Tamil Finance News
August 21, 2026
Showing posts with label SBI. Show all posts
Showing posts with label SBI. Show all posts
Friday, August 21, 2026
Monday, December 01, 2025
Friday, August 22, 2025
Wednesday, August 13, 2025
Wednesday, May 28, 2025
Friday, November 29, 2024
Sunday, September 29, 2024
Saturday, December 30, 2023
SBI
December 30, 2023
வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் உயா்த்தியது பாரத ஸ்டேட் வங்கி!
*🔹🔸வைப்பு நிதிக்கான வட்டி விகிதம்:*
*உயா்த்தியது பாரத ஸ்டேட் வங்கி.*
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), தங்களிடம் முதலீடு செய்யப்படும் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை 0.5 சதவீதம் உயா்த்தியுள்ளது.*
* இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:*
* நிலை வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்கள் 50 அடிப்படைப் புள்ளிகள் (0.5 சதவீதம்) உயா்த்தப்பட்டுள்ளன.* * கடந்த 27-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த வட்டி விகித உயா்வு குறிப்பிட்ட பருவகாலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு மட்டும் பொருந்தும்.*
*அதன்படி, இனி 180 முதல் 210 நாள்கள் வரையிலான வைப்பு நிதிகளுக்கு 5.75 சதவீதமாகவும், 7 முதல் 45 நாள்கள் வரையிலான வைப்பு நிதிகளுக்கு 3.5 சதவீதமாகவும் வட்டி விகிதம் இருக்கும்.*
* 211 நாள்களுக்கு மேலும் ஒராண்டுக்குக் கீழும் பருவகாலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதம் 6 சதவீதமாக உயா்த்தப்படுகிறது. *
* 3 ஆண்டுகளுக்கும் மேலான வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் 6.75 சதவீதமாக இருக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*
வைப்பு நிதிக்கான வட்டி விகிதம்: உயா்த்தியது பாரத ஸ்டேட் வங்கி - Fixed Deposit Interest rates Hiked: State Bank of India......
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), தங்களிடம் முதலீடு செய்யப்படும் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை 0.5 சதவீதம் உயா்த்தியுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நிலை வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்கள் 50 அடிப்படைப் புள்ளிகள் (0.5 சதவீதம்) உயா்த்தப்பட்டுள்ளன.
கடந்த 27-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த வட்டி விகித உயா்வு குறிப்பிட்ட பருவகாலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு மட்டும் பொருந்தும்.
அதன்படி, இனி 180 முதல் 210 நாள்கள் வரையிலான வைப்பு நிதிகளுக்கு 5.75 சதவீதமாகவும், 7 முதல் 45 நாள்கள் வரையிலான வைப்பு நிதிகளுக்கு 3.5 சதவீதமாகவும் வட்டி விகிதம் இருக்கும்.
211 நாள்களுக்கு மேலும் ஒராண்டுக்குக் கீழும் பருவகாலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதம் 6 சதவீதமாக உயா்த்தப்படுகிறது.
3 ஆண்டுகளுக்கும் மேலான வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் 6.75 சதவீதமாக இருக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, December 12, 2023
SBI
December 12, 2023
SBI இல் சம்பளக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ.50 இலட்சம் விபத்துக் காப்பீடு
SBI இல் சம்பளக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ.50 இலட்சம் விபத்துக் காப்பீடு
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மூனாண்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் யோகேஷ் குமார் ( வயது 24 ) . ராணுவ வீரரான இவர் , தேவாரம் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்து இருந்தார் .
இந்தநிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இராணுவத்தில் துப்பாக்கி சூட்டில் யோகேஷ் உயிரிழந்தார் . இதைத்தொடர்ந்து யோகேஷின் தாயார் நாகரத்தினத்திடம் , விபத்து காப்பீட்டு தொகையான ரூ .50 லட்சத்துக்கான காசோலையை வங்கி மேலாளர் திரு . பால விக்னேஷ் வர பிரசாத் வழங்கினார் . அப்போது கேஷ் அதிகாரி திரு . ஆஷிக் அப்துல் கனி மற்றும் வங்கி பணியாளர்கள் உடன் இருந்தனர். இதுகுறித்து வங்கி மேலாளர் திரு . பால விக்னேஷ் வர பிரசாத் கூறுகையில் , “ பாரத ஸ்டேட் வங்கியில் சம்பள கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் , வங்கியில் விபத்து காப்பிடு திட்டத்தின் பயனை பெற முடியும் மேலும் சம்பள கணக்கு இல்லாதோர் விபத்து காப்பீட்டு திட்டத்தில் ஆண்டுக்கு .1,000 மட்டும் செலுத்தினால் , எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தால் ரூ .20 லட்சம் காப்பீட்டு தொகை கிடைக்கும்.
