Breaking

Showing posts with label Family Pension. Show all posts
Showing posts with label Family Pension. Show all posts

Tuesday, March 19, 2024

Thursday, January 04, 2024

January 04, 2024

Amendment to CCS (Pension) Rules, 2021 – Allowing female Government servants/female Pensioner to nominate her child/children for family pension amid marital discord: DoPPW Order dated 01.01.2024



Amendment to CCS (Pension) Rules, 2021 – Allowing female Government servants/female Pensioner to nominate her child/children for family pension amid marital discord: DoPPW Order dated 01.01.2024

Office Memorandum

Subject: Amendment to CCS (Pension) Rules, 2021 Allowing female Government servants/female Pensioner to nominate her child/children for family pension in precedence to her husband in the event of marital discord leading to filing of divorce proceedings in a Court of Law or filing of a case under Protection of Women from Domestic Violence Act or Dowry Prohibition Act or Indian Penal Code- reg.

The undersigned is directed to state that, as per the provisions of sub-rule (8) and sub-rule (9) of Rule 50 of CCS (Pension) Rules, 2021, if a deceased Government servant or pensioner is survived by a spouse, family pension is first granted to the spouse and the children and other family members become eligible for family pension, on their turn, only after the spouse of the deceased Government servant/pensioner becomes ineligible for family pension or dies.

2. This Department has been receiving a large number of references from Ministries/Departments, seeking advice as to whether a female Government servant/female Pensioner can be allowed to nominate her eligible child/children for family pension in place of her spouse in the event of marital discord leading to filing of divorce proceedings in a Court of Law or filing of a case under Protection of Women from Domestic Violence Act or Dowry Prohibition Act or under Indian Penal Code.

3. The matter has been examined in consultation with Ministry of Women and Child Development. Accordingly, it has been decided that in case divorce proceedings in respect of a female Government servant/female pensioner are pending in a Court of Law, or the female Government servant/female pensioner has filed a case against her husband under Protection of Women from Domestic Violence Act or Dowry Prohibition Act or under Indian Penal Code, such female Government servant/Female Pensioner may make a request for grant of family pension after her death to her eligible child/children, in precedence to her husband and such request may be considered in the following manner:
(a) Where, in respect of a female Government servant/female pensioner, divorce proceedings are pending in a competent Court of Law, or the female Government servant/female pensioner has filed a case against her husband under Protection of Women from Domestic Violence Act or Dowry Prohibition Act or under Indian Penal Code, the said female Government servant/female pensioner, may make a request in writing to the concerned Head of Office to the effect that, in the event of her death during the pendency of any of the aforesaid proceedings, family pension may be granted to her eligible child/children in precedence to her spouse; (b)

In the event of the death of the female Government servant/female pensioner, who had made a request under clause (a), during the pendency of any of the aforesaid proceedings, the family pension shall be disbursed in the following manner, namely (i) Where the deceased female Government servant/female pensioner is survived by a widower and no child/children is eligible for family pension on the date of death of the female Government servant/female pensioner, family pension shall be payable to the widower.

(ii) Where the deceased female Government servant/female pensioner is survived by a widower with a minor child/children or a child/children suffering from disorder or disability of mind including the mentally retarded, the family pension in respect of the deceased shall be payable to the widower, provided he is the guardian of such child/children and if the widower ceases to be the guardian of such child/children, such family pension shall be payable to the child through the person who is the actual guardian of such child/children. Where the minor child, after attaining the age of majority, remains eligible for family pension, the family pension shall become payable to such child from the date on which he/she attains the age of majority. (iii) Where the deceased female Government servant/female pensioner is survived by a widower with a child/children who has/have attained the age of majority but is or are eligible for family pension, the family pension shall be payable to such child/children.

(iv) After the child/children referred to in clause (ii) and (iii) above cease to be eligible for family pension under Rule 50 of the CCS (Pension) Rules, 2021, family pension shall become payable to other child/children, if any, eligible for family pension.

(v) After all the children cease to be eligible for family pension under Rule 50 of the CCS (Pension) Rules, 2021, family pension shall become payable to the widower till his death or remarriage, whichever is earlier.

4. All Ministries/Departments are requested to bring the contents of this order to the notice of Controller of Accounts/Pay and Accounts Officers and Attached, Subordinate Offices and Autonomous bodies under them.

5. In so far as the persons serving in the Indian Audit and Accounts Department are concerned, these orders are issued in consultation with Comptroller and Auditor General of India, as mandated under Article 148(5) of the Constitution of India. 6. Formal amendment to Rule 50 of the CCS (Pension) Rules, 2021 will be notified separately.

