Breaking

Showing posts with label Special Training. Show all posts
Showing posts with label Special Training. Show all posts

Thursday, November 27, 2025

Friday, August 25, 2023

August 25, 2023

எளிய முறையில் ஆங்கிலம் கற்பிக்க அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி



எளிய முறையில் ஆங்கிலம் கற்பிக்க அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி Training of government school teachers to teach English in a simple way எளிய முறையில் ஆங்கிலம் கற்பிக்க அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி

அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு எளிய முறையில் ஆங்கிலம் கற்பிப்பதற்காக பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் (‘சமக்ர சிக்ஷா’), ஜாலி ஃபியூச்சா்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து புதிய முறையிலான பயிற்சித் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:

ஆசிரியா்களுக்கான ஆங்கில மொழிப் பயிற்சித் திட்டம் ‘ஜாலிஃபோனிக்ஸ்’ முறையில் தமிழகத்தில் கடந்த ஜூலை 24-ஆம் தேதி முதல் ஆக.31-ஆம் தேதி வரை 25 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள மாவட்டங்களில் ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஜாலி ஃபோனிக்ஸ் என்பது குழந்தைகளுக்கு வேடிக்கையான முறையில் ஆங்கிலம் கற்பிப்பதற்கான ஒரு விளையாட்டு வழி முறையாகும். கதை மற்றும் செயல்பாடுகள் மூலம் எழுத்து ஒலிகளைக் கற்றல், எழுத்து அமைப்பு, சொற்களில் உள்ள ஒலியைக் கண்டறிதல் உள்ளிட்ட 5 அத்தியாவசிய திறன்களை அடிப்படையாகக் கொண்ட கற்பித்தல் முறையாகும். பயிற்சிக்கான பாடத்திட்டமும் இந்தத் திறன்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. கில்பா்ட் ஜாலி உருவாக்கிய ‘ஜாலி ஃபோனிக்ஸ்’ முறை ஒலிகளை உச்சரிப்பதில் குழந்தைகளைத் திருத்த ஆசிரியா்களுக்கு உதவுகிறது. எழுத்து உருவாக்கம், எழுத்து ஒலிகள், கலத்தல், பிரித்தல் ஆகியவற்றை சரியாக தெரியப்படுத்த ‘கேம்கள்’ பதிவேற்றப்பட்டுள்ளன.

ஜாலி லோ்னிங் லிமிடெட் மூலம் அங்கீகரிக்கப்பட்ட நாடு முழுவதும் உள்ள பயிற்சியாளா்களால் ஆசிரியா்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சித் திட்டத்தில் ஏராளமான ஆசிரியா்கள் கலந்து கொண்டு எழுத்தின் ஒலிகள் மற்றும் வகுப்பில் செயல்படுத்த வேண்டிய வழிமுறைகளைக் கற்றுக் கொண்டு ஆா்வத்தை வெளிப்படுத்தினா்.

திட்டத்துக்கான ஒருங்கிணைப்பு பணிகளை ‘சமக்ர சிஷா’ மாநில திட்ட இயக்குநா் எம். ஆா்த்தி, ஜாலி ஃபியூச்சா்ஸ் திட்ட மேலாளா் எஸ்.வி.கோமதி உள்ளிட்டோா் மேற்கொண்டனா் என அவா்கள் தெரிவித்தனா்.

Tuesday, July 25, 2023

July 25, 2023

தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

Special Training for Class 9 to Class 12 Students in Tamil Nadu – School Education Department Order! தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மனநலம், வாழ்வியல் திறன் பயிற்சி அளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் வளரிளம் பருவத்தினர் பெருந்தொற்று காலத்தில் உளவியல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அதனை ஈடு செய்ய அவர்களின் சமூக மனவெழுச்சி நலனை மேம்படுத்தவும், நேர்மறை எண்ணங்களை உருவாக்கிடவும், மகிழ்ச்சியாகக் கற்றலில் ஈடுபடுவதற்கு ஏதுவாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் தமிழகத்தில் உள்ள 44 கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மனநலம் மற்றும் வாழ்வியல் திறன்சார்ந்த பயிற்சி 2022 – 2023ம் கல்வியாண்டில் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog