Breaking

Showing posts with label LEAVE RULES. Show all posts
Showing posts with label LEAVE RULES. Show all posts

Sunday, December 21, 2025

Friday, February 28, 2025

Monday, January 20, 2025

Tuesday, February 06, 2024

February 06, 2024

Leave rules to know - and to follow!! விடுப்பு விதிகள் தெரிந்து கொள்ள வேண்டியதும் - பின்பற்ற வேண்டியதும்!!



விடுப்பு விதிகள் தெரிந்து கொள்ள வேண்டியதும் - பின்பற்ற வேண்டியதும்!!

அரசு ஊழியரின் கவனத்திற்கு விடுப்பு விதிகள் தெரிந்து கொள்ள வேண்டியதும் - பின்பற்ற வேண்டியதும் :-

தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள் EL எடுத்தால் Probation Period தள்ளிப்போகும்.

🍁பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து பணமாகப்பெறலாம்.ஆண், பெண் இருவரும்

தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2 வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த வருடத்திற்கான EL -ஐ ஒப்படைக்க முடியாது. EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப் டும். (உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்து விட்டு (180-10=170) மீதம் உள்ள 170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும். எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே கணக்கில் உள்ள EL- ஐ எடுத்துவிடுவது பயனளிக்கும்)

🍁வருடத்திற்கு 17 நாட்கள் EL அதில் 15 நாட்களை ஒப்படைத்து பணமாகப்பெறலாம்.



🍁மீதமுள்ள 2 நாட்கள் சேர்ந்து கொண்டே வரும் அதை ஓய்வுபெறும் போது ஒப்படைத்து பணமாகப்பெறலாம்.

🍁21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL கழிக்கப்படும். ஒரு வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள். இதை 17ஆல் (EL)வகுத்தால் 365/17=21. 🍁 எனவே 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL என்ற கணக்கில் கழிக்கப்படுகிறது.

🍁மகப்பேறு விடுப்பு எடுத்த வருடத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் பொழுது , மகப்பேறு விடுப்பு எடுத்த 9 மாதங்கள், மற்றும் ML எடுத்த நாட்கள் தவிர்த்து மீதம் வேலை செய்த நாட்களை 21.47 ஆல் வகுத்து ELகணக்கிடப்படும். ML & EL எடுத்தது போக மீதம் உள்ள வேலை செய்த நாட்களுக்கு மட்டுமே EL கணக்கிடப்படும்.(CL & RH கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது)

🍁 ஒரு நாள் மட்டும் EL தேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம்.

🍁 அரசு ஊழியர்களுக்கு மட்டும்வருடத்திற்கு 30 நாட்கள் EL(ஆசிரியர்களுக்கு 17 நாட்கள்மட்டுமே). அதில் 15நாட்களை ஒப்படைக்கலாம்.

மீதம் உள்ள 15 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும்.. அதிகபட்சமாக 240 நாட்களைச்சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம். அதற்கு மேல் சேருபவை எந்தவிதத்திலும் பயனில்லை.

மாறுதல் / பதவி உயர்வு /பணியிறக்கம் / நிரவல் போன்றநிகழ்வுகளின் போது பழைய இடத்திற்கும் புதிய இடத்திற்குமிடையே குறைந்தது 8 கி.மீ (ரேடியஸ்) இருந்தால் அனுபவிக்காத பணியேற்பிடைக்காலம் EL கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும். இதற்கு 30நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 90 நாட்களுக்குள் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். (குறைந்தது 5நாட்கள். 160 கி.மீக்கு மேற்படின் அட்டவணைப்படி நாட்களின்எண்ணிக்கை அதிகரிக்கும்)

🍁ஒருமுறை சரண்டர் செய்த அதே தேதியில் தான் ஆண்டுதோறும் செய்யவேண்டும் என்ற கட்டாயம்இல்லை. கணக்கீட்டிற்கு வசதியாகஇருக்கவும் Pay Roll ல் விவரம் குறிக்க எளிமையாக அமையவும் ஒரே தேதியில் ஆண்டுதோறும் அல்லது இரண்டாண்டுகளுக் கு ஒருமுறை சரண்செய்வது சிறந்தது. எவ்வாறாயினும் ஒரு ஒப்படைப்பு நாளுக்கும் அடுத்த ஒப்படைப்பு நாளுக்குமிடையே 15 நாட்கள் ஒப்படைப்பெனில் ஓராண்டு / 30 நாட்கள் ஒப்படைப்பெனில் இரண்டாண்டு இடைவெளி இருக்கவேண்டும்.