மிகவும் எளிதான , பெரிதும் பலன் தரக்கூடிய விபத்து காப்பீட்டு திட்டத்தில் வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இணைந்து பயன்பெற வேண்டும் " என்றார் .

Sunday, December 03, 2023
SBI
December 03, 2023
நாளை நடைபெற இருந்த போட்டித் தேர்வுகள் ஒத்திவைப்பு
எஸ்.பி.ஐ வங்கி தேர்வு ஒத்திவைப்பு
மிக்ஜாம் புயல் காரணமாக நாளை (நவ.4) நடக்கவிருந்த பாரத ஸ்டேட் வங்கி அப்ரெண்டிஸ் பணிக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 15 மையங்களில் நாளை நடைபெறவிருந்த அப்ரெண்டிஸ் பணிக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்’ எனவும் கூறப்பட்டுள்ளது.

Tuesday, November 21, 2023
SBI
November 21, 2023
SBI வங்கியில் 8,424 காலிப்பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் இதோ..
8,424 vacancies in SBI Bank.. Who can apply? Here is the full details.. எஸ்பிஐ வங்கியில் 8,424 காலிப்பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் இதோ..
எஸ்பிஐ வங்கியில் உள்ள 8424 ஜுனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
எஸ்பிஐ வங்கியில் உள்ள ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள தனது பிராந்திய வங்கிகளில் கிளார்க் அல்லது ஜூனியர் அசோசியேட் (வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை) பணிக்கான 8424 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இந்த பணிகளுக்கு ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் வSBI அதிகாரப்பூர்வ கேரியர் போர்டல் மூலம் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் கிளார்க் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்ப சாளரம் நவம்பர் 17, 2023 முதல் டிசம்பர் 7, 2023 இறுதித் தேதி வரை திறந்திருக்கும்.
முக்கிய தேதிகள்
விண்ணப்பிப்பதற்கா தொடக்க தேதி: 17-11-2023
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07-12-2023
தற்காலிகத் தேர்வுக்கு முந்தைய அனுமதி அட்டை வெளியீடு: 27-12-2023
தற்காலிக தேர்வுக்கு முந்தைய தேதி: ஜனவரி 2024
தற்காலிக முதன்மைத் தேர்வு தேதி: பிப்ரவரி 2024
சென்னையில் மத்திய அரசு வேலை: 10ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்!
விண்ணப்பக் கட்டணம்:
SC/ST/PwBD/ESM/DESM: விண்ணப்ப கட்டணம் இல்லை
பொது/OBC/EWS: ரூ.750/-
டெபிட் கார்டு/கிரெடிட் கார்டு/இன்டர்நெட் பேங்கிங் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தலாம்.
கல்வித்தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
இறுதியாண்டு/செமஸ்டர் மாணவர்கள் 31.12.2023க்குள் பட்டப்படிப்புக்கான சான்றிதழை சமர்ப்பித்தால், தற்காலிகமாக விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 20 முதல் 28 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதத்திற்கு ரூ.19900 அடிப்படை ஊதியம் கிடைக்கும்.
எப்படி விண்ணப்பிப்பது?
https://bank.sbi/careers என்ற வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
Recruitment of Junior Associates 2023 என்ற அறிவிப்பை பார்வையிடவும்.
தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து ஆன்லைனில் பதிவு செய்யவும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்; பிற பயன்பாட்டு முறைகள் எதுவும் கருதப்படாது.
பதிவு செய்தவுடன், விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த தொடரவும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது இன்டர்நெட் பேங்கிங் மூலம் ஆன்லைன் முறைகள் மூலம் கட்டணத்தை பாதுகாப்பாக செலுத்தலாம்.
CLICK HERE TO DOWNLOAD முழு விவரம் PDF
Wednesday, August 02, 2023
SBI Bank
August 02, 2023
SBIல் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை !! வங்கியின் முக்கிய அறிவிப்பு !!
எஸ்பிஐயில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை !! வங்கியின் முக்கிய அறிவிப்பு !!
பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. காப்பீடு எடுப்பது தொடர்பான புகார்களுக்கு பதிலளிக்கும் வகையில் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் வங்கிக் கிளைகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இனி அப்படி எதுவும் நடக்காது. எனவும் எஸ்பிஐ நிதி பரிவர்த்தனைகளை செய்ய, வங்கியில் கணக்கு இருக்க வேண்டும். ஏதாவது வேலையாக வங்கிக்கு சென்றால் அங்குள்ள ஊழியர்கள் இன்சூரன்ஸ் வாங்கச் சொல்வார்கள்.
வங்கி வழங்கும் சேவைகளுக்கு, காப்பீட்டுக் கொள்கைகளை வாங்குவது கட்டாயமில்லை. தேவை இல்லாவிட்டாலும், தேவை இல்லாவிட்டாலும் பலர் இன்ஷூரன்ஸ் வாங்குகிறார்கள். அதே பாணியில், உள்நாட்டு ஏடிபெட் வங்கியின் வாடிக்கையாளர், பாரத ஸ்டேட் வங்கி, சமூக ஊடக தளத்தில் இந்த விஷயம் குறித்து வங்கியில் புகார் அளித்துள்ளார்.
