vocational teachers
November 27, 2025
Showing posts with label lightning strike. Show all posts

Thursday, November 27, 2025
Thursday, August 18, 2022
Student dies in school campus due to lightning strike
August 18, 2022
பள்ளி வளாகத்தில் மின்னல் தாக்கி மாணவன் பலி
பரமக்குடி அருகே உள்ள நயினார் கோவில் அரசு பள்ளியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் மின்னல் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நயினார் கோவில் ஒன்றியம் தாளையடி கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் மகன் கஜினி 16. இம் மாணவன் நயினார் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். மதியம் 3:30 மணிக்கு பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சக மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். அப்போது லேசான மழையுடன் இடி மின்னல் தாக்கியது.
தொடர்ந்து மாணவர் கஜினி மீது மின்னல் தாக்கியது பள்ளி மைதானத்திலேயே உடல் கருகி பலியானார். நயினார் கோவில் போலீசார் விசாரிக்கின்றனர். பள்ளி வளாகத்தில் மாணவன் இறந்த சம்பவம் ஆசிரியர்கள், சக மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.