Breaking

Showing posts with label SmartClass. Show all posts
Showing posts with label SmartClass. Show all posts

Wednesday, January 17, 2024

January 17, 2024

தொடக்கப் பள்ளிகளில் 22,418 ஸ்மார்ட் வகுப்பறைகள்

தொடக்கப் பள்ளிகளில் 22,418 ஸ்மார்ட் வகுப்பறைகள்



தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உயர்தர ஹைடெக் கணினி ஆய்வகங்களும், ஸ்மார்ட் வகுப்பறைகளும் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாநிலம் முழுவதும் உள்ள 22,418 தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டு வரப்பட உள்ளன. கரும்பலகை இல்லாமல் அகன்ற டிஜிட்டல் திரையில் ஒலி-ஒளி அமைப்புடன் கூடிய கற்றல் கற்பித்தல்கள் மேற்கொள்ளவும், கற்றலில் அதிக ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இந்த நவீன வகுப்பறைகள் அமைக்கப்படும். இதுதவிர 6,992 நடுநிலைப் பள்ளிகளில் ஹைடெக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட இருக்கின்றன. இதற்கான ஒப்பந்த புள்ளிகள் தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாக கோரப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த கணினி ஆய்வகத்தை மேற்பார்வையிடுவதற்கான பணியாளர்களும் தற்காலிகமாக ஒப்பந்த முறையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதன்மூலம் நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ஒருவர் வீதம் 6,992 பேர் நியமிக்கப்படுவார்கள்.

இந்த நவீன ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள இரும்பு கேட் அமைக்கப்படும். மேலும் இடைநிலை, பட்டதாரிகளுக்கு டேப்லெட்(கையடக்கக் கணினி) வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு கூறினர்.

Thursday, January 11, 2024

January 11, 2024

ஸ்மார்ட் ஆக மாற இருக்கும் தொடக்கக் கல்வித்துறை

ஸ்மார்ட் ஆக மாற இருக்கும் தொடக்கக் கல்வித்துறை Primary education to go smart

தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உயர்தர ஹைடெக் கணினி ஆய்வகங்களும், ஸ்மார்ட் வகுப்பறைகளும் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாநிலம் முழுவதும் உள்ள 22,418 தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டு வரப்பட உள்ளன. கரும்பலகை இல்லாமல் அகன்ற டிஜிட்டல் திரையில் ஒலி-ஒளி அமைப்புடன் கூடிய கற்றல் கற்பித்தல்கள் மேற்கொள்ளவும், கற்றலில் அதிக ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இந்த நவீன வகுப்பறைகள் அமைக்கப்படும். இதுதவிர 6,992 நடுநிலைப் பள்ளிகளில் ஹைடெக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட இருக்கின்றன.


இதற்கான ஒப்பந்த புள்ளிகள் தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாக கோரப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த கணினி ஆய்வகத்தை மேற்பார்வையிடுவதற்கான பணியாளர்களும் தற்காலிகமாக ஒப்பந்த முறையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதன்மூலம் நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ஒருவர் வீதம் 6,992 பேர் நியமிக்கப்படுவார்கள்.

இந்த நவீன ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள இரும்பு கேட் அமைக்கப்படும். மேலும் இடைநிலை, பட்டதாரிகளுக்கு டேப்லெட்(கையடக்கக் கணினி) வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு கூறினர்.

Friday, January 05, 2024

January 05, 2024

20 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடக்கம் - ரூ.81 கோடியில் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி - பள்ளிக்கல்வித்துறை முடிவு



