Breaking

Showing posts with label government teacher. Show all posts
Showing posts with label government teacher. Show all posts

Tuesday, September 06, 2022

September 06, 2022

மருத்துவரான தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள்!

நான் Dr.! நான் Dr.! நான் Dr.! வேர் ஸ் மை பேசன்ட்? வேர் ஸ் மை பேசன்ட்?

எந்தவித படிப்போ - முறையான அடிப்படை மருத்துவப் பயிற்சியோ இல்லாமல் தமிழ்நாட்டு ஆசிரியர்களை ஒரே நாளில் Multi Speciality மருத்துவரைப் போல அங்கீகரித்துள்ள பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடு கவலையளிப்பதாகவே உள்ளது.

Anemia
Cleft Lip
Cleft Palate
Cyanosis
Congenital Heart Disease
Dental Caries
Flurosis
Vitamin C deficiency
Angular Stomatitis
Candidiasis Low immunity
Thyroid
Tuberculosis
Muscular Dystrophy
Congenital Talepus
Urinary track infection
Vitamin D deficiency
Attention Deficit Hyperactive Disorder
Leprosy
Refractive Errors
Cataract
Glaucoma
Amblyopia
Strabismus
& etc Eye related Diseases

உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சுமார் 40-ற்கும் மேற்பட்ட நோய்-அறிகுறிகளை மாணவ மாணவியரிடம் சோதித்து App-ல் ஏற்றும் பணி தற்போது ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில் சில வெளிப்படையாகத் தெரியக்கூடியதுதான் என்றாலும், குறிப்பிட்ட துறை சார் மருத்துவர்கள் மட்டுமே சில அறிகுறிகளைச் சரியாக உறுதிப்படுத்த இயலும். அதனால் தான் பொது மருத்துவம் மட்டுமின்றி தலைமுடி முதல் பாதம் வரையிலான ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் ஒவ்வொரு துறை என பல்வேறு வகையான மருத்துவப் படிப்புகள் உள்ளன.

ஆனால், இது குறித்த எவ்வித அடிப்படை மருத்துவ அறிவும் இல்லாத ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களை மருத்துவ ஆய்வு செய்வது என்பது பேராபத்தாக முடியவும் வாய்ப்புள்ளது.

ஆம். இது வெறும் வெளிப்புற அறிகுறிகளைக் கண்டறிவது தான் என்றாலும். . . ஒரு தவறான முடிவு நாளை ஒரு குழந்தைக்கு உரிய நேரத்தில் கிடைக்க வேண்டிய மருத்துவ உதவியை தடுத்துவிடக் கூடும்.

முன்பெல்லாம், பள்ளிகளுக்கு மருத்துவ அலுவலர்கள் நேரில் வந்து சோதித்து பிரச்சினை இருப்பின் உரிய துறை மருத்துவருக்குப் பரிந்துரைப்பதே வழக்கமாக இருந்தது. மருத்துவ வசதியில் வளர்ந்த மாநிலமாக உள்ள தமிழ்நாட்டில் பள்ளிக் குழந்தைகளைச் சோதிப்பதற்கு மட்டும் மருத்துவர் பற்றாக்குறை வந்துவிட்டதா? ஒருவேளை பற்றாக்குறை இருப்பின் தேவைக்கு ஏற்ப மருத்துவக் கல்லூரி மாணவர்களைக் கூட பயன்படுத்தலாமே!

ஆனால், அதையெல்லாம்விடுத்து ஆசிரியர்களைக் கொண்டு உடற் பரிசோதனை செய்து App-ல் ஏற்றுங்கள் என்பது அறிவியல் வளர்ச்சி மனிதனை மருத்துவத்திற்கு அப்புறப்படுத்துகிறதோ என்ற எண்ணம்தான் வருகிறது.

மருத்துவரின் பரிந்துரை இன்றி மருந்து வாங்குவது / விற்பது குற்றமெனில், முறையான அடிப்படை மருத்துவ அறிவு இல்லாத ஆசிரியர்களைக் கொண்டு நோய் அறிகுறிகளைப் பரிசோதிப்பது குற்றமாகாதா?

