Study Materials
April 04, 2025
Showing posts with label New syllabus. Show all posts
Showing posts with label New syllabus. Show all posts
Friday, April 04, 2025
Sunday, March 09, 2025
Saturday, December 14, 2024
Tuesday, July 09, 2024
Thursday, June 27, 2024
Wednesday, June 12, 2024
Thursday, June 06, 2024
Saturday, May 25, 2024
Tuesday, April 16, 2024
Wednesday, January 31, 2024
New syllabus
January 31, 2024
AI இளநிலை படிப்பு சென்னை ஐஐடி -யில் ஜூலை மாதம் தொடக்கம்
AI இளநிலை படிப்பு சென்னை ஐஐடி -யில் ஜூலை மாதம் தொடக்கம் AI Undergraduate course at IIT Chennai starting in July:
சென்னை ஐஐடியில் வாத்வானி தரவு அறிவியல்' மற்றும் செயற்கைநுண்ணறிவு' (ஏஐ) மையத்தை தொடங்குவதற்கான அறிமுக நிகழ்ச்சி கிண்டியில் உள்ள நிறுவனவளாகத்தில் நேற்று நடைபெற்றது.
சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, முதல்வர் மகேஷ் பஞ்சக்னுலா, ஐஐடி முன்னாள் மாணவரும், ஐகேட், மாஸ்டெக் டிஜிட்டல்நிறுவனத்தின் இணை நிறுவனருமான சுனில் வாத்வானி, தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைத் தலைவர் பி.ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் இயக்குநர் வி.காமகோடி பேசியதாவது: கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னை ஐஐடியில்தரவு அறிவியல் மற்றும் செயற்கைநுண்ணறிவு துறை அறிமுகப்படுத்தப் பட்டது. இந்த துறையின் அடுத்தகட்டவளர்ச்சிக்காக தற்போது ஐஐடி முன்னாள் மாணவரும், ஐகேட், மாஸ்டெக்டிஜிட்டல்நிறுவனத்தின் இணை நிறுவனருமான சுனில் வாத்வானி, ரூ.110 கோடி நிதி அளித்திருக்கிறார்.
அடுத்து வரும் 4 முதல் 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவிலே இந்த துறை முதலிடத்திலும், உலக அளவில் முதல் 5 இடங்களுக்குள் இருக்க வேண்டும் என்பது எங்களுடைய இலக்கு.
இதையொட்டி தரவு அறிவியல்,செயற்கை நுண்ணறிவுத் துறையில்மருத்துவம், வேளாண்மை, உற்பத்திஉள்ளிட்டவைகளில் தனி கவனம்செலுத்தி, பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இருக்கிறோம். சென்னை ஐஐடியில் ஏற்கெனவே பி.எஸ். தரவு அறிவியல் ஆன்லைன் படிப்பில் 25 ஆயிரம் மாணவர்கள் படித்து வரும் நிலையில், உலக அளவில் முதல்முறையாக இளநிலை படிப்புகளில் பி.டெக். செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வுஎன்ற படிப்பையும் ஜூலை மாதம்தொடங்க உள்ளோம். இந்த படிப்பானது போதிய அளவு வேலை வாய்ப்பை வழங்கக் கூடியதாக இருக்கும்.
இந்தப் படிப்புக்கான மாணவர்சேர்க்கை ஜேஇஇ நுழைவுத்தேர்வுவழியாகவே நடத்தப்படும். முதல்கட்டமாக 30 இடங்களுடன் இந்த படிப்புஆரம்பிக்கப்படுகிறது. தொடர்ந்து, முதுநிலை எம்.டெக். தரவு அறிவியல் - செயற்கை நுண்ணறிவு படிப்பும் தொடங்கப்படும். இதற்கான மாணவர்சேர்க்கை கேட் தேர்வு மூலம் நடத்தப் படும். இவ்வாறு அவர் கூறினார்.
