opportunities to study
February 18, 2025
Showing posts with label annamalai. Show all posts
Showing posts with label annamalai. Show all posts
Tuesday, February 18, 2025
Thursday, February 06, 2025
Monday, January 27, 2025
Monday, December 23, 2024
Saturday, October 12, 2024
Monday, January 15, 2024
NEP
January 15, 2024
CBSE பரிந்துரைகள் தமிழகத்தில் அறிமுகம்; புதிய கல்வி கொள்கையை எதிர்ப்பதாக நாடகம்: திமுக மீது அண்ணாமலை விமர்சனம்
CBSE Recommendations Introduced in Tamil Nadu; Drama as Opposition to New Education Policy: Annamalai Criticism of DMK - சிபிஎஸ்இ பரிந்துரைகள் தமிழகத்தில் அறிமுகம்; புதிய கல்வி கொள்கையை எதிர்ப்பதாக நாடகம்: திமுக மீது அண்ணாமலை விமர்சனம்
புதிய கல்வி கொள்கை பாடத்திட்டங்களை எதிர்ப்பது போல திமுக நாடகமாடிவிட்டு, சிபிஎஸ்இ பரிந்துரைகளை தமிழகத்தில் அறிமுகம் செய்திருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு கொண்டு வரும் நலத்திட்டங்கள், தமிழகத்தின் ஒவ்வொரு மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் விருப்பம். அதன்படி, உலகத் தரத்திலான, தொலை நோக்குச் சிந்தனையுடன் உருவாக்கப்பட்ட, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் முழு பலன்களும் தமிழக மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பாஜக சார்பாக நன்றிள்: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைப் பாடத்திட்டங்களை எதிர்ப்பதுபோல நாடகமாடிவிட்டு, படிப்படியாக மத்திய அரசின் சிபிஎஸ்இ பரிந்துரைகளை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி வரும் திமுக அரசுக்கு, தமிழக பாஜக சார்பாக நன்றி. எங்கே தங்கள் வேஷம் கலைந்து மக்களுக்கு உண்மை தெரிந்து விடுமோ என்ற பதட்டத்தில், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வழியாக திமுக ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அறிக்கையில் பல பிழைகள் இருப்பதைக் கூடக் கவனிக்காமல் அவசரகதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்றுதான் தெரியவில்லை. செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்து 2018-ம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டு, 2019-ம் ஆண்டுக்கான தேசியக் கல்விக் கொள்கை மாதிரி வடிவத்தில் குறிப்பிடப்பட்டு, பின்னர் 2020-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது. ஆனால், இது தொடர்பான தமிழக அரசின் கொள்கை வெளியிடப்பட்டது 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான். தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் முன்பாக தமிழகத்தில் இதற்கான கொள்கை உருவாக்கினோம் என்று அறிக்கையில் கூறப்பட்டிருப்பது பொய் என்பது இதன்மூலம் நிரூபணமாகியிருக்கிறது. தங்கள் அறிக்கையில் மாதத்தைக் குறிப்பிடாமல் மறைத்துவிட்டால் மக்களை ஏமாற்றி விடலாம் என்று நினைத்து விட்டீர்களா, 1967-ம் ஆண்டு அன்றைய பம்பாயிலும், பின்னர் 1990-களின் பிற்பகுதியில் பெங்களூர், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்டபல மாநகரங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சியடையத் தொடங்கின. இனியாவது நிர்ப்பந்தங்களுக்குப் பயந்து அவசரகதியில் தவறான தகவல்களுடன் அறிக்கை வெளியிட வேண்டாம். புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை தமிழக மாணவர்களுக்குக் கொண்டு செல்வதற்காக, தமிழக பாஜக சார்பாக மீண்டும் ஒரு முறை நன்றி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Monday, January 01, 2024
TNPSC
January 01, 2024
TNPSC ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான தேர்வை ஒத்திவைக்க வலியுறுத்தல்
What is the latest update for TNPSC exam 2023?
As per the TNPSC Annual Planner, the upcoming TNPSC exams are as follows- Group 1 notification is expected to release in August 2023 and the Preliminary exam will be held in November 2023. The Group 4 notification will release in November 2023, and the exam is expected to be conducted in February 2024
Is Group 2 TSPSC postponed?
