Breaking

Showing posts with label PGTRB. Show all posts
Showing posts with label PGTRB. Show all posts

Wednesday, September 28, 2022

September 28, 2022

PG-TRB பணிநியமனத்தை தாமதமாக நடத்த தேர்வர்கள் கோரிக்கை - Candidates Request Late PG-TRB Recruitment!

PG-TRB பணிநியமனத்தை தாமதமாக நடத்த தேர்வர்கள் கோரிக்கை! - Candidates Request Late PG-TRB Recruitment!

சமீபத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்திய, அரசு பல்தொழிநுட்ப (polytechnic) கல்லூரிகளுக்கான 1060 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து, பணியில் அமர உள்ள தேர்வர்களின் பெயர்கள், நேற்று கடந்த வாரம் வெளியாகிய Provisonal Selection List, 3237 காலியிடங்களுக்கான PGTRB அரசுப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தற்காலிக தெரிவு பட்டியலிலும் இடம்பெற்றுள்ளன. முன்னதாக கணிதம், வேதியல், இயற்பியல், ஆங்கிலம் ஆகிய நான்கு பாடங்களுக்கு இரண்டு தேர்வு முறைகளிலும் காலி இடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

மேற்படி இரண்டு தேர்வு முறைகளிலும் தேர்ச்சி பெறுபவர்கள் இரண்டு பணி வாய்ப்புகளிலும் சேர்ந்து பணியாற்ற சாத்தியமே இல்லை என்பதாலும், அவ்வாறு அவர்கள் இரண்டு தேர்வு முறைகளிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டால், ஒரு பணிவாய்ப்புக்கான இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்க வாய்ப்புள்ளதால், இதன் பெயரில் தமிழக அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

PG-TRB பணிநியமனத்தை, TRB Polytechnic பணிவாய்ப்புகள் நிரம்பும் வரை நடத்தாமல் சற்று தாமதிக்க வேண்டும் என பணி நாடுநர் சார்பில் கேட்டு கொள்கிறேன். மேல்நிலை பள்ளிகளிலும், அரசு பல்தொழிநுட்ப கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பணி நிரப்படுவது மிகவும் முக்கியம் என்பதாலும், PGTRB பணிநியமனத்தை சற்று தாமத படுத்தினால் அனைத்து தரப்பினருக்கும் நன்மை உண்டாகும் என்பதாலும், சான்றிதழ் சரிபார்ப்பை தாமதப்படுத்தி நடத்திட தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். நன்றி!

உதாரணமாக கணிதவியல் துறையில் 20 க்கும் மேற்பட்டோர் Polytechnic TRB-யிலும் PG TRB-யிலும் தேர்வாகி உள்ளார்கள்...

TRB - Polytechnic Maths List

TRB - PG Maths List

Friday, September 09, 2022

September 09, 2022

NEW TRB Website Beta Version - Click Here Direct Link

The Government of Tamilnadu has constituted the Teachers Recruitment Board to conduct various Test for the selection of teachers under different sectors such as Secondary Grade Teachers, BT, PG, Special Teachers, Computer Instructors, Agricultural Instructors and BEOs in the respective Departments of School Education and Elementary Education Department, Adi Dravidar and Tribal Welfare Department, Backward classes, Most Backward classes and Minorities Welfare Department, Social Defence Department, Chennai Corporation and Coimbatore Corporation.

Junior Lecturers, Lecturers and Senior Lecturers in SCERT and in Higher Education Department for the post of Assistant Professors, Lecturers in Government Engineering Colleges and Government Arts and Science Colleges, Government Polytechnic Colleges and in Government Law Colleges respectively.

Following the guidelines of the Right of Children to Free and Compulsory Education Act 2009, the Teachers Recruitment Board took up the responsibility of conducting TNTET (Tamilnadu Teacher Eligibility Test) from 2012 onwards.

Presently, The office of the Teachers Recruitment Board, Tamilnadu (TRB) is located in the premises of the Directorate of Public Information (DPI).

