New employment News
February 09, 2025
Showing posts with label latest employment News. Show all posts

Sunday, February 09, 2025
Thursday, March 23, 2023
Latest News
March 23, 2023
இ-சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

How to Apply for a Seva Center in Tamil Nadu?
ஈரோடு மாவட்டத்தில் இ-சேவை மையம் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையிலும், இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்திடவும் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்ஆளுமை முகமையானது, தமிழ்நாடு அரசு கேபில் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை, கிராமப்புற தொழில் முனைவோர்கள் ஆகிய நிறுவனங்களின் மூலம் இ-சேவை மையங்களை செயல்படுத்தி அரசின் இணையதள சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகின்றது. இதனை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு மின்ஆளுமை முகமையானது,“அனைவருக்கும் இ-சேவை மையம்”திட்டத்தின் மூலம் அனைத்து குடிமக்களும் இசேவை மையங்கள் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இசேவை மையங்களை ஏற்படுத்திடவும், மாவட்டங்களில் இசேவை மையங்களின் எண்ணிக்கையினை அதிகரித்து இசேவை மையங்களில் பொது மக்கள் காத்திருக்கும் நேரத்தினை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதாகும்.
எனவே விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை அடுத்த மாதம் 14ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் இசேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.3000 ஆகும் நகர்ப்புறத்திற்கான கட்டணம் ரூ.6000 ஆகும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்களுக்கு உரிய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆனது விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Thursday, January 12, 2023
Latest News
January 12, 2023
அயலகத் தன்னார்வல தமிழ் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சி: அமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

அயலகத் தன்னார்வல தமிழ் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சி என்ற கல்வித் திட்டம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இணையவழியில் வழங்கப்படவுள்ளது. அயலகத் தமிழர் தினம் 2023ஐ முன்னிட்டு, இன்று (12.01.2023) சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் முன்னிலையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ் இணையக் கல்விக்கழகம், அயலக மாணவர்களுக்களின் தமிழ் கற்றல்-கற்பித்தலுக்காகத் தமிழ் பரப்புரைக் கழகத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அயலகத் தன்னார்வல தமிழ் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சி என்ற கல்வித் திட்டம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இணையவழியில் வழங்கப்படவுள்ளது. அயலகத் தமிழர் தினம் 2023ஐ முன்னிட்டு, 12.01.2023 அன்று சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் முன்னிலையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் அவர்களும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் மூ. சௌந்தரராஜன் அவர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்நிகழ்வில் அயலகத் தமிழ் ஆர்வலர்கள், தமிழ்ச் சங்கப் பிரதிநிதிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tuesday, October 04, 2022
Villagers
October 04, 2022
2,748 கிராம உதவியாளர்களை தேர்வு செய்வதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவக்கம்!

- Preliminary work for selection of 2,748 village assistants has started!
தமிழகம் முழுதும் 2,748 கிராம உதவியாளர்களை தேர்வு செய்வதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கி உள்ளன.ஊராட்சிகளில் உள்ள கிராம உதவியாளர்கள் வாயிலாக, அரசின் பல்வேறு திட்டங்கள், தகுதியுடைய பயனாளிகளை சென்றடைகிறது.
ஆனால், மாநிலம் முழுதும் 2,748 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.தற்போது, இப்பணியிடங்களை நிரப்புவதற்கான முன்னேற்பாடு துவங்கி உள்ளது.இது தொடர்பாக, மாவட்ட கலெக்டர்களுக்கு, வருவாய் நிர்வாக கமிஷனர் பிரபாகர் எழுதியுள்ள கடிதம்:கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பான அறிவிப்பை, வரும் 10ம் தேதி, தாலுகா அளவில் வெளியிட வேண்டும்.
விண்ணப்பங்களை நவ., 7 வரை பெற வேண்டும்.விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணிகளை, 14ம் தேதியும்; எழுத்து தேர்வை, 30ம் தேதியும் நடத்த வேண்டும். நேர்முக தேர்வை டிச., 15, 16ல் நடத்த வேண்டும்.தேர்வு செய்யப்பட்ட கிராம உதவியாளர்கள் பட்டியலை, 19ம் தேதி வெளியிட வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.