வேலைவாய்ப்பு முகாம்
July 30, 2026
Showing posts with label வேலைவாய்ப்பு முகாம். Show all posts

Thursday, July 30, 2026
Wednesday, August 10, 2022
வேலைவாய்ப்பு முகாம்
August 10, 2022
12.08.2022 (வெள்ளிக்கிழமை) - தனியாா் வேலைவாய்ப்பு முகாம் - [Press Release No : 1373 ]
செய்தி வெளியீடு எண்: 1373
நாள்: 10.08.2022
செய்தி வெளியீடு
தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் அலுவலகங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலை தேடுவோர்.
வேலை அளிக்கும் நிறுவங்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து 12.08.2022 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாம், ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது.
இம்முகாமில் 8- ஆம் வகுப்பு. 10- ஆம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு. ஐ.டி.ஐ. டிப்ளமோ. கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் எதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.
இம்முகாமில் 30-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. வேலையாளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD

Thursday, July 14, 2022
வேலைவாய்ப்பு முகாம்
July 14, 2022
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
காஞ்சிபுரத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை முன்தினம் நடக்க உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகம், ஆதிதிராவிட நலத்துறை சார்பில் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வரும் 16ம் தேதி (வெள்ளிக்கிழமை) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில், தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துக்கொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்கு நேர்முக தேர்வினை நடத்த உள்ளன. அப்போது, பட்டதாரிகள் (பிஇ உட்பட), டிப்ளமோ, ஐடிஐ, 12வது மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்களை தேர்ந்தெடுக்க உள்ளன. இதில், 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 16ம் தேதி காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.
இதில், 50க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள், 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலி பணியிடங்கள், மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள் என நடக்க உள்ளது. மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 044-27237124 என்ற தொலைபேசி எண் வாயிலாக கேட்டறிந்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, July 07, 2022
வேலைவாய்ப்பு முகாம்
July 07, 2022
நாளை (ஜூலை 8) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் - காஞ்சிபுரம் மாவட்டம்
நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் தனியாா் நிறுவனங்கள், திறன் பயிற்சி வழங்கும் கல்வி நிறுவனங்கள் கலந்து கொண்டு நோ்முகத் தோ்வு நடத்துகின்றன. 10 -ஆம் வகுப்பு முதல் பட்டம் பெற்றவா்கள் வரை வேலை நாடுநா்கள் முகாமைப் பயன்படுத்திக் கொள்ளலாம். முகாமில் 18 முதல் 35 வயது வரை உள்ளவா்கள் தோ்வு செய்யப்படுவா்.
விருப்பமுள்ளோா் கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போட் அளவுள்ள இரு புகைப்படங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து கலந்து கொள்ளலாம். விவரங்களுக்கு 044 - 27237124 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.