🍁ஒப்படைப்பு நாள் தான் முக்கியமே தவிர விண்ணப்பிக்கும் தேதியோ, அலுவலர் சேங்க்ஷன் செய்யும் தேதியோ, ECS ஆகும்தேதியோ அடுத்த முறை ஒப்படைப்பு செய்யும்போது குறிக்கப்பட வேண்டியதில்லை.

🍁EL ஒப்படைப்பு நாளின்போது குறைந்தஅளவு அகவிலைப்படியும் பின்னர் முன் தேதியிட்டு DA உயர்த்தப்படும் போது ஒப்படைப்பு நாளில்அதிக அகவிலைப்படியும் இருந்தால் DA நிலுவையுடன் சரண்டருக்குரிய நிலுவையையும் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம். ஊக்க ஊதியம் முன் தேதியிட்டுப் பெற்றாலும் நிலுவைக் கணக்கீட்டுக் காலத்தில் ஒப்படைப்பு தேதி வந்தால் சரண்டர் நிலுவையும் பெறத்தகுதியுண்டு.

🍁பணிநிறைவு / இறப்பின்போது இருப்பிலுள்ள ELநாட்களுக்குரிய (அதிகபட்சம்240) அப்போதைய சம்பளம் மற்றும் அகவிலைப்படி வீதத்தில் கணக்கிடப்பட்டு திரள்தொகையாக ஒப்பளிக்கப்படும்.

🍁அதிகபட்சம் தொடர்ந்து 180 நாட்கள் ஈட்டிய விடுப்பு எடுக்கலாம். அதனைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுக்கலாம்.

180 நாட்களுக்கு மேற்பட்ட விடுப்புக்கு வீட்டு வாடகைப்படி கிடைக்காது.

Thursday, November 23, 2023

November 23, 2023

துாறலுக்கே லீவு கேட்பதா கலெக்டர் அதிருப்தி!!!



துாறலுக்கே லீவு கேட்பதா கலெக்டர் அதிருப்தி!!!

துாறலுக்கே லீவு கேட்பதா தஞ்சை கலெக்டர் அதிருப்தி...

''சின்ன துாறல் விழுந்தாலே பெற்றோர் பள்ளிக்கு லீவு எதிர்பார்க்கின்றனர். மழையில் நனைந்தபடியே பள்ளி சென்றதால் தான் உங்கள் முன் நான் கலெக்டராக நிற்கிறேன்'' என தஞ்சாவூர் கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கமங்கலம் கிராமத்தில் நேற்று மக்கள் நேர்காணல் முகாமில் பங்கேற்ற அவர் பேசியதாவது: மழை தொடர்பான எச்சரிக்கை வந்து விட்டாலோ சின்ன துாறல் வந்து விட்டாலோ காலையிலேயே பல பெற்றோர் எனக்கு போன் செய்து 'பள்ளிக்கு லீவு உண்டா?' என கேட்கின்றனர். மழை பெய்தால் பள்ளிக்கு ஏன் விடுமுறை விட வேண்டும்.நான் கேரளாவை சேர்ந்தவன். அங்கு ஜூன் 1 முதல் மழை துவங்கி விடும். பல நேரங்களில் மழையில் நனைந்தபடி பள்ளி சென்றுள்ளேன். மழைக்கு விடுமுறை என்று நினைத்து நான் வீட்டில் இருந்திருந்தால் உங்கள் முன் கலெக்டராக நின்றிருருக்க மாட்டேன். தயவு செய்து பெற்றோர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். வாழ்க்கையில் கல்வி மட்டும் தான் மற்றவர்களால் திருட முடியாத சொத்து. எந்த கஷ்டமானாலும் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Friday, September 22, 2023

September 22, 2023

மிலாது நபி: அரசு விடுமுறை மாற்றம்!



மிலாது நபி: அரசு விடுமுறை மாற்றம்!

