர் சட்டத்தில் கைது: நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு நன்றி



தலைமை ஆசிரியர், ஆசிரியரை தாக்கியவர் குண்டர் சட்டத்தில் கைது: நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு நன்றி

திருவள்ளூர்: தூத்துக்குடி மாவட்ட ம், எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் இந்து துவக்க பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பாரத்தை அடித்து, உதைத்த அப்பள்ளியில் படிக்கும் மாணவன் பிரகதீஸின் தந்தை சிவலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட எஸ்பி. பாலாஜி சரவணன் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார் என்ற செய்தி மிகவும் பாராட்டிற்கு உரியது, வரவேற்க தக்கது. மாணவர்கள், ஆசிரியர்களின் நலனில் அக்கறை கொண்டு இந்த நடவடிக்கை எடுத்திருப்பது வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவம் இனி நடக்காது என்பதற்கான முன்னோட்டமாக கருதுகிறோம். நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவந்து  ஆசிரியர் மாணவர் நலன்காக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tuesday, March 21, 2023

March 21, 2023

TN BUDGET - அரசு ஊழியர் சங்கங்களின் அதிருப்தி அறிக்கை!

TN BUDGET - அரசு ஊழியர் சங்கங்களின் அதிருப்தி அறிக்கை!

, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகள் தொடர்பாக, எந்தவித அறிவிப்பும் பட்ஜெட்டில் வெளியிடப்படாததற்கு, பல்வேறு சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

தலைமைச் செயலக சங்கத் தலைவர் வெங்கடேசன், செயலர் ஹரிசங்கர் அறிக்கை:

பழைய ஓய்வூதிய திட்டம் அமல், காலியாக உள்ள, 3.50 லட்சம் பணியிடங்களை நிரப்புதல் போன்றவை குறித்து, பட்ஜெட்டில் எந்தவித அறிவிப்பும் வெளியிடாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தலைமைச் செயலகத்தில் இட நெருக்கடியை களைவதற்கான வழிமுறைகள் குறித்து, எந்த நிலைப்பாடும் வெளியிடப்படவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாழ்வாதார தேர்தல் வாக்குறுதிகள் குறித்து, பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத் தலைவர் குமார்:

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்து உள்ளது. தற்காலிக பணியாளர்களாக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுவோருக்கு, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குவது குறித்த அறிவிப்பும் இல்லை.

தி.மு.க., அரசின் மூன்றாவது பட்ஜெட், அரசு பணியாளர்களை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் பேட்ரிக் ரெய்மாண்ட்:

அனைத்து துறை பள்ளிகள் ஒருங்கிணைப்பு வரவேற்கத்தக்கது.

தி.மு.க., தேர்தல் அறிக்கை வாக்குறுதியான, புதிய பென்ஷன் திட்டம் ரத்து, ஊதிய முரண்பாடை களைதல், ஊக்க ஊதியம், அகவிலைப்படி நிலுவைத்தொகை மற்றும் ஊதியக்குழுவின், 21 மாத நிலுவை தொகை வழங்குதல் போன்ற நீண்ட கால கோரிக்கைகள் குறித்து, எந்த அறிவிப்பும் இல்லை.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான முக்கிய அம்சங்கள், பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.

Friday, January 20, 2023

January 20, 2023

தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் Press Release - நாள்: 20.01.2023

தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் Press Release - நாள்: 20.01.2023

மறிப்புமிகு பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களுக்கு

இனிய வணக்கங்கள்,

1. இன்றைய நாளில், பள்ளிக்வய்வித்துறையில், சுமார் ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதைப்போன்றே முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் என பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

2 எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டில் ஏராளமான மானாவச் செல்வங்கள் அரகப் பள்ளிகளில் வந்து சேர்ந்துள்ளனர்.

3. நிலைமை இவ்வாறு இருக்கையில், கல்வி ஆண்டின் இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர்களை அக்கல்வி ஆண்டு முடியும்வரை அதாவது மே மாதம் வரை, பணியில் நீட்டிக்கலாம் என்று நடைமுறையில் இருந்து வரும் ஆணையை நடைமுறைப்படுத்தாபல் உதாசீனப்படுத்தி ஏழை எளிய மாணவர்களின் கல்வி பெறும் வாய்ப்பை பறிமுதல் செய்வது நியாயம்தானா? நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

4. ஆகவே அருள்கூர்ந்து இப்பிரச்சனையில் தாங்கள் உடனடி கவனம் செலுத்தி, கல்வி ஆண்டின் இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர்கள், தொடர்ந்து அக்கல்வி ஆண்டு முடியும் வரை மாணவர்களின் நலன் கருதி, பணியாற்றலாம் என்ற ஆணையை உடனடியாக பிறப்பிக்குமாறு தங்களை மிகவும் கனிவுடன் வேண்டுகிறோம்.

