Breaking

Showing posts with label வேலைவாய்ப்பு. Show all posts
Showing posts with label வேலைவாய்ப்பு. Show all posts

Thursday, August 11, 2022

August 11, 2022

செவிலியா் வேலைவாய்ப்பில் தமிழகம், புதுவை புறக்கணிப்பு

செவிலியா் வேலைவாய்ப்பில் தமிழகம், புதுவை புறக்கணிப்பு: வைகோ குற்றச்சாட்டு

ஜிப்மா் மருத்துவமனை செவிலியா் வேலைவாய்ப்பில் தமிழகம், புதுவையை மத்திய அரசு புறக்கணித்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளா் வைகோ குற்றம்சாட்டினாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசின் மருத்துவம் மற்றும் குடும்ப நலத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில், செவிலியா் காலிப் பணியிடங்களுக்காக 2022 ஜூலை 13-ஆம் தேதியிட்ட வேலை வாய்ப்புக்கான அறிவிப்பின்படி 139 காலிப் பணியிடங்களுக்கு தோ்வு செய்வதற்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டது.

அதன்படி, ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 11 வரை இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குப் பிறகு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தோ்வு மையங்கள் திட்டமிட்டு இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இது தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் செவிலியா்கள் தோ்வு எழுத இயலாதபடி ஒன்றிய அரசு திட்டமிட்டு புறக்கணித்துள்ளது.

எனவே, மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ள இணையதள சேவையை குறிப்பிட்ட தேதி வரை செவிலியா்கள் விண்ணப்பிக்கும் வகையில், தமிழகம், புதுவையில் தோ்வு எழுதும் மையங்களை இணையதளத்தில் உடனடியாக மத்திய அரசு இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் வைகோ.

Tuesday, August 09, 2022

August 09, 2022

டிகிரி முடித்தவர்களுக்கு... மாதம் ரூ. 60,000 சம்பளத்தில் வேலை.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள சட்ட அதிகாரி மற்றும் மூத்த சட்ட அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Indian Oil Corporation Limited

பணியின் பெயர்: Law Officer and Senior Law Officer

கல்வித் தகுதி: LLB Degree

சம்பளம்: Rs.60000 - 180000/-

வயது வரம்பு: 33 years

கடைசி தேதி: 14.08.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.iocl.com

Monday, August 08, 2022

August 08, 2022

ஐஐடியில் படித்த 80% மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு

இந்தாண்டு நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் ஐஐடி சென்னையில் படித்த மாணவர்களில் 1,199 பேருக்கு வேலை கிடைத்திருப்பதாக சென்னை ஐஐடி தகவல் தெரிவித்துள்ளது.



1959ஆம் ஆண்டு இந்திய அரசால் ஐஐடி சென்னை உருவாக்கப்பட்டது. 2021-2022 கேம்பஸ் பிளேஸ்மெண்டில் 80 சதவிகிதம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.



இந்த வேலைவாய்ப்பில் 45 பணிகளுக்கான ஆணையை 14 சர்வதேச நிறுவனங்கள் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 131 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 199 பணி நியமனங்களையும் வழங்கியுள்ளது. 61 எம்பிஏ மாணவர்களுக்கு இதில் வேலை வாய்ப்பு கிடைத்தது. 100 சதவிகிதம் எம்பிஏ மாணவர்களுக்கு இந்தாண்டு வேலை வாய்ப்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.



இந்த மாணவர்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூபாய் 21.48 லட்சம். இதில் ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக 250,000 டாலர் சம்பளத்துடன் வேலை வழங்கப்பட்டுள்ளது.



ஐஐடி சென்னை வேலைவாய்ப்பு ஆலேசகர் சி.எஸ். ஷங்கர் ராம், “இந்தாண்டு மாணவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தாண்டு வேலைவாய்ப்பு ஒரு புதிய சாதனை படைத்துள்ளது. ஐஐடி சென்னை சார்பாக தேர்வுசெய்த நிறுவனங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.