TRB - NEW TRB Website Beta Version

Monday, September 05, 2022

September 05, 2022

காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

01.09.2022 நிலவரப்படி காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை-1 / கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

Saturday, September 03, 2022

September 03, 2022

தமிழக அரசில் 155 பேராசிரியர் பணி: TRB புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழக அரசில் 155 பேராசிரியர் பணி: டிஆர்பி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


தமிழக அரசில் 155 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம்(டிஆர்பி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மற்றும் கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு எண்.02/2022

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Senior Lecturers
காலியிடங்கள்: 24

பணி: Lecturers
காலியிடங்கள்: 82

பணி: Junior Lecturers
காலியிடங்கள்: 49
சம்பளம்: மாதம் ரூ.36.400 - 1,15,700

தகுதி: தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் போன்ற ஏதாவதொரு பாடங்களில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் மற்றும் குறைந்தது 55 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.இடி பட்டம் பெற்றிருக்க வேண்டும். இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் ஒர் பாடத்தில் படித்திருக்க வேண்டும். முதுநிலை விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.07.2022 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வுகான நாள் பின்னர் அறிவிக்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்சி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Friday, September 02, 2022

September 02, 2022

PGTRB - Certificate Arrangements List

PGTRB - Certificate Arrangements List

PGTRB- certificate verification க்கு செல்பவர்கள் கீழே உள்ள வாறு certificate களை வரிசைப்படுத்தி செல்லவும்

Monday, August 29, 2022

August 29, 2022

TRB அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கான பாடவாரியான கால அட்டவணை

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்/உடற்கல்வி இயக்குநர் நிலை 1/ கணினிப் பயிற்றுநர் நிலை-1 நேரடி நியமனம் 2020-2021

2020-2021 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1/ கணினிப் பயிற்றுநர் நிலை-1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) எண். 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1202.2022 முதல் 20.022022 வரை கணினி வழித்தேர்வுகள் (Computer Based Examination) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.072022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன.

25.08.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிகைச் செய்தியில் பணிநாடுநர்கள் தங்களது தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் வழியாக 26.08.2022 முதல் 30.08.2022 வரை பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.

17 பாடங்களுக்கு 1:2 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 28.08.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பணி நாடுநர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 02.09.2022 முதல் 04.09.2022 வரை நடைபெற உள்ளது. அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கான பாடவாரியான கால அட்டவணை பின்வருமாறு
விண்ணப்பதாரர்கள் 1:2 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவதாலும், அவர்களின் சான்றிதழ்கள் / ஆவணங்கள் சரிபார்க்கப்படுவதாலும் மட்டுமே அன்னாரது இறுதித் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வருகைபுரியும் பணிநாடுநர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்கள், முன்னுரிமைகோரும் சான்றிதழ்கள் அசல் ஆதார் அட்டை மற்றும் இச்சான்றிதழ்களின் 1 செட் ஜெராக்ஸ் நகல்கள் (சுய சான்றொப்பம் இடப்பட்டது) அழைப்புக் கடிதம் மற்றும் விண்ணப்ப நகல் ஆகியவற்றை தவறாமல் கொண்டுவருதல் வேண்டும்.

செல்போன்கள், பைகள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டுவர அனுமதிக்கப்படமாட்டாது. கொண்டுவரும் பொருட்களின் பாதுகாப்பிற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பு ஏற்காது எனவும் தெரிவிக்கப்படுகிறது. வளாகத்திற்குள் பெற்றோர்கள், சிறார்கள் மற்றும் உறவினர்களை அழைத்து வரக் கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
August 29, 2022

PGTRB - முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி - 02.09.2022 முதல் 04.09.2022 வரை சான்றிதழ் சரிபார்ப்பு - TRB அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம்

பத்திரிக்கைச் செய்தி

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்/உடற்கல்வி இயக்குநர் நிலை 1/ கணினிப் பயிற்றுநர் நிலை-1 நேரடி நியமனம் 2020-2021

2020-2021 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1/ கணினிப் பயிற்றுநர் நிலை-1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) எண். 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1202.2022 முதல் 20.022022 வரை கணினி வழித்தேர்வுகள் (Computer Based Examination) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.072022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன.