Friday, January 19, 2024
New syllabus
January 19, 2024
டிப்ளமா, தட்டச்சு பாடத்திட்டம் மாற்றம்
டிப்ளமா, தட்டச்சு பாடத்திட்டம் மாற்றம் Diploma, Typing Syllabus Change
வரும் கல்வி ஆண்டு முதல், டிப்ளமா மற்றும் தட்டச்சு படிப்புக்கு, புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புகள், இன்ஜினியரிங் படிப்புகள் போன்றவற்றுக்கு, திறன்சார் கல்விக்கு ஏற்ப, பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. தன்னாட்சி கல்லுாரிகள், ஒவ்வொரு ஆண்டும் பாடத்திட்டங்களை புதுப்பித்துக் கொள்ள, பல்கலைகள் சார்பில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.தன்னாட்சி அல்லாத கல்லுாரிகளுக்கு, சம்பந்தப்பட்ட பல்கலைகள் மற்றும் உயர்கல்வித்துறை சார்பில், பாடத்திட்டங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, டிப்ளமா இன்ஜினியரிங் மற்றும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து படிப்புகளை நடத்தும், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், பாடத்திட்டங்களை புதுப்பித்து வருகின்றன.டிப்ளமா படிப்புக்கு, வரும் கல்வி ஆண்டில் இருந்து, தரம் உயர்த்தப்பட்ட பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அதாவது, தற்கால வளர்ச்சிக்கேற்ப, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தரவு தொழில்நுட்பம், இன்ஜினியரிங்கில் ரோபாட்டிக் முறையின் பயன்பாடு போன்றவை அதில் இடம் பெறஉள்ளன.இதற்கான பணிகள்நடந்து வருவதாக, தொழில்நுட்ப கல்வி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. அதேநேரம், தட்டச்சு பயிற்சிக்கான புதிய பாடத் திட்டம், 15 ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட்டு உள்ளது. இந்த புதிய பாடத்திட்டம், அடுத்த மாதம் நடத்தப்படும் தேர்வுகளில் அமலாகிறது.புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைகளின்படி, ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, தட்டச்சு பயிற்சியில் சேர நுழைவு தேர்வு எழுத முடியும். ஏற்கனவே, ஆறாம் வகுப்பு முடித்தவர்கள் தட்டச்சு பயிற்சி நுழைவு தேர்வு எழுதும் திட்டம் நடைமுறையில் உள்ளது.எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால், நுழைவு தேர்வு இன்றி, நேரடியாக இளநிலை தட்டச்சு படிப்பில் சேரலாம்.
தட்டச்சு முதுநிலை இரண்டாம் தாளில், அரசாணைகள், தொழில் முறை மற்றும் வணிக கடிதங்கள் நீக்கப்பட்டுள்ளன.அதற்கு பதில், சட்ட நடவடிக்கைகள், சுய விபர குறிப்பு, அலுவல் சார் கடிதங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக, தொழில்நுட்ப கல்வி இயக்குனரக அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Wednesday, January 17, 2024
NEWS
January 17, 2024
செயற்கை நுண்ணறிவு பாடம் 100 பள்ளிகளில் விரிவுபடுத்தப்படும்
செயற்கை நுண்ணறிவு பாடம்
100 பள்ளிகளில் விரிவுபடுத்தப்படும்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பாடம் 100 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் கொண்ட TEALS திட்டம் அறிமுகம் செய்யும் செய்யும் விழா சென்னையில் நடந்தது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தனர். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘‘இந்தியாவிலேயே முதல் முறையாக இங்குதான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதலில் 13 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த முன்னோடித் திட்டம் 100 பள்ளிகளில் விரிவுபடுத்தப்படும். 17 ஆயிரம் பள்ளிகளில் படிக்கின்ற 34 லட்சம் மாணவ, மாணவியர் தினமும் காலை சிற்றுண்டி பெறுகின்றனர். கல்விதான் முக்கியம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இருப்பினும் விளையாட்டு பாட வேளையில் ஆசிரியர்கள் மாணவர்களை விளையாடவும் அனுமதிக்க வேண்டும். எந்த அளவுக்கு கல்வி முக்கியமோ அந்த அளவுக்கு விளையாட்டும், உடற்பயிற்சியும் முக்கியம்’’ என்று தெரிவித்தார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், ‘‘இந்தியாவிலேயே முதன்முறையாக மைக்ரோ சாப்ட் நிறுவனத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு குறித்த பாடத்தை அறிமுகம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசுதான் செய்துள்ளது. இந்த ஆண்டு 100 பள்ளிகளுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. மேனிலைப் பள்ளிகளில் உள்ள கணினி அறிவியல் பாடத்தை மற்ற வகுப்புகளுக்கும் கொண்டு வர அரசு முயற்சி எடுக்கும். தற்போது இடைநிலை ஆசிரியர்கள் 1700 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர். நிதித்துறை அனுமதி அளித்த அளவுக்கு இப்போது தேர்வு செய்ய இருக்கிறோம். ஏற்கனவே பணி வாய்ப்புக்காக காத்திருக்கும் கணினி ஆசிரியர்களையும் பணியில் எடுக்க அரசு முயற்சி எடுக்கும். தற்போதுள்ள கணினி ஆசிரியர்களையும் பயன்படுத்திக்கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

Wednesday, November 22, 2023
New syllabus
November 22, 2023
பாடத்திட்டத்தில் ராமாயணம், மகாபாரதம் சேர்க்க NCERT குழு பரிந்துரை - NCERT recommends Ramayana Mahabharata in syllabus
பாடத்திட்டத்தில் ராமாயணம், மகாபாரதம் சேர்க்க NCERT குழு பரிந்துரை NCERT Committee recommends inclusion of Ramayana, Mahabharata in the syllabus
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) சமூக அறிவியல் குழுவின் தலைவர் சி.ஐ. ஐசக் கூறியதாவது:
அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை அனைத்து வகுப்பறைகளின் சுவர்களிலும் உள்ளூர் மொழியில் எழுதி வைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், பண்டைய கால வரலாறு பாடத்திட்டத்தின் கீழ், ராமாயணம், மகாபாரதம் போன்ற இந்திய இதிகாசங்களை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை ஆண்ட அனைத்து பேரரசுகள் குறித்த தகவல்களும் பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என பரிந்துரை செய்துள்ளோம். சுபாஷ் சந்திரபோஸ் போன்ற ஜாம்பவான்களின் போராட்ட வாழ்க்கை, அவர்களது சாதனைகள் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்வது அவசியம். இவ்வாறு ஐசக் தெரிவித்தார்.