7. Hindi version will follow.

1. All Central Government Ministries/Departments

2. Department of Expenditure, Ministry of Finance, North Block, New Delhi. 3. C&AG, Bhahadur Shah Zafar Marg, New Delhi.

4. Ministry of Railways, Railway Board, New Delhi. 5. CGA, Department of Expenditure, INA, New Delhi. 6. AD (OL) for Hindi version.

MIC for posting on the website of this Department

Friday, October 21, 2022

October 21, 2022

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் 4 சதவீதம் அதிகரிப்பு

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் 4 சதவீதம் அதிகரிப்பு

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலை நிவாரண படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான நலத்துறை தெரிவித்துள்ளதாவது:

மத்திய அரசு பணியாளர்களின் அகவிலைப் படி (டிஏ) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரண (டிஆர்) உயர்வுக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பரிசாக அவர்களுக்கான அகவிலை நிவாரணம் 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான டிஆர் 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிகரிக்கப்பட்ட இந்த அகவிலை நிவாரணம் 2022 ஜூலை 1-லிருந்து கணக்கிட்டு வழங்கப்படும்.

இந்த அகவிலை நிவாரண உயர்வு குடும்ப ஓய்வூதியதாரர், ஓய்வுபெற்ற பொதுத் துறை பணியாளர்கள், தன்னாட்சி அமைப்புகள், ரயில்வே ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோருக்கும் பொருந்தும். இவ்வாறு தெரிவித்துள்ளது.

முன்னதாக, அகவிலைப் படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 3 சதவீதம் உயர்த்தி 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக அதிகரிப்பதற்கு மத்திய அமைச்சரவை குழு கடந்த மார்ச் மாதத்தில் ஒப்புதல் அளித்தது. இது, 2022 ஜனவரி 1-லிருந்து அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அகவிலைப்படி தற்போது இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணியாளர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் டிஏ மற்றும் டிஆர், பணவீக்கத்தை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 தேதிகளில் மாற்றியமைக்கப்படுகிறது. 7-வது ஊதியக் குழு பரிந்துரைத்த விதிமுறைகளின் அடிப்படையில் இந்த மாற்றத்தை மத்திய அரசு மேற்கொள்கிறது.

Friday, September 02, 2022

September 02, 2022

ஓய்வூதியதாரர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டம் - Filing of Nomination - அறிவுரைகள் வெளியீடு

ஓய்வூதியதாரர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டம் - Filing of Nomination - அறிவுரைகள் வெளியீடு

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

Saturday, August 20, 2022

Monday, August 15, 2022

August 15, 2022

சுதந்திர தினத்தில் அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை ஒன்றாம் தேதி முதல் அகவிலைப்படி, 31% இருந்து 34% உயர்த்தி வழங்கப்படும்

- முதலமைச்சர்

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதிய தொகை இன்று முதல் 18,000-இல் இருந்து 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Thursday, August 11, 2022

August 11, 2022

தகுதியற்ற ஓய்வூதியதாரர்களை நீக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

தகுதியற்ற ஓய்வூதியதாரர்களை களையெடுக்கும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதார்கள் அனைவரும் தகுதியானவர்களா என அரசு ஆய்வு செய்து வருகிறது.

இறப்பு பட்டியல், பத்திரப்பதிவு, நகைக்கடன் சரிபார்ப்பு, அரசு அலுவலரை கொண்ட குடும்பங்கள் என பல்வேறு கோணங்களில் அரசு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

40% மற்றும் அதற்கும் மேல் உடல் குறைபாடு உள்ளவர்களை அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

கணவரை இழந்து ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், மகன்கள் இல்லாத முதியோர்கள் உள்பட பலருக்கு சமூக நலப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அவர்களில் பலர் முறைகேடாக ஓய்வூதியம் பெற்று வருவது தொடர்பாக அரசுக்கு பல்வேறு புகார்கள் வந்ததன் பேரில் தகுதியற்ற ஓய்வூதியதாரர்களை களையெடுக்கும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
August 11, 2022

தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சேமிப்புக் கணக்கு: கடன் அட்டைக்கு தடை

என்பிஎஸ் சேமிப்புக் கணக்கு: கடன் அட்டைக்கு தடை

தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சேமிப்புக் கணக்கில் (டயா் 2 கணக்கு) கடன் அட்டை மூலம் பணத்தை டெபாசிட் செய்வதற்கு ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்துள்ளது.