Tuesday, August 02, 2022

August 02, 2022

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி: தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி: தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்

கரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடைய தொழில்முனைவோா் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த தொழில்முனைவோருக்கு கோவிட் நிவாரண உதவி வழங்கும் புதிய திட்டத்தை ரூ.50 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் ஓராண்டு காலத்துக்கு (2022 - 2023) செயல்படுத்த அரசு அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கோ் 1-இன்படி, 2020-2021, 2021-2022 ஆகிய 2 ஆண்டுகளில் கரோனா தொற்றால் வணிக ரீதியாக பாதிக்கப்பட்ட தொழில்முனைவோா் தாமாகவோ, தமது சட்டப்பூா்வ வாரிசுகள் மூலமோ ஏற்கெனவே உள்ள வணிகத்தை மீண்டும் நிறுவ அல்லது அதேபோன்று இன்னொரு நிறுவனத்தை உருவாக்க அல்லது வேறு ஏதேனும் தொழிலைத் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறலாம்.

இதில், திட்ட மதிப்பீடு அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை இருக்கலாம். இயந்திர தளவாடங்களுக்கான முதலீட்டில் 25 சதவீதம் (அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை) மானியம் வழங்கப்படும். நிதி உதவி பெற பயனாளா் 55 வயதுக்கு மேற்படாதவராகவும், குறைந்தபட்சம் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் உற்பத்தி மற்றும் சேவை சாா்ந்த நிறுவனங்களும் பயன் பெறலாம் என்பதால், கடந்த இரு ஆண்டுகளில் வணிகம் பாதிப்படைந்த உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், தானியங்கி பணிமனைகள், அழகு நிலையங்கள் போன்ற சேவைத் தொழில் நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம். 2020-க்கு முன்னா் அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கிய நிறுவனங்களும் இந்தத் திட்டத்தில் பயன் பெறலாம்.

கோ் 2-இன்படி, கரோனாவால் வணிக ரீதியாக பாதிக்கப்பட்ட குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் தொழில்நுட்ப மேம்பாடு அல்லது நவீனமயமாக்கம் செய்வதற்காக நிறுவப்பட்ட இயந்திரங்களின் மதிப்பில் 25 சதவீதம் (அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை) மானியம் வழங்கப்படும். 2020 மாா்ச் 23-ஆம் தேதிக்குப் பின்னா் தொழில்நுட்ப மேம்பாடு, நவீனமயமாக்கலுக்கான இயந்திரங்கள் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் இந்தத் திட்டத்தில் பயன் பெறலாம்.

இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், வேலூா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0416 - 2242413, 2242512 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ தொடா்பு கொண்டு பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, July 28, 2022

July 28, 2022

விண்ணப்பமோ 22.5 கோடி..வேலைவாய்ப்போ 7,22,311 மட்டுமே

ஒன்றிய அரசு பணிக்காக கடந்த 8 ஆண்டுகளில் 22 கோடி பேருக்கு மேல் பதிவு செய்தும் வெறும் 7 லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு மட்டும் வேலை கிடைத்திருக்கிறது. வேலைக்காக விண்ணப்பித்தவர்களில் 1 விழுக்காட்டினருக்கும் குறைவாக மட்டுமே வேலை கிடைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேரை பணியமர்த்த இருப்பதாக ஒன்றிய அரசு ஜூன் 14ம் தேதி அறிவித்தது. அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பு நிலைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டதை தொடர்ந்து பிரதமர் அலுவலகம் இத்தகவலை வெளியிட்டது.

ஆனால் 18 மாதங்களில் 10 லட்சம் பேரை நியமிக்கப்போவதாக அறிவித்திருப்பதை காட்டிலும் கடந்த 8 ஆண்டுகளில் ஒன்றிய அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது புள்ளி விவரங்கள் மூலமாக தெரியவந்துள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., மக்களவையில் இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்திருக்கிறார். 2014 முதல் ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் வேலைகளுக்காக 22 கோடியே 5 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.

சராசரியாக ஆண்டுக்கு 2 கோடியே 75 பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். ஆனால் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 90,288 பேருக்கு மட்டும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2018 - 19ம் ஆண்டில் 38,100 பேரும், 2021- 22ம் ஆண்டில் 38,850 பேரும் மட்டுமே ஒன்றிய அரசு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு பொறுப்பேற்ற பிறகு 8 ஆண்டுகளில் 7,22,311 பேர் மட்டுமே வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். 8 ஆண்டுகளிலும் விண்ணப்பித்தவர்களில் ஒரு விழுக்காட்டினருக்கும் குறைவாகவே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Monday, July 11, 2022