25.08.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிகைச் செய்தியில் பணிநாடுநர்கள் தங்களது தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் வழியாக 26.08.2022 முதல் 30.08.2022 வரை பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.

17 பாடங்களுக்கு 12 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 28.08.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பணி நாடுநர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 02.09.2022 முதல் 04.09.2022 வரை நடைபெற உள்ளது. அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கான பாடவாரியான கால அட்டவணை பின்வருமாறு
மேற்கண்ட பாடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை, ஆசிரியர் தேர்வு வாரிய வளாகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள பணி நாடுநர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம், 48 மணி நேரத்திற்கு முன்னதாக ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தங்களது அழைப்புக் கடிதத்தினை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. அழைப்புக் கடிதம் பிற வழிகளில் அனுப்பி வைக்கப்படமாட்டாது என திட்டவட்டமாக பணி நாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

பணிநாடுநர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாள் மற்றும் நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் மட்டுமே வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு குறிப்பிட்ட தேதியில் நேரில் வருகை புரியாத விண்ணப்பதாரர்கள் அவர்கள் தகுதியான மதிப்பெண் பெற்றிருப்பினும் தற்காலிக தெரிவுக்கு உத்தரவாதம் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. வளாகத்தின் வாசலில் கூட்டமாக சேர்வதை தவிர்த்து வளாகத்திற்குள் அமைதி காத்திடவும் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்தக்கட்ட பணித்தெரிவிற்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் 1:2 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவதாலும், அவர்களின் சான்றிதழ்கள் / ஆவணங்கள் சரிபார்க்கப்படுவதாலும் மட்டுமே அன்னாரது இறுதித் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வருகைபுரியும் பணிநாடுநர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்கள், முன்னுரிமைகோரும் சான்றிதழ்கள் அசல் ஆதார் அட்டை மற்றும் இச்சான்றிதழ்களின் 1 செட் ஜெராக்ஸ் நகல்கள் (சுய சான்றொப்பம் இடப்பட்டது) அழைப்புக் கடிதம் மற்றும் விண்ணப்ப நகல் ஆகியவற்றை தவறாமல் கொண்டுவருதல் வேண்டும்.

செல்போன்கள், பைகள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டுவர அனுமதிக்கப்படமாட்டாது. கொண்டுவரும் பொருட்களின் பாதுகாப்பிற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பு ஏற்காது எனவும் தெரிவிக்கப்படுகிறது. வளாகத்திற்குள் பெற்றோர்கள், சிறார்கள் மற்றும் உறவினர்களை அழைத்து வரக் கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான பணிநாடுநர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மற்றும் பத்திரிகைச் செய்தியினை தொடர்ந்து கவனித்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


CLICK HERE TO DOWNLOAD

Sunday, August 21, 2022

August 21, 2022

விரிவுரையாளர் பணிக்கு தமிழ் மொழி தகுதித்தாள் தேர்ச்சி கட்டாயம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

TRB says Tamil paper marks are mandatory in lecturer exam: விரிவுரையாளர் தேர்வில் தமிழ் பாடத்தில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழக அரசுப் பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வேலைவாய்ப்பை பெறுவதை உறுதி செய்யவும், வெளிமாநிலத்தவர்கள் சேர்வதை தடுக்கும் வகையில், தமிழ் மொழித் தேர்வை கட்டாய தகுதி தேர்வாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் போன்றவை நடத்தும் தேர்வுகளில் தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழ் மொழித் தேர்வை கட்டாய தகுதித் தேர்வாக அறிவித்துள்ளது.

