Breaking

Showing posts with label Employment in TNCSC field 2022. Show all posts
Showing posts with label Employment in TNCSC field 2022. Show all posts

Monday, March 27, 2023

March 27, 2023

நில அளவர் தேர்வை ஒரே மையத்தில் எழுதிய 700 பேர் தேர்ச்சி முறைகேடு? - விசாரணை நடத்த வலியுறுத்தல்



நில அளவர் தேர்வை ஒரே மையத்தில் எழுதிய 700 பேர் தேர்ச்சி முறைகேடு நடந்ததா என விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் - 700 people who wrote the land surveyor exam in one center, the pass fraud? - Insist on investigation

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: தமிழ்நாடு அரசு துறைகளுக்கு 1089 நில அளவர், வரைவாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஏறக்குறைய 700 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

வாய்ப்பில்லாத இந்த சாதனை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மொத்தமாக தேர்ச்சி பெற்ற 700 பேரும் காரைக்குடியில் உள்ள மையத்தில் தேர்வு எழுதியுள்ளனர்.

அவர்களின் பெரும்பான்மையினர் காரைக்குடியில் உள்ள தனியார் பயிற்சி நடுவத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது ஐயத்தின் அளவை உயர்த்தியிருக்கிறது. வெற்றி பெற்றவர்கள் முறையாக பயின்று திறமையால் தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் மகிழ்ச்சி தான். ஆனால், மொத்த பணியிடங்களில் 70% இடங்களுக்கு ஒரே மையத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவது இயற்கைக்கு எதிரானது என்பதால் அதுகுறித்த உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட நான்காம் தொகுதி தேர்வில் முதல் 100 இடங்களில் ராமேசுவரம், கீழக்கரை நடுவங்களில் தேர்வு எழுதிய 35 பேர் இடம் பெற்றிருந்தது குறித்த ஐயத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய போது பெருமளவில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது.

நில அளவர் தேர்விலும் அத்தகைய முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்றதா என்பதை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயம். எனவே, இதுகுறித்து விசாரணை நடத்த டிஎன்பிஎஸ்சி ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Friday, June 24, 2022

June 24, 2022

TNCSC துறையில் வேலைவாய்ப்பு 2022 : 527 பணியிடங்கள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியானது பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர், பருவகால காவலர் ஆகிய பணிகளுக்கு மொத்தமாக 527 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள், அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது போன்ற தகவல்களை கீழே பார்க்கலாம்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர், பருவகால காவலர் பணிகளுக்கு என்று மொத்தமாக 527 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

• பருவகால பட்டியல் எழுத்தர் - 159 காலிப்பணியிடங்கள். • பருவகால உதவுபவர் - 189 காலிப்பணியிடங்கள்.

• பருவகால காவலர் - 179 காலிப்பணியிடங்கள். கல்வித் தகுதி:

• பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பி.எஸ்.சி., டிகிரியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

• பருவகால உதவுபவர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12 வது வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

• பருவகால காவலர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது விவரம்:

• 01.07.2022 தினத்தின் படி, விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்

• மேலும் இப்பணிக்கு BC / BC (M) / MBC விண்ணப்பதாரர்களுக்கு 2 ஆண்டு மற்றும் SC / SC (A) / ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு என வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற்று அதில் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை தயார் செய்து அறிவிப்பில் உள்ள தபால் முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். மேலும் 08.07.2022 ம் தேதி மாலை 5.00 மணிக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் தகவல் பெற:

அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.tncsc.tn.gov.in-யில் பார்க்கலாம்.

முகவரி :

முதுநிலை மண்டல மேலாளர்கள்,

PBNo.69, சச்சிதானந்த மூப்பனார் சாலை, மேம்பலம் அருகில்,

தஞ்சாவூர் - 613 001.Jobs,Employment, TNCSC, Assistant, Clerk, Security, வேலைவாய்ப்பு, பணி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், உதவியாளர், கிளார்க், பாதுகாவலர்கள்

Total Pageviews

Search This Blog