புதுச்சேரியில் மிலாது நபியையொட்டி அரசு விடுமுறை செப்.27-க்கு பதில் செப்.28-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

மிலாது நபி புதுச்சேரியில் செப்.28-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, அன்றைய தினமே அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே செப்.27-ல் அரசு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது செப்.28-க்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Wednesday, August 23, 2023

August 23, 2023

மகப்பேறு காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

மகப்பேறு காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

மகப்பேறு காலத்தில் மனைவியை உடனிருந்து கவனிக்க கணவருக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன். இவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: என் மனைவி கர்ப்பமாக உள்ளார். பிரசவ காலத்தில் மனைவியுடன் இருப்பதற்காக எனக்கு மே 1 முதல் 90 நாட்கள் விடுமுறை கேட்டு உயர் அதிகாரிகளுக்கு விண்ணப்பித்தேன். எனக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பின்னர் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி எனக்கு வழங்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தேன். அதனை விசாரித்த உயர் நீதிமன்றம், என் விடுமுறை விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட்டது. இதையடுத்து மே 1 முதல் 30 நாள் எனக்கு விடுமுறை வழங்கப்பட்டது. மே 31-ல் மனைவிக்கு குழந்தை பிறந்தது. இதனால் என்னால் பணிக்கு திரும்ப முடியவில்லை. இது குறித்து காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப் வழியாக தகவல் அனுப்பினேன். இதனை ஏற்க மறுத்து நடத்தை விதிகளை மீறியதாக எனக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டது. இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எல்.விக்டோரியாகவுரி பிறப்பித்த உத்தரவு: இந்தியாவில் மனைவியின் மகப்பேறு காலத்தில் மனைவியை உடனிருந்து கவனிக்க தந்தைக்கு விடுமுறை வழங்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக பேசப்படுகிறது. குழந்தை பிறக்கும்போது தந்தையும் உடனிருப்பது அவசியமானது. குழந்தை வளர்ப்பதில் தாய், தந்தை இருவருக்கும் முக்கிய பங்கு உண்டு.

பல்வேறு நாடுகளில் மகப்பேறு காலத்தில் தாயுடன் தந்தைக்கும் சேர்த்து விடுமுறை வழங்கப்படுகிறது. இந்தியாவில் மனைவியின் மகப்பேறு காலத்தில் தந்தைக்கு விடுமுறை அளிப்பதற்கான தனிச் சட்டம் இல்லை. இருப்பினும் மத்திய குடிமைப் பணிகள் (விடுமுறை) விதியில் தந்தையருக்கான விடுப்பு குறித்து கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் மகப்பேறு காலத்தில் மனைவியுடன் கணவர் இருப்பதற்கு தனிச்சட்டம் நிறைவேற்ற அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் மனுதாரர் பொறுப்புள்ள தந்தையாக செயல்பட்டுள்ளார். இதனால் அவருக்கு வழங்கப்பட்ட குற்றச்சாட்டு குறிப்பாணை ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார். இந்தியாவில் தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை, குழந்தை பெறும்போது தந்தையருக்கு விடுப்பு வழங்கப் படுவதில்லை. ஆனால், Central Civil Services (Leave) Rules, 1972-ல் மகப்பேறு காலத்தில் தந்தைக்கும் விடுப்பு வழங்குவது குறித்து கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு உட்பட இது எந்த மாநிலத்திலும் நடைமுறையில் இல்லை.

மகப்பேறு காலத்தில் மனைவியுடன் கணவர் இருப்பதற்கு தனி சட்டம் உருவாக்கப்படுவது அவசியமாக உள்ளது, இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் பொறுப்புள்ள தந்தையாகச் செயல் பட்டுள்ளார். அதனால் அவருக்கு விளக்கம் கேட்டு வழங்கப்பட்ட அழைப்பாணை ரத்து செய்யப்படுகிறது. மேலும், அவர் கடையம் காவல் நிலையத்தில் காவல் அதிகாரியாகப் பணியில் சேர உத்தரவிடப்படுகிறது’ எனத் தீர்ப்பளித்துள்ளார். மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Thursday, July 27, 2023

July 27, 2023

பேறுகால விடுப்பை 12 மாதங்களாக உயர்த்திய அரசு!



சிக்கிம் மாநில பெண் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஓராண்டு பேறுகால விடுப்பு அளிக்கப்படுவதாகவும், ஆண்களுக்கு ஒரு மாத காலம் விடுப்பு வழங்கப்படும் எனவும் அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் தெரிவித்தார்.

சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு விரையில் அமலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை சிறப்பாக கவனித்துக்கொள்ள உதவும் என்று அவர் கூறினார்.

