Breaking

Showing posts with label Conduct of Competitions. Show all posts
Showing posts with label Conduct of Competitions. Show all posts

Thursday, November 27, 2025

Wednesday, December 20, 2023

December 20, 2023

‘சைமா' அமைப்பு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள்

‘சைமா' அமைப்பு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் Speech and Essay Competitions for School Students organized by 'Saima' Organization:

'சைமா' அமைப்பு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், விநாடி-வினா, செஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் ஜன.6, 7-ம் தேதிகளில் நடைபெற உள்ளன. பள்ளி மாணவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் 'சைமா' அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு இடையே போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் குழு பாடல், விநாடி-வினா, கேரம், செஸ், பேச்சு, கட்டுரை, கலை, ஓவியம், மாறுவேடம் என பலதரப்பட்ட போட்டிகள் இடம்பெறும். அந்த வகையில் 2024-ம் ஆண்டு 'கோல்டு வின்னர்-சைமா குழந்தைகள் விழா' போட்டிகள் ஜன.6, 7-ம் தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளன. ஓவியம் மற்றும்மாறுவேட போட்டிக்கு குறிப்பிட்டநாளில் நேரடியாக வந்து பங்கேற்கலாம். மற்ற போட்டிகளுக்கு பள்ளிகள் வழியாக மாணவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். எல்கேஜிமுதல் 12-ம் வகுப்பு வரை அனைத்துவகுப்பு மாணவர்களும் போட்டிகளில் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம்.

மாணவர்களுக்கு பரிசு:

சென்னை திருவல்லிக்கேணி பெசன்ட் சாலையில் உள்ள என்கேடி தேசிய பயிற்சி கல்லூரிவளாகத்தில் போட்டிகள் நடைபெறும். வெற்றிபெறும் மாணவர் களுக்கு பரிசுகள் வழங்கப்படும். அதிக போட்டிகளில் வென்று அதிகபுள்ளிகள் எடுக்கும் பள்ளிக்கு ஒட்டுமொத்த கோப்பை வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் உண்டு.


ஜன.4-க்குள் முன்பதிவு:

போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் பள்ளிகள், ஜன.4-க்குள் மாணவர்களின் பெயர் விவரங்களை முன்பதிவுசெய்ய வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 93611 19723என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என 'சைமா' அமைப்பின் செயலாளர் சஞ்சீவி ரகுநாதன் தெரிவித்துள்ளார்.

Wednesday, November 22, 2023

November 22, 2023

Forums in schools - பள்ளிகளில் மன்றங்கள்: வட்டார போட்டிகள் நடத்த ரூ.2.81 கோடி நிதி விடுவிப்பு



பள்ளிகளில் மன்றங்கள்: வட்டார போட்டிகள் நடத்த ரூ.2.81 கோடி நிதி விடுவிப்பு Forums in schools: Rs 2.81 crore released for conducting regional competitions

அரசுப் பள்ளிகளில் பல்வேறு மன்றங்களின் செயல்பாடுகள் சாா்ந்த போட்டிகள் முடிவடைந்த நிலையில், வட்டார அளவிலான போட்டிகளை நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: - CLICK HERE TO DOWNLOAD PDF

நிகழ் கல்வியாண்டில் (2023-2024) அரசுப்பள்ளி மாணவா்களுக்கு மன்றச் செயல்பாடுகள் சாா்ந்த போட்டிகள் பள்ளிகள் அளவில் கடந்த செப்டம்பா் மற்றும் அக்டோபா் மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டன. தொடா்ந்து வட்டார , மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்துவது சாா்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி பள்ளி அளவில் நடைபெற்ற 10 மன்றப் போட்டிகளில் வெற்றி பெற்ற 30 மாணவா்கள் வட்டார அளவிலான போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இந்த வட்டார போட்டிகள் நவம்பா் 30-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். மாணவா்களுக்கு பாதுகாப்பாக ஓா் ஆசிரியா் பள்ளியில் இருந்து உடன் அழைத்துவர வேண்டும். வட்டாரப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவா்களுக்கு போக்குவரத்து மற்றும் சிற்றுண்டி, நடுவா்களுக்கு மதிப்பூதியம் , நினைவு பரிசு, வெற்றியாளா்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் போட்டிகள் நடத்துவதற்கான செலவினமாக ரூ.2.81 கோடி நிதி அனைத்து மாவட்டங்களுக்கும் விடுவிக்கப்படுகிறது.

