Breaking

Showing posts with label aavin jobs. Show all posts
Showing posts with label aavin jobs. Show all posts

Thursday, December 25, 2025

Thursday, December 01, 2022

December 01, 2022

ரூ.43,000 சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை - நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் - 07.12.2022 - முழு விவரம்

ரூ.43,000 சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை: முழு விவரம்!


தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 7.12.2022 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் (ஆவின்)

பணி: கால்நடை ஆலோசகர் - 1

பணியிடங்கள்: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பதவி.

தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பி.எஸ்சி., மற்றும் ஏஎச் முடித்திருக்க வேண்டும். இத்துடன் கணினி பயன்பாடு குறித்த விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்துடன் இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்

சம்பளம்: தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.43,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் மற்றும் இடம்: தகுதியானவர்கள் 07.12.2022 அன்று காலை 11 மணிக்கு வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட், வேலூர்-9 என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் தங்களது தேவையான அனைத்து அசல் மற்றும் சான்றிதழ்கள் கொண்டு வர வேண்டும்.

Monday, September 26, 2022

September 26, 2022

ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.10.2022

Oil Company Employment Notification - Last Date to Apply: 10.10.2022 - ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.10.2022
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பிட்டர் பாய்லர் ஆப்ரேட்டர், உதவியாளர் உள்ளிட்ட 1535 பணியிடங்களுக்கான தொழில்பழகுநர் பயிற்சிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 1535

பணி: Trade Apprentice - Attendant Operator
பணி: Trade Apprentice (Fitter)
பணி: Technician Apprentice (Chemical)
பணி: Technician Apprentice (Mechanical) 
பணி: Technician Apprentice (Electrical)
பணி: Technician Apprentice(Instrumentation) 
பணி: Trade Apprentices Secretarial Assistant
பணி: Trade ApprenticeAccountant
பணி: Trade Apprentice Data Entry Operator (Fresher Apprentices)
பணி: Trade ApprenticeData Entry Operator (Skill Certificate Holders)

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும். 

பணியிடங்கள்: போங்கைகான், குவஹாத்தி, பாரதீப், பானிபட்

பயிற்சி காலம்: தொழில்நுட்ப பயிற்சியாளர் பாய்லர்(மெக்கானிக்கல்) 24 மாதங்கள். அலுவலக உதவியாளர், டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்கு 15 மாதங்கள். இதர பணிகளுக்கு 12 மாதங்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேரிவில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

எழுத்துத்த தேர்வு நடைபெறும் தேதி: உத்தேசமாக 6.11.2022 இருக்கலாம். இதுகுறித்து விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

சான்றிதழ்கள் சரிபார்ப்பு: உத்தேசமாக 28.11.2022 - 7.12.2022 நடைபெறலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.10.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.iocrefrecruit.in/iocrefrecruit/index அல்லது https://iocl.com/admin/img/Apprenticeships/Files/a978f7954b4d4314aa0ac0cde4bae9e8.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Sunday, August 28, 2022

August 28, 2022

ரூ.43,000 சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை.. நாளை மறுநாள் நேர்காணல்

தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் தொழிற்சங்கம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் தொழிற்சங்கத்தில் (Aavin) காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு முன்னதாக வெளியான நிலையில் தற்போது அதற்கான விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசம் நிறைவடைய உள்ளது.
இந்த வேலைக்கான விவரங்களை படித்துத் தெரிந்து கொண்ட பின்னர் கல்வித் தகுதி மற்றும் ஆர்வம் உடையவர்கள் இதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் தொழிற்சங்கத்தில் (Aavin) கால்நடை ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியும் , ஆர்வமும் உள்ளவர்கள் வரும் 30ம் தேதி நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் ஆவின் (திருப்பூர் மாவட்டம் )
பணியின் பெயர் தமிழ்நாடு கால்நடை ஆலோசகர்
காலிப்பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 30/08/2022 அன்று நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை -.
கல்வி தகுதி அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் BVSc & AH படித்திருக்க வேண்டும்.
சம்பள விவரம் மாதம் ரூ.43,000/- வரை சம்பளம்
தேர்வு செயல்முறை விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். 30ம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளது.
நேர்காணல் நடைபெறும் இடம் 

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் லிமிடெட், ஆவின் பால் சில்லிங் சென்டர், வீரபாண்டி பிரிவு, பல்லடம் ரோடு , திருப்பூர் - 641 605.

நேர்காணல் நடைபெறும் தேதி : 30/08/2022


ஆட்சேர்ப்பு அறிவிப்பு

இந்த இணைப்பில் அறிவிப்பு உள்ளது.

இதே போன்று தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்தொழிற்சங்கத்தில் (ஆவின்) பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப்புற விவசாயிகளின் கறவைகளுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கவும் தமிழக அரசு பல்வேறு திட்டகளை செய்து வருகிறது. தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் (2021 - 22) புதிய கால்நடை மருத்துவ வழித்தடங்கள் அமைக்கப்பட்டு, தற்போது காலியாக உள்ள 4 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / அமைப்பின் பெயர் ஆவின்
பதவிகளின் பெயர் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 4 காலியிடங்கள்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.08.2022
எப்படி விண்ணப்பிக்க வேண்டும் விண்ணப்பிக்கத் தேவை இல்லை. நேரடியாக வரும் 30.08.2022 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
அதிகாரப்பூர்வ தளம் https://thoothukudi.nic.in/ta/
கட்டணம் கட்டணம் கிடையாது.

இந்த திட்டத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் முழுமையான விவரங்களுடனும், உரிய பட்ட படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடனும் வரும் 30.08.2022 அன்று நடைபெறும் நேரடி நியமன தேர்வில் கலந்து கொள்ளலாம்.

இந்த நேர்முக தேர்வு 74F, பாலவிநாயகர் கோவில் தெரு, 2வது தளம், தூத்தக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகின்றது.

Total Pageviews

Search This Blog