Breaking

Showing posts with label art festival. Show all posts
Showing posts with label art festival. Show all posts

Thursday, November 27, 2025

Wednesday, November 12, 2025

Thursday, November 23, 2023

November 23, 2023

State Art Festival - மாநில கலைத்திருவிழாவில் பங்கேற்க 436 மாணவர்கள் தேர்வு



மாநில கலைத்திருவிழாவில் பங்கேற்க 436 மாணவர்கள் தேர்வு 436 students selected to participate in the State Art Festival

திருச்சி, செங்கல்பட்டு, வேலுார் மாவட்டங்களில் நடக்கும் மாநில கலைத்திருவிழாவுக்கு, திருப்பூரில் இருந்து, மாணவ, மாணவியர் புறப்பட்டு சென்றனர்.ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கான மாநில கலைத்திருவிழா நேற்று (21ம் தேதி) துவங்கி வரும், 24ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது.

ஆறு முதல் எட்டாம் வகுப்பு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, வேலுாரிலும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு செங்கல்பட்டிலும், மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1, பிளஸ் 2 மாணவருக்கு திருச்சியிலும் நடக்கிறது.
கடந்த அக்., மாதம், திருப்பூரில் நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்று, முதலிடம் பெற்று, மாணவ, மாணவியர், 436 பேர், மாநில போட்டியில் பங்கேற்க சென்றனர். திருப்பூர், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து, 15 அரசு பஸ்கள் மூலம் மாணவர்கள் வழியனுப்பி வைக்கப்பட்டனர்.

முன்னதாக, மாணவர்களிடம் பேசிய, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, நம் மாவட்டத்துக்கு வெற்றியை தேடித்தர, உங்களது திறமையை காட்ட உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. மாநில போட்டிகளில் கவனமுடன் பங்கேற்று, வெற்றி பெற்று திரும்பி வாருங்கள், என பேசினார்.

Tuesday, October 10, 2023

October 10, 2023

அரசு பள்ளிகளில் கலைத் திருவிழா இன்று தொடக்கம்: மாணவ, மாணவியர் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு

அரசு பள்ளிகளில் கலைத் திருவிழா இன்று தொடக்கம்: மாணவ, மாணவியர் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு Art festival in government schools begins today: Collector invites students to participate

சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா இன்றுமுதல்நடைபெறவுள்ளது. இதில் மாணவ,மாணவியர் கலந்துகொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் வகையில் கலைத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. பள்ளிக்கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டுக்கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதே இந்த கலைத் திருவிழாவின் நோக்கமாகும். அந்த வகையில்அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் விதமாக பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும்மாநில அளவில் இந்த ஆண்டு கலைதிருவிழா நடத்தப்படவுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவிகள் பங்கேற்கும் கலைத் திருவிழா நிகழ்ச்சிகள் பள்ளி அளவில் இன்று (அக்.10) முதல் 14-ம் தேதி வரையும், வட்டார அளவில் 18 முதல் 21-ம் தேதி வரையும், மாவட்ட அளவில் 26 முதல் 28-ம் தேதி வரையும், மாநில அளவில் நவ.21-ம் தேதி முதல் நவ.24-ம் தேதி வரையும் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிகளில் அனைத்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, January 19, 2023

January 19, 2023

பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழாவில் மாநில அளவில் கோவை மாவட்டம் முதலிடம்

Coimbatore tops the state level in art festival for school students பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழாவில் மாநில அளவில் கோவை மாவட்டம் முதலிடம்

கோவை: தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றன. 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை, 9-ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை, பிளஸ் 1, பிளஸ் 2 என மூன்று பிரிவுகளில் 207 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில், மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றன. இதில், கோவை மாவட்டம் முதலிடம் பிடித்தது.

இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி கூறியதாவது: கோவை மாவட்டத்தில் பள்ளி அளவில் நடைபெற்ற போட்டிகளில் 1.03 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் வட்டார அளவிலான போட்டிகளிலும், வட்டார அளவில் முதல் இரு இடங்களைப் பெற்ற 12,364 மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளிலும் கலந்துகொண்டனர்.

சேலம் இரண்டாம் இடமும், புதுக்கோட்டை மூன்றாம் இடமும் பிடித்தன. பள்ளி ஆசிரியர்கள், பெற்றோரின் ஊக்குவிப்பு ஆகியவை மாணவர்கள் அதிக வெற்றிகளை பெற ஊக்கமளிப்பதாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Total Pageviews

Search This Blog