Once again in October, another official notification was released by TSPSC that in light of the schedule for the conduct of General Elections to the Telangana State Legislative Assembly announced by the Election Commission of India the Commission after careful examination of the matter decided to reschedule the Group
Is Group 1 exam date changed?
The TSPSC Group 1 Prelims exam was cancelled which was held on 16th October 2022. It will once again be held on 11th June 2023. The authorities will release the TSPSC Group 1 hall ticket 2022 seven to eight days before the exam for Mains. The mains exam scheduled will be announced very soon.
What is the last date of Group 4 TNPSC?
TSPSC Group 4 Registration: Required Documents
The TSPSC Group 4 application form was made public on 30th December 2022, soon after the exam notification was released on 1st December 2022. Consequently, the registration process has been concluded as the last date to apply for the exam was 30th January 2023
"TNPSC exam should be postponed" - Annamalai - "டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒத்திவைக்க வேண்டும்" - அண்ணாமலை
"டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒத்திவைக்க வேண்டும்"
டிஎன்பிஎஸ்சியின் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான தேர்வை ஒத்திவைக்க வேண்டும்
தென் மாவட்ட மழை, வெள்ளத்தை கருத்தில் கொண்டு வரும் ஜனவரி 6,7ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள தேர்வை ஒத்திவைக்க வேண்டும் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
மழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்களுக்கு வரும் ஜனவரி 6 மற்றும் 7ம் தேதி நடக்க உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
Thursday, December 21, 2023
Ramadass
December 21, 2023
குளறுபடிகளின் உச்சம்: அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் காலக்கெடு வழங்க வலியுறுத்தல்.
குளறுபடிகளின் உச்சம்: அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் காலக்கெடு வழங்க வேண்டும்! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள் மற்றும் மண்டல வளாகங்களில் காலியாகவுள்ள 232 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளின் விண்ணப்ப நடைமுறையில் விவரிக்க முடியாத அளவுக்கு அடுத்தடுத்து குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன. தகுதியும், அனுபவமும் கொண்ட தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதை தடுப்பதற்காகவே இத்தகைய குழப்பங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றனவோ என்ற ஐயமும், கவலையும் எழுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் அரியலூர், ஆரணி, திண்டுக்கல், திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட 13 நகரங்களில் செயல்பட்டு வரும் உறுப்பு பொறியியல் கல்லூரிகளிலும், மதுரை, கோவை, நெல்லை ஆகிய நகரங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல வளாகங்களிலும் காலியாக உள்ள 205 உதவிப் பேராசிரியர்கள், 14 உதவி நூலகர்கள், 13 உடற்கல்வி உதவி இயக்குனர்கள் பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க நவம்பர் 29&ஆம் தேதி முதல் திசம்பர் 13&ஆம் நாள் வரை ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றின் காகித வடிவிலான விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் தாக்கல் செய்ய திசம்பர் 18&ஆம் நாள் கடைசி நாளாகும். ஆனால், தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும்பான்மையினரால் விண்ணப்ப நடைமுறையை நிறைவேற்ற முடியவில்லை.
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கே ஒரு மாதம் காலக்கெடு வழங்கப்படும் நிலையில், ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க 14 நாட்கள் மட்டுமே காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. விண்ணப்பம் செய்வதற்கும், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்குமான அண்ணா பல்கலைக்கழக இணையதளம் பல நேரங்களில் முடங்கி விட்டது. அதுமட்டுமின்றி, அண்ணா பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் காலத்தில் தான் சென்னை புறநகர் பகுதிகளிலும், தென் மாவட்டங்களிலும் கடுமையான மழை & வெள்ளம் ஏற்பட்டது. இயற்கை சீற்றங்களையும், தொழில்நுட்பக் கோளாறுகளையும் கருத்தில் கொண்டு, விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்திருக்க வேண்டும். ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் அதை செய்யவில்லை. அது தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். இவற்றை விட இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புவது, உதவிப் பேராசிரியர் பணிக்கு அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றி வருவோரில் பெரும்பான்மையினரை விண்ணப்பிக்க விடாமல் சதித்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பது தான். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 232 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறையே சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி தான் நடைபெறுகிறது.
அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் உதவிப் பேராசிரியர்கள் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று கோரி தொடர்ந்த வழக்கில் தான் 232 உதவிப் பேராசிரியர்களை நியமிக்கலாம்; நேர்முகத் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு தகுதி மதிப்பெண்களில் தற்காலிக பேராசிரியர்களுக்கு 5% சலுகை வழங்கப்படும், நேர்முகத் தேர்விலும் தற்காலிக பேராசிரியர்களுக்கு ஓர் ஆண்டு அனுபவத்திற்கு ஒரு மதிப்பெண் வீதம் அதிகபட்சமாக 5 மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு பெரிதும் பயனளிக்கக் கூடியதாகும். தற்காலிக ஆசிரியர்கள் இத்தகைய மதிப்பெண் சலுகையை பெற அவர்கள் பணியாற்றிய காலத்திற்கான அனுபவச் சான்றிதழையும், தடையின்மை சான்றிதழையும் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால், பெரும்பான்மையான கல்லூரிகளில் பணியாற்றிய தற்காலிக பேராசிரியர்களுக்கு இந்த சான்றுகளை வழங்குவதில் தாமதம் செய்யப்பட்டது.
பலருக்கு சான்றிதழ்களின் நகல்கள் மட்டுமே வழங்கப்பட்டன; உண்மைச் சான்றிதழ்கள் பலருக்கு நேற்று தான் கிடைத்திருக்கிறது, இன்னும் பலருக்கு இன்று தான் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது அவற்றை கடந்த 18&ஆம் தேதியே அண்ணா பல்கலைக்கழகத்திடம் அவர்கள் எவ்வாறு தாக்கல் செய்ய முடியும்?
அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக பேராசிரியர்களாக பணியாற்றியவர்கள், அங்கு நிரந்தரமான உதவிப் பேராசிரியர்களாக வந்து விடக் கூடாது என்பதற்காகவே சில புல முதல்வர்கள் இவ்வாறு செய்கிறார்களோ? என்று ஐயப்படுவதற்கு அனைத்து காரணங்களும் உள்ளன. இந்தக் குளறுபடிகளால் தகுதியும், அனுபவமும் உள்ள தற்காலிக பேராசிரியர்களால் விண்ணப்பிக்க முடியவில்லை. இதுதொடர்பான குளறுபடிகளை சரி செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உண்டு.
Wednesday, December 13, 2023
Politicians
December 13, 2023
அரசுப் பள்ளி மாணவர்கள் மீது மாற்றாந்தாய் மனப்பான்மை: அண்ணாமலை குற்றச்சாட்டு
அரசுப் பள்ளி மாணவர்கள் மீது மாற்றாந்தாய் மனப்பான்மை: அண்ணாமலை குற்றச்சாட்டு
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழக அரசு நடத்துகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டிஉள்ளார். இதுதொடர்பாக அவர் தனதுஎக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை கொரட்டூர் அரசு உயர் நிலைப் பள்ளியில், 4-ம் வகுப்பு மாணவர்களை வைத்து மொட்டை மாடியில் உள்ள நீர்த் தேக்கத் தொட்டியை சுத்தம் செய்ய வைத்துள்ள காணொலி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அரசுப்பள்ளி மாணவர்களை கழிப்பறைகள் சுத்தம் செய்ய வைப்பது, ஆபத்தான உயரத்தில் இருக்கும் நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்ய வைப்பது என, தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள், அரசுப்பள்ளி மாணவ மாணவியரைமாற்றாந்தாய் மனப்பான்மை யுடன் தமிழக அரசு நடத்தி வருவதை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார். அன்புமணி வலியுறுத்தல்:
பாமக தலைவர் அன்புமணிநேற்று தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை கொரட்டூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் மேல்நிலை குடிநீர்த் தொட்டியை, அங்கு பயிலும்4-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் மிகவும் ஆபத்தான சூழலில் தூய்மைப்படுத்தும் காணொலி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, அவை சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டியது அவசியமாகும். இதைக் கருத்தில் கொண்டு, பள்ளிகளின் பராமரிப்புக்காக அரசு கூடுதல் தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். வருங்காலங்களில் பள்ளிகளின் பராமரிப்புப் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படாமல் இருப் பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
Tuesday, August 29, 2023
School News
August 29, 2023
சிதிலமான பள்ளி கட்டிடங்களை சீரமைக்க அண்ணாமலை கோரிக்கை
தமிழகம் முழுவதும் சிதிலமடைந்துள்ள பள்ளி கட்டிடங்களை அரசுஉடனடியாக கட்டித் தர வேண்டும்என்று பாஜக தலைவர் அண்ணா மலை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: பண்ருட்டி சன்னியாசிபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சமையல் கூடத்தின்மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் பெண் சத்துணவு அமைப்பாளர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் சிதிலமடைந்துள்ள 10 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளி கட்டிடங்களை இடித்து, புதிய கட்டிடங்கள் கட்டப்போவதாக அறிவித்த திமுக, அதன்பிறகு அதுகுறித்து பேசுவதே இல்லை. பெரும் விபத்து ஏற்பட்டால்தான் தமிழக அரசு விழித்துக் கொள்ளுமா? தேவையற்ற விளம்பர செலவினங்களை விடுத்து, மாணவர்களுக்கு பயன்படும் பள்ளி கட்டிடங்களை உடனே கட்டித் தர வேண்டும் என்று தமிழக அரசை வலி யுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
Tuesday, August 08, 2023
Tamilnadu Government
August 08, 2023
பள்ளி மாணவர்களுக்கு காலணி, சீருடையை உடனடியாக வழங்க வலியுறுத்தல்!