Smart classrooms started in 20 thousand government schools. Rs.81 crore for teachers' hand-held computer school education department decision. (press release) - 20 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடக்கம். ரூ.81 கோடியில் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி பள்ளிக்கல்வித்துறை முடிவு. (பத்திரிகை செய்தி) தமிழ்நாட்டில் 20,000 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கவும், ஆசிரியர்களுக்கு ரூ.81 கோடி செலவில் கையடக்க கணினிகள் வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் என 33 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நவீன முறையில் கல்வி கற்பிக்க ‘ஸ்மார்ட் வகுப்பறைகளை’ அமைக்கவும், அத்துடன் இன்டர்நெட் வசதிகளை ஏற்படுத்தவும் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகம் இயங்கி வருகின்றது. அது நடுநிலைப் பள்ளிகளில் இல்லை. இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் 20 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 6552 நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் வகுப்பறைகளை பொறுத்தவரை மாணவர்கள் கரும்பலகை இல்லாமல் அகன்ற திரையில் ஒலி-ஒளி அமைப்புடன் கூடிய கற்றல் கற்பித்தல்கள் மேற்கொள்ளவும், கற்றலில் அதிக ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இந்த நவீன வகுப்பறைகள் அமைக்கப்படும். இந்த பணிகள் அடுத்த கல்வி ஆண்டுக்குள் தொடங்கப்பட உள்ளன. இது தவிர, அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் நவீன டிஜிட்டல் முறைக்கு மாற வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் 34 ஆயிரத்து 853 இடைநிலை ஆசிரியர்கள், 18 ஆயிரத்து 496 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 53 ஆயிரத்து 349 ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் கையடக்க கணினி வழங்கப்படும். இந்த கல்வியாண்டு வழங்கப்பட்டு, அடுத்த கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு கற்பிக்கவும் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. இதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் இணைய தள வசதி ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாதம் ரூ.1500 கட்டணத்தில் பள்ளிகளில் இணைய தள வசதிகளை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அடுத்தகட்டமாக கையடக்க கணினிகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.81 கோடியே 12 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Friday, December 01, 2023

December 01, 2023

2000 ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் கருவிகளை கையாள சிறப்பு வகுப்பு

2000 ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் கருவிகளை கையாள சிறப்பு வகுப்பு

சென்னை மாநகராட்சியில் தரம் உயர்த்தப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய 15 பள்ளிகள் விரைவில் திறக்கப்பட உள்ளது. சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 119 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

மாநகராட்சி பள்ளிகளில் 98 ஆயிரத்து 633 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 3 ஆயிரத்து 13 ஆசியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனியார் பள்ளிகளுக்கு நிகராக சென்னை மாநகராட்சி பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகளில் டிஜிட்டல் முறையிலான வள வகுப்பறைகள் அமைத்தல், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கற்கும் முறை, நிர்பயா திட்டத்தின்கீழ் பெண்களுக்கான கழிப்பறைகள் அமைத்தல் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல் மற்றும் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் நிறுவுதல் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் குறிப்பாக,பிரான்ஸ் மேம்பாட்டு முகமை (AFD) நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் சிட்டிஸ் (CITIIS) திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சி, சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆகியவை இணைந்து சென்னை மாநகராட்சி பள்ளிகளை நவீன வசதியுடன் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சிட்டிஸ் திட்டத்தின் கீழ் 28 மாநகராட்சி பள்ளிகளில் ரூ.95 கோடியே 25 லட்சத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பிரான்ஸ் மேம்பாட்டு முகமை சார்பில் இத்திட்டத்தின் கீழ் ரூ.76 கோடியே 20 லட்சம் கடன் ஏற்கெனவே வழங்கப்பட்டு, 28 பள்ளிகளில் நவீன வசதிகளுடன் ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆய்வகங்கள், சிறந்த விளையாட்டு கட்டமைப்புகள், கழிப்பறைகள் `ஸ்டெம்’ ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்த சிறப்பு வகுப்புகள், பணியாளர்களுக்கென தனியாக நவீன அறை என தலைமையாசிரியர் முதல் ஆசிரியர்கள் வரை இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளன. இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி தெரிவிக்கையில்: சென்னை பள்ளிகளை நவீனப்படுத்தும் முயற்சியில் சென்னை மாநகராட்சி ஈடுப்பட்டுள்ளது. சிட்டீஸ் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் நிச்சயம் பள்ளி குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் இருக்கும், மாணவர்கள் பள்ளியில் நுழையும் போதே ஆரோக்கியமான மனநிலையை உணர்வார்கள், பள்ளி படிக்கட்டுகளை வண்ண வண்ண நிறங்களால் மாற்றியுள்ளோம். மாணவர்களின் பாதுக்காப்பிற்கு சிசிடிவி கேமரா, மால்கள்,விமான நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் போன்று பள்ளிகளில் நவீன கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

