Breaking

Showing posts with label Government School Teachers. Show all posts
Showing posts with label Government School Teachers. Show all posts

Wednesday, July 08, 2026

Monday, March 17, 2025

Sunday, March 09, 2025

Tuesday, March 04, 2025

Monday, January 20, 2025

Thursday, January 16, 2025

Thursday, December 19, 2024

Monday, December 16, 2024

Monday, November 25, 2024

Tuesday, April 09, 2024

Saturday, February 10, 2024

February 10, 2024

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இனி ஆன்லைன் வழி பயிற்சி Online training for government school teachers



அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இனி ஆன்லைன் வழி பயிற்சி Online training for government school teachers

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் இருந்து, ஆன்லைன் வழியில் நடத்த பள்ளிக்கல்வி செயலர் குமரகுருபரன் பிறப்பித்து உள்ள அரசாணை:



இதையும் படிக்க | ஆசிரியர்களுக்கான 75% பயிற்சியை இணைய வழியில் நடத்த முடிவு - அரசாணை வெளியீடு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கான கற்பித்தல் குறித்த பயிற்சியானது, மாவட்ட, மாநில அளவில் சில பயிற்சி மையங்களில் வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.பயிற்சி பெறுவோர், உணவு, உறைவிட வசதிகளுக்காக, மையங்களில் இருந்து நீண்ட துாரம் செல்ல வேண்டியுள்ளது. பயிற்சி மையங்களுக்கு ஆசிரியர்கள் செல்வதால், பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது.

எனவே, இனி நேரடி பயிற்சி வழங்காமல், அந்தந்த பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் இருந்து, ஆன்லைன் வழியில் நடத்தப்பட வேண்டும். வரும் கல்வி ஆண்டில், 75 சதவீத பயிற்சிகளை, ஆன்லைனில் மட்டுமே நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Friday, August 25, 2023

August 25, 2023

எளிய முறையில் ஆங்கிலம் கற்பிக்க அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி



எளிய முறையில் ஆங்கிலம் கற்பிக்க அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி Training of government school teachers to teach English in a simple way எளிய முறையில் ஆங்கிலம் கற்பிக்க அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி

அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு எளிய முறையில் ஆங்கிலம் கற்பிப்பதற்காக பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் (‘சமக்ர சிக்ஷா’), ஜாலி ஃபியூச்சா்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து புதிய முறையிலான பயிற்சித் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:

ஆசிரியா்களுக்கான ஆங்கில மொழிப் பயிற்சித் திட்டம் ‘ஜாலிஃபோனிக்ஸ்’ முறையில் தமிழகத்தில் கடந்த ஜூலை 24-ஆம் தேதி முதல் ஆக.31-ஆம் தேதி வரை 25 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள மாவட்டங்களில் ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஜாலி ஃபோனிக்ஸ் என்பது குழந்தைகளுக்கு வேடிக்கையான முறையில் ஆங்கிலம் கற்பிப்பதற்கான ஒரு விளையாட்டு வழி முறையாகும். கதை மற்றும் செயல்பாடுகள் மூலம் எழுத்து ஒலிகளைக் கற்றல், எழுத்து அமைப்பு, சொற்களில் உள்ள ஒலியைக் கண்டறிதல் உள்ளிட்ட 5 அத்தியாவசிய திறன்களை அடிப்படையாகக் கொண்ட கற்பித்தல் முறையாகும். பயிற்சிக்கான பாடத்திட்டமும் இந்தத் திறன்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. கில்பா்ட் ஜாலி உருவாக்கிய ‘ஜாலி ஃபோனிக்ஸ்’ முறை ஒலிகளை உச்சரிப்பதில் குழந்தைகளைத் திருத்த ஆசிரியா்களுக்கு உதவுகிறது. எழுத்து உருவாக்கம், எழுத்து ஒலிகள், கலத்தல், பிரித்தல் ஆகியவற்றை சரியாக தெரியப்படுத்த ‘கேம்கள்’ பதிவேற்றப்பட்டுள்ளன.

ஜாலி லோ்னிங் லிமிடெட் மூலம் அங்கீகரிக்கப்பட்ட நாடு முழுவதும் உள்ள பயிற்சியாளா்களால் ஆசிரியா்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சித் திட்டத்தில் ஏராளமான ஆசிரியா்கள் கலந்து கொண்டு எழுத்தின் ஒலிகள் மற்றும் வகுப்பில் செயல்படுத்த வேண்டிய வழிமுறைகளைக் கற்றுக் கொண்டு ஆா்வத்தை வெளிப்படுத்தினா்.

திட்டத்துக்கான ஒருங்கிணைப்பு பணிகளை ‘சமக்ர சிஷா’ மாநில திட்ட இயக்குநா் எம். ஆா்த்தி, ஜாலி ஃபியூச்சா்ஸ் திட்ட மேலாளா் எஸ்.வி.கோமதி உள்ளிட்டோா் மேற்கொண்டனா் என அவா்கள் தெரிவித்தனா்.

Sunday, July 16, 2023

Saturday, July 15, 2023

Monday, April 17, 2023

April 17, 2023

தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் 1-9ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை தொடக்கம்

Admission of students from 1st to 9th class in Tamilnadu government schools has started - தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் 1-9ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை தொடக்கம்

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை, இந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை தொடங்க உள்ளது. இதையடுத்து பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பெயர்களை இன்று முதல் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தொடக்க மற்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள் என மொத்தம் 32 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் அதிகபட்சமாக 1 கோடி பேர் படித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 10, பிளஸ் 2 வகுப்புகளில் பொதுத் தேர்வு எழுதி வெளியில் செல்வோர் எண்ணிக்கை 20 லட்சம் அளவுக்கு இருக்கும்.

