Breaking

Showing posts with label Bharathiar University recruitment. Show all posts
Showing posts with label Bharathiar University recruitment. Show all posts

Wednesday, April 12, 2023

April 12, 2023

பாரதிதாசன் பல்கலையில் எம்.எஸ்சி படித்தவர்களுக்கு வேலை - கடைசி தேதி - ஏப்.16.2023

பாரதிதாசன் பல்கலையில் எம்.எஸ்சி படித்தவர்களுக்கு வேலை..!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Associate-I பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் - பாரதிதாசன் பல்கலைக் கழகம்

பதவி - Project Associate-I

காலியிடங்கள் - அறிவிப்பை பார்க்கவும்

கல்வித்தகுதி - எம்.எஸ்சி

சம்பளம் - ரூ.25000 முதல் ரூ.31000

பணியிடம் - திருச்சி

விண்ணப்பிக்கும் முறை - ஆப்லைன்

விண்ணப்பக்கட்டணம் - இல்லை

தேர்வு முறை - நேர்காணல்

இணையதள முகவரி - https://bdu.ac.in/

முகவரி - Bharathidasan University,

Palkalaiperur,

Tiruchirappalli - 620 024

கடைசி தேதி - ஏப்.16.2023

Friday, November 04, 2022

November 04, 2022

பேராசிரியா்களுக்கு மூத்த பேராசிரியா் பதவி உயா்வு வழங்குவதில் தாமதம்

மூத்த பேராசிரியா் பதவி உயா்வு வழங்குவதில் தாமதம் கூடாது: அன்புமணி

பல்கலைக்கழக பேராசிரியா்களுக்கு மூத்த பேராசிரியா் பதவி உயா்வு வழங்குவதில் தாமதம் செய்யக்கூடாது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணி மேம்பாட்டு முறைப்படி உதவி பேராசிரியா்கள், இணை பேராசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், பேராசிரியா்களுக்கான மூத்த பேராசிரியா் பதவி உயா்வு கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இது பெரும் அநீதி.

10 ஆண்டுகள் பேராசிரியா்களாக பணியாற்றியவா்களுக்கு மட்டுமே மூத்த பேராசிரியா் பதவி உயா்வு வழங்கப்படும். இதற்கு தகுதியானவா்கள் ஓய்வு பெறும் நிலையில் இருப்பாா்கள். பதவி உயா்வை தாமதப்படுத்தினால் அவா்களுக்கு பணிநிலை மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படும்.

மூத்த பேராசிரியா் பதவி உயா்வுக்கு விண்ணப்பித்த நாளில் இருந்து 6 மாதங்களில் அவா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்பட வேண்டும். 3 ஆண்டுகளாக பதவி உயா்வு வழங்கப்படாததால், அதற்காக விண்ணப்பித்த 14 பேராசிரியா்களில் 10 போ் பதவி உயா்வு பெறாமல் ஓய்வு பெற்று விட்டனா்.

பதவி உயா்வுக்கான தோ்வுக்குழுவில் ஆளுநா் மற்றும் அரசு பிரதிநிதிகள் நியமிக்கப்படாதது தான் இந்த தாமதத்துக்குக் காரணம். அவா்களை உடனடியாக நியமித்து தகுதியான பேராசிரியா்கள் அனைவருக்கும் உடனடியாக மூத்த பேராசிரியா் பதவி உயா்வை தாமதிக்காமல் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா் அன்புமணி ராமதாஸ்.
November 04, 2022

பிகாம் சிஏ பாடத்திட்டம் மாற்றம்: முன்னாள் துணைவேந்தரின் புத்தகங்கள் சேர்ப்பால் சர்ச்சை

பிகாம் சிஏ மாணவர்கள் பாடத்திட்டம் மாற்றம்: முன்னாள் துணைவேந்தரின் புத்தகங்கள் சேர்ப்பால் சர்ச்சை

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 133 கல்லூரிகள் செயல்படுகிறது. இதில் பிகாம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு எம்எஸ் ஆபிஸ் என்ற பாடம் இருந்தது. நேற்று முன்தினம் பல்கலைக்கழகம் சார்பில் அனைத்து கல்லூரிகளுக்கும் எம்எஸ் ஆபிஸ் பாடம் நீக்கப்பட்டதாகவும் அதற்கு பதிலாக ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் அண்ட் மெஷின் லாங்குவேஜ், பிக் டேட்டா உள்ளிட்ட பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இளநிலை மாணவர்களுக்கு வரும் 21ம் தேதி தேர்வுகள் துவங்க உள்ளது. இந்நிலையில், பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சேர்க்கப்பட்டுள்ள பாடங்கள் அனைத்தும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் காளிராஜ் மற்றும் வெளியிட்ட புத்தகங்கள் ஆகும். இவரின் பணி காலம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு முடிந்தது. இவர், பதவியில் இருக்கும்போதே தனது புத்தகங்களின் விற்பனையை அதிகரிக்க பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த பாடத்திட்டத்திற்கும் மாணவர்களுக்கும் சம்மந்தம் இல்லை என பேராசிரியர்கள் தரப்பில் கூறுகின்றனர். தவிர, தேர்வுக்கு 20 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், திடீரென பாடத்திட்டம் மாற்றப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதால், அதனை எப்படி மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பது என தெரியாமல் பேராசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். இது குறித்து பல்கலை ஆசிரியர் சங்க மாநில தலைவர் திருநாவுக்கரசு கூறுகையில், ‘‘ பிகாம் சிஏ மாணவர்களுக்கு எம்எஸ் ஆபீஸ் பாடம் மிகவும் முக்கியமானது.

இதனை மாற்றியிருப்பது தவறு. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்வுக்கு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இது மாணவர்களை பாதிக்கும். தனது புத்தகங்கள் விற்பனையை அதிகரிக்க இதுபோன்ற செயலில் துணைவேந்தராக இருந்தவர் ஈடுபடுவது முறைகேடானது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Thursday, August 18, 2022

August 18, 2022

கோவை பாரதியார் பல்கலை. வேலைவாய்ப்பு; 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.08.2022

Kovai Bharathiar University recruitment 2022 for assistant posts apply soon: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.08.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Technical Officer (Instrumentation)

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : B.E. Instrumentation / B.E in Electronics படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 40,000

Technical Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : Diploma in Electronics and Communication படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,000

Programmer

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : Bachelor’s degree in computer science / Bachelor in engineering படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 36,000

Lab attender

காலியிடங்களின் எண்ணிக்கை – 2

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://b-u.ac.in/recruitment-technical-officer-instrumentationtechnical-assistant-programmer-and-lab-assistant என்ற இணையதளப் பக்கத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.08.2022

பின்னர் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : RUSA Office, Bharathiar University, Coimbatore 641046

மின்னஞ்சல் முகவரி : rusa2.0bctrc@buc.edu.in

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://b-u.ac.in/recruitment-technical-officer-instrumentationtechnical-assistant-programmer-and-lab-assistant என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்வையிடவும்

Total Pageviews

Search This Blog