Breaking

Showing posts with label எண்ணும் எழுத்தும் பயிற்சி. Show all posts
Showing posts with label எண்ணும் எழுத்தும் பயிற்சி. Show all posts

Sunday, June 19, 2022

June 19, 2022

எண்ணும் எழுத்தும் வகுப்பறையில் ஒருங்கிணைக்கும் சில பொதுவான களங்கள்

எண்ணும் எழுத்தும் வகுப்பறையில் ஒருங்கிணைக்கும் சில பொதுவான  களங்கள் PDF வடிவில் (10×3)Size  Flex Board ல் Print போடும் அளவில் தயார் செய்யப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.











தொகுப்பு :

அனக்காவூர் ஒன்றியம் - திருவண்ணாமலை மாவட்டம்

Monday, June 13, 2022

June 13, 2022

முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த எண்ணும் எழுத்தும் திட்டம் ஓர் அறிமுகம்

Ennum Ezhuthum Scheme : ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் தொடர்பான காணொலி, கைபேசி செயலி, திட்ட பாடல் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம், அரும்பு, மொட்டு, மலர் என்று மூன்று படிநிலைகளில் 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் தமிழ் ஆகிய பாடங்களில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டிற்குள் 8வயது உள்ள குழந்தைகளை எழுதுதல் மற்றும் வாசித்தலில் திறனுடையவர்களாக மாற்ற இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் சுமார் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்று முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்றல் வாசித்தல் திறனை அதிகரிப்பதற்காக, ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். கொரோனா காலகட்டத்தில் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு வாசித்தல் திறனும், எழுதும் திறனும் குறைந்துள்ளது. இதனை களைந்திடும் வகையில், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையான அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி மூன்றாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு எழுத்துக்களை வாசித்தல், எழுதுதல், வாக்கியங்களை சரளமாக வாசித்தல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. அந்தவகையில் அரும்பு, மொட்டு, மலர் என்கிற மூன்று படிநிலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அரும்பு மொட்டு மலர்

இதில் அரும்பு என்கிற படிநிலையில் எண்கள் மற்றும் எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பயிற்சி அளிக்கப்படும். மொட்டுக்கள் என்கிற படிநிலையில் எண்கள் மற்றும் எழுத்துக்களை மாணவர்கள் வாசிப்பதற்கு பயிற்சி அளிக்கப்படும். மலர் என்கிற படிநிலையில் சரளமாக வாக்கியங்களை வாசிக்கும் பயிற்சி அளிக்கப்படும்.

தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய மூன்று பாடங்களில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்காக ஆசிரியர்களுக்கு பிரத்தியேகமாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கென தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கு கையேடுகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்களுக்கும் பயிற்சி கையேடுகளும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்படும். எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பான காணொலி, கைபேசி செயலி, திட்ட பாடல் ஆகியவற்றை முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் எழுதுதல் மற்றும் வாசிக்கும் திறனை மேம்படுத்துவதன் வாயிலாக மாணவர்கள் கொரொனா காலகட்டத்தில் இழந்த எழுதுதல் மற்றும் வாசிக்கும் திறனை மீட்டெடுக்க முடியும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எழுதுதல் மற்றும் வாசிக்கும் திறன் குறைந்ததால் மாணவர்கள் பாடங்களை படிப்பது மற்றும் எழுதுவதில் பல்வேறு சவால்களை சந்தித்ததாக தெரிவிக்கும் அதிகாரிகள், இதனால் ஒட்டுமொத்தமாக மாணவர்களின் கல்விச் சூழல் பின்னோக்கி சென்று விட்டதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

வரும் நாட்களில் இந்த திட்டத்தின் மூலம் இழப்பை ஈடுசெய்ய முடியும் என்று கூறும் அதிகாரிகள், இந்த திட்டம் மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்து தரும் என்றும் கூறுகின்றனர்.
June 13, 2022

எண்ணும் எழுத்தும் திட்டம் கற்றுக்கொடுக்கும் பாடம் என்ன?