அரசு ஊழியா்கள், தனி நபா்கள் உள்பட நாடு முழுவதும் ஏராளமானோா் தேசிய ஓய்வூதிய திட்டம் (டயா் 1 கணக்கில்) முதலீடு செய்து, 80சி பிரிவின் கீழ் கூடுதலாக ரூ.50,000 வருமான வரி விலக்கை பெற்று வருகின்றனா். தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் டயா் 1 கணக்கு இருந்தால்தான், டயா் 2 சேமிப்புக் கணக்கை தொடங்கி பணத்தை டெபாசிட் செய்ய முடியும்.

சேமிப்புக் கணக்கில் (டயா் 2 கணக்கு) முதலீடு செய்யும் பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுக்க முடியும். இதனால், சேமிப்புக் கணக்கில் கடன் அட்டை மூலம் பணம் டெபாசிட் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது; மாறாக, வங்கி இணையவழி (நெட் பேக்கிங்), டெபிட் காா்டு, யுபிஐ ஆகியவற்றின் மூலம் டெபாசிட் செய்யலாம் என்று ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

வருமான வரி விலக்கு பெறும் வசதியைக் கொண்ட டயா் 1 கணக்குக்கு மேலே குறிப்பிட்ட தடை பொருந்தாது என்றும் அது கூறியுள்ளது.

Friday, August 05, 2022

August 05, 2022

மாணவர்களின் கல்வி நலன் கருதி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வியாண்டின் கடைசி வேலை நாள் வரை மறு நியமனம் - தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

மாணவர்களின் கல்வி நலன் கருதி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வியாண்டின் கடைசி வேலை நாள் வரை மறு நியமனம் - தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வித்துறை யக்குனர், அனைத்து மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:

Monday, July 25, 2022

July 25, 2022

தேசிய ஓய்வூதிய திட்டம் 2022: அரசு ஊழியர்கள் பெற்ற வருமானம் என்ன? இதோ முழு விபரம்!

அரசு ஊழியர்கள் தங்கள் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) வைப்புத் தொகையில் இதுவரை 9.33% வருமானம் பெற்றுள்ளனர்

அரசுப்பத்திரங்கள், கடன் பத்திரங்கள் போன்றவற்றின் மூலம் 2021- 2022 நிதியாண்டில் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்களுக்கான வருமானம் 6.91% இருப்பதாக மத்திய நிதியமைச்சர் பகவத் காரத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | நீட் தேர்வு விவகாரம் - CCTV காட்சி அடிப்படையில் 2 ஆசிரியர்கள் அதிரடி கைது

ஓய்வூதியத்திற்கான சேமிப்பைத் திட்டமிடும் தனி நபர்களுக்காக அரசு, தேசிய ஓய்வூதிய அமைப்பு (National Pension System- NPS) என்ற ஓய்வூதிய திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இது தனது ஓய்வுக் காலத்தில் சேமிக்கும் பழக்கத்தை மக்களிடையே ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டிருந்தது. இதோடு இத்திட்டம் மக்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் ஓய்வூதிய மூலதன குவிப்பு மற்றும் காலப்போக்கில் ஓய்வூதியத்திற்கான வட்டியை அதிகரித்தும் வழங்குகிறது. மேலும் பணிக்காலத்தின் போது ஓய்வூதிய கார்பஸ் சேமிக்கப்படும் எனவும், ஓய்வு பெறும் போது உங்களது குடும்பத்தின் தேவைகள் மற்றும் செலவுகளை நிர்வகிக்க இந்த சேமிப்பைப் பயன்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் பயனாளர்கள், அரசுப்பத்திரங்கள் தவிரக் கடன் பத்திரங்களில் முதலீடு, அரசுப்பத்திரங்களில் முதலீடு போன்றவற்றில் நம்முடைய பணத்தைச் சேமிக்கும் நடைமுறை உள்ளது.

இதையும் படிக்க | ஆசிரியர்களை பாதுகாக்க தனி சட்டம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு

இவை அனைத்தையும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) ஆண்டுதோறும் மதிப்பிடப்படுகிறது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பயன்பெற்றுவரக்கூடிய நிலையில் இதுவரை அரசு ஊழியர்கள் பெற்றுள்ள சலுகைகள் என்ன? என்பது குறித்து மத்திய நிதியமைச்சர் பகவத் காரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தனது எழுத்துப்பூர்வமான அறிவிப்பில் நிதியமைச்சர் தெரிவிக்கையில், அரசு ஊழியர்கள் தங்கள் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) வைப்புத் தொகையில் இதுவரை 9.33% வருமானம் பெற்றுள்ளனர் எனவும் 2021-2022 நிதியாண்டில் அரசு ஊழியர்களுக்கான என்பிஎஸ்- ன் கீழ் இவர்களின் வருமானம் 6.91 சதவீதமாக இருந்தது எனக் கூறியுள்ளார். முன்னதாக அரசு ஊழியர்களின் NPS வருமானம் 9.33% ஆகும்.மேலும் 2021-2022 நிதியாண்டிற்கான என்பிஎஸ் வருமானம் பெரும்பாலான கடன் கருவிகளை விடச் சிறந்தது என்று அமைச்சர் மேலும் கூறினார். பொதுவாக NPS வருமானம் சந்தை நிர்ணயிக்கப்பட்டு, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) ஆண்டுதோறும் மதிப்பிடப்படுகிறது. வருமானத்தின் அடிப்படையில், மூன்று நிதி மேலாளர்களிடையே PFRDA மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட ஓய்வூதிய நிதி மேலாளர்கள் NPS இன் கீழ் பல்வேறு சொத்து வகைகளில் முதலீடு செய்கிறார்கள், அதாவது அரசாங்கப் பத்திரங்கள், கார்ப்பரேட் கடன் கருவிகள், பணச் சந்தை கருவிகள், ஈக்விட்டி சந்தை போன்றவற்றில் முதலீட்டு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | அரசு ஊழியா் பயிற்சி வகுப்பில் தூங்கினால் மதிப்பெண் குறைப்பு

மேலும் சந்தாதாரர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு,அரசாங்கத்தின் பங்களிப்பை 10Yo of Pay + DA to 74% of Pay + DA ஆக உயர்த்தியது. ஓய்வூதிய நிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் மற்றும் சந்தாதாரர்களுக்கான முதலீட்டு முறை, பணம் செலுத்துதல் 2004-2012 காலகட்டத்தில் வைப்புத்தொகை செய்யாத அல்லது தாமதமான வைப்புத்தொகைகளுக்கான இழப்பீடு, வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு மற்றும் முந்தைய 40 ஆண்டு முதல் 60 வரை வெளியேறும்போது மொத்தமாகத் திரும்பப் பெறுவதற்கான வரி விலக்கு வரம்பு அதிகரிப்பு செலுத்த வேண்டிய தொகையின் முழுவதுமாக திரும்பப் பெறுதலுக்கும் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது எனவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tuesday, July 12, 2022

July 12, 2022

ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள சில முக்கிய விவரங்கள்.

ஓய்வூதியர்கள்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டம் (NHIS)‌, அரசாணை எண்‌. 204, நிதி (மருத்துவக்‌ காப்பீடு) துறை, நாள்‌ 30-6-2022ல்‌ தெரிவிக்கப்பட்டுள்ள சில முக்கிய விவரங்கள்..

CLICK HERE TO DOWNLOAD

Friday, July 01, 2022

July 01, 2022

ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழை பதிவு செய்ய வழிமுறை என்ன?

ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை உயிர்வாழ் சான்றிதழ் அளிக்க வேண்டும்.

இந்திய அஞ்சல் துறை வங்கியின் சேவை மூலம் ரூ.70 செலுத்தி வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழை பதிவு செய்யலாம்.

சென்னை:

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை உயிர்வாழ் சான்றிதழ் அளிக்க வேண்டும்.

அவர்கள் நேரில் வருவதில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு, ஜீவன் பிரமாண் செயலி மூலமாக மின்னணு உயிர்வாழ் சான்றிதழை அளிக்கலாம்.

இந்திய அஞ்சல் துறை வங்கியின் சேவை மூலம் ரூ.70 செலுத்தி வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழை பதிவு செய்யலாம். அரசு இ-சேவை மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு ஆண்டு உயிர்வாழ் சான்றிதழை பதிவு செய்யலாம்.

வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழ் படிவத்தினை பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, இந்திய தூதரக அலுவலர், நீதிபதி சான்று உறுதி அலுவலரிடம் உயிர்வாழ் சான்று பெற்று ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு தபால் மூலம் அனுப்பலாம்.

ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் நேரடியாக உயிர்வாழ் சான்றிதழ் அளிக்க ஏதுவாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ரிப்பன் கட்டிட வளாகத்தில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கேயும் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, June 02, 2022

June 02, 2022

பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதலா? மத்திய அரசு விளக்கம்

பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக பரவி வரும் அறிக்கை உண்மையல்ல என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது

Saturday, May 28, 2022

May 28, 2022

Letter No.121/FS/T/Pension/2022-2 Dt: May 26, 2022 - குடும்ப ஓய்வூதியம் - சேவை ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றும் செயல்முறையை எளிமைப்படுத்துதல் - எதிர்கால ஓய்வூதியதாரர்களுக்கான படிவம்-5 இல் கூடுதல் இணைப்பினைச் சேர்த்தல் - தொடர்பாக - PDF

Total Pageviews

Search This Blog