Saturday, December 31, 2022

December 31, 2022

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் ஆதரவு

நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்

13 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் தராமல் இழுத்தடித்து வரும் அரசு அதனை மீட்டெடுப்பதற்காக தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வரும் SSTA-இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம். 2009&TET இடைநிலை ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

தமிழகத்தில் உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க கோரி வரும் டிசம்பர் 27-ஆம் தேதி முதல் இடைநிலை பதிவுமூப்பு இயக்கம் (SSTA ) மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து நடத்தி வருகின்றார்கள். இன்று இளையவர்களுக்கு தானே பாதிப்பு என்றால், நாளை மூத்தவர்களுக்கும் இதே போன்ற பாதிப்புகளை அரசு தைரியமாக ஏற்படுத்தும். ஆட்சி தான் மாறி உள்ளது. காட்சி இன்னும் மாறவில்லை. வலிமை மிக்க போராட்டங்களால் மட்டுமே இழந்த உரிமைகளை மீட்டெடுக்க முடியும், என்பதில் எந்தவித ஐயமும் இல்லாமல் தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்கள் வாழ்வாதாரமான அடிப்படை ஊதியத்தை இழந்து தவிக்கும் 20,000 இடைநிலை ஆசிரியர்கள் இனத்திற்கான போராட்டம் இது. அந்த ஒரு சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் மட்டும் போராடும் போர்க்களம் அல்ல. தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரிய இயக்கங்களிலும் உள்ள பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து களம் காணும் போராட்டமாகவே தெரிகிறது. இதற்கு முன்னர் வரலாறு காணாத பல்வேறு போராட்டங்களை இவர்கள் நடத்தி உள்ளார்கள். இப்போதும் உயிரை துச்சமென மதித்து கடும் குளிரிலும், மழையிலும் பலருக்கு உடல்நல குறைபாடு உள்ளபோதும் உதிரத்தை உரமாக்கும் கடுமையான தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

13 ஆண்டுகளாக சம வேலைக்கு சம ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை... எங்களுக்கும் வழங்கப்படவில்லை. ஆம். 01.06.2009 க்குப் பின் பணியில் சேர்ந்த எமது நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தான்... எங்களுக்கும் போராட்ட வழியைக் காட்டி இருக்கிறீர்கள்.... ஒட்டுமொத்த தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களும் உங்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாட்சப் குழுக்களிலும் சமூக வலைதளங்களிலும் காண முடிகிறது. உங்கள் போராட்டம் வெற்றி அடைய மனமார்ந்த நல் வாழ்த்துக்களை எழுச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் இந்த போராட்டத்தை ஒருங்கிணைப்பு செய்து நடத்தி வரும் அன்பு நண்பர் ஜே.இராபர்ட், மாநில பொதுச்செயலாளர், SSTA-இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் அவர்களுக்கும், ஏனைய மாநில, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும், 2009&TET இடைநிலை ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக் குழுவுக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும், உண்ணாவிரதத்தில் பங்கு பெற்று வரும் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் களம் கண்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் எழுச்சி கலந்த போராட்ட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Sunday, October 09, 2022

October 09, 2022

அகவிலைப்படி உயா்வு: ஆசிரியா்கள் கோரிக்கை

அகவிலைப்படி உயா்வு: ஆசிரியா்கள் கோரிக்கை

மத்திய அரசின் அகவிலைப்படி உயா்வைப் பின்பற்றி தமிழக அரசு ஊழியா்களுக்கும் 4 சதவீத அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும் என்று ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பின் பொதுச் செயலாளா் பேட்ரிக் ரெய்மாண்ட் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசின் ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வானது 34 சதவீதத்தில் இருந்து 4 சதவீதம் கூடுதலாக உயா்த்தி 38 சதவீதமாக 1.7.2022 முதல் ரொக்கமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல தமிழக அரசு ஊழியா்களுக்கும் 4 சதவீதம் கூடுதலாக அறிவித்து 38 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும். தீபாவளிப் பண்டிகையைக் கருத்தில் கொண்டு காலதாமதமின்றி இதற்கான ஆணையை உடனடியாகப் பிறப்பிக்க நடவடிக்கை செய்ய வேண்டும்.

தமிழக முதல்வா் தோ்தலுக்கு முன்பாக தோ்தல் வாக்குறுதிகளிலும், கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநாட்டிலும் தெரிவித்ததன் அடிப்படையில் மத்திய அரசுக்கு இணையான அனைத்து பணப் பலன்களையும் வழங்க வேண்டும்.