Tuesday, August 08, 2023
New syllabus
August 08, 2023
புதிய மாதிரி பாடத்திட்ட அறிவிப்பு: தமிழ்நாடு உயர்கல்வித்துறை விளக்க அறிக்கை வெளியீடு..!!
புதிய மாதிரி பாடத்திட்ட அறிவிப்பு: தமிழ்நாடு உயர்கல்வித்துறை விளக்க அறிக்கை வெளியீடு..!!
புதிய மாதிரி பாடத்திட்ட அறிவிப்பு குறித்து தமிழ்நாடு உயர்கல்வித்துறை விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்; தன்னாட்சிக் கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு பாதிப்பு இல்லாத வகையிலேயே மாதிரி பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்படுவதன் முக்கிய நோக்கம் மாணவர்களின் நலனை மேம்படுத்துவதே ஆகும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாடப் பிரிவுகளுக்கு இடையே 75% இணைத்தன்மை இல்லை என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பாடப் பிரிவுகளுக்கு இடையே இணைத்தன்மை இல்லாததால் மாணவர்கள் பணியில் சேர சிரமப்படுகின்றனர். உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையே மாறுதல் கோரும் மாணவர்களுக்கு பயன்படும் வகையிலேயே மாதிரி பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 2018-19-க்குப் பின் சில உயர்கல்வி நிறுவனங்களில் பாடத் திட்டம் மறுசீரமைக்கப்படாததை ஈடுசெய்யவே மாதிரி பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மாதிரி பாடத்திட்டத்தின் உயரிய நோக்கம் கல்வியாளரிடையே சரியாகச் சென்றடையும் பொருட்டே விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
301 மாதிரி பாடங்கள் சீரமைப்பு: உயர்கல்வித்துறை
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் ஓராண்டாக மேற்கொண்ட முயற்சியால் புதிய மாதிரி பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஐஐடி, அண்ணா பல்கலைகழகம் , 10 கலை, அறிவியல் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகளின் பேராசிரியர்கள் பாடத்திட்ட சீரமைப்பில் 922 பேராசிரியர்களை கொண்டு 870 கூட்டங்கள் நடத்தப்பட்டு 301 மாதிரி பாடங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. மாதிரி பாடத்திட்டங்கள் மறுசீரமைப்பு தொடர்பாக தொழில்துறையினரின் ஆலோசனையும் பெறப்பட்டது. நான் முதல்வன் மற்றும் திறன் மேம்பாட்டு திட்ட நோக்கங்களுக்கு ஏற்ப புதிய மாதிரி பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

Wednesday, August 02, 2023
New syllabus
August 02, 2023
பொதுப்பாடத்திட்டம் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயனளிக்கும் - அமைச்சர் பொன்முடி
"பொதுப்பாடத்திட்டத்தால் எந்த பிரச்சினையுமில்லை"
"அனைவரையும் ஆலோசித்து தான் முடிவு எடுக்கப்பட்டது"
"பாடத்திட்டத்தை மாற்ற உயர்க்கல்வித்துறைக்கு அதிகாரம் உள்ளது"
"மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயனளிக்கும்"
"உயர்க்கல்வியின் வளர்ச்சியே எங்களுக்கு நோக்கம்"
"எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு விளக்கம் அளிக்க தயார்" - அமைச்சர் பொன்முடி

Sunday, June 25, 2023
Saturday, June 24, 2023
Wednesday, May 10, 2023
Wednesday, March 29, 2023
Syllabus
March 29, 2023
2024-25 கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம்
2024-25 கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் - New syllabus for all classes in academic year 2024-25 CLICK HERE TO READ FULL NEWS