Breaking

Showing posts with label அறிவியல் கல்லூரி. Show all posts
Showing posts with label அறிவியல் கல்லூரி. Show all posts

Monday, August 08, 2022

August 08, 2022

கலை, அறிவியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடக்கம்: மாநிலக் கல்லூரியில் சேர கடும் போட்டி

கலை, அறிவியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடக்கம்: மாநிலக் கல்லூரியில் சேர கடும் போட்டி

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மொத்தம் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை இணையவழியில் நடத்தப்பட்டது.

அதன்படி, விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 27-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 4 லட்சத்து 7,045 மாணவர்கள் சேர்க்கைக்கு பதிவு செய்தனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 70 ஆயிரம் பேர் வரை கலை, அறிவியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்தனர். அதில் 3 லட்சத்து 34,765 பேர் முழுமையாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, 2 லட்சத்து 98,056 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தினர். விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து, கட்டணம் செலுத்தியவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு கல்லூரி அளவிலான தரவரிசைப் பட்டியல் 3 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்தக் கலந்தாய்வு தரவரிசை பட்டியல் அடிப்படையில் கடந்த 5ம் தேதி தொடங்கியது. இதில் சிறப்பு விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிலையில் இன்று முதல் பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கி உள்ளது.

குறிப்பாக சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரி சேர கடும் போட்டி நிலவி வருகிறது. மொத்தம் 1000 இடத்திற்கு 1 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அண்மையில் வெளியான என்ஐஆர்எஃப் தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தின் 3 கல்லூரிகள் டாப் 10 பட்டியலில் மாநிலக் கல்லூரி இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் மாநிலக் கல்லூரியில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Tuesday, July 26, 2022

July 26, 2022

கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கை; விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

இன்ஜினியரிங் கவுன்சிலிங் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள்.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பில் சேர, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்தும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். இதற்கான 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, ஜூன் 20ல் துவங்கியது. கடந்த 19ம் தேதி பதிவு முடிவதாக இருந்தது. அதே போல, அரசின் 163 கலை, அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜூன் 20ல் துவங்கி, கடந்த 7ம் தேதி முடிவதாக இருந்தது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., ரிசல்ட் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதால், விண்ணப்ப பதிவுக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இம்மாதம் 22ம் தேதி சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவு வெளியானதால், விண்ணப்ப பதிவுக்கு, வரும் 27ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப் பட்டது. இதன்படி, இன்ஜினியரிங் கவுன்சிலிங் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள்.



இதையும் படிக்க | இந்த மாவட்டத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை

இதற்கு மேல் அவகாசம் நீட்டிக்கப்படாது என்பதால், மாணவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.கலை, அறிவியல் கல்லுாரி மற்றும் இன்ஜினியரிங் விண்ணப்ப விபரங்களை, www.tngasa.in மற்றும் www.tneaonline.org என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

Total Pageviews

Search This Blog