மாணவர்களுக்கான உபகரணங்கள் தரப்படவில்லை - பாஜக
பள்ளிகள் திறந்து ஒருமாதமாகியும் மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கப்படவில்லை
எது எதற்கோ வீணாக நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். ஆனால், மாணவர்கள் நலனுக்கு நிதி ஒதுக்கவில்லை; மாணவர்களுக்கு சீருடை, காலணிகள் உள்ளிட்டவற்றை குறித்த நேரத்தில் வழங்குவது அரசின் கடமை
- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
பள்ளி மாணவர்களுக்கு காலணி, சீருடையை உடனடியாக வழங்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: பள்ளிகள் திறந்து ஒரு மாதம் கடந்த நிலையில், மாணவர்களுக்கு புத்தகப் பை, காலணி மற்றும் சீருடைகளை இன்னும் முழுமையாக வழங்காததால், மாணவ, மாணவிகள் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், சில பள்ளிகளில் வழங்கப்பட்ட காலணிகள், மாணவர்களுக்கு பொருந்தும் அளவில் இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.பள்ளி மாணவர்களுக்கான உபகரணங்களை குறித்த நேரத்தில் வழங்குவதை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஏன் உறுதி செய்யவில்லை?
கடந்த ஆண்டும் இதேபோல காலதாமதமாக வழங்கப்பட்டதால், அவற்றை மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஆண்டாவது, பாடநூல் கழகமும், பள்ளிக்கல்வித் துறையும் மீண்டும் அதே குற்றச்சாட்டு எழாமல் தவிர்த்திருக்க வேண்டும். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நூறாவது பிறந்த நாளைக்கொண்டாட, அமைச்சர்கள் தலைமையில் 12 கமிட்டி அமைத்து, ஒவ்வொரு கமிட்டிக்கும் ரூ.3 முதல் ரூ.4 கோடிசெலவிடப்படுவதாக தெரிய வந்துள்ளது. பெருமளவு நிதி இதற்கு ஒதுக்கப்படுவதால், மாணவர்களுக்கு வழங்கவேண்டிய உபகரணங்களை வழங்காமல் தமிழக அரசு அலைக்கழிக்கிறதா? திமுக ஆட்சிக்கு வந்ததும்,பத்தாயிரம் சிதிலமடைந்த அரசு பள்ளிக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, புதியகட்டிடங்கள் கட்டப்படும் என்று அறிவித்தார்கள். இதுவரை எத்தனை பள்ளிக்கட்டிடங்களைக் கட்டியுள்ளார்கள்?கோடிக்கணக்கில் வீணாக செலவு செய்யும் திமுக அரசுக்கு, நாட்டின் எதிர்காலத் தூண்களான மாணவர்கள் நலனுக்கு நிதி ஒதுக்க மனமில்லை.
