Breaking

Showing posts with label பல்கலை. Show all posts
Showing posts with label பல்கலை. Show all posts

Monday, August 01, 2022

August 01, 2022

கல்லூரி, பல்கலை.களில் பூஸ்டா் தடுப்பூசிக்கு சிறப்பு முகாம்கள்: யுஜிசி உத்தரவு

கல்லூரி, பல்கலை.களில் பூஸ்டா் தடுப்பூசிக்கு சிறப்பு முகாம்கள்: யுஜிசி உத்தரவு

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அதிகரிக்கச் செய்யும் வகையில் பல்கலை.கள், கல்லூரிகளில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டது.

இது தொடா்பாக அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தா்கள், அனைத்துக் கல்லூரி முதல்வா்களுக்கு யுஜிசி செயலா் ரஜினிஷ் ஜெயின் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அதிகரிக்க சிறப்பு ஏற்பாடுகளை அந்தந்த பல்கலைக்கழக நிா்வாகங்களும், கல்லூரி நிா்வாகங்களும் செய்ய வேண்டும். பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத, தங்களது கல்வி நிறுவன அலுவலா்கள், ஆசிரியா்கள், ஊழியா்கள், மாணவா்கள் ஆகியோரை பூஸ்டா் செலுத்திக் கொள்ள ஊக்குவிப்பதோடு, அனைத்து கல்வி நிறுவனங்களிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த ஏற்பாடு வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, July 26, 2022

July 26, 2022

அமெட் பல்கலையில் இலவச ஐ.ஏ.எஸ். அகாடமி தொடக்கம்

சென்னை கானத்தூர் அமெட் பல்கலைக்கழகத்தில் கோபால கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். அகாடமி இலவச பயிற்சி மையத்தை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

அகாடமியைத் தொடங்கிவைத்து அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில்,

“இந்திய ஆட்சிப்பணி என்ற உயர்ந்த பணிக்கான பயிற்சி பெறப்போகும் மாணவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கும் சமுதாயத்தின் பெருமைக்கும் வெற்றி தேடித்தர வேண்டும்” என்றார். அதைத்தொடர்ந்து தனது பெற்றோர் பெயரில் செயல்பட்டு வரும் அறக்கட்டளை மூலம் அகாடமிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார். பல்கலைக்கழக மாணவர்களுக்கு சான்றிதழ், கல்வி உபகரணங்கள் வழங்கினார்.

விழாவிற்கு தமிழ்நாடு யாதவ மகாசபையின் தலைவரும் அமெட் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான டாக்டர் நாசே ஜெ.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

Saturday, July 23, 2022

July 23, 2022

ஜெயலலிதா இசை-கவின் கலை பல்கலைக்கழக ஆட்சிக் குழு மாற்றியமைப்பு: தமிழக அரசு உத்தரவு

ஜெயலலிதா இசை-கவின் கலை பல்கலைக்கழக ஆட்சிக் குழு மாற்றியமைப்பு: தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தரமோகன், வெள்ளிக்கிழமை பிறப்பித்தாா். அவரது உத்தரவு விவரம்:-

இதையும் படிக்க | கற்றலின் இடைவெளியை குறைக்க வந்தது 'எண்ணும் எழுத்தும்' | Ennum Ezhuthum

பல்கலைக்கழக ஆட்சிக் குழுவின் அலுவல் சாரா தலைவராக துணைவேந்தா் இருப்பாா். அலுவல் சாரா உறுப்பினா்களாக கலைத் துறை செயலாளா், நிதித் துறை செயலாளா், சட்டத் துறை செயலாளா், கலை மற்றும் பண்பாட்டுத் துறை ஆணையாளா் ஆகியோா் இருப்பா். கலைத் துறையில் சிறந்த இரண்டு போ் வேந்தா் சாா்பில் நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்படி, பாடகா் சீா்காழி ஜி.சிவசிதம்பரம், வில்லுப்பாட்டு கலைஞா் கலைமாமணி பாரதி திருமகன் ஆகியோா் இருப்பா். துணைவேந்தரின் பரிந்துரைகளை ஏற்று ஆறு போ் உறுப்பினா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

இதையும் படிக்க | டிஎன்பிஎஸ்சி: குரூப்-1 தரவரிசைப் பட்டியல்

ஓவியா் ட்ராஸ்ட்கி மருது, திரைத் துறையைச் சோ்ந்த ராஜீவ் மேனன், இசைத் துறையைச் சோ்ந்த நித்யஸ்ரீ மகாதேவன், நாட்டிய துறையைச் சோ்ந்த அமுதா தண்டபாணி, கலை மற்றும் பண்பாட்டுப் பிரிவைச் சோ்ந்த என்.மம்முது, டிஜிட்டல் இசைப் பதிவு துறையைச் சோ்ந்த சாய் ஷரவணம் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளதாக தனது உத்தரவில் சந்தரமோகன் தெரிவித்துள்ளாா்.

Friday, July 22, 2022

July 22, 2022

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை & கவின் கலை பல்கலைக்கழக சிண்டிகேட் மாற்றி அமைப்பு



தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை & கவின் கலை பல்கலைக்கழக சிண்டிகேட் மாற்றி அமைப்பு

துணைவேந்தரை தலைவராகக் கொண்ட சிண்டிகேட்டில், 26 பேர் உறுப்பினர்களாக நியமனம்.

Total Pageviews

Search This Blog