இந்நிலையில் தனியார் பள்ளிகளில் உள்ள சில வசதிகளை விரும்பும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க விருப்பம் காட்டி வருகின்றனர். ஆனால், கடந்த கொரோனா காலத்துக்கு பிறகு அதிக அளவிலான பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கவே அதிக ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. அதன்படி கடந்த ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதையடுத்து, 2022-2023ம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாட்கள் ஏப்ரல் 28ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அதற்குள் கீழ் வகுப்புகளுக்கான தேர்வுகளை நடத்தி முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அடுத்த கல்வி ஆண்டான 2023-2024ல் மாணவர்களை சேர்ப்பதற்கான பணியில் பள்ளிக் கல்வித்துறை தற்போது இறங்கியுள்ளது. முன்னதாக அரசுப் பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணியை இன்று தொடங்கி 28ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டும். மேலும், இந்த வாரம் முதல் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன. மாணவர் சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வு பேரணிக்காக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் விளம்பர வாகனம் ஒன்றும் பேரணியில் வலம்வர உள்ளது.

அதில் அரசின் திட்டங்கள், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள், பள்ளி மேலாண்மைக் குழுக்களின் செயல்கள், என பல்வேறு அம்சங்கள் இடம் பெற உள்ளன. பேரணியில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். இதையடுத்து, அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்புகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர் அந்தந்த பகுதிகளில் உள்ள அருகமை பள்ளிகளில் தங்கள் குழந்தைகளின் பெயர்களை உடனடியாக பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் பள்ளிகளுக்கு ஓரிரு நாட்களில் அனுப்பி வைக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளன.

Sunday, April 02, 2023

April 02, 2023

அரசு பள்ளி ஆசிரியர் கைது!

அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் போக்சோவில் கைது- Government school teacher arrested in Pokso! -

செய்யாறு அருகே அரசு பள்ளியில் 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆங்கில ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கூழமந்தலில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு காஞ்சிபுரம் டவுன் ராஜகோபால் தெருவை சேர்ந்த முருகன்(43) என்பவர் ஆங்கில ஆசிரியராக உள்ளார். இவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி வந்தாராம். இதேபோல் நேற்று முன்தினம் ஆசிரியர் முருகன் 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டாராம். இதுபற்றி அந்த மாணவி பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளார். பின்னர் பெற்றோரிடமும் கூறி அழுதுள்ளார். இதையடுத்து செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஆசிரியர் முருகனை நேற்று கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Monday, March 27, 2023

March 27, 2023

ஆசிரியர்களுக்கு தனியாக பணி பாதுகாப்பு சட்டம் வேண்டும்: ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் தீர்மானம்

ஆசிரியர்களுக்கு தனியாக பணி பாதுகாப்பு சட்டம் வேண்டும்: ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் தீர்மானம் - Teachers need a separate job security law: Primary school teachers union resolution

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என, ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. தமிழக அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கத்தின், மாநில பொதுக்குழு கூட்டம் பூந்தமல்லியில் நேற்று நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.

மாநில பொதுச் செயலாளர் ஜான்வெஸ்லி வரவேற்றார். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், கடந்த ஆறு மாத காலம் கடந்தும் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு செய்து நிலுவை தொகை வழங்காமல் உள்ளது. ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் காலம் கடத்தாமல் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர் அவரது குழந்தையை தலைமை ஆசிரியை கண்டித்ததாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Saturday, February 11, 2023

February 11, 2023

அரசு பள்ளிக்குள் அர போதையில் ரவுடிகள்.. Gate-ஐ மூடி ரெய்டு விட்ட வாத்தியார்...

அரசு பள்ளிக்குள் அர போதையில் ரவுடிகள்.. Gate-ஐ மூடி ரெய்டு விட்ட வாத்தியார்... Intoxicated raiders inside the government school.

அரசு பள்ளிக்குள் அர போதையில் ரவுடிகள்.. Gate-ஐ மூடி ரெய்டு விட்ட வாத்தி - கத்தியை கீழே போட்டு கை கட்டி பம்மிய காட்சிகள்

February 11, 2023

இப்படி ஒரு அரசு பள்ளி ஆசிரியரா...12 வருடம் நோ லீவ்.. முடியுமா? - "இவர் வரலாறும் ஒரு யுகம் பாடும்..!"

இப்படி ஒரு அரசு பள்ளி ஆசிரியரா...12 வருடம் நோ லீவ்.. முடியுமா? - "இவர் வரலாறும் ஒரு யுகம் பாடும்..!" Is it possible for such a government school teacher...no leave for 12 years..? - "His history will sing an era..!"

12 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காத அரசு பள்ளி ஆசிரியர் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார்...

அரியலூர் மாவட்டம் காரைக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் தான் இந்த கீழ சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த கலையரசன்... இவர் கடந்த 12 ஆண்டுகளாக பள்ளியில் ஒரு நாள் கூட விடுப்பு எடுத்ததில்லையாம்... காலை சரியாக 9 மணிக்கு பள்ளிக்கு வந்து மாணவர்களை ஒழுங்கு படுத்தி வகுப்பு துவங்குவதற்கு முன்பே அவர்களுக்கு ஏதாவது பாடம் சம்மந்தமாக கற்று தருவது ஆசிரியர் கலையரசனின் வழக்கம்... விடுமுறை நாட்களிலும் கூட அரசு சார்பாக வழங்கப்படும் சலுகைகள், திட்டங்களை முறையாக மாணவர்களுக்கு வழங்கி முன் நின்று அனைத்தையும் செய்து முடித்து விடுவார் கலையரசன்... 12 வருடங்களாக விடுப்பே எடுக்காமல் பள்ளிக்கு வரும் கலையரசன் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார்.

Friday, September 23, 2022

Total Pageviews

Search This Blog