Breaking

Showing posts with label Polytechnic Admission. Show all posts
Showing posts with label Polytechnic Admission. Show all posts

Monday, November 03, 2025

Tuesday, March 18, 2025

Thursday, November 03, 2022

November 03, 2022

பாலிடெக்னிக் கல்லுாரி செமஸ்டர் தேர்வு அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லுாரி செமஸ்டர் தேர்வு அறிவிப்பு

டிப்ளமா இன்ஜினியரிங் படிக்கும், பாலிடெக்னிக் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக உயர் கல்வித் துறையின் அங்கீகாரம் பெற்று செயல்படும், 400க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், டிப்ளமா இன்ஜினியரிங் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த மாணவர்களுக்கு, ஆண்டுக்கு இரண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

நடப்பு கல்வி ஆண்டுக்கான முதல் செமஸ்டர் தேர்வு, இம்மாதம் 25ம் தேதி துவங்க உள்ளது. பல்வேறு பாட வாரியாக தினமும் தேர்வுகள் திட்டமிடப்பட்டு உள்ளன.

செய்முறை தேர்வுகள், டிச., 13ல் நடத்தப்படும். டிச., 17ல் தேர்வுகள் முடிந்து விடுமுறை அளிக்கப்பட உள்ளது. பின், ஜனவரி 2ல், மீண்டும் கல்லுாரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்வுக்கான விரிவான அட்டவணை, வரும் 11ம் தேதி வெளியிடப்படும் என, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

Sunday, July 24, 2022

July 24, 2022

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்கை.. தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் !!

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான 2ஆம் சுற்று விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் 58 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் தொழில்நுட்பப் பட்டயப் (டிப்ளமோ) படிப்புகளுக்கு 20,440 இடங்கள் உள்ளன. இதேபோல், பகுதிநேர படிப்புகளுக்கும் 1,025 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு (2022-23) பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவுகடந்த ஜூன் 23ஆம் தேதி தொடங்கி ஜூலை 16ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இதில் முதலாமாண்டு சேர்க்கைக்கு 19,000 மாணவர்களும், நேரடி 2ஆ-ம் ஆண்டுக்கு 15,500 பேரும், பகுதிநேரப் படிப்புகளுக்கு 1,100 பேர் வரையும் விண்ணப்பித்தனர். தற்போது விண்ணப்பித்த மாணவர்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு அந்தந்த கல்லூரிகள் மூலம் நடைபெற்றுவருகிறது.

இதற்கிடையே 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ நேற்று முன்தினம் வெளியிட்டது. எனவே, சிபிஎஸ்இ மாணவர்கள் விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்க வேண்டுமெனஉயர்கல்வித் துறை அறிவுறுத்தியிருந்தது.இதுதவிர சேர்க்கை இடங்களைவிட குறைவான மாணவர்களே விண்ணப்பித்து உள்ளனர்.

இவ்விரு முறையையும் கருத்தில் கொண்டு பாலிடெக்னிக் படிப்புகளுக்கான 2ஆம் சுற்று விண்ணப்பப் பதிவை தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகம் நேற்று முதல் தொடங்கியது. அதன்படி இந்த 2ஆம் சுற்று விண்ணப்பப்பதிவை மாணவர்கள் சுயமாக மேற்கொள்ள முடியாது.

தாங்கள் பயில விரும்பும் கல்லூரிகள் மூலமே விண்ணப்பிக்க இயலும். இதற்கான பிரத்யேக வசதிகள் கல்லூரிகளுக்கு ஏற்பாடு செய்துதரப்பட்டுள்ளன. எனவே, விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி துரிதமாக கல்லூரிகளுக்கு நேரில் சென்று சேர்க்கையை உறுதி செய்து கொள்ளவேண்டும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 9150486098, 9150496098, 9360099586 ஆகிய எண்களில் தொடர்புக் கொண்டு விளக்கம் பெறலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, June 27, 2022

June 27, 2022

பாலிடெக்னிக் அட்மிஷன் - விண்ணப்ப பதிவு துவக்கம்

பாலிடெக்னிக் அட்மிஷன் விண்ணப்ப பதிவு துவக்கம்

தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு, விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், 57 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு, பகுதி நேர டிப்ளமா மற்றும் நேரடி டிப்ளமா படிப்பு சேர்க்கைக்கு, www.tnpoly.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.ஜூலை, 8 வரை பதிவுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப விபரங்கள், கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்ப பதிவு செய்வதற்கான உதவி மையங்கள் உள்ளிட்ட விபரங்களை, www.tnpoly.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Total Pageviews

Search This Blog