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்டோரின் கவனத்திற்கு உட்பட்டுத்தான் இது நடத்தப்படுகிறதா? ஆம் எனில், இதுதான் திராவிட மாடல் மருத்துவக் கொள்கையா?

ஒரு ஆசிரியராக APP-ல் ஏற்ற சிரமப்பட்டு நாங்கள் இதை கேள்விக்குட்படுத்தவில்லை. ஒவ்வொரு நாளும் தேவையோ இல்லையோ Obey the order என்று பலவற்றை Online-ல் ஏற்றிக் கொண்டுதான் இருக்கிறோம். இதையும் அவ்வாறு செய்துவிட்டு நகர மனமில்லாது, எமது குழந்தைகளின் மீதான உண்மையான அக்கறையிலேயே கேட்கிறோம்.

தயை கூர்ந்து மருத்துவத் துறையைப் பயன்படுத்தி மாணவ மாணவியர்களைப் பரிசோதித்துவிட்டு அதில் தேவைப்படும் முடிவுகளைச் சார்ந்த மாணவ மாணவியருக்கு மட்டும் APP-ல் ஏற்றச் சொல்லுங்கள் ஏற்றுகிறோம். அதுவே பயனுள்ள செயலாக இருக்கும்.

தலைப்பில் உள்ள தில்லாலங்கடி திரைப்பட சந்தானம் போல ஆசிரியர்களை மாற்றுவதால் 'எந்தப் பயனுமில்ல' என்பதைவிட, அதுவே பேராபத்தாக முடியவும் வாய்ப்புள்ளது.

செல்வ.ரஞ்சித் குமார்

Friday, July 01, 2022

July 01, 2022

அரசுப் பள்ளி வகுப்பறையை சொந்த செலவில் சீரமைத்த ஆசிரியா்

திருக்குவளை அருகே அரசுப் பள்ளி ஆசிரியா் ஒருவா் தாம் பணியாற்றும் பள்ளியில் வகுப்பறையை ரூ. 50 ஆயிரம் செலவு செய்து சீரமைத்து கொடுத்துள்ளாா்.

திருக்குவளை அருகேயுள்ள நாகலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவா் அருள்ஜோதி. பசுமை சாா்ந்த பணிகளில் ஈடுபட்டு வந்த இவருக்கு, அண்மையில் தமிழக அரசு சாா்பில் பசுமை முதன்மையாளா் விருது மற்றும் ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை வழங்கி சிறப்பித்தது. இந்நிலையில், இவா் தனக்கு கிடைத்த பரிசுத் தொகையில் ரூ. 50 ஆயிரத்தில் தாம் பணியாற்றும் பள்ளியில், தரைதளம் சேதமடைந்திருந்த வகுப்பறையை டைல்ஸ் பதித்தும், புதிய ஜன்னல்கள் வைத்தும், வகுப்பறை முழுவதும் வண்ணப்பூச்சு செய்து கொடுத்துள்ளாா். சீரமைப்பு செய்த வகுப்பறையை பள்ளித் தலைமையாசிரியா் பரமேஸ்வரி செவ்வாய்க்கிழமை திறந்துவைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவந்தாா். இதில் ஆசிரியா்கள் லோகநாதன், செல்வரத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து, ஆசிரியா் அருள்ஜோதி கூறியது: வளா்ந்து வரும் கிராமப்புற அரசுப் பள்ளிகளை தரம் உயா்த்த நகா்ப்புற கொடையாளா்கள் மற்றும் தொழிலதிபா்கள் முன்வர வேண்டும். இதன்மூலம் நகா்புற பள்ளிகளுக்கு நிகராக கிராமப்புற அரசுப் பள்ளிகளும் உட்புற கட்டமைப்பிலும், தரத்திலும் உயா்ந்து விளங்கும் என்றாா்.

Total Pageviews

Search This Blog