Breaking

Showing posts with label Tamil Nadu Governor. Show all posts
Showing posts with label Tamil Nadu Governor. Show all posts

Tuesday, January 23, 2024

January 23, 2024

ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியில், கலந்துகொண்டால் தான் மாணவர்களுக்கு வருகைப்பதிவு என சுற்றறிக்கை



ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியில், கலந்துகொண்டால் தான் மாணவர்களுக்கு வருகைப்பதிவு என சுற்றறிக்கை

சென்னை அண்ணா பல்கலை.யில் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியில், கலந்துகொண்டால் தான் மாணவர்களுக்கு வருகைப்பதிவு என சுற்றறிக்கை

அண்ணா பல்கலை. வளாகத்தில் நடைபெறும் நேதாஜி பிறந்தநாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு ஆளுநரின் நிகழ்ச்சியில், அண்ணா பல்கலை. கிண்டி வளாகத்தில் உள்ள ECE, CSE, IT துறை மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என சுற்றறிக்கை

மாணவர்களின் வருகையை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் பதிவு செய்ய வேண்டும் எனவும் துறை தலைவர்களுக்கு கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வர் அறிவுறுத்தல்

Wednesday, October 11, 2023

October 11, 2023

மாணவர்கள் மன அழுத்தத்தை தேசிய கல்வி கொள்கை குறைக்கும்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து



மாணவர்கள் மன அழுத்தத்தை தேசிய கல்வி கொள்கை குறைக்கும்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து National Education Policy will reduce student stress: Tamil Nadu Governor RN Ravi

சென்னை: மாணவர்களின் மன அழுத்தத்தை தேசிய கல்விக் கொள்கை குறைக்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். உலக மனநல நாளை முன்னிட்டு சென்னை, கிண்டியில் உள்ளஆளுநர் மாளிகையில் மனநலஆரோக்கியம் சார்ந்த ஆளுமைகள்மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். நிகழ்வில், மனநல பேராசிரியர் லட்சுமி எழுதிய ‘சொல்லப்படாத இந்திய மனோதத்துவத்தின் ரகசியம்’ என்ற புத்தகத்தை ஆளுநர் வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது: நம்மிடம் நம்பத்தகுந்த, சரியான கணக்கீடு இல்லை. ஆனால் 50 லட்சம் பேராவது நம் நாட்டில் ஆட்டிசம்பாதிப்பால் சிரமப்பட்டு வருகிறார்கள். மனநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இச்சூழலில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபடுவோருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மனநலம் பாதித்த குழந்தைகளை கவனத்துடன் பார்த்துக் கொள்வது அவசியம். இப்போதுதாய், தந்தை ஆகியோர் குழந்தைகள் அருகில் இருந்தபோதும் அவர்களை சமூக வலைதளங்கள் பிரித்துவைக்கின்றன. தாய், தந்தையர் செல்போனில் மூழ்கி இருப்பதால் குழந்தைகளை கவனிக்க முடிவதில்லை.


ஆன்மிகம், பயிற்சி, உடலைப் பேணுதல் போன்றவை இந்திய வாழ்வியலில் உள்ளது. மத்திய அரசு உருவாக்கிய தேசிய கல்விக் கொள்கையில் மன அழுத்தத்தை குறைப்பதற்கான பல வழிகள் உள்ளன. இக்கல்விக் கொள்கை மன அழுத்தத்தை குறைக்கும். இவ்வாறு ஆளுநர் பேசினார்.

நிகழ்வில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன், ஐஆர்எஸ் அதிகாரி நந்தகுமார், சென்னை சமூகப் பணி கல்லூரி டீன் சுபாஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Saturday, September 30, 2023

September 30, 2023

விஸ்வகர்மா திட்டம் குலக் கல்வி திட்டம் இல்லை: கவர்னர் கருத்தும் எதிர்க் கருத்துக்களும்!



விஸ்வகர்மா திட்டம் குலக் கல்வி திட்டம் இல்லை: கவர்னர் கருத்தும் எதிர்க் கருத்துக்களும்!

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை தி.மு.க., எதிர்க்கும் நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வெள்ளியன்று விஸ்வகர்மா திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய கவர்னர் ரவி, “விஸ்வகர்மா ஒன்றும் குலக்கல்வித் திட்டம் இல்லை. அரசியல் ஆதாயத்திற்காக நஞ்சை பரப்புகின்றனர்” என விமர்சித்தது சமூக வலைதளங்களில் விவதாத்தை கிளப்பியுள்ளது. விஸ்வகர்மா திட்டம் என்றால் என்ன?

கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி தனது செங்கோட்டை உரையில் விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்தார். குடும்பத்தின் பாரம்பரிய தொழில்களை குறிப்பாக அழிந்து வரும் கைவினை தொழில்களை வலுப்படுத்த இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இத்திட்டத்திற்காக 2023 முதல் 2028 வரை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.13,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கைவினைப் பொருட்களின் தரத்தை உயர்த்தி, அவற்றை உள்ளூர் மற்றும் உலகளாவிய சந்தைக்கு கொண்டு செல்ல இத்திட்டம் ஊக்குவிக்கும். இத்திட்டத்தின் கீழ் தேர்வாகும் கைவினைக் கலைஞர்கள், பிற தொழில் செய்வோருக்கு முதல் தவணையாக ரூ.1 லட்சம், இரண்டாம் தவனையாக ரூ.2 லட்சம் கடன் வழங்கப்படும். குறிப்பாக இவற்றிற்கான வட்டி வெறும் 5% மட்டுமே.

இவைத் தவிர பயனாளிகளுக்கு திறன் மேம்பாடு, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்கத்தொகை, சந்தைப்படுத்த உதவி, கருவிகளுக்கு ஊக்கத்தொகை ஆகியவையும் வழங்கப்படும்.

பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் மொத்தம் 18 தொழில்கள் உள்ளன. தச்சர், படகு கட்டுபவர், கொல்லர், சுத்தியல் போன்ற இரும்புக் கருவிகள் செய்பவர், பூட்டு தயாரிப்பவர், குயவர், சிற்பி, செருப்புத் தைக்கும் தொழிலாளி, செருப்பு தயாரிப்பவர், மீன்பிடி வலை பின்னுபவர் போன்றவை அதில் அடக்கம். கவர்னர் பேசியது என்ன?

சிலர் எல்லாவற்றையும் அரசியல் கண்ணாடி அணிந்து பார்க்கின்றனர். அப்படி தான் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தைக் குலக் கல்வித் திட்டம் என்று விமர்சிக்கின்றனர். இந்தத் திட்டம் அத்தியாவசிய தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு மிகவும் சிறந்த முறையில் உதவும். அவர்கள் புதிய உபகரணங்களை வாங்கவும், தொழிலை பெருக்கவும் கடன் கிடைக்கும். தச்சர், கொல்லர் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களை விட்டுவிட முடியாது. ஆனால் இதனைக் குலக்கல்வி திட்டம் என்று சொல்லி மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். இவ்வாறு கூறினார்.

தி.மு.க., பெயரைக் குறிப்பிடாமல் கவர்னர் இவ்வாறு பேசியிருந்தார். இதற்கு தி.மு.க.,வினர் சமூக வலைதளங்களில் எதிர்கருத்துக்களைக் கூறி வருகின்றனர். “யார் என்ன தொழில் செய்கிறார்களோ அத்தொழில் தொடர்பான கருவிகள் வாங்கவும், விரிவாக்கத்திற்கும் தான் கடன் தரப்படுகிறது. கேட்டால் பாரம்பரிய குடும்பத் தொழிலின் அறிவை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதாக கூறுகின்றனர். அப்படி இல்லாமல் யார் வேண்டுமானாலும் எந்த தொழிலையும் தேர்வு செய்யலாம், மானிய வட்டியில் கடன் தருகிறோம், திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கிறோம் என்றால் பிரச்னை இல்லை.” போன்ற கருத்துக்களை தங்கள் தரப்பாக முன் வைக்கின்றனர்.

Wednesday, September 27, 2023

September 27, 2023

துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் குழுவை அமைக்க, உயர்கல்வித்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி.



உயர்கல்வித்துறைக்கு அதிகாரம் இல்லை - ஆளுநர் அறிக்கை

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் குழுவை ஆளுநரின் அனுமதியின்றி அமைக்க உயர்கல்வித்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை; துணைவேந்தர் தேடுதல் குழு தமிழக அரசு அமைத்தது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது; தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழை திரும்பப் பெற வேண்டும் - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்க தேர்வு குழு அமைக்க ஆளுநர் எதிர்ப்பு; தனது ஒப்புதலின்றி தேர்வு குழு அமைக்க அதிகாரம் இல்லை என குற்றச்சாட்டு.

ஆளுநரின் ஒப்புதலின்றி துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் குழுவை அமைக்க, உயர்கல்வித்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி.

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தொடர்பாக வெளியிட்ட அரசிதழை உடனடியாக திரும்பப்பெற உயர்கல்வித்துறை செயலாளருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு.

துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்க ஆளுநர் ரவி நியமித்த தேடுதல் குழுவில் யூ.ஜி.சி. பிரதிநிதியை நீக்கியிருந்தது தமிழ்நாடு அரசு. Press Release No: 63

Date:26.09.2023


RAJ BHAVAN, TAMIL NADU - PRESS RELEASE

The Hon'ble Governor, as the Chancellor of University of Madras has issued a Notification dated 06.09.2023 notifying the constitution of the Search-cum-Selection Committee for identification of candidate for appointment of the Vice Chancellor of the University and the same was also published in the website of Raj Bhavan, as well as made known to the public by a press release. The information of Notification was also published in the Tamil daily viz. 'Dhina Thanthi' dated 12.09.2023 and English daily viz. 'Times of India' dated 13.09.2023.

By an act of impropriety, the Principal Secretary to Government, Higher Education Department, has issued a further notification of a Search-cum-Selection Committee by excluding the nominee of the UGC Chairman and the same is published in the Government Gazette on 13.09.2023, without adhering to the decision of the Hon'ble Supreme Court of India and in violation of the same. The said notification published on 13.09.2023 is void ab initio, being contrary to the UGC Regulations and order of the Hon'ble Supreme Court. The said publication in the Government gazette is without any such authority from the Chancellor, being the head of the University and that the Principal Secretary to Government, Higher Education Department, has no role in the affairs of the University and hence the Chancellor has called upon to withdraw the said Notification published in the Tamil Nadu Government Gazette Extraordinary.

Tuesday, September 05, 2023

September 05, 2023

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம்!



Tamil Nadu government letter to the governor regarding the appointment of the university vice-chancellor!

ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம்



66 "மாநில பல்கலையில் துணைவேந்தரை நியமிக்க யுஜிசி விதிகளை பின்பற்றினால் போதுமானது; துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினரை சேர்க்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இல்லை” – பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம்

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு அரசு பதில் கடிதம் அனுப்பியுள்ளது. கோவை பாரதியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைகழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. இதனை நிரப்புவதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பாக அளுநருக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. துணைவேந்தரை தேர்ந்தெடுக்க யுஜிசி பிரதிநிதியை சேர்க்க வேண்டுமென ஆளுநர் நிபந்தனை விதித்ததால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றின்னால் போதும் என்றும், உறுப்பினரை புதிதாக சேர்க்க தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Tuesday, August 22, 2023

August 22, 2023

தமிழக அரசின் பொதுப் பாடத்திட்டம்: பல்கலை.கள், கல்லூரிகளுக்கு ஆளுநரின் அறிவுறுத்தல்!

தமிழக அரசின் பொதுப் பாடத்திட்டம் அவசியமில்லை: பல்கலை.கள், கல்லூரிகளுக்கு ஆளுநா் ஆா். என். ரவி அறிவுறுத்தல்

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மாநில அரசின் பொதுப் பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என ஆளுநா் ஆா். என். ரவி தெரிவித்துள்ளாா்.

தமிழக அரசின் பொதுப் பாடத்திட்டத்தை தன்னாட்சிக் கல்லூரிகளிலும் அமல்படுத்துவது தொடா்பாக தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரி முதல்வா்களுடன் உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி அண்மையில் ஆலோசனை நடத்தினாா். அந்தக் கூட்டத்தில் ஒருசில கல்லூரிகளின் முதல்வா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், பொதுப் பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து தன்னாட்சிக் கல்லூரிகள் தங்கள் விருப்பத்துக்கேற்ப முடிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழங்களின் துணைவேந்தா்கள், கல்லூரி முதல்வா்களுக்கு ஆளுநா் ஆா். என். ரவி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

தமிழக அரசின் உயா் கல்வித் துறையானது கலை, அறிவியல் கல்லூரிகள் அனைத்தும் பொதுப் பாடத் திட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்று வலிந்து நிா்ப்பந்திப்பது தொடா்பாக பல்வேறு கல்வியாளா்கள், பல்கலைக்கழக துணைவேந்தா்கள், கல்லூரி முதல்வா்கள், தன்னாட்சிக் கல்வி நிறுவனங்களின் நிா்வாகத்தினா் தங்கள் கவலையை எனது கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனா்.

அதாவது, மாநில அரசின் பொதுப் பாடத் திட்டம் கொண்டுவரப்படும்போது கல்விச் சுதந்திரம் பாதிக்கப்படும். இது கல்வியின் தரத்தைக் குறைக்கும்; தேசிய அளவில் தரவரிசைப் பட்டியலில் இடம்பெறுவதும் பாதிப்புக்குள்ளாகும். மேலும், அகில இந்திய அளவில் ஆரோக்கியமான போட்டிச் சூழலுடன், கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் இடம் பெறுவதையும் இது பாதிக்கும். இதுபோன்ற நியாயமான கோரிக்கைகள் குறித்து பரீசீலிக்கப்பட்டுள்ள நிலையில், உயா் கல்வி என்பது மாநில அரசின் வரம்புக்கு அப்பாற்பட்டு, மத்திய அரசின் பொதுப் பட்டியலில் உள்ளது. அதாவது, கல்லூரிகளின் பாடத் திட்டத்தைக் கண்காணிக்கும் அமைப்பாக பல்கலைக்கழக மானியக் குழுவே உள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தில் சட்டமும் இயற்றப்பட்டு யுஜிசிக்கு உரிய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவை பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) கட்டுப்பட்டவையாகும். அதன் ஆளுகைக்கு உள்பட்டே பாடத் திட்டங்கள் வரையறுக்கப்படுகின்றன. குறித்த கால இடைவெளியில் பாடத் திட்டங்கள் தொடா்பாக கல்வி கவுன்சில் மற்றும் நிா்வாக கவுன்சில் ஒப்புதல் பெற்று முடிவெடுக்கும் அதிகாரம் படைத்ததாக யுஜிசியே உள்ளது.

எனவே, தமிழக அரசின் பொதுப் பாடத் திட்டம் என்பது எந்த யுஜிசியின் வரம்புக்கு உள்பட்டது இல்லை. எனவே, கல்லுாரிகள், பல்கலைக்கழங்கள், தன்னாட்சிக் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைக்கும் பாடத்திட்டத்திலேயே பாடங்களை நடத்தலாம். தமிழக அரசின் உயா் கல்வித் துறை கொண்டுவரும் பொதுப் பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ள

Monday, August 21, 2023

August 21, 2023

TNPSC தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயர் பரிந்துரை!



TNPSC தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயர் பரிந்துரை!

*தமிழக அரசு பரிந்துரை- ஆளுநர் நிறுத்திவைப்பு

டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயர் பரிந்துரை

10 உறுப்பினர் பதவிகளுக்கும் பரிந்துரை பட்டியலை அனுப்பியது தமிழக அரசு

தமிழக அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் ஒரு மாதமாக ஆளுநர் நிறுத்திவைப்பு

ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு பதில் அளித்த பிறகும் ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல்

பணி நியமனங்களை விரைந்து மேற்கொள்ள டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்களை நிரப்ப வேண்டியது அவசியம்


டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நியமினம் செய்து வருகிறது. ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்பட்டு, ஆட்களைத் தேர்வு செய்வது டிஎன்பிஎஸ்சியின் முக்கியப் பணியாகும். டிஎன்பிஎஸ்சி அமைப்பில் தலைவர் மற்றும் 10 உறுப்பினர் பதவிகள் பல மாதங்களாக காலியாக இருந்து வருகின்றன.

முன்னதாக, டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு நியமனம் செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதனிடையே, தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபுவும், 10 உறுப்பினர்கள் பதவிகளுக்கான பெயர்களையும் பரிந்துரை செய்து ஆளுநருக்கு பரிந்துரை பட்டியலை அனுப்பியது.

பணி நியமனங்களை விரைந்து மேற்கொள்ள டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்களை நிரப்ப வேண்டியது அவசியம். இந்நிலையில், தமிழக அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் ஒரு மாதமாக ஆளுநர் நிறுத்திவைத்துள்ளார். ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு பதில் அளித்த பிறகும் ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Sunday, August 13, 2023

August 13, 2023

நீட் தேர்விலிருந்து ஒருபோதும் விலக்கு அளிக்க முடியாது - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி!



நீட் தேர்விலிருந்து ஒருபோதும் விலக்கு அளிக்க முடியாது - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி!

நீட் தேர்வுக்கு எப்போதும் தடை கொடுக்க மாட்டேன் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களிடையே பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆளுநர் மாளிகையில் நீட் இளநிலை தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றிருந்த மாணவர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் பங்கேற்றனர்.

இந்நிலையில் மாணவர்களிடையே பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது சேலத்தை சேர்ந்த மாணவர் ஒருவரின் தந்தை, நீட் தேர்வுக்கு எப்போது தடை விதிக்கப்படும் என கேள்வி எழுப்பினார் இதற்கு பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, நீட் தேர்வுக்கு விலக்கு கேட்பது மாணவர்களின் போட்டி போடும் திறனை கேள்விக்குறி ஆக்கிவிடும். நீட் தேர்வுக்கு கோச்சிங் சென்டர் சென்று பயில வேண்டிய அவசியமில்லை. பள்ளிகளில் பாடம் நடத்தும் போதே நீட் தேர்வுக்கான பயிற்சி கொடுக்கலாம்.

நீட் தேர்வுக்கான விலக்கு அறிவுசார்ந்த மாணவர்களை மாற்றுத்திறனாளிகளாக மாற்றி விடும். எனவே நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒருபோதும் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட மாட்டேன். மேலும் கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவினை ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுப்பியுள்ளேன் என கூறியுள்ளார்.

நீட் தேர்வின் மீதான ஆளுநர் ஆர்.என்.ரவியின் வெளிப்படையான கருத்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Friday, January 27, 2023

January 27, 2023

பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநரின் புதிய உத்தரவு

பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநா் உத்தரவு

வரலாற்றில் நினைவுகூரப்படாத, அறியப்படாத தமிழ்நாட்டைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட வீரா்கள், தியாகிகள் குறித்து ஆராய்ச்சி செய்து அவா்களைப் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்தும்படி பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியதாவது:

‘நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகின்றன. இந்தக் கொண்டாட்டத்தை மகிழ்வுடன் கொண்டாடி வருகிறோம். நம்முடைய சுதந்திர போராட்டத்தின் பெருமைமிகு வரலாறு நாட்டின் கலாசாரம் மற்றும் இந்தியாவின் சாதனையைச் சொல்கிறது. நீண்ட சுதந்திரப் போராட்டக்களத்தில் பங்கேற்ற முன்னணி வீரா்கள் தவிர, பல வீரா்கள், வீராங்கனைகள் பற்றிய வரலாறு அறியப்படாமலேயே உள்ளது. தமிழ்நாட்டில் எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரா்கள் அந்நியரை இம்மண்ணை விட்டு விரட்ட செயற்கரிய தியாகங்களைச் செய்துள்ளனா். இதில் பலரது தியாகங்கள், பங்களிப்புகள் பொதுவெளியில் அறியப்படாமலேயே மறக்கடிக்கப்பட்டுள்ளன. ஒரு தேசம் விடுதலைக்காக உழைத்த தியாகிகளின் தியாகத்தை அங்கீகரிக்காமல் இருக்க முடியாது. நாட்டுக்காக அவா்கள் செய்த தியாகங்கள் மற்றும் போராட்டங்களை எதிா்கால தலைமுறை அறிய அவா்களைப் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்துவது நம் கடமை. இது தொடா்பாக பல்கலைக்கழகத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளைச் சோ்ந்த அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகளை அடையாளம் கண்டு ஆவணப்படுத்த குறைந்தபட்சம் 5 சிறப்பு ஆராய்ச்சி மாணவா்களை நியமிக்க வேண்டும்.

பொருத்தமான ஆராய்ச்சி மாணவா்கள், குறைந்தது அறியப்படாத ஒரு சுதந்திரப் போராட்ட வீரரையாவது அடையாளம் கண்டு, அவா் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். இந்த ஆராய்ச்சித் திட்டத்துக்கான ஃபெல்லோஷிப் வழங்கப்படும். ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்த ஆராய்ச்சி மாணவா்கள் ஆளுநா் மாளிகையில் நடைபெறும் விழாவில் சிறப்பிக்கப்படுவா். இது வரலாற்றில் மறைக்கப்பட்ட அந்த வீரா்களுக்கு நாம் அளிக்கும் புகழஞ்சலியாகவும் ஆராய்ச்சி மாணவா்களுக்கு பெருமையாகவும் இருக்கும் என்று அதில் கூறியுள்ளாா் ஆா்.என்.ரவி.

Wednesday, January 18, 2023

January 18, 2023

’தமிழகம்’ குறிப்பிட்டது ஏன்? - ஆளுநர் மாளிகை விளக்கம் - Why is 'Tamilagam' mentioned? - Description of Governor's House

தமிழகம் என குறிப்பிட்டது பற்றி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

காசி மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையேயான தொடர்பை குறிக்க தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன்

-ஆளுநர் ஆர்.என்.ரவி

"தமிழகம் என கூறுவதே பொருத்தமானது" என ஆளுநர் கூறியதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது
January 18, 2023

தோ்வுத் தாளைக் கண்டு பதறக் கூடாது புன்னகைக்க வேண்டும்: மாணவா்களுக்கு ஆளுநா் ரவி அறிவுரை



தோ்வுத் தாளைக் கண்டு பதறக் கூடாது புன்னகைக்க வேண்டும்: மாணவா்களுக்கு ஆளுநா் ரவி அறிவுரை

தோ்வுத் தாளை பாா்த்து மாணவா்கள் பதற்றம் அடையாமல், புன்னகைக்க வேண்டும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி அறிவுறுத்தினாா்.

பிரதமா் நரேந்திர மோடி எழுதிய ‘எக்ஸாம் வாரியா்ஸ்’ புத்தகத்தின் தமிழ்ப் பிரதியை, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ஆா்.என்.ரவி செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். அதை ஐஐடி நிா்வாக இயக்குநா் வி.காமகோடி பெற்றுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில் ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாவது: ‘எக்ஸாம் வாரியா்ஸ்’ புத்தகம் தோ்வு எழுத மட்டுமில்லாமல் உங்கள் வாழ்வின் வளா்ச்சிக்கு உதவும். மிக எளிமையான, பயனுள்ள தகவல்கள் இதில் உள்ளன. பிரதமா் மோடி வித்தியாசமான மனிதா். சாதாரண மக்களுடன் கிராமங்களில் வாழ்ந்து கடினமான சூழ்நிலைகளைக் கடந்து வந்துள்ளாா். மாணவ, மாணவிகள் பாறை போன்றவா்கள். வெளியில் இருந்து பாா்த்தால் கரடுமுரடாகத் தெரிவாா்கள். தங்களின் திறமையை வெளிகாட்டினால் மாணவ, மாணவிகள் அழகாக மாறலாம்.