July 11, 2022

புலனாய்வு துறையில் (IB) 766 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

இந்த ஆண்டுக்கான வேலைவாய்ப்பாக புலனாய்வுப் துறையானது (IB) குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவுகளின் கீழ் உள்ள அதிகாரிகளின் பதவிக்கு விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி உதவி மத்திய புலனாய்வு அதிகாரி (ஏசிஐஓ), செக்யூரிட்டி அசிஸ்டென்ட் (எஸ்ஏ), ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபீசர் (ஜிஐஓ) ஆகிய பணிகளுக்கான 750-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பதவிகளுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 19, 2022 என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதவிகளுக்கான பதவிக்காலம் ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பின்படி, விளம்பரப்படுத்தப்பட்ட பதவிகளின் எண்ணிக்கை தற்காலிகமானது என்றும் தேர்வின் போது இது அதிகரிக்கலாம் அல்லது குறையவும் செய்யலாம் என்று கூறியுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் இடமாற்றம் செய்யப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான தகுதி மற்றும் பிற விவரங்களை இனி தெரிந்து கொள்வோம்.

தகுதி :

மத்திய காவல் அமைப்புகள், மாநில காவல்துறை அமைப்புகள் அல்லது பாதுகாப்புப் படைகளின் அதிகாரிகள், பெற்றோர் கேடர் அல்லது துறைகளில் தொடர்புடைய அனுபவம் கொண்டவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். மேலும் ஒவ்வொரு பதவிகளுக்கும் அதன் அடிப்படையில் சில தகுதிகளும் உள்ளன என்று தெரிவித்துள்ளனர். சம்பளம் :

இந்த அறிவிப்பின் படி, ஒவ்வொரு பதவி நிலைகளுக்கும் ஒவ்வொரு சம்பள அளவுகோள் உள்ளது. உதவி மத்திய புலனாய்வு அதிகாரி-I 8ம் நிலைக்கு 7வது CPC-இன் படி ரூ.47,600-ரூ.1,51,100 வரை சம்பளம் அறிவித்துள்ளனர். உதவி மத்திய புலனாய்வு அதிகாரி-II/எக்ஸிகியூட்டிவ் நிலை 7 இல் உள்ளவர்களுக்கு ரூ. 44,900-1,42,400 வரை நிர்ணயித்துள்ளனர். ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபீசர்-I/எக்ஸிகியூட்டிவ் நிலை 5ல் உள்ளவர்களுக்கு 7வது CPC-இன் படி ரூ.29,200-ரூ92,300 என சம்பளம் உள்ளது.

ஜூனியர் இன்டெலிஜென்ஸ் அதிகாரி-II/எக்ஸிகியூட்டிவ்களுக்கு 7வது CPC-இன் படி ரூ. 25,500- 81,100 என சம்பளம் குறிப்பிடப்பட்டுள்ளது. செக்யூரிட்டி அசிஸ்டென்ட்/எக்ஸிகியூட்டிவ் நிலை 3 பதவிகளுக்கு 7வது CPC இன் படி ரூ.21,700 - 69,100 சம்பளம் பெறுவார்கள். ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபீசர்-I மோட்டார் டிரான்ஸ்போர்ட் 7வது CPC படி ரூ. 2800 தர ஊதியத்துடன் ரூ. 5200-20200 வரை சம்பளம் பெறலாம். செக்யூரிட்டி அசிஸ்டென்ட் நிலை 3ல் உள்ளவர்கள் 7வது CPC இன் படி ரூ.21700-69100 சம்பளம் பெறுவார்கள். இப்படி ஒவ்வொரு நிலைக்கும் ஏற்ப சம்பள அளவுகோல்கள் மாறுபடலாம்.

எப்படி விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள அதிகாரிகள் பயோ-டேட்டாவை முறையாக பூர்த்தி செய்து விண்ணப்பதாரரால் கையொப்பமிடப்பட்டு, அவர்களுடைய கல்வி மற்றும் பயிற்சி சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களுடன், உதவி இயக்குநர்/ஜி-3, உளவுத்துறை பணியகம், உள்துறை அமைச்சகம், 35 எஸ் பி மார்க், பாபு தாம்,புதுடெல்லி-110021 என்கிற முகவரிக்கு அனுப்பலாம். மேலும், இதில் அனுப்பப்படும் அனைத்து விவரங்களும் உண்மைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
July 11, 2022

ஜிப்மர் நிறுவனத்தில் வேலை.. மாதம் ரூ.17000 சம்பளத்தில்... 10, 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..