மாணவர்களைக் காக்க வைப்பதை அனுமதிக்க முடியாது. உடனடியாக, தமிழகம் முழுவதும் மாணவ,மாணவிகளுக்கு சீருடை, காலணிகள்உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Saturday, May 13, 2023
Monday, April 10, 2023
Monday, March 27, 2023
TNPSC GROUP IV EXAM
March 27, 2023
ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி? பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பை வீண் - அண்ணாமலை குற்றச்சாட்டு
ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி? பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பை வீண் - அண்ணாமலை குற்றச்சாட்டு 2000 pass from one coaching center? Hard work of thousands of youth in vain - Annamalai allegation
தென்காசியைச் சேர்ந்த அந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் 40-க்கும் அதிகமான கிளைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதில் பயின்ற மாணவர்கள் 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திலிருந்து, அதிக அளவில் தேர்வர்கள் எவ்வாறு தேர்ச்சி அடைந்தார்கள் என்கிற சந்தேகம், தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தங்கள் மையத்திலிருந்து 2000 பேர் தேர்வானது உண்மைதான் என்றும், தேர்வானவர்களின் பட்டியலை அளிக்க தயாராக உள்ளதாகவும், அந்த பயிற்சி மையத்தின் நிர்வாகி தெரிவித்துள்ளார். இந்தநிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக வந்த தகவல் பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பை வீணாக்கியிருக்கிறது.
அரசுப் பணிக்காக அயராது உழைத்த தமிழக இளைஞர்களை அவமதிப்பது போலாகும். உடனடியாக, தமிழக அரசு தீவிர விசாரணை நடத்தி, தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருந்தால், மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும் என்றும், அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் பல்லாயிரம் இளைஞர்களுக்கான வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Sunday, October 09, 2022
Politicians
October 09, 2022
பகுதிநேர விரிவுரையாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்: அண்ணாமலை
பகுதிநேர விரிவுரையாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்: அண்ணாமலை
பகுதிநேர விரிவுரையாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பகுதிநேர முழுநேர தொகுப்பூதிய விரிவுரையாளா்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஆசிரியா்களுக்கு செய்யும் அநீதி. திமுக தோ்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி இவா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பிற வாக்குறுதிகளை செயல்படுத்தாமல் ஏமாற்றியது போல இந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் திமுக அரசு ஏமாற்றக்கூடாது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான பகுதி நேர தகுதி பெற்ற, அனுபவம் பெற்ற விரிவுரையாளா்களை பணிநிரந்தரம் செய்யாமல், புதிதாக ஆசிரியா் நியமனஆணையத்தின் மூலம் எடுத்துக்கொள்ளப்போவதாக அரசு சொல்வது இத்தனை ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியா்களுக்கு செய்யும் நம்பிக்கை துரோகம் என அதில் தெரிவித்துள்ளாா் அண்ணாமலை

Saturday, September 10, 2022
What are the benefits of studying political science?
September 10, 2022
அரசியல் ஆதாயத்துக்காக மாணவரின் எதிர்காலத்தில் விளையாடுவதா?
அரசியல் ஆதாயத்துக்காக மாணவர்களின் எதிர்காலத்தில் திமுக விளையாடுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த ஆண்டு 99,610 மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில், இந்த எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 1,32,167 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, கடந்த ஆண்டைவிட 10,572 மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை நடப்பு ஆண்டு 31.965 ஆக உயர்ந்துள்ளது.
அகில இந்திய அளவில் பட்டியலின மாணவர்களில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 15 சதவீதம் அதிகம்,
அதேபோல, பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் 18 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நீட் தேர்வுக்கு முன்னர் சராசரியாக 31 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். நீட் தேர்வுக்குப் பின்னரும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய பின்னரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சமவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியை திமுக அரசுகைவிட்டது ஏன்? அரசியல் ஆதாயத்துக்காக மாணவர்களின் எதிர்காலத்தில் திமுக விளையாடுகிறது.
எனவே, மீண்டும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அரசுக்கு சீமான் வலியுறுத்தல்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், ‘கல்வித் தரத்தில் 2-ம் இடத்தில் உள்ள தமிழகம், நீட் தேர்ச்சி விகிதத்தில் 29-வது இடத்துக்கு தள்ளப்பட்டு, கல்வியில் தமிழகத்தைவிட பின்தங்கியுள்ள மாநிலங்கள் முதல் 10 இடங்களுக்குள் வந்திருப்பது, நீட் தேர்வில் பல முறைகேடுகள் நடந்துள்ளதை வெளிப்படுத்திஉள்ளது.
எனவே, நீட் தேர்வால் இனி யாரும் தற்கொலை செய்துகொள்ளாத வகையில், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நீட் தேர்வு மறுசீராய்வு வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி தமிழக அரசு சட்டப் போராட்டம் மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.