இந்தநிலையில், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 24 முதுநிலை விரிவுரையாளர், 82 விரிவுரையாளர், 49 இளநிலை விரிவுரையாளர் ஆகிய 155 காலிப் பணியிடங்களை நிரப்பவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதில் தமிழ் பாடப்பகுதியில் கேட்கப்படும் 50 வினாக்களில் 20 வினாக்களுக்கு சரியாக விடை அளித்தால் மட்டுமே, பிரதான விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என டி.ஆர்.பி தெரிவித்துள்ளது.

விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் 50 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும் தமிழ் மொழித் தகுதித் தேர்வில் 20 (40 சதவீதம்) மதிப்பெண் பெற வேண்டும். அப்படிப் பெற்றால் மட்டுமே ‘பகுதி ஆ’ பிரிவில் பாடம் சார்ந்த 150 மதிப்பெண்களுக்கான வினாக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டாய தமிழ் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பிரதான தேர்வின் 150 மதிப்பெண்ணில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக எஸ்.சி. பிரிவினருக்கு 68 மதிப்பெண்ணும், எஸ்.டி. பிரிவினருக்கு 60 மதிப்பெண்ணும், மற்ற பிரிவினருக்கு 75 மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Tuesday, July 12, 2022

July 12, 2022

TRB Polytechnic Lecture - சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிக்கை

ஆசிரியர் தேர்வு வாரியம் , சென்னை .06 பத்திரிக்கை செய்தி 2017-2018 ஆம் ஆண்டிற்கான அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் பணித்தெரிவு செய்வது சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை ( அறிவிக்கை எண் .14 / 2019 ) 27.11.2019 அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு , கணினி வழித் தேர்வுகள் ( CBT ) 08 : 122021 முதல் 13 : 12 : 2021 வரை நடத்தப்பட்டு , தேர்வு முடிவுகள் 08.032022 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. 11.03.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிக்கை செய்தியில் , பணிநாடுநர்கள் தங்களது கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம் தொடர்பான கூடுதல் சான்றிதழ்களை / ஆவணங்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் வழியாக 11.03.2022 முதல் 0104,2022 வரை பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது. பணிநாடுநர்கள் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் / ஆவணங்கள் மற்றும் கூடுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் / ஆவணங்களின் அடிப்படையில் பணிநாடுநர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு , அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 15 பாடப்பிரிவுகளுக்கு 1 : 2 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு , ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது .

அதன் மீது பெறப்பட்ட ஆட்சேபனைகள் மீதும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது . தற்பொழுது , முதற்கட்டமாக Textile Technology , Production Engineering , Printing Technology , Physics , Chemistry , English மற்றும் Mathematics ஆகிய பாடங்களில் சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு 16.07.2022 தேதியில் நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . மற்ற பாடங்களுக்கு 17.07,2022 மற்றும் 18.07.2022 தேதிகளில் நடத்தப்படும் , பாடங்கள் குறித்த விவரம் தெரிவிக்கப்படும். பணிநாடுநர்களுக்கான அழைப்புக் கடிதம் மற்றும் ஆளறிச் சான்றிதழ் படிவம் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது . பணிநாடுநர்கள் தங்களது அழைப்புக் கடிதம் மற்றும் ஆளறிச் சான்றிதழ் படிவம் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலிருந்து 14,07.2022 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்த குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் பணிநாடுநர்களுக்கு தகவல் அளிக்கப்படும் . அழைப்புக் கடிதம் பிற வழிகளில் அனுப்பி வைக்கப்படமாட்டாது என திட்டவட்டமாக பணிநாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிநாடுநர்கள் தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மற்றும் பத்திரிக்கைச் செய்தியினை தொடர்ந்து கவனித்து வருமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Monday, July 04, 2022

July 04, 2022

TRB - Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I and Computer Instructor Grade I - 2020 - 2021 - RELEASE OF EXAMINATION RESULT WITH FINAL KEY

Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I and Computer Instructor Grade I -2020-2021

RELEASE OF EXAMINATION RESULT WITH FINAL KEY

As per Notification No.01/2021, Date 09.09.2021, Teachers Recruitment Board conducted the Computer Based Examination for Direct Recruitment for the post of Post Graduate Assistants/ Physical Education Director Grade-I and Computer Instructor Grade-I from 12.02.2022 to 20.02.2022. The Board has released the tentative key answers on 09.04.2022. Objections or representations regarding the published key received from candidates from 09.04.2022, to 13.04.2022, 5.30 PM.

Only online Objections submitted by 4276 Candidates are taken for scrutiny by Experts. In that candidate who submitted the proof from standard Text Books alone are considered. Guides, correspondence course materials and non-standard reference books are not be entertained by TRB. The representation in any other form including e-mail, courier, India-post or application in person and the Representations without evidences are not be entertained. All such objections be summarily rejected.

All the representations received within the stipulated time have been thoroughly examined from 10.05.2022 to 15.06.2022 by 115 Subject Experts deputed from various Government Arts Colleges. After thorough scrutiny, revised and final answer key has been arrived by the Experts. The Subject Experts opinion is final, further representations on key will not be entertained by TRB.

Based on the revised key, candidate’s Computer Based Examination answer data evaluated and marks/ the normalized marks are calculated. As the examinations were conducted in multiple sessions for the same recruitment as mentioned in Notification para 10 & 11 for the subjects Tamil, English and Mathematics the normalized marks are calculated by following the normalization procedure. The objected questions, claim of the candidate and the final answer key by Experts with the acceptance / Rejection of the claim of the candidates are prepared and published herewith. Now, marks obtained by all the candidates who have appeared for examination are hereby released along with the Final Answer key

To download the result follow the steps given below:-

Step 1 – Click Login

Step 2 – Enter User ID and password

Step 3 – Click Dashboard

Step 4 – Click here to download score card

Utmost care has been taken in preparing the provisional mark list and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list will not confer any right of enforcement.

Date: 04.07.2022

CLICK HERE TO DOWNLOAD

Sunday, April 10, 2022

April 10, 2022

முதுகலை ஆசிரியர் தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு

முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை - ௧ தேர்வு எழுதியவர்கள், வினாத்தாள் மற்றும் தாங்கள் அளித்த விடைகளை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியிருப்பதாவது:கடந்த 2020 - 2021ம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை - ௧, கணினி பயிற்றுனர் நிலை - ௧ நேரடி நியமனத்திற்கான, கணினி வழித் தேர்வுகள், பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டன; 2.13 லட்சம் பேர் எழுதினர். இந்தத் தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள், வினாத்தாள், பதில் அளித்த விடைகளை, வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கேள்விகளுக்கு உரிய, தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள், அனைத்து பாடங்களுக்கும், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. இதன் மீது ஆட்சேபனைகள் இருந்தால், இணையதளம் வழியாக, உரிய ஆதாரங்களுடன் வரும் 13ம் தேதி வரை தெரிவிக்கலாம்.தபால் அல்லது பிற வழி முறையீடுகள் ஏற்கப்படாது. பாட வல்லுனர்களின் முடிவே இறுதியானது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, February 22, 2022

February 22, 2022

PGTRB - Release of Revised Provisional Selection List

PGTRB - Release of Revised Provisional Selection List ( History )

As per the Orders of Hon’ble High Court of Madras in W.P.No.4710/2020, dated 25.02.2020, 34099/2019 batch cases dated 09.01.2020 and orders of Supreme Court of India in Civil Appeal Nos. 3745-3754 / 2020 and Review Petition No. 20967/2021, the Board now releases the Revised Provisional Selection List for the subject History for the year 2018-19.

Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in at any stage. Incorrect list would not confer any right of enforcement. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in.

Release of Revised Provisional Selection List - Download here...

Total Pageviews

Search This Blog