ஜிப்மர் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஜிப்மர்

பணியின் பெயர்: Data Entry Operator, Multi Tasking Staff

பணியிடங்கள்: 03

விண்ணப்பிக்கும் முறை: Online

கடைசி தேதி: 17.07.2022

தகுதி: டிகிரி/12th/10th

சம்பளம்: ரூ.17000

மேலும் தகவலுக்கு> https://jipmer.edu.in/sites/default/files/Recruitment%20notice%20-%20RVRDL-%20DEO%20MTS.pdf
July 11, 2022

பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு - பிரமோஸ் ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் வேலை

பிரமோஸ் ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

இந்திய-ரஷ்ய கூட்டு தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பு தொழிற்சாலையில் சிஸ்டம் இன்ஜினியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Systems Engineer

காலியிடங்கள்: 22

துறைவாரியான காலியிடங்கள்:

1. Mechanical - 11

2. ECE, EEE - 11

சம்பளம்: மாதம் ரூ.60,700 வழங்கப்படும்.

பணி: Systems Engineer

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.60,700 வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் பிரிவில் முதல் வகுப்பில் பிஇ, பி.டெக் முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவர் முதலில் டிரெய்னி சிஸ்டம் இன்ஜினியராக நியமிக்கப்பட்டு 4 மாதம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது மாதம் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். பின்னர் நிரந்த பணி வழங்கப்படும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம், தேதி குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.brahmos.com/careernew என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து வரும் 21.07.2022க்கு முன்பு பதிவு அல்லது விரைவு தபாலில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Chief General Manager, Brahmos Aerospace, Delhi Cantt, New Delhi - 110 010.

Friday, July 08, 2022

July 08, 2022

பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் நடைமுறை ரத்து!

பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் நடைமுறை ரத்து!

வேலைவாய்ப்பு பதிவுகள் இனி பள்ளிகளில் செய்யப்பட மாட்டாது என்று வேலைவாய்ப்பு துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் போது, அதே பள்ளியில் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய நாளில் இருந்து குறிப்பிட்ட நாட்களுக்கு பதிவு செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பதிவு மூப்பு எண் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தாண்டு முதல் பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுவதாகவும், அதற்கு பதிலாக வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம் அல்லது ஆன்லைன் மூலமும் பதிவு செய்து கொள்ளலாம் என வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பபட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் வேலைவாய்ப்பு பிரிவு இணையதளம் மூலம் 2011-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை நிகழ்நிலையாக அவரவர் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இனி பள்ளிகளில் பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்பவர்களுக்கு பதிவு அட்டை வழங்கப்படும். மேலும் வேலைவாய்ப்பு இணையதளமான www.tnvelaivaaaippu.gov.in என்ற முகவரியில் நேரடியாக மாணவர்களே பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இ-சேவை மையங்கள் மூலமும் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, July 06, 2022

July 06, 2022

மின்வாரிய பணி - அறிவிப்பாணை அனைத்தும் ரத்து: இனி எப்படி வேலைவாய்ப்பு தெரியுமா?



மின்வாரியத்தில் காலியாக உள்ள 5,318 பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட அறிவிப்பாணைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு காலிப் பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மின்வாரியத்தில் இளநிலை உதவியாளர், உதவிப் பொறியாளர், கள உதவியாளர், உதவி கணக்கு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 5,318 பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட அறிவிப்பாணைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

முன்பு அறிவிக்கப்பட்டிருந்த பணியிட அறிவிப்புகள் பற்றிய விவரம் கீழே



இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், `கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த தேர்வுகள் கொரோனா பரவல், சட்டப்பேரவைத் தேர்தல் போன்ற காரணங்களால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அண்மையில் சட்டப்பேரவையில், அனைத்து அரசு நிறுவனங்களின் ஆள் சேர்ப்பையும் டி.என்.பி.எஸ்.சி. மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டதால் மின்வாரிய ஆள் சேர்ப்பு அறிவிப்பாணைகள் ரத்து செய்யப்படுகிறது. கணினி வழித்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. விண்ணப்பித்தவர்களுக்கான கட்டணம் திருப்பித் தரப்படும்’ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog