Breaking

Showing posts with label Netherlands Scholarship for Indian Students. Show all posts
Showing posts with label Netherlands Scholarship for Indian Students. Show all posts

Tuesday, July 12, 2022

July 12, 2022

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை!

தேசிய வெளிநாட்டு உதவித்தொகையின் மத்திய அரசு திட்டத்தின் கீழ், பழங்குடியினர், சீர்மரபினர், நாடோடி இனத்தவர், பகுதியளவு நாடோடி இனத்தவர், நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் மற்றும் பாரம்பரிய கைவினைஞர்கள் ஆகிய பிரிவினர் பயன்பெறலாம்.

படிப்புகள்:

இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப் படிப்பு அல்லது ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ள உதவித்தொகை வழங்கப்படுகிறது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் எந்த ஒரு துறையிலும் உயர்நிலை படிப்புகளை மேற்கொள்ளலாம்.

உதவித்தொகை எண்ணிக்கை: எஸ்.டி., பிரிவினர் -- 115/ சீர்மரபினர், நாடோடி இனத்தவர், பகுதியளவு நாடோடி இனத்தவர் -- 6/ நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பாரம்பரிய கைவினைஞர்கள் -- 4 என மொத்தம் 125 பேருக்கு ஒவ்வொரு ஆண்டும் நிதியுதவி வழங்கப்படுகிறது; இவற்றில், 30 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது. போதுமான மாணவியர் விண்ணப்பிக்காத பட்சத்தில், பயன்படுத்தப்படாத இடங்கள் தகுதியுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும். தகுதிகள்:

பிஎச்.டி., படிப்புகளுக்கு முதுநிலை பட்டப் படிப்பும், முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு இளநிலை பட்டப் படிப்பும் அவசியம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் அல்லது உரிய தகுதித் தேர்வில் சமமான மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: ஏப்ரல் முதல் தேதியின்படி 35 ஆண்டுகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.வருமான வரம்பு: அனைத்து வகைகளிலும் ஒட்டுமொத்த குடும்ப வருமானம், ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

நிதி உதவி விபரம்:

எந்த நாட்டில் உள்ள கல்வி நிறுவனமாக இருந்தாலும் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவியருக்கு கல்விக் கட்டணம், விமானக் கட்டணம், விசா கட்டணம், மருத்துவ காப்பீடு ஆகியவை வழங்கப்படுகின்றன. இவைதவிர, நாடுகளுக்கு ஏற்ப இதர செலவினங்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விபரங்களுக்கு: www.nosmsje.gov.in

Thursday, June 23, 2022

June 23, 2022

இந்திய மாணவர்களுக்கு நெதர்லாந்து உதவித்தொகை

நெதர்லாந்து உதவித்தொகை 

இந்திய மாணவர்களுக்கு ஆரஞ்ச் துளிப் ஸ்காலர்ஷிப் - ஓ.டிஎஸ்., திட்டத்தில் பல்வேறு உதவித்தொகை வாய்ப்புகளை நெதர்லாந்து உயர்கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன.

துறைகள்: அறிவியல், மேலாண்மை, பொருளாதாரம், கலை, பொறியியல், மருத்துவம், நடனம், துணை மருத்துவம், நகர மேம்பாடு என பல்வேறு பாடப்பிரிவுகளிலும் சேரும் இந்திய மாணவர்களுக்கு நெதர்லாந்து கல்வி நிறுவனங்கள் உதவித்தொகை வழங்குகின்றன. 

கல்வி நிறுவனங்கள் மற்றும் உதவித்தொகை எண்ணிக்கை:

 * யுனிவர்சிட்டி ஆப் ஆம்ஸ்டர்டம் (எக்னாமிக்ஸ் அண்ட் பிசினஸ்) - 1 

* விரிஜி யுனிவர்சிட்டி ஆப் ஆம்ஸ்டர்டம் - 2


* ரட்பவுட் யுனிவர்சிட்டி - 6


* அகாடமி ஆப் தியேட்டர் அண்டு டான்ஸ் - 1


* தில்புர்க் யுனிவர்சிட்டி - 4


* மாஸ்ச்டிரிச் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட் - 4


* சாக்சின் யுனிவர்சிட்டி ஆப் அப்ளைடு சயின்ஸ் - 1


* யுனிவர்சிட்டி ஆப் குரொனிகென் - 1


* யுனிவர்சிட்டி ஆப் ஆம்ஸ்டர்டம் சோசியல் சயின்சஸ் - 1


* போண்ட்ஸ் யுனிவர்சிட்டி ஆப் அப்ளைடு சயின்சஸ் - 10


* பிரெடா யுனிவர்சிட்டி ஆப் அப்ளைடு சயின்சஸ் - 2


* ரோட்டர்டாம் பிசினஸ் ஸ்கூல் - 3


* மாஸ்ச்டிரிச் யுனிவர்சிட்டி - 4


* ஹன்ஸ் யுனிவர்சிட்டி ஆப் அப்ளைடு சயின்ஸ் - 1


* வேகனிங்கன் யுனிவர்சிட்டி ஆப் ரிசர்ச் - 5


* விட்டென்பொர்க் யுனிவர்சிட்டி ஆப் அப்ளைடு சயின்ஸ் - 8


* இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் ஸ்டடீஸ் - 2


* இன்ஸ்டிடியூட் ஆப் ஹவுசிங் அண்ட் அர்பன் டெவலெப்மெண்ட் - 2


* யுனிவர்சிட்டி மெடிக்கல் சென்டர் குரோனிங்கன் 

தகுதிகள்: இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். நெதர்லாந்து கல்வி நிறுவனங்களில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெற்றிருப்பவர்கள் அல்லது சேர்க்கைக்கு தயாராகிக்கொண்டிருப்பவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
 
உதவித்தொகை விபரம்: மாணவர்களது கல்விக்கட்டணத்தில், 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரையில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. படிப்பிற்கும், கல்வி நிறுவனத்திற்கும் ஏற்ப வழங்கப்படும் உதவித்தொகையும், கால அளவும் மாறுபடுகிறது.
 
விபரங்களுக்கு:
 
இணையதளம்: www.studyinholland.nl/neso-india

இ-மெயில்:  ots@nesoindia.org

Total Pageviews

Search This Blog