எண்ணும் எழுத்தும் திட்டம் என்றால் என்ன? என்பதனை விரிவாக விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3-ஆம் வகுப்பு வரை, அதாவது 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தமிழ், ஆங்கில எழுத்துக்களையும், 1 முதல் 0 கோடி வரையிலான எண்களை எழுதுவதற்கும், பேசுவதற்கும், புரிந்துகொள்வதற்கும் செயல்வழிக் கற்றல் மூலம் கற்பிக்கும் திட்டமே எண்ணும் எழுத்தும் திட்டம்.

கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரிசெய்யும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்துகிறது பள்ளிக்கல்வித்துறை. திட்டம் தொடங்கம் போது இருக்கும் அதே முயற்சி, அர்ப்பணிப்பு திட்டம் முடியும் போதும் இருக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திட்டத்தை துவக்கி வைத்து பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மாநிலம் முழுவதும் 16 லட்சம் மாணவர்களை Cover செய்யும் எண்ணும் எழுத்தும் திட்டம், பள்ளிக்கல்வித்துறையின் வரப்பிரசாதம் என்றும், இதனால் ஆசிரியர்களின் பணிப்பளு குறைவதுடன், மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கும் என்றும் வரவேற்பு தெரிவிக்கின்றன ஆசிரியர் சங்கங்கள். கரும்பலகை வடிவமாக இல்லாமல் செயல் வழியில் குழந்தைகள் விரும்பும் கார்ட்டூன் உள்ளிட்டவை மூலம் எழுத்துக்களை பொம்மைகளாக காட்டுவது, ஆடல் பாடல் என்று அவர்களுக்கு புரிய வைப்பது எளிமையாக இருப்பதாகவும், குழந்தைகள் விரைவில் அதை புரிந்துகொண்டு எதிர்வினையாற்றுவதாகவும் பூரிப்படைகின்றனர் ஆசிரியர்கள்.

தமிழ், ஆங்கிலம், கணிதம் என்று 3 பாடங்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் தினந்தோறும் செயல்வழிக்கற்றலை மேற்கொள்ளப்போவதாக ஆசிரியைகள் தெரிவித்துள்ளனர். மேலும், பள்ளிக்கு வருகை புரிந்த முதல் நாளிலேயே ஆசிரியர்கள் கதை சொல்லித்தந்ததாகவும், மகிழ்ச்சியாக உள்ளதாகவும் மாணவர்கள் ஆனந்தமடைகின்றனர். NAS என்ற National Achievement Survey-ல் தமிழ்நாட்டு மாணவர்களை மேம்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்ட திட்டம், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஒருசேர மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Saturday, June 11, 2022

June 11, 2022

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடக்க விழா - 13.06.2022

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடக்க விழா - 13.06.2022

வரும் 13-ம் தேதி திறக்கப்படும் பள்ளிகள்

13-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து அன்றைய தினமே எண்ணும் எழுத்தும் திட்டத்தையும் துவக்கி வைக்கிறார்

Sunday, May 22, 2022

May 22, 2022

எண்ணும் எழுத்தும் பயிற்சி கட்டகங்கள் மீண்டும் செயல்பாட்டில் உள்ளது.

எண்ணும் எழுத்தும் பயிற்சி கட்டகங்கள் மீண்டும் செயல்பாட்டில் உள்ளது.

TNTP இணையதளத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சி கட்டகங்கள் 4,5,6,7 மற்றும் 8 தற்போது மீண்டும் செயல்பாட்டில் உள்ளது. பயிற்சியை நிறைவு செய்யாதவர்கள் நிறைவு செய்யலாம்.

https://tntp.tnschools.gov.in/login

Monday, April 04, 2022

April 04, 2022

எண்ணும் எழுத்தும் பயிற்சி - Module -3-Link Now opened

எண்ணும் எழுத்தும் பயிற்சி - Module -3-Link Now opened

ண்ணும் எழுத்தும் பயிற்சி Module -3

CLICK HERE TO VIEW THE LINK

Link ஐ பயன்படுத்தி கலந்து கொள்ளலாம்.

எண்ணும் எழுத்தும் பயிற்சி link -ல் சென்று பயிற்சியை மேற்கொள்ளும் வழிமுறை..

https://youtu.be/P4EWy0LLj9M

அனைத்து ஆசிரியர்களும் (1-5) தவறாது பயிற்சிகளை முடிக்க கேட்டுக்கொள்கிறோம்!

Total Pageviews

Search This Blog