பேறுகால நலச்சட்டம் 1961ன் படி பெண்களுக்கு 6 மாத விடுப்பு நடைமுறையில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மகப்பேறு கால விடுப்பு 12 மாதங்களாக அதிகரிக்கப்பட்டு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Saturday, March 18, 2023

March 18, 2023

சிறப்பு தற்செயல் விடுப்பு எந்த நிகழ்விற்கு, எத்தனை நாள் எடுக்கலாம் என்கின்ற விவரம் மற்றும் சமர்க்கப்பட வேண்டிய ஆவணங்களின் விவரம்

சிறப்பு தற்செயல் விடுப்பு எந்த நிகழ்விற்கு, எத்தனை நாள் எடுக்கலாம் என்கின்ற விவரம் மற்றும் சமர்க்கப்பட வேண்டிய ஆவணங்களின் விவரம்.

CLICK HERE TO DOWNLOAD PDF

Wednesday, March 15, 2023

March 15, 2023

அரசுப் பள்ளியில் மாணவர்கள் விடுப்பு எடுத்தால் பெற்றோர்களுக்கு குருஞ்செய்தி - புதிய நடைமுறை அறிமுகம்

அரசுப் பள்ளியில் மாணவர்கள் விடுப்பு எடுத்தால் பெற்றோர்களுக்கு குருஞ்செய்தி - புதிய நடைமுறை அறிமுகம்

Saturday, February 25, 2023

February 25, 2023

CORONA காலத்தில் எடுத்த EL / ML அனைத்தும் cancel செய்து கொள்ளலாம் - அரசாணை வெளியீடு.

CORONA காலத்தில் எடுத்த EL / ML அனைத்தும் cancel செய்து கொள்ளலாம் - அரசாணை வெளியீடு.

CORONA காலத்தில் எடுத்த விடுப்பு நாட்கள் அனைத்தும் பணிக்காலமாக அறிவித்து அரசாணை வெளியீடு

EL/ML அனைத்தும் cancel செய்து கொள்ளலாம்.

GO NO : 62 ,Date : 13.02.2023 - Download here

Sunday, February 19, 2023

February 19, 2023

அரசு ஊழியர்களின் கரோனா கால விடுமுறை சிறப்பு விடுப்பாக கருதப்படும் - அரசாணை வெளியீடு

அரசு ஊழியர்களின் கரோனா கால விடுமுறை சிறப்பு விடுப்பாக கருதப்படும் - அரசாணை வெளியீடு

Corona period leave of government employees to be treated as special leave - Issue of Ordinance

கரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்களின் விடுமுறை, சிறப்பு விடுப்பாகக் கருதப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

2020 மார்ச் மாதம் உலகெங்கும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதையடுத்து, மருத்துவம், பேரிடர் மேலாண்மை, காவல், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, மின்சாரம், குடிநீர் வழங்கல் துறை, தலைமைச் செயலகம், கருவூலங்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் துறைகள் தவிர்த்து, பிற துறைகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், 2021 மே 10 முதல் ஜூலை 4 வரையிலான ஊரடங்கு காலத்தில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த பிற துறைகளைச் சார்ந்த ஊழியர்களுக்கு, விடுமுறை அளிக்கப்பட்ட காலத்தை பணிக் காலமாக அல்லது சிறப்பு விடுப்பாக அளித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில், அரசு ஊழியரோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களோ கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலோ அல்லது கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் வசித்தாலோ அந்தக் காலத்தை சிறப்பு விடுப்பு காலமாக கருத வேண்டும்.

பெண் பணியாளர்களைப் பொறுத்தவரை, கர்ப்பிணி ஊழியர்களுக்கு விடுமுறைக் காலமாகக் கருதப்படும். தலைமைச் செயலகப் பணியாளர்களை பொறுத்தவரை, கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், நோய்வாய்ப்பட்ட பணியாளர்களுக்கு விடுமுறையாக அறிவிப்பது குறித்து, அந்தந்த துறைச் செயலர்களே முடிவெடுக்கலாம். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, January 20, 2023

January 20, 2023

கேரளத்தில் 18+ மாணவிகளுக்கு 60 நாள்கள் மகப்பேறு விடுப்பு!

கேரளத்தில் 18+ மாணவிகளுக்கு 60 நாள்கள் மகப்பேறு விடுப்பு! 60 days maternity leave for girls 18+ in Kerala!

18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு 60 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து அறிவித்துள்ளார்.

இதன்படி கேரளத்தில் உயர்கல்வி பயிலும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகள் அதிகபட்சமாக 60 நாட்கள் மகப்பேறு விடுப்பு பெறலாம்.