சிட்டீஸ் திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வரும் வளர்ச்சி பணிகளால் பிரான்ஸ் மேம்பாட்டு முகமை (AFD), கூடுதலாக ரூ.36 கோடி மாநகராட்சிக்கு வழங்க இருக்கிறது. இதைக் கொண்டு மேலும் 11 பள்ளிகளை நவீன வசதிகளுடன் கட்டமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே முதல்வர் மு.க. ஸ்டாலின் 4 வளாகங்கள் கூடிய 7 பள்ளிகளை திறந்து வைத்துள்ளார். மேலும், தற்போது 11 வளாகங்கள் கூடிய 15 பள்ளிகள் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது.

டிஜிட்டல் உள்கட்டமைப்பு முக்கிய அம்சங்கள்

* 28 பள்ளிகளில் 500க்கும் மேற்பட்ட வகுப்பறைகளுக்கு LCD-LED இன்டராக்டிவ் பேனல்கள், ஒருங்கிணைந்த கற்றல்-கற்றல், மின் வளங்களுக்கு மாறும் அணுகல்

* அனைத்து 28 பள்ளிகளும் வைஃபை வளாகங்களாக நிறுவப்படும்

* GCC பள்ளிகள் மற்றும் GoTN ஆல் இயக்கப்படும் பிற பள்ளிகள் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கற்றல் வள களஞ்சிய மேலாண்மை அமைப்பு மற்றும் பள்ளி மேலாண்மை அமைப்பு

* அனைத்து திட்ட வளாகங்களிலும் STEM ஆய்வகம் மற்றும் மொழி ஆய்வகங்களை நிறுவுதல்

* மொத்த பட்ஜெட்: ரூ.12 கோடி. விளையாட்டு மற்றும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளின் முக்கிய அம்சங்கள்

* சென்னை பள்ளிகளில் (ரூ.0.34 கோடி) சாரணர், உபகரணங்கள், பயணம் மற்றும் உணவு உட்பட 30 திறமையான மாணவர்களுக்கான சிறப்பு கிரிக்கெட் பயிற்சித் திட்டம்

* உபகரணங்கள், பயணம் மற்றும் உணவு உட்பட 3 சென்னை பள்ளிகளில் (ரூ.0.08 கோடி) 60 திறமையான மாணவர்களுக்கான சிறப்பு கால்பந்து பயிற்சித் திட்டம்மாநகராட்சி பள்ளிகள் முழுவதும் விளையாட்டுக் கருவிகளை வழங்குதல்.கூடுதல் விளையாட்டு உள்கட் டமைப்பு (வலைகள், விளக்குகள், பலகைகள் போன்றவை

* மொத்த பட்ஜெட்: ரூ.1 கோடி.

ஆசிரியர் மேம்பாடு மற்றும் கல்வியியல் கண்டுபிடிப்பு முக்கிய அம்சங்கள்

* 2000 ஆசிரியர்களுக்கு தகவல், தொடர்பு மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி (டிஜிட்டல் கருவிகளைக் கையாளுதல், கணினி, ஸ்மார்ட் வகுப்பு போன்றவை)

* 600 AEOக்கள், HMகள், AHMகள், மூத்தவர்களுக்கான பள்ளி தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டம்

* அகாடமி ஆஃப் STEM எக்ஸலன்ஸ்

* மொத்த பட்ஜெட்: ரூ.9 கோடி.

சிவில் உள்கட்டமைப்பு முக்கிய அம்சங்கள்

* 28 சென்னைப் பள்ளிகள் உள்கட்டமைப்புச் சீரமைப்பிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன

* வகுப்பறைகள், கழிப்பறைகள், சமையல் & உணவு விடுதிகள், விளையாட்டுப் பகுதி போன்றவற்றைச் சீரமைத்தல்/ புதுப்பித்தல்.

* புதிய வகுப்பறைகள், கழிப்பறைகள் போன்றவற்றைக் கட்டுதல்.

* தலைமையாசிரியர் அறைகள் மற்றும் பணியாளர் அறைகளின் புதிய தோற்றம் மற்றும் முகத்தை உயர்த்துதல்

* குழந்தை-உளவியலைக் கருத்தில் கொண்டு வண்ணம் தீட்டுதல் மற்றும் ஓவியம் வரைதல் மற்றும் மேம்படுத்தப்பட்ட கற்றல் மற்றும் பொது உணர்வைத் தூண்டுதல்.

* மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மற்றும் கூடுதல் பாடத்திட்ட உள்கட்டமைப்பு

* மொத்த பட்ஜெட்: ரூ.69 கோடி.

Monday, November 14, 2022

November 14, 2022

ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாக தரம் உயர்வு & ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் நிறுவப்படும் - செய்தி வெளியீடு!

ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாக தரம் உயர்வு & ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் நிறுவப்படும் - செய்தி வெளியீடு!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் எண்ணத்திற்கு உரு கொடுக்கும் வகையில் மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி என் . கயல்விழி செல்வராஜ் அவர்கள் விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே சமூக நீதியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கையுடன் 2022-2023 - ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.



Saturday, October 29, 2022

October 29, 2022

திருச்சி மாவட்டத்தில் மெய்நிகர் நூலகத்தை தொடங்கி வைத்தார்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி மாவட்டத்தில் மெய்நிகர் நூலகத்தை தொடங்கி வைத்தார்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி மாவட்டம் லால்குடியில் நவீன தொழிநுட்பத்தை உள்ளடக்கிய மெய்நிகர் நூலகத்தை (Virtual Reality Library) பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். மாணவர்கள் கடினமாக உணரும் பல பாடங்களை எளிதில் கண்டு, கேட்டு, உணர்ந்து, முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது

Wednesday, November 10, 2021

November 10, 2021

அசத்தும் அரசு ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு

பாலக்காடு அருகே செயல்படும் அரசு ஆரம்ப பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட்டுள்ளது.கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது நெம்மாரா என்ற பகுதி, இங்குள்ள அரசு ஆரம்ப பள்ளியில் கல்விக்கு முக்கியத்துவம் வழங்குவது போல், மாணவர்களின் பாதுகாப்புக்கும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து மாணவர்களுக்கும் 'ஸ்மார்ட கார்டு்' வழங்கப்பட்டுள்ளது.

பள்ளியில் ஒவ்வொரு பகுதியிலும் சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் வருகைப்பதிவு 'டிஜிட்டல்' மயமாக்கப்பட்டுள்ளது. பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் அபாய ஒலி எழுப்பும் 'சைரன்' அமைக்கப்பட்டுள்ளன.இங்கு பயிலும் மாணவர்கள் வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்று, மீண்டும் வீடு திரும்பும் வரை அனைத்து தகவல்களும் பெற்றோர்களின் மொபைல் போன் எண்ணிற்கு உடனே வந்துவிடும்.இந்த பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளையும், இப்பகுதியில் உள்ள எலவஞ்சேரியை சேர்ந்த சனல்-தன்யா குடும்பத்தினர் செய்து கொடுத்துள்ளனர்.சிறிதும் எதிர்பாராத இந்த வசதிகளை பார்த்து, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Sunday, August 08, 2021

August 08, 2021

தமிழ்நாட்டிலுள்ள 58,000 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நவீன மயமாக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி

தமிழ்நாட்டிலுள்ள 58,000 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நவீன மயமாக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி

வரும் பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கும் படி நிதி அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்

Monday, August 02, 2021

August 02, 2021

நாளை விடுமுறை என்பதால் Hi-Tech Lab In-charge ஆசிரியர்களுக்கான பயிற்சி ஒத்திவைப்பு - CEO தகவல்.

அனைத்து உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, நாளை (03-08-2021) ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதால் நாளை நடைபெற இருந்த Hi-Tech Lab In-charge ஆசிரியர்களுக்கான (03-08-2021 ஒரு நாள் பயிற்சி மட்டும்) பயிற்சி ஒத்திவைக்கப்படுகிறது 04-08-2021 முதல் பயிற்சிகள் அட்டவணைப்படி வழக்கம் போல் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

முதன்மை கல்வி அலுவலர் ஈரோடு

Monday, July 19, 2021

July 19, 2021

உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களின் நிலை - அறிக்கை சமர்ப்பிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களின் நிலை - அறிக்கை சமர்ப்பிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

அரசுப் பள்ளிகளில் உள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் இணையதள வசதியுடன் கல்வி கற்கும் வகையில் 6,029 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ‘உயர் தொழில்நுட்ப ஆய்வகம்’ (ஹைடெக் லேப்) அமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் குறைந்த இணைய வேகம், தொழில்நுட்பக்கோளாறு உட்பட காரணங்களால் பல பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் செயல்படாமல் இருப்பதாக கல்வித் துறைக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களின் நிலையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் அடிக்கடி ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். அப்போது ஆய்வகங்களின் செயல்பாடுகள் குறித்து தலைமையாசிரியர்களிடம் கேட்டறிய வேண்டும். ஏதேனும் குறைபாடுகள் இருப்பது தெரியவந்தால் அதன் விவரங்களை மாவட்ட பொறியாளர்களை தொடர்பு கொண்டு உடனே தெரிவிக்க வேண்டும்.

இதுதவிர உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் எந்தவித பழுதுகளும் இல்லாமல் முழுமையாக செயல்பட தேவையான அறிவுறுத்தல்களை மாநில கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பெறலாம். பள்ளிகள் திறக்கப்பட்டால் அனைத்து ஆய்வகங்களும் செயல்படும் வகையில் அவற்றை தயார்படுத்த தலைமையாசிரியர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களின் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
July 19, 2021

அரசு பள்ளிகளிலுள்ள 'ஹைடெக்' ஆய்வகங்கள் பராமரிப்பு

அரசு பள்ளிகளிலுள்ள 'ஹைடெக்' ஆய்வகங்களில் ஏற்பட்ட தொழில் நுட்ப பிரச்னைகளை சரி செய்ய அதிகாரிகள் வற்புறுத்துவதால் தலைமையாசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

அ.தி.மு.க., ஆட்சியில் மத்திய அரசு நிதியுடன் அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில் 6029 ைஹடெக் ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டன. தற்போது பள்ளிகள் மூடியுள்ள நிலையில் ஆய்வகங்களை பராமரித்து இயங்கும் நிலையில் வைத்திருக்க கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா உத்தரவிட்டார். இதன்படி ஆய்வகங்களில் தொழில் நுட்ப பிரச்னைகளை சரிசெய்ய தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தலைமையாசிரியர்கள் கூறியதாவது: பள்ளிகள் மூடியுள்ள நிலையில் ஆய்வகங்கள் பராமரிக்கப்படவில்லை. ஒரு ஆய்வகத்தில் 20 கம்ப்யூட்டர்கள், பேட்டரிகள், மோடம், புரொஜெக்டர் உள்ளிட்டவை உள்ளன. இவற்றில் மாஜி முதல்வர் படம் உள்ளது. தற்போது அப்படம் நீக்கப்பட்டு தமிழக அரசு முத்திரை இடம் பெறும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. பெரும்பாலான உபகரணங்கள் தரமில்லாதவை. அதை பழுதுநீக்க டெக்னீஷியன்கள் வருவதில்லை. தலைமையாசிரியரே செலவு செய்து பழுதுநீக்க அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர், என்றனர்.

Total Pageviews

Search This Blog