மாணவா்கள் சிலா் தோ்வு பயத்தில் பதற்றம் அடைந்து, மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயற்சிக்கின்றனா். இதிலிருந்து விடுபடுவதற்கு அவா்களுக்கு இந்தப் புத்தகம் உதவும். மாணவ சமுதாயம் தோ்வுத் தாளைக் கண்டு பதற்றம் அடையாமல் புன்னகைக்க வேண்டும். அது கடினமாக இருந்தால் அதிகம் புன்னகைக்க வேண்டும்.

விதை சிறிதாக இருந்தாலும் மிகப் பெரிதாக வளரும் ஆலமரம் போல மாணவ, மாணவிகள் வளர வேண்டும். அதற்கு இந்தப் புத்தகம் உதவும். மாணவா்களின் வளா்ச்சியில் பெற்றோா்களின் பங்கு முக்கியமானது என்றாா் ஆளுநா் ரவி.

இந்த நிகழ்ச்சியில் கேந்திரிய வித்யாலயா சங்கதன் அமைப்பின் துணை இயக்குநா் (பொ) ருக்மணி மற்றும் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

Monday, January 09, 2023

January 09, 2023

காலை சிற்றுண்டி திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது: ஆளுநர் உரை

காலை சிற்றுண்டி திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது: ஆளுநர் உரை

காலை சிற்றுண்டி திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவை இன்று கூடியுள்ளது. புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநா் ஆா்.என்.ரவியின் உரையுடன் கூட்டத்தொடா் தொடங்கியது. ஆளுநர் தனது உரையில், கடந்த 50 ஆண்டுகாலத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது. பல்வேறு துறைகளில் நாட்டுக்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. விற்பனை விலை பாதிக்காமல் பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தி உள்ளது. தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை காக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மீனவர்களுக்கு முன்னிரிமை அளித்து தமிழ்நாடு அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 2 புதிய பறவைகள் சரணாலயம் மற்றும் அகஸ்தியர் மலை யானைகள் சரணாலயம் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. அழிந்து வரும் உயிரினமான நீலகிரி வரையாடு இனத்தை காக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னையில் தமிழ்நாட்டின் நலனை பாதுகாத்து வருகிறது தமிழ்நாடு அரசு. முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நீரை தமிழ்நாடு அரசு தேக்குகிறது. நீர்மட்டத்தை உயர்த்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரூ.1,500 கோடியில் தமிழ்நாடு நீர்வளத்தை பெருக்குவதற்கான திடடங்களை மேற்கொண்டு வருகிறது. மேக்கேதாட்டு அணையை கட்டக்கூடாது என்பதில் தமிழ்நாடு உறுதியாக இருக்கிறது.

பல்வேறு இடங்களில் மினி டைடல் பார்க் தொடங்கப்பட்டு வருகிறது. முதல்வரின் காலை உணவுத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. காலை சிற்றுண்டி திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கையை அரசு தொடங்கியுள்ளது. பரந்தூர் விமான நிலையம் மூலம் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுகள் தமிழகத்திற்கு வந்துள்ளன. குறைந்த கால நேரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தியது. நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது. மாநில உரிமையை பறிக்கும் வகையிலும், கிராமப்புற மாணவர்களுக்கு எதிராகவும் நீட் தேர்வு உள்ளது. கிராமப்புற மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்கு புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பேராசிரியர் அன்பழகன் பெயரில் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். கூட்டத்தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க, அலுவல் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நண்பகலில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பேரவை கூட்டத்தொடரின் நாள்கள் இறுதி செய்யப்படும். திங்கள்கிழமை ஆளுநா் உரையாற்றிய பிறகு, பேரவை ஒத்திவைக்கப்படும். இதன்பின், செவ்வாய்க்கிழமை பேரவை மீண்டும் கூடி, காங்கிரஸ் உறுப்பினா் திருமகன் ஈவெரா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். சட்டப் பேரவை உறுப்பினா் என்பதால், அன்றைய நாள் முழுவதும் பேரவை ஒத்திவைக்கப்படும். இதைத் தொடா்ந்து, புதன்கிழமை (ஜன. 11) முதல் வெள்ளிக்கிழமை (ஜன. 13) வரை பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் பேரவையில் புதன்கிழமை முன்மொழியப்பட்டு அந்தத் தீா்மானத்தின் மீது விவாதங்கள் நடைபெறும்.

