Breaking

Showing posts with label votes Form's. Show all posts
Showing posts with label votes Form's. Show all posts

Thursday, November 03, 2022

November 03, 2022

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க 17 வயதிலேயே விண்ணப்பிக்கலாம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க 17 வயதிலேயே விண்ணப்பிக்கலாம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை, நவ. 3: தமிழகத்தில் 17 வயதுடைய இளை ஞர்கள், இளம் பெண்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பம் அளிக்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 6.18 கோடி. இவர்களில், 55.37 சதவீதம், அதாவது 3.42 கோடி வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலுடன் இணைக்க, தங்கள் ஆதார் எண்களை வழங்கி உள்ளனர். கள் ளக்குறிச்சி, அரியலுார், தர்மபுரி மாவட்டங்களில், 80 சதவீதத்துக்கும் அதிகமானோர், ஆதார் எண் வழங்கி உள்ளனர். மிகக் குறைவாக சென்னையில் 20 சதவீதம் பேர் மட்டுமே வழங்கி உள்ளனர். நகர்ப்புறங்களில் குறைவாகவும், ஊரகப் பகுதிகளில் அதிகமாகவும் வாக்காளர்கள் ஆதார் எண் வழங்கி உள்ளனர். மொத்தம் 31 மாவட்டங்களில் 50 சதவீ தத்துக்கும் அதிகமான வாக்காளர்கள், ஆதார் எண் அளித்துள்ளனர்.

வரும் 9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. அன்று முதல் வாக்காளர் பட்டி யல் சுருக்க திருத்தப் பணி துவங்கும். இம்முறை 17 வயதுடைய இளைஞர்கள், இளம் பெண்கள் தங்கள் பெயரை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க, விண்ணப் பம் அளிக்கலாம். அவர்களுக்கு 18 வயதானதும், அவர்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்ப டும். இவ்வாறு அவர் கூறினார்.

Friday, September 02, 2022

September 02, 2022

வாக்காளர் அட்டை- ஆதார் இணைப்பு; வரும் 4ம் தேதி சிறப்பு முகாம்

சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் கடந்த 1.8.2022 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில் சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் 4.9.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. எனவே, இந்தச் சிறப்பு முகாமினை பயன்படுத்தி வாக்காளர் பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து வாக்குச்சாவடி நிலை அலுவலரை அணுகி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அடையாள அட்டை எண்ணை இணைத்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், ஏற்கனவே இணையதளம் மூலமாகவோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வந்தபோது படிவம் 6பி, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை எண் மற்றும் கைபேசி விவரங்களை வழங்கியவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ள தேவையில்லை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது

Monday, January 31, 2022

January 31, 2022

முதல் பயிற்சியின் போதே தபால் ஓட்டு படிவம் - ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

முதல் பயிற்சி வகுப்பிலேயே தபால் ஓட்டுக்கான படிவம்-12 ஐ வழங்க வேண்டும்'என, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து மாநில செய்தி தொடர்பு செயலாளர் முருகேசன் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும், அரசு அலுவலர்களும் ஈடுபட உள்ளனர். அதற்காக மூன்று கட்டமாக தேர்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இன்று (ஜன.31) நடக்க உள்ள முதல் பயிற்சி வகுப்பிலேயே தபால் ஓட்டுப்பதிவுக்கான படிவம்-12 ஐ வழங்க வேண்டும்.மேலும் தேர்தல் பணி நியமன கடிதம், வாக்காளர் அட்டை நகலை படிவத்துடன் இணைத்து தேர்தல் அலுவலரிடம் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இரண்டாவது பயிற்சியின் போது தபால் ஓட்டை பதிவு செய்யவும், கையெழுத்திடவும் கெஜடெட் அலுவலரை நியமித்து ஓட்டளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பயிற்சிக்கு வருவோருக்கு தண்ணீர், உணவு, போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், என்றார்.

Total Pageviews

Search This Blog