வாடிக்கையாளர்கள் அழுத்தம் இல்லாமல் காப்பீட்டுத் தயாரிப்புகளை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும். இது தொடர்பாக வங்கி ட்வீட் செய்துள்ளது. "கட்டாக்கில் உள்ள சண்டி சௌக் கிளையில் சேமிப்புக் கணக்கைத் திறக்கும் பொழுது இப்படி ஒரு நிகழ்வு நடந்திருப்பதாகவும், ஏழைகளை காப்பீட்டுத் தயாரிப்புகளை எடுக்க நாங்கள் வற்புறுத்த விரும்பவில்லை. அது கணக்கு வைத்திருப்பவரின் விருப்பம். கட்டாயப்படுத்துவதாக எஸ்பிஐ வாடிக்கையாளர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா இது குறித்து பதில் அளிக்கையில்... அந்த வாடிக்கையாளரிடம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட இதர முதலீட்டு திட்டங்களை வாடிக்கையாளர்கள் தான் எடுக்க வேண்டும்.அதை அவர்களே கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.
எஸ்பிஐ கிளைகள் வாடிக்கையாளர்களின் நலனுக்காகவும் விழிப்புணர்வுக்காகவும் மட்டுமே இதுபோன்ற தகவல்களை வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பிரச்சனை குறித்து புகார் தெரிவித்தவர்களுக்கு விவரம் மற்றும் தொடர்பு எண்ணைக் கொடுத்தால் பிரச்சனை தீர்க்கப்படும். மற்றொரு சம்பவத்தில் எஸ்பிஐ வாடிக்கையாளர் ஒருவர் எடுத்த ரூபாய் 435 டெபிட் செய்யப்பட்டது. இந்த பாலிசிக்கும் விண்ணப்பிக்காவிட்டாலும் பணம் பிடித்தம் செய்யப்பட்டதாக கூறினார். ஆஃப்லைனில் அல்லது ஆன்லைனில். SBI அந்த வாடிக்கையாளருக்கு பதிலளித்தது. காப்பீடு மற்றும் பிற முதலீட்டு கருவிகள் முற்றிலும் விருப்பமானது.
வாடிக்கையாளர் விரும்பினால் அது வழங்கப்பட வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் போது நாங்கள் அனைத்து மதிப்புகளையும் பின்பற்றுகிறோம். எந்தவொரு சூழ்நிலையிலும் வாடிக்கையாளரின் அனுமதியின்றி கணக்கில் எந்தவொரு பரிவர்த்தனையும் நடைபெறாது. அவர்களிடமிருந்து எந்த சேவையையும் பெற காப்பீடு உள்ளிட்ட பிற முதலீட்டு கருவிகளை எடுக்க வேண்டிய அவசியமில்லை.
உங்களுக்கு பிடித்திருந்தால் எடுக்கலாம் இல்லையென்றால் வேண்டாம். இதுபோன்ற சம்பவங்கள் எப்போதாவது நடந்தால், அந்தந்த வாடிக்கையாளர்கள் https://crcf.sbi.co.in/ccf மூலம் புகார் அளிக்கலாம் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
பொது வங்கி கணக்குகளின் செயல்பாடு, சர்ச்சைக்குரிய டெபிட் மற்றும் கிரெடிட் பரிவர்த்தனை என்பதற்குச் சென்று உங்களுக்கு நடந்த சம்பவத்தைப் பற்றிய சிறிய விவரங்களைக் கொடுங்கள். சம்பந்தப்பட்ட குழு உறுப்பினர்கள் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு பிரச்சினையை தீர்த்து வைப்பார்கள் என்றும் தெரிவித்திருக்கிறது.
Friday, July 28, 2023
SBI
July 28, 2023
SBI வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்!! இனி இதன் மூலமும் சேவையை பெறலாம்
New Update for SBI Customers!! Now you can get the service through this too - SBI வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்!! இனி இதன் மூலமும் சேவையை பெறலாம்!!
இன்றைய காலக்கட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் தங்களது பண பரிவர்த்தனை மேற்கொள்ள UPI யை பயன்படுத்துகின்றனர்.
அந்த வகையில் இவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.
தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் அதிகரித்து உள்ளதால் பண பரிவர்த்தனை மேற்கொள்ள அதிக அளவில் ஆன்லைன் முறையே தேர்வு செய்கின்றனர்.