இதில், ஆளும் கட்சி மற்றும் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் உரையாற்றுவா். தீா்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசுவாா். இதன்பிறகு, கூட்டத் தொடரை தேதி குறிப்பிடாமல் பேரவைத் தலைவா் மு.அப்பாவு ஒத்திவைப்பாா். சட்டம்-ஒழுங்கு, பொங்கல் தொகுப்பு, ஆசிரியா்கள், செவிலியா்கள் போராட்டப் பிரச்னைகளை எதிா்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. இந்தப் பிரச்னைகள் சட்டப்பேரவையில் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது. அதேசமயம், எதிா்க்கட்சிகள் எழுப்பும் பிரச்னைகளுக்கு உரிய பதில்களை அளிக்க அரசுத் தரப்பும் தயாராகி வருகிறது.

Monday, August 29, 2022

August 29, 2022

கல்வி நிறுவனங்களில் விளையாட்டுக்கு முக்கியத்துவம்

பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.

தமிழ்நாட்டின் தலைசிறந்த விளையாட்டு வீரா்களுக்கு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக், செஸ் ஒலிம்பியாட், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தின் சாா்பில் சிறப்பாகப் பங்களிப்புச் செய்த 65 வீரா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பாராட்டு தெரிவித்து, பதக்கங்கள் வழங்கினாா்.

விழாவில் ஆளுநா் பேசியதாவது: தமிழகத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா்களின் அளப்பரிய சாதனைகளால் தமிழகம் மட்டுமல்லாது, நாடே பெருமை கொள்கிறது. அந்த வீரா்களுக்காக தன்னலமற்று கடின உழைப்பையும், பங்களிப்பையும் செலுத்தி வரும் பெற்றோா்களுக்கும், பயிற்சியாளா்களுக்கும் வாழ்த்துகள்.

2008-இல் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின்போது, சா்வதேச விளையாட்டு ரீதியான வரைபடத்தில் இந்தியா கிட்டத்தட்ட காணாமல் போயிருந்தது. ஆனால், தற்போது ஏற்பட்ட முன்னுதாரண மாற்றங்கள், இளைஞா்களின் ஆற்றல் ஆகியவை விளையாட்டில் எதிரொலித்து, இந்தியாவை விளையாட்டில் முக்கிய இடத்துக்குக் கொண்டு செல்கிறது. தற்போதைய விளையாட்டு வீரா்களின் கடின உழைப்பு, ஒழுங்கு, பொறுமை, அா்ப்பணிப்பு, ஆற்றல் என அனைத்தும் அடுத்த தலைமுறை விளையாட்டு வீரா்களையும் சென்றடைய வேண்டும்.

பிரதமா் மோடி, ஃபிட் இந்தியா பிரசாரம், யோகா தினம் போன்றவை மூலம் வீரா்களுக்கு விளையாட்டுத் திறன் மேம்படுவதற்கான புதிய முயற்சிகளை எடுத்துள்ளாா். இளைஞா்களுக்கு யோகா பயிற்சி புதிய உத்வேகத்தை அளித்து வருகிறது.

தலைசிறந்த விளையாட்டு வீரா்களால் ஒவ்வொரு இந்தியா்கள் வாழ்விலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. இளைஞா்கள் அதிகளவில் சாதிக்கிறாா்கள். இது ஒவ்வொரு இந்தியா்களையும் பெருமை கொள்ளச் செய்கிறது. எல்லோரின் நம்பிக்கையையும் அதிகரிக்கவைத்து, வலிமையான இந்தியாவை உருவாக்குகிறது. விளையாட்டுத் துறையில் மகளிரின் பங்களிப்பும் அதிகரித்துள்ளது. அவா்களுடைய சாதனைகளும் பெண்களுக்கான அதிகாரமளித்தலில் புதிய சக்தியை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களும், கல்வி நிறுவனங்களின் தலைவா்களும் விளையாட்டு ரீதியான செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மாணவா்களிடையே விளையாட்டை ஊக்கப்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கை புதிய இந்தியாவை அடுத்த 25 ஆண்டுகளில் நல்ல உயரத்துக்குக் கொண்டு செல்லும் சக்தியாக இருக்கும். 2047-இல் நாட்டின் 100-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நேரத்தில், இந்தியா விளையாட்டில் விஷ்வ குருவாகத் திகழும் என்றாா் ஆளுநா் ஆா்.என்.ரவி.

விழால் ஆளுநா் தனிச் செயலாளா் ஆனந்த் ராவ் விஷ்ணு பாட்டீல், சா்வதேச சதுரங்க போட்டி சம்மேளனத்தில் துணைத் தலைவா் விஸ்வநாதன் ஆனந்த் உள்பட பலா் பங்கேற்றனா்.