மேலும் மாதவிடாய் காலத்தில் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். கல்லூரிகளில் கட்டாய வருகைப்பதிவு மாணவிகளுக்கு மட்டும் 75% லிருந்து 73% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநில பல்கலைக்கழகங்களிலும் மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அமைச்சர் பிந்து தெரிவித்தார்.

மாதவிடாய் காலங்களில் மாணவிகள் எதிர்கொள்ளும் மன மற்றும் உடல் ரீதியான சிரமங்களைக் கருத்தில் கொண்டு, கேரள அரசு மாநில உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இதை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது என்றார்.

Wednesday, September 28, 2022

September 28, 2022

இடைநிலை ஆசிரியர்களை எள்ளி நகையாடும் கல்வித் துறை - Education department making fun of secondary teachers

இடைநிலை ஆசிரியர்களை எள்ளி நகையாடும் கல்வித் துறை - Education department making fun of secondary teachers

நாசா விஞ்ஞானிகளுக்கே நாக்கு தள்ளும் ! இந்த அரிய கண்டுபிடிப்பு..!!!

*விடுமுறைக்குள் ஒரு விடுமுறை*!!! *குடைக்குள் பெய்யும் மழை போல*....

*விடுமுறை நாட்களில் பணி செய்தால் அதை வேலை நாட்களில் ஈடு கட்டுவதே வழக்கம். தற்போது விடுமுறை நாட்களில் செய்த வேலையை விடுமுறை நாட்களிலேயே ஈடுகட்டும் தாராளமய,தனியார்மய சிந்தனைவாதிகள்*.

பள்ளிக்கல்வித்துறையின் நாற்றங்காலே ஆரம்பக்கல்விதான் அந்த ஆரம்பக் கல்வியை போதிக்கும் இ.நி.ஆசிரியர்களை கால்பந்து போல தன் விருப்பத்திற்கு எட்டி உதைக்கிறார்கள்...

கல்விச்சூழலில் ஆசிரியர்களும்,மாணவர்களும் ஒன்றுதான்....

கற்பவர்களுக்கு எப்படி விடுமுறை தேவைப்படுகிறதோ அதே போலத்தான் ஆசிரியர்களுக்கும் விடுமுறை தேவைப்படும் நமது நாடு சுதந்திரம் பெற்று குடியரசு ஆன காலத்திருந்தே மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் சேர்த்தே காலாண்டு,அரையாண்டு கோடை விடுமுறையென விடப்பட்டு வருகிறது.

நம்மை ஆண்ட மாபெரும் ஆளுமைகள் படிக்காத மாமேதை கர்மவீரர் காமராசர் ,தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர்- அண்ணா,முத்துவேல் ஈன்றெடுத்த முத்தமிழ்க் கடல் கலைஞர்- கருணாநிதி, ஏழைகளின் ஏந்தல் புரட்சித் தலைவர் M.G.R ,தமிழ்நாட்டின் இரும்புப் பெண்மணி புரட்சித் தலைவி ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தெரியாத ஒரு கண்டுபிடிப்பை தற்போது சில மெத்தப்படித்த மேதாவிகள் கண்டுபிடித்துள்ளார்கள்..

விடுமுறை என்பது மாணவர்களுக்கு மட்டும்தான் ஆசிரியர்களுக்கு கிடையாதென்று....

நித்தம் ஒரு அறிக்கை !,நிமிடத்திற்கு ஒரு அறிக்கை பாடம் நடத்தச் சொல்லுவதைத் தவிர பிற வேலைகளுக்கான அறிக்கை ....

நவீனப்படுத்துகிறோம் என்கிறோம் என்கிற பெயரில் தாய்மை குணம் கொண்ட தொடக்கக் கல்வியை சீரழிக்காதீர்கள்!!!

இடைநிலை ஆசிரியர்களை அவமானப்படுத்தாதீர்கள் விடுமுறைக்குள் விடுமுறை விடாதீர்கள்.

*நீங்கள் அளித்திருப்பது ஈடுசெய்யும் விடுப்பல்ல !!!இ.நி.ஆசிரியர்களை இழிவு செய்யும் விடுப்பு* !!!

இந்தச் செயலை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி காஞ்சிபுரம் மாவட்டம் வன்மையாக கண்டிக்கிறது

மாவட்ட மையம் .

TNPTF KANCHEEPURAM DISTRICT

Total Pageviews

Search This Blog