Breaking

Showing posts with label 11th. Show all posts
Showing posts with label 11th. Show all posts

Tuesday, March 03, 2026

March 03, 2026

11th Chemistry - Chapter Wise Evaluation And MCQ Question With Answer Key



11th Chemistry - Chapter Wise Evaluation And MCQ Question With Answer Key

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD 11th Chemistry - Chapter Wise Evaluation And MCQ Question With Answer Key

Saturday, February 28, 2026

Thursday, December 05, 2024

Sunday, March 24, 2024

Saturday, November 25, 2023

November 25, 2023

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண்: வழிகாட்டுதல்கள் வெளியீடு



11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

பொதுத் தேர்வு எழுதும் 11, 12-ம்வகுப்பு மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் தருவதற்கான வழிகாட்டுதல்களை தேர்வுத் துறை தற்போது வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

CLICK HERE TO DOWNLOAD PDF

11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் அகமதிப்பீடு மதிப்பெண் அளிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்ப வேண்டும். இவற்றை பின்பற்றி வருகைப் பதிவு, பள்ளித் தேர்வுகள், செயல் திட்டங்கள், கல்வி இணைச் செயல்பாடுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உரிய அறி வுறுத்தல் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Monday, October 16, 2023

October 16, 2023

பிளஸ் 1 தமிழ் திறனாய்வுத் தேர்வு: 2.20 லட்சம் பேர் பங்கேற்பு

பிளஸ் 1 தமிழ் திறனாய்வுத் தேர்வு: 2.20 லட்சம் பேர் பங்கேற்பு

சென்னை, அக். 15: தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கான தமிழ் இலக்கிய திறனாய்வுத்தேர் வில் 2.20 லட்சம் பேர் பங்கேற்றனர்.

அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகையான பள்ளிகளிலும் (சிபி எஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட) பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடத்தப் பட்டு வருகிறது.

இந்தத் தேர்வில் சிறப்பிடம் பெறும் 1,500 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுக்கு ஊக் கத் தொகை வழங்கப்படும். தமிழக தேர்வுத் துறை சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான திறனாய்வுத் தேர்வு மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு மொத்தம் 2,36,910 மாணவ, மாணவிகள் விண்ணப் பித்தனர். அவர்களில் 2,20,880 பேர் தேர்வு எழுதினர். மொத்தம் 16,030 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

இந்த முறை வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள், ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் முடிவுகள் நவம்ப ரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Saturday, September 23, 2023

September 23, 2023

படிக்காததை கண்டித்த பெற்றோர் - 11ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

படிக்காததை கண்டித்த பெற்றோர் - 11ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

11ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.படிக்கா ததை பெற்றோர் கண்டித்த தால்இந்தவிபரீதமுடிவுவை எடுத்ததாக விசாரணையில் தெரிய வந்தது.

சென்னைபள்ளிக்கரணை அடுத்த கோவிலம்பாக் கத்தை சேர்ந்தவர் மாணவி ஹரிதா (16),தனியார் பள்ளி யில்11ம் வகுப்பு படித்துவந் தார்.

பெற்றோர் மாணவிபடிக் காததை கண்டித்ததாக கூறப் படுகிறது.

இந்நிலையில் வீட்டில் தனி அறையில் உறங்கச் சென்ற மாணவி, காலையில் பெற்றோர் கதவை தட்டிய போது கதவு திறக்கப்படவில்லை, கதவை உடைத்து பார்த்த போது புடவையில் தூக் கிட்டு தொங்கிய நிலையில் இருந்ததைத் கண்டு அதிர்ச் சியடைந்தனர். உடனடியாக ஆம்புலன் சிற்கு தகவல் கொடுக்கப் பட்டு சோதனை செய்ததில் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்ததன் பேரில் பள்ளிக்கரணைகாவல்துறை யினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டைஅரசுமருத் துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்

Saturday, August 12, 2023

August 12, 2023

பிளஸ் 1 துணைத் தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு!



பிளஸ் 1 துணைத் தேர்வு விடைத்தாள் நகல்

அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்த கல்வியாண்டு நடைபெற்ற பிளஸ் 1 துணைத் தேர்வர்கள் தங்கள் விடைத்தாள் நகலினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வர்கள் ஆக.,14ம் தேதி பிற்பகல் முதல் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணபிக்க விரும்பினால், இதே இணையதளத்திலிருந்து அதற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:ஜூன்/ஜூலை 2023, மேல்நிலைத் துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு ஆக., 16ஆம் தேதி முதல் 18ம் தேதிக்குள் காலை 11 மணி முதல் மாலை 5.00 மணி வரை நேரில் சென்று உரிய கட்டணத்தை செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களில் (தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு) முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு சென்று தேர்வர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

மறுமதிப்பீடிற்கு கட்டணமாக ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.505/-. மறுகூட்டல்-II கான கட்டணம் உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ.305/-, மற்ற பாடங்கL ஒவ்வொன்றுக்கும் ரூ.205/-. இக்கட்டணங்களை உதவி இயக்குனர்/முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Monday, August 07, 2023

August 07, 2023

பிளஸ் 1 மாணவர்கள் ரூ.10,000 உதவித்தொகை பெற தயாரா? - விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.08.2023

பிளஸ் 1 மாணவர்கள் உதவித்தொகை பெற தயாரா?

2023-24ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் பிளஸ் 1 வகுப்பில் பயிலும் மாணவர்கள் இந்த உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம்.

உதவித்தொகை விவரம்

அரசுப் பள்ளி மாணவர்களின் திறனைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தக் கல்வியாண்டு முதல் ‘தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு’ நடத்தப்படவுள்ளது.

இத்தேர்வின் மூலம் 1,000 பேர் (நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டைப் பின்பற்றி 500 மாணவர்கள், 500 மாணவிகள்) தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

ஒரு கல்வியாண்டுக்கு ரூ.10,000 (மாதம் ரூ.1000 வீதம் ஒரு கல்வியாண்டுக்கு 10 மாதங்களுக்கு மட்டும்) இளநிலை பட்டப்படிப்பு வரை இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசின் 9 , 10ஆம் வகுப்புகளின் கணிதம் அறிவியல், சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டு இருதாள்களாகத் தேர்வு நடத்தப்படும். ஒவ்வொரு தாளிலும் 50 கேள்விகள் கேட்கப்படும். முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60, இரண்டாம் தாளில் அறிவியல், சமூக அறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 கேட்கப்படும்.

முக்கியத் தேதிகள்

வருகிற 23.09.2023 (சனிக்கிழமை) அன்று திறனாய்வுத் தேர்வு நடைபெற உள்ளது. முதல் தாள் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையிலும்; இரண்டாம் தாள் பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரையிலும் நடைபெறும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை

www.dge.tn.gov.in என்கிற இணையதளத்தில் 07.08.2023 முதல் 18.08.2023 ஆம் தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். பின்பு சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகையாக ரூ.50ஐ சேர்த்து பள்ளித் தலைமையாசிரியரிடம் மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 18.08.2023

Total Pageviews

Search This Blog