அகவிலைப்படி உயா்வை ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு வழங்க தமிழக முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

Saturday, October 01, 2022

October 01, 2022

பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளா்கள் நியமனம்: ஆசிரியா்கள் சங்கம் நன்றி - Appointment of Lecturers in Polytechnic Colleges: Thanks to Teachers Association

பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளா்கள் நியமனம்: ஆசிரியா்கள் சங்கம் நன்றி - Appointment of Lecturers in Polytechnic Colleges: Thanks to Teachers Association

தமிழகத்தில் காலியாக இருந்த 1,024 விரிவுரையாளா் பணியிடங்களை நிரப்பிய தமிழக அரசுக்கு தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியா்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் விரிவுரையாளா் காலி பணியிடங்களுக்கு உரிய நபா்களை தோ்வு செய்ய ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் கடந்த 2019 நவ. 27-இல் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து கடந்த ஆண்டு டிச.8 முதல் 13 வரை கணினி வழித் தோ்வுகள் நடத்தப்பட்டு 1,024 பேருக்கு பணி நியமன ஆணை வழங்குவதற்கு அடையாளமாக தலைமை செயலகத்தில் 11 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் ஸ்டாலின் கடந்த புதன்கிழமை வழங்கினாா்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நடு அரசு பாலிடெகனிக் கல்லூரி ஆசிரியா்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளா் ப.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் நீண்ட நெடுங்காலமாக விரிவுரையாளா்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. இதையடுத்து தமிழக அரசு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு 1,024 பணியிடங்களை நிரப்பியுள்ளது. இதற்காக உயா்கல்வித் துறை முதன்மைச் செயலாளா், தொழில்நுட்பக் கல்வி ஆணையா் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, June 02, 2022

June 02, 2022

பள்ளிகள் திறப்பு குறித்து ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித் துறை இன்று ஆலோசனை

Teachers' union executives have been invited to attend tomorrow's consultative meeting.

தி.மு.க. Since coming to power, Tamil Nadu has been making various administrative changes in the field of school education. These changes should be made in consultation with the district officials and teachers of the school education department.

A consultative meeting will be held in Chennai tomorrow under the chairmanship of Enlightenment Director of Primary Schools to address these grievances and resolve the problems of the teachers. ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அதிகாரிகள் இன்று ஆலோசனை

இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்தில், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின், தமிழக பள்ளிக் கல்வி துறையில், பல்வேறு நிர்வாக மாற்றங்களை செய்து வருகிறது.

இந்த மாற்றங்கள் பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்து கேட்டு செய்ய வேண்டும்.அவ்வாறு கருத்து கேட்காமலும், ஆலோசனை நடத்தாமலும் மாற்றங்கள் செய்யப்பட்டதால், நிர்வாக மாற்றங்களில் பல்வேறு குளறுபடிகளும், ஆசிரியர்களின் பணி முறைகளில் பல்வேறு குறைகளும் ஏற்பட்டுள்ளன.

இந்த குறைகளை நிவர்த்தி செய்யவும், ஆசிரியர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும், தொடக்க பள்ளி இயக்குனர் அறிவொளி தலைமையில், சென்னையில் நாளை இன்று கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.

இதில், 20 ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்று, தங்களின் குறைகளை தெரிவிக்குமாறு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Saturday, March 19, 2022

March 19, 2022

தமிழக அரசின் பட்ஜெட் மக்களின் மனசாட்சி: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்பு

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தில் மாநில தலைவர் இளமாறன், துணை செயலாளர் கோகுலகிருஷ்ணன் ஆகியோரின் அறிக்கை: தமிழக அரசின் வரும் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட், அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையிலும், சமூகநீதியை நிலைநாட்டும் வகையில் அமைந்துள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழும் என்பது மிகையில்லை. இதில் பள்ளிக் கல்வி துறைக்கு ஏறத்தாழ ரூ.37 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருப்பது வரவேற்புக்கு உரியது. அதேபோல் உயர்கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் அறிவிப்பு, பெண்கல்வியை ஊக்குவிக்கும்.

இதையும் படிக்க | பள்ளிகளில் பெற்றோர்கள் கூட்டம் 20.03.2022 அன்று நடத்தும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை

மேலும், பள்ளிகளை தரம் உயர்த்தும் வகையில் நிதி ஒதுக்கீடு, பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் என தமிழக அரசின் பட்ஜெட்டில் வெளியான பல்வேறு திட்டங்கள் தமிழக மக்களின் மனசாட்சியாக விளங்கி வருகிறது. மேலும், ஆசிரியர்-அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மானிய கோரிக்கையின்போது 110 விதியின்கீழ் தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம்.

Total Pageviews

Search This Blog