Breaking

Showing posts with label நீட் ஆள் மாறாட்டம். Show all posts
Showing posts with label நீட் ஆள் மாறாட்டம். Show all posts

Wednesday, July 20, 2022

July 20, 2022

கேரள நீட் கொடுமை- உண்மை கண்டறியும் குழு அமைப்பு

கேரள நீட் கொடுமை- உண்மை கண்டறியும் குழு அமைப்பு

கொல்லம் அருகே நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை களையச்செய்து தேர்வு எழுதவைத்த புகாரில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வெழுத வந்த மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்னது குறித்து பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க | DEO Promotion List Preparation - Dir Proceeding

கடும் கோபமடைந்த பெற்றோர், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். திருவனந்தபுரத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது அயூர் பகுதி. இங்கு நேற்று நடைபெற்ற நீட் தேர்வின்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி கேரள அமைச்சர் பிந்து கடிதம் எழுதிய நிலையில் உண்மை கண்டறியும் குழுவை அமைத்து மத்திய கல்வித்துறை அறிவித்துள்ளது.

Tuesday, July 19, 2022

July 19, 2022

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம்.. 11 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு..!வெளிவரும் திடுக்கிடும் தகவல்..!!

இதையும் படிக்க | தேசிய தரவரிசைப் பட்டியல்: சென்னை மருத்துவக் கல்லூரிக்கு 12-ஆவது இடம்

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம்.. 11 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு..!வெளிவரும் திடுக்கிடும் தகவல்..!!

11 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு - தீவிர விசாரணை

மாணவர்களுக்குப் பதில் வேறு நபர்கள் தேர்வெழுதியது அம்பலம்

மூளையாக செயல்பட்டவர் உட்பட 8 பேர் கைது

நீட் தேர்வு ஆள் மாறாட்ட முறைகேடு புகார் தொடர்பாக, வழக்குப் பதிவு செய்துள்ள சிபிஐ 8 பேரை கைது செய்துள்ளது.

Monday, July 18, 2022

July 18, 2022

நீட் தேர்வில் தேர்ச்சி பெற ஆள் மாறாட்டம்: 8 பேர் கைது

நீட் தேர்வில் தேர்ச்சி பெற டெல்லி, ஹரியானாவில் ஆள் மாறாட்டம்: 8 பேர் கைது

நீட் தேர்வில் தேர்ச்சி பெற டெல்லி மற்றும் ஹரியானாவில் ஆள் மாறாட்டம் செய்யப்பட்டதில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல லட்சம் பணம் கைமாற்றப்பட்டுள்ள நிலையில் சி.பி.ஐ. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வ்ருகிறது

நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான 'நீட்' நுழைவுத்தேர்வு நேற்று நடைபெற்றது. டெல்லி மற்றும் அரியானா மாநிலங்களில் உள்ள பல மையங்களில் தேர்வர்களுக்குப் பதிலாக ஆள்மாறாட்டம் செய்து சிலர் தேர்வு எழுதுவதாக சிபிஐக்கு தகவல் கிடைத்தது.

இதையும் படிக்க | இன்று விடுமுறை அறிவித்த பள்ளிகளுக்கு நோட்டீஸ்: அமைச்சர்

இதையடுத்து நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக தேர்வர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்த தேர்வு எழுதிய 8 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதற்காக பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்குப் பதிலாக தேர்வில் பங்கேற்பதற்கு வசதியாக விண்ணப்பதாரர்களின் புகைப்படங்களை கலந்து மார்பிங் செய்து பயன்படுத்தியதாக சிபிஐ தெரிவித்துள்ளது. சுஷில் ரஞ்சன், பிரிஜ் மோகன் சிங், பப்பு, உமா சங்கர் குப்தா, நிதி, கிருஷ்ண சங்கர் யோகி, சன்னி ரஞ்சன், ரகுநந்தன், ஜீபு லால், ஹேமேந்திரா மற்றும் பாரத் சிங் ஆகியோர் மீது சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

Total Pageviews

Search This Blog