இவ்வாறு ஆன்லைன் முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு SBI வங்கிகள் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் தற்பொழுது SBI தனது வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய சேவை ஒன்றை தொடங்கி உள்ளது. இனி SBI வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் மூலமாகவும் சேவையை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
இதன் மூலம் பயனாளர்கள் மட்டும் சுமார் 15 க்கும் மேற்பட்ட சேவைகளை பெற்று கொள்ளலாம் என்று கூறப்படுகின்றது.எனவே வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது வங்கி கணக்கு இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணில் WAREG என்று மெசேஜ் செய்யவும்.
இதனை வங்கி ஆக்கவுன்ட் எண்ணுக்கு டைப் செய்து அனுப்ப வேண்டும்.இந்த மெசேஜை 7208933148 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.
இந்த தகவலை SBI வங்கி உறுதி படுத்திய பின்பு உங்களுக்கு தேவையான சேவையை நீங்கள் பெற்று கொள்ளலாம். மேலும் உங்களுக்கு இது குறித்து வேறு ஏதாவது தகவல் தெரிய வேண்டும் என்றால் 9022690226 என்ற எண்ணிற்கு ஹாய் என்ற மெசேஜ் செய்து அதன் பிறகும் இதை பற்றிய தகவலை தெரிந்து கொண்டு சேவையை பெற்று கொள்ளாம்.
Saturday, July 15, 2023
Saturday, July 08, 2023
Tuesday, June 27, 2023
Sunday, May 21, 2023
Saturday, March 11, 2023
SBIePAY
March 11, 2023
மின் கட்டணத்தை இலகுவாக செலுத்திட SBIePAY அறிமுகம்!
மின் கட்டணத்தை இலகுவாக செலுத்திட SBIePAY அறிமுகம்! Introduction of SBIePAY to pay electricity bills easily!
தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) மற்றும் பாரத ஸ்டேட் வங்கி (SBI) இடையே ஒப்பந்தம் - இ - சேவைக்கான இணையவழி கட்டணத்தை இலகுவாக செலுத்திட SBIePAY அறிமுகம்!
Press Release 508
CLICK HERE TO DOWNLOAD PDF
தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) மற்றும் பாரத ஸ்டேட் வங்கி (SBI) இடையே ஒப்பந்தம் - இ - சேவைக்கான இணையவழி கட்டணத்தை இலகுவாக செலுத்திட SBIePAY அறிமுகம்!
Press Release 508
CLICK HERE TO DOWNLOAD PDF
Wednesday, January 18, 2023
SBI PO Exam
January 18, 2023
SBI PO Exam: SBI புரோபேஷனரி ஆபிஸர் முதனிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு
SBI PO Exam: SBI புரோபேஷனரி ஆபிஸர் முதனிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: எவ்வாறு தெரிந்து கொள்வது - SBI PO Exam: SBI Probationary Officer Prelims Result Release
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, சார்பில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட்ட புரோபேஷனரி ஆபிஸர் பணியிடங்களுக்கான முதனிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, சார்பில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட்ட புரோபேஷனரி ஆபிஸர் பணியிடங்களுக்கான முதனிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன
கடந்த 2022, டிசம்பர் 17 முதல் 20ம் தேதி வரை எஸ்பிஐ வங்கியின் புரோபஷனரி ஆபிஸர் 1,673 பணியிடங்களுக்கான முதனிலைத் தேர்வு(ப்ரீலிம்ஸ்) நடந்தது.
இதில் 1600 பணியிடங்கள் வழக்கமான காலியிடங்களுக்கும், 73 மண்டல காலியிடங்களுக்கும் நடந்தது. 18 இடங்கள் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும், 36 இடங்கள், காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கும், 21 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும் நடந்தது.
இந்த புரோபேஷனரி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள், எஸ்பிஐ கிளார்க் மெயின் தேர்வுக்கு தகுதி பெற்றவர்களாவர்.
இந்த புரோபேஷனரி தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வு முடிவுகளை எவ்வாறு அறிந்து கொள்வது
1. எஸ்பிஐ இணையதளமான sbi.co.in.க்கு செல்ல வேண்டும்
2. கேரீயர்ஸ் டேப் பட்டனை அழுத்த வேண்டும்
3. அதில் புரோபேஷனரி ஆபிஸர் ப்ரீலிம்ஸ் தேர்வு என்ற பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்
4. உங்கள் பதிவு எண்ணைக் குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறியலாம்.
5. இந்த தேர்வு முடிவை பதிவிறக்கம் செய்து பிரின்ட் அவுட் எடுத்து அடுத்த கட்ட தேர்வுக்கு சேமிக்கலாம்.
புரோபேஷனரி ஆபிஸர் முதனிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்ததாக மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். விரைவில் முதனிலைத் தேர்வுக்கான விடைத் தொகுப்பு வெளியிடப்படும். புரோபேஷனரி ஆபிஸருக்கான மெயின் தேர்வு வரும் 30ம் தேதி நடக்கிறது