Breaking

Showing posts with label Star Nurse Job. Show all posts
Showing posts with label Star Nurse Job. Show all posts

Wednesday, February 22, 2023

February 22, 2023

சவுதி அரேபியாவில் பெண் செவிலியர்களுக்கு பணி - வரும் 28, மார்ச் 1ல் சென்னையில் நேர்காணல்: தமிழக அரசு அறிவிப்பு

சவுதி அரேபியாவில் பெண் செவிலியர்களுக்கு பணி வரும் 28, மார்ச் 1ல் சென்னையில் நேர்காணல்: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு

சவுதி அரேபியாவில் பெண் செவிலியர்கள் பணிக்கு சென்னையில் வருகிற 28, மார்ச் 1ல் நேர்காணல் நடைபெறும் என்று அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.ந. மகேஸ்வரன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் பிஎஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்ற 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். இப்பணிக்கான நேர்காணல் சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில் வருகிற 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத்தளமான www.omcmanpower.com-ல் கண்டு பயனடையலாம். மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் (9566239685, 6379179200) (044-22505886, 044-22502267) வாயிலாக அறிந்து கொள்ளலாம். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜென்ட்களோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து கொண்டு இந்நிறுவனத்தின் மூலம் பயனடையலாம். பதிவு மற்றும் பணி விவரங்களின் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Friday, February 03, 2023

February 03, 2023

570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தர பணி ஆணை - முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்

பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர்:

சென்னை, தலைமை செயலகத்தில் மருத்துவத்துறை சார்பில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தர பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Thursday, January 19, 2023

January 19, 2023

10 தற்காலிக செவிலியர் பணியிடங்கள் - விண்ணப்பிக்க 27/01/2023 கடைசி

தென்காசியில் தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!10 Temporary Nurse Vacancies - Last to apply 27/01/2023

தென்காசி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 தற்காலிக செவிலியர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது - தென்காசி மாவட்டம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கீழ்கண்ட பதவியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 27/01/2023 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் - செவிலியர் (Staff Nurse), பதவியிடங்களின் எண்ணிக்கை - 10, கல்வித்தகுதி - செவிலியர் பட்டயபடிப்பு (DGNM)அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.sc Nursing) இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தின் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் படித்துள்ளவர்கள். வயது - 50 வயது வரை, மாத ஊதியம் - ரூ.18,000/-. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்பட மாட்டாது. கோவிட் - 19 காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கோவிட் -19 காலத்தில் தனியார் கோவிட் மருத்துவமனையில் பணிபுரிந்தவர்கள் அனுபவ சான்றிதழ் இணை இயக்குநர் சான்றொப்பத்துடன் சமர்ப்பிக்கவும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தென்காசி மாவட்டம் என்ற முகவரிக்கு வரும் 27ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப படிவங்கள் தென்காசி மாவட்ட(https://tenkasi.nic.in/notice_category/recruitment) வலைதளத்தில் வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது, என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்

Saturday, August 20, 2022

August 20, 2022

ஸ்டார் நர்ஸ் பணி - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2022

இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையில் (ITBP) காலியாக உள்ள ஸ்டார் நர்ஸ் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Sub Inspector (Staff Nurse)

காலியிடங்கள்: 18

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

வயதுவரம்பு: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் General Nursing & Midwifery பிரிவில் டிப்ளமோ முடித்து மத்திய, மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ITBP ஆல் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, முழு மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2022

Total Pageviews

Search This Blog