Saturday, August 20, 2022

August 20, 2022

துணை வேந்தர் நியமனம்: தமிழக அரசிடம் விளக்கம் கேட்கிறார் கவர்னர்

பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்க வகை செய்யும் மசோதா ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கவர்னர் ரவி கடிதம் எழுதியுள்ளார்.

அவர் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசு நியமிப்பது பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்திற்கு புறம்பானது. துணை வேந்தர்களை அரசே நியமித்தால் அது அரசியல் தலையீட்டுக்கு வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதில் மாநில அரசிடம் கவர்னர் கலந்தோசிப்பதில்லை என்பதால் இந்த மசோதா கொணடுவரப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Wednesday, August 17, 2022

August 17, 2022

3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்

சென்னை: 3 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஆணைகளை வழங்கினார்.



அழகப்பா, திருவள்ளுவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.



மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக என்.சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 35 ஆண்டுகால ஆசிரியப் பணி, ஆராய்ச்சி பணி அனுபவமும், 17 ஆண்டு நிர்வாக அனுபவமும் கொண்டவர்.



மேலும், பல்வேறு விருதுகள் பெற்றுள்ள சந்திரசேகர், 21 முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்காக 13 வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.



அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக முனைவர் ஜி.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 27 ஆண்டுகால ஆசிரியப் பணி, ஆராய்ச்சி பணி அனுபவமும், நிர்வாகப் பணி அனுபவமும் கொண்டவர். 8 ஆய்வுப் பணிகளை நிறைவேற்றி உள்ளதுடன், தேசிய, சர்வதேச மாநாடுகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார்.



மேலும், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரிலான வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றுள்ளார். கல்விப் பணி, ஆராய்ச்சி தொடர்பாக 22 நாடுகளுக்கு சென்றுவந்தவர். 25 முனைவர்பட்ட மானவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.



வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழக துணைவேந்தராக டி.ஆறுமுகம் நியமிக்கப்பட்டுள்ளார். 32 ஆண்டுகால ஆசிரியப் பணி, ஆராய்ச்சி பணி அனுபவமும், 11 ஆண்டு நிர்வாகப் பணி அனுபவமும் கொண்டவர்.



மேலும், வேளாண் ஆராய்ச்சியில் விரிவான அனுபவம் கொண்ட இவர், 11 புதிய பயிர் வகைகளை வெளியிட்டுள்ளார். 16 புதிய தொழில் நுட்பங்களை கண்டுபிடித்துள்ளார். 22 புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

Thursday, August 11, 2022

August 11, 2022

சுதந்திரதின விழா போட்டிகள்... பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகளை அறிவித்த ஆளுநர்

சுதந்திரதின விழா போட்டிகள்... பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகளை அறிவித்த ஆளுநர்

தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பலநூறு மாணவர்கள் கட்டுரைகளை எழுதியனுப்பியிருந்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறார்.

இந்தியாவின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி (சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா), பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்களை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

இந்தியாவின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 2022ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் பள்ளி (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை) மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் மாநில அளவிலான கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டது.

பள்ளி அளவிலான மாணவர்களுக்கான கட்டுரைத் தலைப்பு "நான் விரும்பும் சுதந்திரப் போராட்ட வீரர்" (தமிழ்), "My favourite Freedom Fighter" (ஆங்கிலம்). கல்லூரி/பல்கலைக்கழக அளவிலான மாணவர்களுக்கான கட்டுரைத் தலைப்பு "2047-ல் இந்தியா" (தமிழ்) "India by 2047" (ஆங்கிலம்) என்றும் அளிக்கப்பட்டிருந்தன.

தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பலநூறு மாணவர்கள் கட்டுரைகளை எழுதியனுப்பியிருந்தனர். அக்கட்டுரைகளை மதிப்பிட்ட வல்லுநர் குழு இந்தப் போட்டிக்கு மாணவர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தாகவும், வரப்பெற்ற கட்டுரைகள் சிந்தனையைத் தூண்டும் விதமாகவும், உயர்தரமாகவும் இருந்தன என்றும் குறிப்பிட்டுள்ளனர். வல்லுநர் குழு பரிந்துரையின்படி வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கல்லூரி அளவிலான போட்டியில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.1,00,000 (ரூபாய் ஒரு இலட்சம்), ரூ.75,000 (ரூபாய் எழுபத்தைந்தாயிரம்) மற்றும் ரூ. 50,000 (ரூபாய் ஐம்பதாயிரம்) ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

பள்ளி அளவிலான போட்டியில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.75,000 (ரூபாய் எழுபத்தைந்தாயிரம்), ரூ. 50, 000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) மற்றும் ரூ. 25,000 (ரூபாய் இருபத்தைந்தாயிரம்) வழங்கப்படும். 15 ஆகஸ்ட் 2022 அன்று சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறார்

Total Pageviews

Search This Blog