இதையடுத்து உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மன்றப் போட்டிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் சிறந்த முறையில் நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, August 10, 2023

August 10, 2023

பள்ளி மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் ACADEMY OF STEM EXCELLENCE என்ற பயிற்சி தொடக்கம்

சென்னை பள்ளி மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் ACADEMY OF STEM EXCELLENCE என்ற பயிற்சியினை தொடங்கி வைத்தார் மாநகராட்சி மேயர்

பெருநகர சென்னை மாநகராட்சி மேயரால் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையின் அறிவிப்பு எண்.26ன்படி, சென்னை பள்ளிகளில் பயிலும் மிகச்சிறந்த மாணவர்களை பொதுவான தேர்வின் மூலம் தேர்ந்தெடுத்து, நேரடியாகவும் மற்றும் இணையதளம் வழியாகவும் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், சென்னை பள்ளிகளில் 11ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியரை தேர்வு செய்து, பொதுத் தேர்வுடன் கூடிய NEET, CUET, CLAT, HT-JEE, ICAR, NDA, NATA, NIFT போன்ற மதிப்புமிகு நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்வதற்காக ACADEMY OF STEM EXCELLENCE என்ற பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை பள்ளிகளில் பள்ளிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிற்சியும், மாணவ, மாணவியருக்கு தனித்தனியாக பாதுகாப்பான தங்கும் விடுதிகளும், அவரவர் பள்ளிகளுக்கு சென்று வர போக்குவரத்து வசதியும், ஆரோக்கியமான உணவு, குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள், மெய்நிகர் வகுப்பறைகள், இணையவழி கல்விக்காக அனைவருக்கும் கையடக்கக் கணினிகள், 8000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கொண்ட நூலகம் உள்ளிட்ட வசதிகளும், பயிற்சியும் அனுபவமும் மிக்க ஆசிரியர் குழுக்களுடன் தொடர் தேர்வுகள் மற்றும் மதிப்பீடுகள் நடத்தப்பட்டு, குறைதீர் கற்பித்தல், மருத்துவ ஆலோசனைகள், உளவியல், ஆளுமைத் திறன், தலைமைப் பண்பு பயிற்சி ஆகியவை வழங்கப்படுவது சிறப்பம்சமாகும்.

பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம் சென்னை மேல்நிலைப்பள்ளியில் ACADEMY OF STEM (Science Technology Engineering and Mathematics) EXCELLENCE பயிற்சி நடைபெறும் கட்டடத்தினை மேயர் ஆர்.பிரியா இன்று (09.08.2023) திறந்து வைத்து, பயிற்சியினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். சென்னை பள்ளிகளில் பள்ளிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற 35 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த மாணவ, மாணவியருக்கு புத்தகப்பை, நோட்டுப் புத்தகங்கள் மற்றும் வாட்டர் பாட்டில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை மேயர் வழங்கி, மாணவர்களுடன் கலந்துரையாடி அறிவுரைகளை வழங்கினார்.


இதனைத் தொடர்ந்து, மேயர் அந்தப் பள்ளியின் நூலகம், அலுவலக அறை மற்றும் கழிப்பறையினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, மேயர் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ், இந்தப் பள்ளியில் மேல்நிலைக் கல்வி பயிலும் 74 மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நா. எழிலன், துணை மேயர் மு. மகேஷ்குமார், துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா அறி, இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, கல்வி அலுவலர் மற்றும் உதவிக் கல்வி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Wednesday, August 24, 2022

August 24, 2022

நூலகப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குதல் & போட்டிகள் நடத்துதல் - கல்வித்துறை வழிகாட்டுதல் வெளியீடு



பள்ளி நூலகம் சார்ந்த செயல்பாடுகள் - மாணவர்களுக்காக பரிந்துரைக்கப்படும் நூலகம் சார்ந்த செயல்பாடுகள் கொண்ட கட்டகம் போட்டிகள் நடத்தப்படவேண்டிய நாட்கள் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

Library Books Issued to students Instructions to all CEOs

CLICK HERE TO DOWNLOAD
August 24, 2022

நூலகப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குதல் & போட்டிகள் நடத்துதல் - கல்வித்துறை வழிகாட்டுதல் வெளியீடு



பள்ளி நூலகம் சார்ந்த செயல்பாடுகள் - மாணவர்களுக்காக பரிந்துரைக்கப்படும் நூலகம் சார்ந்த செயல்பாடுகள் கொண்ட கட்டகம் போட்டிகள் நடத்தப்படவேண்டிய நாட்கள் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

Library Books Issued to students Instructions to all CEOs

CLICK HERE TO DOWNLOAD

Total Pageviews

Search This Blog